1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கருத்து களம்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Apr 23, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நாட்டில் ரொம்ப அவலங்கள் நடக்குது .ஆள்பவர்களின் செயல்கள் மனதை மிகவும் புண்படுத்துகிறது .சரி இதிலல் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த பதிவு.வாங்க எல்லாரும் வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

    நான் நெறைய புத்தகங்கள் படிப்பேன் .தமிழில் அநேகமாக பழம்பெரு எழுத்தாளர்கள் முதல் இப்போது உள்ள எழுத்தாளர்கள் வரை படித்துள்ளேன் .இப்ப ஒன்லி ரொமாண்டிக் நாவல்கள் .கொஞ்சம் கதை படித்து ஆனந்தப் படலாம் அல்லவா.ரமணிச்சந்திரன் முதல் இப்போதைய எழுத்தாளர்கள் வரை தங்கள் கதைகளில் ஒரு காட்சியை ஒரே விதமாக தான் எழுதுகிறார்கள் .அதாவது கதாநாயகனும் கதாநாயகியும் சந்தித்து உரையாடி நீண்ட நாட்கள் கொஞ்சி நெருக்கம் கொள்கிறார்கள் .எப்போதும் நாயகன் நாயகியின் உச்சந்தலையில் முத்தம் பதித்து பின் நெற்றியை தொட்டு அதன் பின் கன்னத்தில் முத்தம் இட்டு இதழ்களில் முத்தம் இடுகிறான் .இந்த வழக்கம் எல்லா எழுத்தாளர்களின் கதைகளிலும் பின் பற்றப் படுகிறது .அது ஏன் என்பதே என் கேள்வி .இது தான் பெண்களை வசப்படுத்தும் முறையா .

    ஊரில் ஆயிரம் பிரச்னைகள் இருக்க இந்த அம்மா ஏன் இப்படி எழுதுகிறது என்று நினைக்கிறீர்களா .உச்சி வெயில் மண்டையை பிளக்குது அதனாலே கொஞ்சம் எளிதான கருத்துக்களை பரிமாறி கொள்ளலாமே என்று தான் பதிவு செய்கிறேன் .உங்கள் கருத்துகளையும் பகிரலாமே
     
    Rajeni, GoogleGlass and jskls like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ------------
     
    Last edited: Apr 23, 2017
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Periamma, nalla veyil kaayara nerathula ippadi oru karuthu kalam aa ??? Neither its valentines day nor international kiss day ... Anyway I was interested in reading more of crime thrillers, Theology and books on great gurus/ mystics.

    உங்கள் கருத்துக்களத்திற்காக ஒரு சிலவற்றை படித்தேன். பெண் வசப்படுவது அதற்கும் முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். படிப்பவரின் மனதை தூண்டவும் எதிர்பார்ப்பை கூட்டவும் எழுத்தாளர்கள் அப்படி எழுதுகிறார்களோ? தெரியவில்லை.
     
    periamma and GoogleGlass like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. வித்தியாசமான
    கோணம்
     
    jskls likes this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அம்மா,

    என்ன திடீரென இப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கிடிங்க?!

    என் அபிப்பிராயத்தில் இது பெண்ணை வசப்படுத்தும் முறை என்பதை விட பெரும்பாண்மையான பெண்கள் விரும்பும் முறை என்றே தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டவாறு எழுதுவது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே. அவர்கள் தன் கதா நாயகனின் மென்மையான குணத்தை குறிக்க அப்படி எழுதலாம்.

    மேலும் நெற்றியிலும் உச்சியிலும் முத்தமிடுவது களங்கமற்ற அன்பை குறிக்கிறது. பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவ்வாறு முத்தமிடுகிறார்கள். எனவே தன் காதலி மேல் காமத்தை தாண்டி அவனுக்கிருக்கும் அன்பை குறிக்க அவ்வாறு எழுதியிருக்கலாம்.

    அத்தகைய மென்மையான அன்பையே வாசிக்கும் பெண்களும் விரும்புகிறார்கள் என்றே தோன்றுகிறது.
     
    periamma and jskls like this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    இது அந்தந்த எழுத்தாளரின் எதிர்பார்ப்பாகவே கருதுகிறேன், அதோடு கற்பனைகளும் சேர்ந்தது - சொந்த அனுபவம், கேட்ட அனுபவம், அவர்கள் படித்த கதைகளையும் சார்ந்தது.

    அதோடு தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் மென்மையானவர்கள் என்ற தோற்றத்தையே பிரதிபலிக்கிறது பெரும்பாலான கதைகளும், கவிதைகளும்.

    இன்றைய சமுதாயத்திற்கு தெரியும் காதலன், காதலி, கணவன் மனைவி உறவுகளில் நேர்ந்துள்ள மாற்றங்கள், எதிர்பார்ப்புகள்.

    மென்மை எனும் வர்ணனை படலம் நமது ஹிப்போகிரஸி என்பது என் கருத்தும்மா.
     
    periamma and jskls like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rajeni ஒரு பெண் என்பவள் தாயாய் தாரமாய் தாசியாய் தாதியாய் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது என்று கேள்வி ஞானம்.அதே அம்சங்களை கணவனிடத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்தாளர்கள் இவ்வாறு எழுதுகிறார்களோ என்ற ஐயம் என் மனதில் எழுகிறது .

    ரஜினி நெடுவாசல் போராட்டம் பற்றி எழுதினாலும் விமர்சனங்கள் வராது .அட இப்படி ஒரு எளிய கருத்தை பற்றி எழுதினாலாவது நாலு பேர் படிப்பார்களே என்று நினைத்து பதிவு பண்ணினேன்
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GG எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் மென்மையை விரும்புபவர்கள் .விதிவிலக்கு என்பது இருபாலரிலும் உண்டு
     

Share This Page