1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரையை தொட்ட அலைகள்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Aug 18, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வாழ்க்கை இது தானடா !
    உண்மையாகவே நீ யாரையாவது நேசித்து அவர்கள் உன்னை

    நேசிக்கவில்லை என்றாலும் ,நீ ஒருவரை நேசித்து அவர்களிடம் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போனாலும் உன் வருத்தம் மனவருத்தமே! .

    * * *
    உனக்கு வேணுமானாலும் உன் வாழ்க்கையில் ஒருவர்

    முக்கியமானவராக இருக்கலாம்,அனால் அவருக்கு நீ முக்கியமாக

    இருக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை!.

    * * *

    உன்னுடைய நெருங்கிய தோழியோ, தோழனோ எப்பொழுதுமே

    வள, வள என்று பேசிக் கொண்டே இருக்கணும் என்றில்லை , சும்மா

    வெறுமனே ஒருதருக்கொருவர் அருகில் இருந்தாலே அது யானை

    பலத்திற்கு சமானம்! .

    * * *

    வாழ்க்கையில் சிலவற்றை நாம் இழக்கும் போது தான் அதன் மதிப்பே

    தெரிகிறது , அதே போல் சிலவற்றை நாம் பெரும் வரையும் அதன்

    மகத்துவம் தெரிய வருவதில்லை!

    * * *
    நொடிப்பொழுதில் சிலவற்றை பெற முடியும் , மணிப் பொழுதில் சிலரை நோக அடிக்க முடியும், ஒரே நாளில் சிலரிடம் அன்பு செலுத்தமுடியும் , ஆனால் மறக்க மட்டும் வாழ்நாளே வேணும்!

    * * *
    அழகை நினைத்து பெருமைப் படாதே , அது சில நாட்கள் தான் இருக்கும் , பிறகு அது உன்னை பார்த்து சிரிக்கும்.பணத்தைப் பார்த்து போகாதே , அதுவும் வெகு சீக்கிரம் உன்னை விட்டுப் போகும் .அதனால் உன்னை சிரிக்க வைக்கும் சிலரிடம் போ, அவர்களே உன் வாழ்வில் பிரகாசத்தை தர முடியும்!

    * * *
    கனவு காண், ஆனால் அது வெறும் கனவு தான் என்று மட்டும் நினை .

    உனக்கு என்னவாக ஆகவேண்டுமோ அதற்காக பாடுபடு ,ஏன் என்றால் வாழக்கை ஒருத்தருக்கு ஒரு முறை தான் , அதற்கான சந்தர்ப்பமும் ஒரு முறை தான் வரும்

    * * *
    உன்னை யார் எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அதே போல் அடுத்தவரையும் நீ நினைக்க வேண்டும். அதன் படி செயல் படு. தன்னை போல் பிறரை நினை.

    * * *

    அவசரத்தில் விழுந்த வார்த்தை விவாதத்தை கிளரும் , சுடு சொல் , வாழ்கையை சுடும். சமயத்தில் சொன்ன சுகமான வார்த்தை சுகத்தை தரும் , பரிவான வார்த்தை பல காயங்களுக்கு மருந்தாகும்!

    * * *
    வாழ்க்கைக்கு வேண்டிய நல்லதெல்லாம் கிடைக்க ,

    எல்லா சமய சந்தர்பங்களையும் ஒன்று விடாமல் நழுவவிடாமல் அள்ளிக் கொண்டு போகிறவர்கள் தான் சாமர்த்திய சாலிகள்! அவர்கள் போகும் பாதையை வழி வகுத்துப் போகிறவர்கள்,அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்.
    * * *
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்ல நல்ல பாய்ண்டர்ஸ் - வாழ்க்கையை வாழ - நன்று.
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அருமையான சிந்தனைகள். பகிர்ந்து கொண்டதற்க்கு பாராட்டுக்கள் மாதங்கி.
     

Share This Page