1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரை மேல் தெறித்த அலைத் துளிகள் 18

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Dec 6, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த மனுசங்களே இப்படித்தான்...... . 2


    [​IMG]
    இந்த மனுசங்களே இப்படித்தான் .............

    இப்ப தீவளி சமயம் வேற , இந்த ஜனங்க பட்டாசை வெடிச்சு வேணும்னே மேல போடுவானுக, அப்ப எவ்ளோ கஷ்டமா இருக்கும் நம்ம நாய் பசங்களுக்கு ? சத்தமே கொன்னுடும் பாவம் நம்ம 'கண்ட்ரி கசின்ஸ்' போய் ஒளிஞ்சிகரதத்தவிர வேற வழியே இல்லை.

    இது கூட தேவலைங்க ,இவனுக பட்டாசு குப்ப கூட , நாஸ்தாவையும் சேத்து குப்பைத்தொட்டியில போட்டுடுவாணுக, இவனுக சுற்றுப் புற சூழலை மாசுப் படுத்தரதோடல்லாம நம்மளையும்இவனுகளோட வ்யாதி வெக்கையிலே சாக வச்சிடுவாணுக போல இருக்கு.கருமாதி பிடிச்சவனுக ..நம்ம நல்லா இருக்கறதப் பாக்கப் பிடிக்காதவணுக!
    ..............................................................................................................

    போராதக் குறைக்கு என் வீட்டில வந்த்ருக்கற சம்மந்தி வேற இது என்னா பெங்களூரு?

    [​IMG]

    மெட்ராஸ் மாதிரி பயலுக சுருசுறுப்பாவே இருக்க மாட்டேனுகறாங்க , உன்னைச் சொல்லி குத்தமில்லே , இந்த ஊரே மொள்ள மாறி மொள்ளத்த்தான் போவுது! சீக்ரமா காலிலேயே நாஸ்தா துன்னலான்னாஒருபயலுக எளிந்திருக்க மாட்டேனுகராகளே? இன்னா தான் நடக்குதுன்னு தெரியலையே?

    [​IMG]


    ஒரு பயலுகலாவது மீனோ, முட்டையோ ,மாமிசமோ சட்டுப் புட்டுன்னு சமைச்சு போட மாட்டேனுகரான்களே? மெட்ராசுலே எல்லாப் பயலுகளும் நமக்கும் சேத்துப் பொங்கிப் போடுவானுக , அட ஒருத்தரும் இல்லேன்னா கூட நம்ம பிராமண பொம்பளைங்க தெனம் ஒரு பிடி சோறு போடுங்க!

    [​IMG]
    ..........................................................................................................
    இவனுக வண்டி ஓட்டறதுக்கு , எடம் இல்லன்னு மரத்தெல்லாம் வெட்டி போட்டுடுவாணுக, அப்ப நம்ம எங்கதான் கூடு கட்டறது?
    .........................................................................................................
    [​IMG]

    சரி, போனா போறது .செலைகளைத் தான் ரோட்டுக்கு ரோடு போட்டுருக்காங்கலேன்னு போயி ஒட்காரலாம்னா, மழை காத்துக்கு எங்கே போய் ஒளியறது ?

    [​IMG]
    ......................................................................................................
    [​IMG]

    இவனுக செல் போன்லே பேசறதுக்குன்னு அங்கன இங்கன பெருசு பெருசா கொம்பு கொம்பா நட்டுடுவாணுக , அப்ப நம்ம குருவி பசங்க எங்கன போயி இருக்கும்ங்க.?
    ......................................................................................................

    அதான் அதுகள நாங்களா பாத்து விசாவும் வேணாம், பாஸ்போர்டும் வேணாம்னு வெளி ஊருக்கு பறந்து போகச் சொல்லிட்டோம், இது எவ்ளவோ தேவல இல்லையா? வெளி ஊருகள்ள நம்ம ஊரு மாதிரி சொயநலம் இல்லீங்க!
    ...................................................................................................
    [​IMG]


    போற போக்கப் பாத்தா,மிருகங்கள 'ஜூல' வச்சிருக்கற மாதிரி நம்மளையும் பிடிச்சு போட்டுடுவாணுக போலல்ல இருக்கு?
    .....................................................................................................
    [​IMG]
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Paavamaagathaan irukku namma kaakkai kuruvi enga jaadhi nu paadina Bharathiyaar naattil, indha koothaa, :-(
    Let us act before it is too late nu solla thonradhu..gavanippaargalaa.
     

Share This Page