1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'கயா' யாத்திரை !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Apr 10, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    'கயா' யாத்திரை !
    download.jpg
    தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
    [​IMG] [​IMG]

    வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு [​IMG] மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

    எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

    " சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

    'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

    "இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி [​IMG] )

    'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

    உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

    ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............[​IMG]


    பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

    தொடரும்....................

    @uma1966
     
    sindmani, sreeram and uma1966 like this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என்ன ஷாக் என்றால், பெங்களுரு மற்றும் சென்னை லிருந்து பாட்னாவுக்கு நேரடி பிளைட் கிடையாது..............அப்படியே பாட்னா போய்த்தான் ஆகவேண்டும் என்றாலும், டெல்லி போய் அல்லது பாம்பே போய் அல்லது கல்கத்தா போய் பிறகு பாட்னா போகணும். அதுவும் பலமணி நேரங்கள் காத்திருக்கணும் [​IMG] ரொம்ப சோகமாய் போச்சு எனக்கு. என்னடா இது சோதனை என்று. train பயணம் பற்றி என்னால் யோசிக்கவே முடியாது.

    download (1).jpg

    ரொம்ப நேரம் எல்லா ஏர்லைன்ஸ் ம் தேடி கடைசியாய் ஒரு flight கண்டுபிடித்தேன். ஒரு Indigo flight அது காலை 6.30க்கு பெங்களுரிலிருந்து புறப்பட்டு கல்கத்தா போய்விட்டு அரைமணி இல் மீண்டும் கிளம்பி 10.35 க்கு பாட்னா சென்றுவிடும் என்று பார்த்தேன். [​IMG] ரொம்ப சந்தோஷமாய் போய்டுத்து எங்களுக்கு. 'இவர்' உடனே டிக்கெட் புக் செய்து விட்டார்.

    25ம் தேதி காலை flight , அது 10.35 க்கு பாட்னா போய் சேரும். பிறகு அங்கிருந்து டாக்ஸி வைத்துக்கொண்டு 'கயா' போய்விடலாம் என்று நினைத்தோம். கயா அங்கிருந்து 115 கிலோமீட்டர் தொலைவு இருந்தது. 26ம் தேதி அங்கு ஸ்ரார்தம் பண்ணனும், பிறகு மீண்டும் 27ம் தேதி flight இல் பெங்களூர் வந்துவிடணும் என்று முடிவு செய்தோம்.

    தொடரும்.......................
     
    sindmani, sreeram and uma1966 like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    கயா பதிவு ஆரம்பித்து விட்டீர்களா. எனக்கும் கயாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தங்கள் நடையின் ஆரம்பமே நன்றாக உள்ளது ...கயா பற்றிய சிறு குறிப்பும் சொல்லுங்கள். உபயோகமாக இருக்கும்
     
    krishnaamma and sreeram like this.
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பரவாஇல்லை ஒரு வழியாக டிக்கெட் புக் செய்து விட்டீர்கள் :cheer:
     
    sreeram likes this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா நானும் ஆஜராகி விட்டேன். இனிமேல் தவறாமல் வந்துவிடுவேன். கயா பற்றி நானும் மற்றவர்கள் கூரி கேட்டிருக்கிறேன் மா.

    உங்களின் மற்ற பதிவுகளை விரைவில் படித்துவிட்டு பின்னுட்டம் இடுகிறேன் மா. தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொ‌ள்கிறேன்.
     
    krishnaamma and uma1966 like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் உமா, ஆரம்பிச்சாச்சு......:cheer::cheer::cheer:.கண்டிப்பக போய் வாருங்க உமா.............பலருக்கும் உதவும் என்று தான் இங்கே போடுகிறேன்....'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' :thumbsup: ..............இதோ கயா வின் கதை !
     
    uma1966 likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹை ப்ரியா வந்தாச்சா? :banana:...............ரொம்ப சந்தோசம் உங்களை இங்கு மீண்டும் பார்ப்பதில்............குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷன் ஆச்சா?.........நீங்க கொஞ்சம் ப்ரீ ஆநீங்களா உங்கள் வேலைகளில் இருந்து?.............நிறைய கட்டுரைகள் கூட போட்டுவிட்டேன்...........உங்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று தான் நான் உங்களுக்கு notification அனுப்பலை பிரியா..... இதோ கயா பற்றி போடுகிறேன் :)
     
    uma1966 and sreeram like this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மேற்கொண்டு தொடரும் முன் 'கயா' பற்றிய செய்திகள், கதைகள் பார்ப்போம்.

    கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்ததிருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு மட்டும் இல்லை.............. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள், பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்றபோது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும்

    ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

    இந்த ஊருக்கு இந்த பேர் வந்ததற்கு ஒரு கதையே இருக்கு. நாம் கட்டும் வீட்டுக்கு ஒரு பேர் வெச்சாலே அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் தானே ? [​IMG]

    கிருதயுகத்தில், "கயாசுரன்' என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால்,
    ""தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்'' என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால் சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது.

    எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு யோசனையைக் கூறினார். "ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?'' என்று கேட்கசொன்னர். பிரும்மாவும் திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். "இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை" என்றான்.

    உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான்.


    தொடரும்.....................
     
    uma1966, Rajijb and sreeram like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது.

    அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்'' என்றார். "தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான்.

    அவன் 2 வரங்கள் கேட்டான்.

    (எப்பவுமே நாம் 2 வரங்கள் தான் கேட்கலாம், திரௌபதி ,கைகேயி கேட்ட வரங்களைப் பற்றி படித்திருப்பிர்களே :)

    1. "முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்."

    2. "இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்'' என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

    தொடரும்.....................
     
    uma1966, Rajijb and sreeram like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும் கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்.

    ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம் போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில் பிணம் / பிணங்கள் எரிவதும் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார் [​IMG]


    (ஆச்சரியம் தானே !....நாங்கள் போனபோது கூட 2 - 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு....அங்கு எதற்கும் தீட்டே இல்லையாம் :) )

    "கயை' என்றும் "கயா' என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. "இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்' என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணுபாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்.

    தொடரும்....................
     
    uma1966 and sreeram like this.

Share This Page