1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

கணினி கவசம்

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Dec 11, 2011.

 1. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  கணினி கவசம்

  இந்தக கவசம் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் கொடுத்துள்ள 'கந்த ஷஷ்டி கவசம்' மெட்டில் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது.

  (என்னுடைய இன் பாக்ஸில் பல காலம் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மேட்டர் இப்போது பகிர்ந்துகொள்ளப் படுகிறது.)

  துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
  பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
  கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
  பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
  உன்னிப்புடன் நெஞ்சே குறி!

  காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
  அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
  வின்டோசைக் காக்க வேலன் வருக
  கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
  இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
  பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
  செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
  வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
  முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
  வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
  சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
  எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
  பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
  ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
  மவுசை மகேசன் மைந்தன் காக்க
  எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
  அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
  எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
  அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
  அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
  நில்லாதோட நீ எனக்கருள்வாய்
  ஹாங் ப்ராப்ளமும்
  ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
  என் பெயர் சொல்லவும்
  இடி விழுந்தோடிட
  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
  அலறவே வைத்திடும்
  ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
  வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
  அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
  பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
  பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
  மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
  மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
  மூவாகல் மூர்க்கம் செய்யும்
  மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
  நகர நீ எனக்கருள்வாய்
  கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
  டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
  போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
  கன்னா பின்னாவென்று வரும்
  கமான்ட் இன்டட் ரெப்டுகளை
  கந்தன் கைவேல் காக்க
  அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
  பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
  மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
  என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
  ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
  அனைத்து ஃபோர்டர்ஸீம்
  ஆயுளோடு விளங்க
  டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
  விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
  சிறப்புடன் வாழ்க.
  அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
  அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
  ஷட்டௌன் தடங்கல்
  சட்டென்று நீங்க
  ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
  கணினி சிஸ்டம் கவசம் இதனை
  சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
  படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
  படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
  வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

  சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.
   
  1 person likes this.
  Loading...

 2. Sriniketan

  Sriniketan IL Hall of Fame

  Messages:
  12,522
  Likes Received:
  1,423
  Trophy Points:
  445
  Gender:
  Female
  Sir,
  அமர்க்களம் போங்க..

  சஹஸ்ரநாமம் ஸ்டைல் வேற ஏதாவது இருக்கா..:)

  Sriniketan
   

Share This Page