1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்கள் திறக்கப் படாத பெண் ஓவியம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Mar 8, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெண்ணே நீ ஒரு அழகு ஓவியம்
    உன்னை வரைந்த படைப்பாளி
    உன் கண்களை திறக்க தயங்குவதேன்
    கண்களில் கருணையை காட்டுவதா
    இல்லை கடினத்தை காட்டுவதா
    அன்பை காட்டுவதா இல்லை அருளை காட்டுவதா
    சிரிப்பை காட்டுவதா இல்லை சினத்தை காட்டுவதா
    என தயங்கி நிற்பதேன் ஓவியனே

    நீ இனி பெண்ணின் கண்களில் வீரத்தை காட்டு
    எதையும் எதிர் நோக்கும் விவேகத்தை காட்டு
    புல்லர்களை கண்டால் புலியாக பதுங்காமல்
    புயலாக பாய்ந்து பொடிப் பொடியாக்கும்
    வித்தையை கற்றவளாக காட்டு

    காளியும் அவளே கற்பகமும் அவளே
    சக்தியும் அவளே சாந்த சொருபிணியும் அவளே
    பெண்களை போற்ற வேண்டாம்
    அவளும் ஒரு மனிதப் பிறவி என உணர்ந்தாலே இன்பம்
     
    Adharv, Isaimaruthi, Karthiga and 5 others like this.
    Loading...

  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிக அருமை அம்மா! “மனித பிறவி என உணர்நதாலே போதும்” - உண்மை! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!
     
    periamma and GoogleGlass like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: kaviyama alladhu Oviyama....
    Pengalal ulagam
    Ulagame pengal
    Shakthiyay ulagam
    Ulagame Shakthi
    Shakthi potri potri
    Mukthi nichayam nichayam

    NANRI cholla varthai illai enakku.
     
    Adharv, Rajeni, periamma and 2 others like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    woman_eyes_closed.jpg

    Migavum azhagaana kavithai amma. Kangalil kaata vendiyavatrai azhagaaga soneergal. saga manushiyaai mathithaale pothum -Mutrillum unmai.. iniya magalir thina nal vaazhthukkal
     
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super mmaa

    பெண் அவள்
    பேதை ஆவதும்
    மேதை ஆவதும்
    ஆணின் விருப்பில் அன்று
    அவளின் முயற்சியில் என்று
    அவள் அறிந்தாலே மேதை அன்றோ
     
    Adharv, Karthiga, jskls and 3 others like this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி.
    ஆம் சகோதரி
    முற்றிலும் மெய்யன்றோ

    அன்றே கவிஞ்ஞர் புரிந்தார் கவிதை
    பெண்கள் இல்லாத உலகத்திலே
    ஆண்களினாலே என்ன பயன்.

    மென்மையும் கடினமும்
    அவள் காட்டிடுவாள் தன்ஆற்றலிலே
    அமுதம் படைத்திடுவாள் நொடியினிலே
    அகிலத்தை காத்து நிற்பாள் எக்கணமும்...

    வாழ்க சகோதரிகள்
    வாழ்க அவர்தம் தமிழ் பற்று
    வாழ்க தமிழ் திருநாடு
    வாழ்க பாரதம்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rajeni நன்றி ரஜெனி
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Thyagarajan மிக்க நன்றி
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls நன்றி லக்ஷ்மி
     
    jskls likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass நன்றி GG
     
    GoogleGlass likes this.

Share This Page