1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 27 (நிறைவு பகுதி)

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Jan 22, 2012.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 27 (நிறைவு பகுதி)

    மேகமாய் நான்..
    பூமியாய் நீ..
    காதலாய் காற்று தூது வர..
    மழையாய் உன்னை சரணடைந்தேன்!!!!
    உனக்குள் தொலைந்த என்னைத் தேடி
    உன்னைக் கண்டுப் பிடித்துக் கொள்!!!

    இரண்டு வருடங்களுக்கு பின்... அதே நாள்.. இடம் முக்காணியில் உள்ள ஒரு இடம்..

    அருண், ஸ்ரீனி, சஞ்சீவ் மூவரும் அதன் ஒரு பக்கம் நின்றிருக்க அவர்களின் எதிரே பிரியாவும், ஆர்த்தியும் நின்றிருந்தனர். ஐவரின் முகத்திலும் இரண்டு வருட முதிர்ச்சியும், அனுபவமும், பக்குவமும் தெரிந்தது.

    வெளி ஆட்கள் யாருமில்லாத அந்த இடத்தில் பக்கத்தில் இருந்த தென்னை ஓலைகளின் சலசலப்பை தவிர வேறு சத்தமில்லை..

    சிறிது நேரம் இப்படியே கழிய அந்த அமைதியான மோன நிலையை கலைத்தது சாட்சாத் அருணே தான். இரண்டு வருடங்கள் ஆகியும் திருந்தவில்லை.

    "ஆர்த்தி.. ஐ அம் லவிங் யூ.. "

    "அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும்" அவனுடைய மனைவி ஆர்த்தி தான்..

    "கொஞ்சம் யோசிச்சி சொல்லு.. உன் தாலி பாக்கியத்தோட விளையாடாத தங்கம்"

    "அதெல்லாம் எனக்கு தெரியாது இப்போ குதிக்க போறியா இல்லையா"

    "ஹே உனக்கு மனசாட்சியே இல்லையா.. இவ்வ்வ்ளோ பெரிய கிணறு.. இதுல போய் என்னை குதிக்க சொல்றீங்களே... இதை கேட்க யாருமே இல்லையா"

    "மிஸ்டர் அருண் கொஞ்சம் கண்ணை நல்லா விரிச்சி பாருங்க இது கிணறு இல்லை... வெறும் தொட்டி... தண்ணி தொட்டி.. உன் பாஷைல வாட்டர் டான்க்... " இது பிரியா..

    "பிரியா இது ரொம்ப அநியாயம் ஆரத்திய வாட்டர் டான்க்னு கூப்பிட்டதுக்கு என்னை எல்லாரும் பழி வாங்கறீங்களா.."

    "அப்படி தான் வச்சிக்கோயேன் டா" இது ஸ்ரீனி..

    "பாஸ் நீங்களாது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க பாஸ்.. ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் வேணும்னா நான் தாரேன்.." சஞ்சீவிடம் சரண் புகுந்தான் அருண்.

    "கண்டிப்பா அருண் உங்களுக்கு இல்லாததா.. நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்" என்று அருகில் வந்த சஞ்சீவ் அருணின் தோளை அணைத்தவாறே கூறினான்..

    "ஹே பாத்தீங்கல்ல எனக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் சப்போர்டே இருக்குது.. யாரும்... ஆஆஆஆஆஆஆ.." அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை.. காரணம் சஞ்சீவ் அணைத்த தோளை இறுக்கப் பிடித்தவாறே தண்ணீரில் குதித்துவிட்டான்..

    பின்னாலேயே ஸ்ரீனியும் குதிக்க "ஐயோ.. ஐயோ.. கொலை.. கொலை.. ஹே ஆர்த்தி காப்பாத்துடி... எனக்கு நீச்சல் தேராது.. தண்ணில வேற கண்டம்னு நாலு திக்குல இருக்கிற மூணு ஜோசியரும் அடிச்சி சொல்லியிருக்காங்க.. விடுங்க டா. விடுங்க டா என்னை.. காப்பாத்துங்க" என்று தண்ணியில் தத்தளித்தவாறே அலறினான்.

    மேலே இருந்து ஆர்த்தியும் பிரியாவும் சிரித்துக் கொண்டிருக்க "டேய்ய்ய்ய் .. கத்தாத டா.. காலை கீழே ஊனு.." என்று ஸ்ரீனி தண்ணீருக்குள் இருந்த அவன் காலில் ஓங்கி மிதிக்க காலை ஊன்றி நின்று அசடு வழிய சிரித்தான் அருண்.. காரணம் அவன் கழுத்திற்கு தான் இருந்தது தண்ணீர்.

    "ஹி ஹி ஹி.. அது வந்து.. கருப்பா தெரிஞ்சதா சரி ரொம்ப ஆழமோனு நினைச்சிட்டேன்" என்று அசடு வழிய "சரி சரி துடைச்சிக்கோ ரொம்ப வழியுது.. மூணு பெரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு பெண்கள் இருவரும் தென்னந்தோப்பிற்குள் நுழைந்தனர்.

    சிறிது நேரத்தில் மூவரும் குளித்து முடித்து வர ஆர்த்தி "டேய் அருண் இன்னைக்கு நீ பண்ணின கலாட்டாவுக்கு தர்ஷினி மட்டும் இருந்திருந்தா.. சஞ்சீவ் அண்ணா கடைசியா பண்ணின வேலைய அவ முதலிலேயே செஞ்சிருப்பா.. " என்று கூற அனைவரும் சஞ்சீவின் முகத்தைப் பார்த்தனர்.

    ஒரு கணம் அங்கே மௌனம் நிலவியது. ஒன்றும் சொல்லாமல் சஞ்சீவ் வேகமாக அங்கே இருந்த தன் காரில் ஏறி சென்று விட்டான்.

    பிரியா, ஸ்ரீனி, அருண் மூவரும் திரும்பி ஆர்த்தியை முறைக்க "இல்ல.. நான் எதோ எதார்த்தமா தான் சொன்னேன்.. வேணும்னு இல்லை.." என்றவளின் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டி பார்த்தது.

    "ஹே வாட்டர் டான்க் பேசுறதை எல்லாம் பேசிட்டு இப்போ எதுக்கு அழுவுற.. காலைல வரமாட்டேன் சொன்ன சஞ்சீவை எவ்ளோ கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தோம்.. இப்போ பாரு அவர் திரும்பி போய்ட்டார்" என்று அருண் கடிந்து கொண்டான்.

    பிரியாவும் அவள் பங்கிற்கு ஆரத்தியைத் திட்ட, ஸ்ரீனி அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்த்தி கண்களில் இப்பொழுது நன்றாகவே தண்ணீர் வர அவளை திட்டுவதை நிறுத்திவிட்டு ஆனாலும் முறைப்பதை நிறுத்தாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆர்த்தியின் அழுத முகத்தில் திடீரென்று புன்னகை உதயமாக குழப்பத்துடன் அந்த பக்கமாய் திரும்பினர் மற்ற மூவரும். அங்கே சஞ்சீவின் கார் வந்து நின்றது. இந்த பக்கமாய் சஞ்சீவ் இறங்கும் முன் அந்த பக்கமாய் ஒரு பெண் இறங்கினாள்.. யாரது என்று பார்த்தால், வேறு யாருமல்ல நம் தர்ஷினியே தான்..

    "தர்ஷுமா இரு வரேன்.." என்று சஞ்சீவ் சொல்லும் முன் அந்த பக்கத்திலிருந்து இறங்கினாள் தர்ஷினி.

    இறங்கியவள் இரண்டு எட்டு எடுத்து வைக்கும் முன் தடுமாற நான்கு நண்பர்களும் "ஹே தர்ஷு பார்த்து.." என்று பதட்டமாக ஒரு சேர குரல் கொடுத்தனர். அதற்குள் காரில் இருந்து இறங்கி இந்த பக்கம் வந்த சஞ்சீவ் ஓடிப் போய் அவளைப் பிடித்துக் கொண்டான்.

    "ஒன்னுமில்லை பா.. ஐ யாம் ஆல்ரைட்.." என்று சிரித்துக் கொண்டு சஞ்சீவின் கையணைப்பில் நடந்து வரும் தர்ஷினியிடம் அந்த பழைய துள்ளல் நடை இல்லையோ... சிறிது தடுமாற்றம் இருக்கிறதோ... இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்று பார்க்கலாம்..

    ன்று மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் வெளியில் நின்றிருந்த சஞ்சீவ், நண்பர்கள், குடும்பத்தார் அனைவரையும் கலங்கவிட்டுவிட்டு அதன் பிறகு தான் தர்ஷினியின் நாடி சீராக ஆனது.. ஆனாலும் அவளுடைய உயிருக்கு உத்திரவாதம் அளிக்க மருத்துவருக்கு நான்கு நாட்கள் பிடித்தது.

    அவளின் உயிரை காப்பாற்றிய மருத்துவரால் அவளுடைய நடைக்கு உத்தரவாதம் தர இயலவில்லை. கால்கள் பார்க்க சாதாரணமாக இருந்த போதிலும் முதுகெலும்பில் விழுந்த அடியினால் அவளுடைய கால்களுக்கு நடப்பதற்கு போதுமான பலம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றார்.

    சஞ்சீவ் விடாமல் கொடுத்த நம்பிக்கையாலோ, இல்லை சஞ்சீவின் மேல் இருந்த காதலால் அவனுடன் வாழ வேண்டும் என்ற ஆசையினாலோ தர்ஷினியின் உடல்நிலை சீக்கிரமாக குணமாகியது. ஆனால் மருத்துவர் எதிர்பார்த்தபடியே அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. எழுந்தவள் கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே உட்காரும்போது சஞ்சீவின் நிலை கேட்கவே வேண்டாம்.. அப்படியே அந்த சங்கரனாதனை வெட்டி போட வேண்டும் என்று வெறியே வந்தது.

    அவளை தன் குடும்பத்தோடு பாதுகாப்பாக தன் ஊருக்கு அனுப்பிவிட்டு இங்கே சங்கரனாதனுக்கு எதிரான வேட்டையில் இறங்கினான்.

    அன்றே ரயில்வே காவலர்கள் அந்த ரௌடிகளைப் பிடித்திருந்தனர். அவர்களைப் பிடித்த அன்றே சஞ்சீவ் இருந்த வெறியில் அவர்களை அடித்து துவைத்து விட்டான்.. இது வரை சங்கரனாதனின் உதவியோடு போலீசில் இருந்து தப்பி வந்தவர்கள் அன்று தான் போலீஸ் அடி என்றால் என்ன என்று புரிந்துக் கொண்டனர்.

    "கொன்னே போட்டுடுவேன்.. கொன்னுட்டு கேஸ் இல்லாம எப்டி முடிக்கணும்னு எனக்கு தெரியும்.. " என்று ஒரு நான்கு நாட்கள் அவர்களை உள்ளே வைத்து போலீஸ் கையாளும் விதத்தை சஞ்சீவ் காட்ட அவர்கள் மிரண்டு சங்கரனாதனுக்கு எதிராக சாட்சி சொல்ல ஒத்துக் கொண்டனர்.

    சங்கரனாதனுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று சஞ்சீவ் நீதிமன்றத்தில் போட்ட வழக்கும் வென்றுவிட அவனால் ஒன்றுமே பண்ண முடியவில்லை. இந்த தைரியத்தில் மேலும் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சாட்சி சொல்லவும் மேலும் அவனுடைய ஆட்களே அவனுக்கு எதிராக இருக்கவும் அவன் மேல் கந்துவட்டி வசூலித்தது, பொதுமக்களை மிரட்டியது, திட்டமிட்டு கொலை செய்ய முயன்றது என்று பல்வேறு பிரிவுகளில் அவன் மேல் சட்டம் பாய்ந்தது. அவனுடைய சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

    எந்த அமைச்சரை சங்கரனாதன் மலைபோல் நம்பி இருந்தானோ அந்த அமைச்சர் இடை தேர்தலில் தோற்று விட அது சஞ்சீவிற்கு ஆதரவாக அமைந்தது. மொத்தத்தில் ஒரு வருடத்தில் சங்கரனாதனின் கொட்டத்தை அடக்கி அவனை செல்லாகாசாக்கிவிட்டு சிறையிலும் தள்ளிவிட்டு தான் ஊருக்கு திரும்பி சென்றான் சஞ்சீவ்.

    அங்கே ஒரு வருடத்தில் பிசியோதெரபிஸ்ட் உதவியோடு பலவிதமான பயிற்சிகளை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்திருந்தாள் தர்ஷினி.

    ஊருக்கு சென்றவன் முதலில் சொன்ன விஷயம் "தர்ஷினியை ஒரு நல்ல மாப்பிளையா பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றது தான். தர்ஷினிக்கோ பெரும் அதிர்ச்சி.. எட்டு வருடங்கள் காத்திருந்துவிட்டு இப்பொழுது வந்து இப்படி சொன்னால்.. அனைவருமே திகைத்து நிற்கும் போது அவனே தொடர்ந்து பேசினான்.

    "என்னால தான் தர்ஷினிக்கு இந்த நிலைமை.. என்னோட வேலைல எனக்கு நிறைய எதிரிங்க உண்டு... அதனால தர்ஷினி பாதிக்கப்பட்டானா என்னால தாங்கிக்க முடியாது.. அவ உயிரோடு நல்ல இருக்கணும்.." அவன் சொல்லி முடிக்கும் போது அவன் குரல் தழுதழுத்திருந்தது.

    "எலேய்.. என்னம்ல பேசுற.. அவளை தான நீ உசுரா நெனைச்சிருந்த.. இப்போ எல்லா கூடி வர்ற வேலைல தாழிய போட்டு உடைச்சாக்க இப்படி சொல்றேயேல" என்று அழகம்மை ஆச்சி அங்கலாய்க்க, முகம் முழுவதும் வேதனையோடு "இது தான் என் முடிவு" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டான் சஞ்சீவ்.

    அவன் தந்தை, தாய் ஆச்சி என அனைவரும் சென்று பேசியும் அவன் மசியவில்லை. ஏன் தர்ஷினியே சென்று பேசும்போதுகூட தன் வலியை மறைத்துக் கொண்டு முடியாது என்று தான் மறுத்துக் கொண்டிருந்தான்.

    கடைசியாக அலுத்து போன தர்ஷினி "எனக்கு புரியுது சஞ்சீவ், என்னால முன்னாடி மாதிரி நடக்க முடியலன்னு தானே என்னை கல்யாணம் பண்ணிக்க தயங்கறீங்க" என்று அவன் கண்களைப் பார்த்து கேட்க அதில் அடிப்பட்ட வலி தெரிந்தது. ஏற்கனவே அனைவரும் அசைத்துப் பார்க்க கடைசியாக தர்ஷினி பேசும் போது முழுவதுமாக உள்ளே அவன் முடிவிலிருந்து உடைந்திருந்தான்.. இந்த கேள்வியை தர்ஷினி கேட்டதும் தாங்கமுடியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

    "இல்லை ஒரு நாளும் நான் உன்னைவிட்டு போகமாட்டேன்.. தர்ஷுமா.. என்ன ஆனாலும் நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து பேஸ் பண்ணலாம்.. என்னால உன்னை விட்டு கொடுக்க முடியாது.. " என்று அவன் கண்ணீரோடு புலம்ப, அவள் முகத்தில் புன்னகையோடு கண்ணீர்.

    இப்படியாக சஞ்சீவ் தர்ஷினி கல்யாணம் முடிவாகி இதோ நான்கு மாதத்திற்கு முன்பு தான் ஒரு சுபயோக சுபதினத்தில் அழகம்மை ஆச்சி, சஞ்சீவின் பெற்றோரான தங்கபாண்டி, பாக்கியாட்டி அம்மாள், தர்ஷினியின் அம்மாவான சுந்தரி, தாத்தா, பாட்டி, தினேஷ் என அனைவரும் கண்களில் நீர் கசிய வாழ்த்து கூற, நண்பர்களின் கலாட்டவோடு அட்டகாசமாக நடந்தேறியது.

    அதுவும் திருமணத்தில் ஒரு சடங்கான தாரை வார்த்தல், அதாவது பெண்ணின் தந்தை மாப்பிள்ளைக்கு தன்னுடைய பெண்ணை தாரைவார்த்து கொடுத்தல் என்ற நிகழ்ச்சியின் போது தர்ஷினி "தினு அண்ணா.. வா நீ தான் என்னை தாரை வார்த்து கொடுக்கணும்" என்று தினேஷை அழைத்தது அனைவரையும் நெகிழ்த்தியது. அதுவும் அவளின் ஐந்து வயதிற்கு பிறகு இன்று தான் தினேஷை 'தினு அண்ணா' என்று அவள் அழைக்கிறாள். அவன் கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிய தன் தங்கையின் கரத்தை தன் நண்பனின் கரத்தில் ஒப்படைத்தான்.

    அவர்கள் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் அதுவரை காத்திருந்த பிரியாவும் ஸ்ரீனியும் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் அன்பில் நெகிழ்ந்த சஞ்சீவும் தர்ஷினியும் முன்னே நின்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    ன்று சஞ்சீவ் தர்ஷினி திருமணம் முடிந்து முதல் கோவில் கொடை விழா ஆதலால் சஞ்சீவ் விடுமுறை எடுத்துக் கொண்டு அவனும் தர்ஷினியும் ஊருக்கு வந்திருந்தனர். தங்கள் நண்பர்களையும் அழைத்திருந்தனர். அருணும் ஆர்த்தியும் தங்கள் இரண்டு வருட ஒப்பந்தம் முடிந்து இந்த வருடம் லண்டனிலிருந்து திரும்பி இருந்தமையால் அவர்களும் வந்திருந்தனர்.

    கொடை விழாவின் இரண்டு நாளும் கோவில் வீடு என்று அலைந்தமையாலும், விருந்தினரை கவனிக்கிறேன் என்று வேலை செய்தமையாலும் ஏற்கனவே பலம் குறைவான தர்ஷினியின் கால்கள் ஓய்வுக்காக கெஞ்சின. அதனால் தான் அவள் இவர்களோடு தோட்டத்திற்கு வரவில்லை. அவள் வராமல் தானும் வரவில்லை என்று சொன்ன சஞ்சீவை வலுகட்டாயமாக நண்பர்கள் கூட்டம் கூட்டி சென்றனர்.

    அனைவரும் அவர்களது இடத்திற்கு திரும்ப வேண்டிய நாளும் வந்து விட ஒவ்வொரு இணையாக அழகம்மை ஆச்சி மற்றும் சஞ்சீவின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசியோடு அவர்கள் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்த துணிமணிகள், பழங்கள், குங்குமம், மஞ்சள் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டனர்.

    முதலில் சஞ்சீவ்- தர்ஷினி, அடுத்து ஸ்ரீனி-பிரியா, அருண்-ஆர்த்தி விழுந்து எழ அடுத்ததாக ஒரு ஜோடி வந்தது.. யாரென்று பார்த்தால் நம் தினேஷும் சாவித்திரியும் தான்.. இது எப்படி எப்போது நடந்தது..

    சாவித்திரி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நடந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு லண்டன் செல்லும் வாய்ப்பை வேலையோடு சேர்த்து உதறிவிட்டு தன் ஊருக்கு சென்றுவிட்டாள். அன்று தர்ஷினி-சஞ்சீவ் திருமணத்திற்கு வந்த பொழுது தான் நண்பர்கள் மறுபடியும் அவளைப் பார்த்தனர்.

    ஆர்த்தியும் அருணும் அந்த சமயத்தில் லண்டனில் இருந்ததால் பிரியவும், சாவித்திரியும் தான் பெண்ணின் தோழிகளாக தர்ஷினியோடு இருந்தனர். ஸ்ரீனியும், தினேஷும் தான் மாப்பிள்ளை தோழர்கள். என்ன தான் நண்பர்கள் கலாட்டா களைக் கட்டி இருந்தாலும் சாவித்திரியின் கண்களில் ஒரு வலியை தினேஷால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. ஏனோ அவளையே அவன் கண்கள் தொடர்ந்தன. எதோ ஒரு விதத்தில் அவனை அவள் கவர்ந்தாள்.

    மறுநாள் சஞ்சீவிடம் தனிமையில் சாவித்திரியை பற்றி கேட்டான் தினேஷ். "கேக்றேனு தப்பா நினைக்காத மச்சான்.. முன்னாடி தர்ஷினியோட கண்ணுல ஒரு வலி தெரியும்... ஒரு பாதுகாப்பின்மை தெரியும்.. அதே மாதிரி சாவித்திரியோட கண்ணுலயும் தெரியுதுல " என்று அவன் கேட்க அவனை ஒரு முறை ஆழ பார்த்து விட்டு அவளைப் பற்றிய உண்மைகளை தினேஷிடம் கூறினான் சஞ்சீவ்.

    முழுவதையும் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தவனிடம் "மச்சான், ஒருத்தனால அவனோட அம்மா, தங்கச்சியோட உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க முடியும்னா கண்டிப்பா அவனோட வாழ்க்கை துணையோட உணர்ச்சிகளையும் புரிஞ்சிக்க முடியும்னு சொல்லுவாங்க... இப்போ உன் தங்கச்சியோட உணர்ச்சி மாதிரியே சாவித்திரியோட உணர்ச்சியும் உனக்கு புரியுதுனா... மச்சான் நா சொல்ல வரது புரியுதா.." என்று சஞ்சீவ் நிறுத்த, "ஏனோ அவ கண்ணுல இருக்கிற சோகத்தை துடைக்கணும் அப்படிங்கற வெறி வருதுல.. எத்தனையோ கஷ்டத்துல இருக்கிற பொண்ணுங்களை நான் பாத்திருக்கேன் அவங்களுக்கு உதவி பண்ணனும்னு தோணுமே தவிர இந்த மாதிரி வெறி வராது.. நல்லா புரியுது மச்சான், நேத்து வரை காதலோ அப்படினு சந்தேகபட்டுட்டு தான் இருந்தேன்.. ஆனா இப்போ முடிவே பண்ணிட்டேன்.. இனி சாவித்திரி தான் என் மனைவி.." என்று உறுதியுடன் கூறினான் தினேஷ்.

    சாவித்திரி ஊருக்கு செல்லும் முன்பே தன் மனதை அவன் வெளியிட, அவளோ "இல்லை.. எனக்கு உறுத்திட்டே இருக்கும்.. இது சரியாகுமானு எனக்கே தெரியல.. இதுல உங்க வாழ்க்கையையும் கெடுக்க விரும்பல" என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.

    அப்பொழுது தினேஷ் ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் மறுநாளே தன் பெற்றோர், சஞ்சீவ், தர்ஷினி சகிதம் அவளைப் பெண் கேட்டு சென்றுவிட்டான். ஏற்கனவே தர்ஷினி விஷயத்தில் மகனின் பாராமுகத்தில் நொந்திருந்த தினேஷின் பெற்றோர்கள் அவன் "இது தான் பொண்ணு.. கல்யாணம் பண்ணி வைங்க" என்று கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டனர். ஆனால் அவர்களிடம் அவளின் பழைய வாழ்க்கையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

    தனியாக அவனிடம் "என்னால தான் முடியாது சொன்னேன்ல" என்று சாவித்திரி கேட்க, "இப்போ நான் உன்னை எந்த விஷயத்திலயும் கட்டாயபடுத்த மாட்டேன்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு.. எனக்கு அது தெரியுது.. ஆனா உன்னோட பழைய வாழ்க்கை தடுக்குது..அது எனக்கு ஒரு பொருட்டே கிடையாது.. என்னைக்கு நீ உன் தப்பை உணர்ந்தியோ அன்னைக்கே நீ ஒரு புது மனுஷியா ஆய்ட்ட.. இதை உன் மனசு ஒத்துக்குற வரை நான் காத்திருப்பேன்.. உன் பழைய வாழ்க்கையை பத்தி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்.. ஆனா உன்னை இங்கே தனியா விட முடியாது... கல்யாணம் பண்ணிட்டு என்கூட இருந்து டைம் எடுத்துக்கோ.. என்னைக்கு உன் மனசு மாறுதோ அன்னைக்கு வரை நான் காத்திருப்பேன்" என்று தினேஷ் உறுதியான குரலில் சொன்னதும் தன் தவறை நினைத்து குறுகுறுத்த சாவித்திரியின் மனது அமைதியாக சரி சொல்லிவிட்டாள்.

    இதோ ஒரு மாதத்திற்கு முன்பு தான் தர்ஷினி நாத்தனார் முடிச்சு போட தினேஷ் சாவித்திரி திருமணம் இனிதே நடந்தேறியது.

    கோடை விழா முடிந்து ஸ்ரீனி, பிரியா, அருண், ஆர்த்தி சென்னைக்கு பயணமாக, தினேஷ் சாவித்திரி அவன் தற்போது வேலைப் பார்க்கும் தூத்துக்குடிக்கு செல்ல, சஞ்சீவும் தர்ஷினியும் அவர்கள் வேலைப் பார்க்கும் நாகர்கோவிலுக்கு பயணமானார்கள்.

    "குடி குடியைக் கெடுக்கும்..
    குடி குடும்ப வருமானத்தைக் கெடுக்கும்
    குடி நிம்மதியைக் கெடுக்கும்
    குடி சந்தோஷத்தைக் கெடுக்கும்
    குடி உடல்நலத்தைக் கெடுக்கும்"

    என்று எழுதி இருந்த பலகையின் கீழே தர்ஷினி ஆறாவது வரியாக

    "குடி உங்கள் குழந்தைகளின் மனதையும் எதிர்காலத்தையும் கெடுக்கும்" என்று எழுதி வைத்து விட்டு தான் வேலைப் பார்க்கும் 'குடிப்பவர்களுக்கான மறுவாழ்வு மையம்' என்று பெயர் தாங்கிய அந்த கட்டிடத்திலிருந்து தன் கால்களின் பலத்திற்கேற்ப மெதுவாக நடந்து வெளியில் வந்தாள்.

    அங்கே சஞ்சீவ் நிற்பதைப் பார்த்ததும் அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன. அவள் தோளை அணைத்தவாறே காரை நோக்கி நடந்தான் சஞ்சீவ்.

    "என்ன ஏசிபி சாருக்கு வேலை இல்லையா.. ம்ம்.. இங்க வந்திருக்காங்க"

    "இன்னைக்கு வேலை கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சிருச்சு.. திடீர்னு என் தர்ஷுமாவை பாக்கணும்னு தோணிச்சா, அதன் ஓடி வந்துட்டேன்.. சரி அது என்ன கடைசில புதுசா ஒரு வரி எழுதி வச்சிருக்க"

    "பின்ன எல்லா தர்ஷினிக்கும் ஒரு சஞ்சீவ் கிடைப்பானா என்ன.. அதான் அவங்க குழந்தைகளை அவங்களையே ஒழுங்கா பாத்துக்க சொல்லி எழுதி வச்சிருக்கேன்.." என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் தர்ஷினி. மென்மையாக அவள் தோளை அழுத்திவிட்டு அவளை காரில் உட்கார வைத்து காரை உயிர்ப்பித்தான்.

    ஓடும் மேகமாய் எதிலுமே படியாமல் யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் அலைபாய்ந்து திரிந்த தர்ஷினியை சஞ்சீவ மலையின் குளிர்ச்சியால் வளைத்து ஓடும் நதியாக்கி தனதாக்கி கொண்டான். சஞ்சீவ மலை இருக்கும் வரை தர்ஷினி எனும் நதி வற்றாத ஜீவ நதியாய் ஓடும்.. தர்ஷினி என்னும் நதி ஓடும் வரை சஞ்சீவ மலை செழித்தோங்கி இருக்கும்.

    அவர்கள் கார் கிளம்ப அதனோடு சேர்ந்து கிளம்பிய புழுதி படியும் போது பின்னால் பொறித்திருந்த அந்த வசனம் தெளிவாக தெரிந்தது.

    "குழந்தையா குடியா..
    குழந்தை என்றால் குடியை விடுங்கள்..
    குடிதான் என்றால் கருவிற்கு உயிர் கொடுக்காதீர்.."

    நாமும் இதோடு அவர்களுக்கு கையசைத்து விடைப் பெறுவோம்..

    ஓடும் மேகம், குளிர் நதியானது.

    அனு
     
    8 people like this.
    Loading...

  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பு தோழமைகளே..

    ஒரு வழியாக என் முதல் கதையை சுபமாக முடித்துவிட்டேன்.. சுபமாக முடிக்கவேண்டும், தர்ஷினியை பிழைக்க வைக்க வேண்டும், தர்ஷினி சஞ்சீவை சேர்த்து வைக்க வேண்டும் என்று பலவிதமான மிரட்டல்கள் பலவிதமாக வந்து சேர்ந்தன.. அதில் பயப்படுவதற்கு பதில் எனக்கு சந்தோசம் தான் மிஞ்சியது..

    கதை ஆரம்பித்த நாளிலிருந்து என்னை ஆதரித்த என் தோழிகளுக்கு என் நன்றிகள்.. களம் அமைத்துக் கொடுத்த வலைதளத்திற்கு என் நன்றிகள்..

    முதலில் விளையாட்டாக நான் கதை எழுத போகிறேன் என்று கூறிய போது "நல்ல எண்ணம்.. எழுது" என்று ஊக்கப்படுத்திய என் தோழி சூர்யாவிற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. அப்பொழுது மட்டுமல்லால் கதை முடியும் தருவாய் வரை நான் சோர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை உற்சாகப்படுத்திய அவளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (அதாவது யாராவது திட்ட வேண்டுமென்றால் சூர்யாவை திட்டுங்கள்.. ஏனென்றால் தவறு செய்பவர்களை விட, அதை தூண்டுபவர்களுக்கே தண்டனை அதிகம்.. ஹப்பா.. என்னலாம் சொல்லி தப்பிக்க வேண்டி இருக்கு...)

    கதை ஆரம்பித்த நாளில் இருந்து வெவ்வேறு வார்த்தைகளால் என்னை தங்களுடைய பின்னூட்டங்களால் உற்சாகபடுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள். வெறும் வார்த்தைகளால் அல்ல உணர்ந்து மனமார கூறுகிறேன்..

    கதை ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் பல பேர் கேட்ட கேள்விகளில் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க ஆசைப் படுகிறேன்.. (இன்னும் முடியலையா அப்டின்னு நீங்க கேக்றது எனக்கு கேக்குது.. நோ.. நீங்க கேட்டே ஆகணும்)

    1 . அனுவும் தர்ஷுவும் ஒருவரா?

    அனுவும் தர்ஷுவும் ஒருவர் இல்லை.. ஆனால் தர்ஷினி உண்மையே..
    நிஜங்களின் நிழல்கள் கதையில் நிரம்ப உண்டு..
    நிழலின் நிஜங்கள் உலகில் ஆயிரம் உண்டு..
    அதில் ஒரு நிஜம் தான் தர்ஷினி.

    குடியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை தான் தர்ஷினி.

    2 . தர்ஷினிக்கு கடைசியில் ஏன் அந்த தண்டனை?

    அது தண்டனை அல்ல, சஞ்சீவைப் போல் நேர்மையான ஆட்களுக்கு நம் சமூகம் கொடுக்கும் காயம்.. நாம் வெட்க படவேண்டிய விஷயம்..
    தன் குழந்தைகளையும், குடும்பத்தையும் அவர்களின் நலன் கருதி பிரிந்து இருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இன்னும் நம்மிடையே இருக்க தான் செய்கிறார்கள்.. (எனக்கு தெரிந்தே ஒருவர் இருக்கிறார்)

    ஓரளவிற்கு நான் நினைத்ததை புரியும் படி கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறன்.. இதுவரை பொறுத்துக் கொண்டு படித்ததோடு மட்டுமல்லாமல் நிறை குறைகளை எடுத்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்.

    கடைசியாக அடுத்த கதை எப்பொழுது என்று கேட்கும் என் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் தோழிகளுக்கு "ஏன் பா.. நீங்கலாம் ஒரு தடவை கொடுமை பட்டது உங்களுக்கு பத்தாதா.. என்னை அடுத்த கதை எழுத வைத்து அந்த கொடுமையையும் படனும் ஆசையா"

    அன்புடன்,
    அனு
     
    1 person likes this.
  3. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நான்தான் முதலாவதாக கருத்து எழுதுகின்றேன் என நினைக்கின்றேன்.... மகிழ்ச்சி/

    "குடி குடியைக் கெடுக்கும்..
    குடி குடும்ப வருமானத்தைக் கெடுக்கும்
    குடி நிம்மதியைக் கெடுக்கும்
    குடி சந்தோஷத்தைக் கெடுக்கும்
    குடி உடல்நலத்தைக் கெடுக்கும்"

    என்று எழுதி இருந்த பலகையின் கீழே தர்ஷினி ஆறாவது வரியாக

    "குடி உங்கள் குழந்தைகளின் மனதையும் எதிர்காலத்தையும் கெடுக்கும்"

    "குழந்தையா குடியா..
    குழந்தை என்றால் குடியை விடுங்கள்..
    குடிதான் என்றால் கருவிற்கு உயிர் கொடுக்காதீர்.."

    இந்த வரிகளில் இருக்கும் வலியை என்னால் உணரமுடிகின்றது.... தர்சினி பிழைத்துக் கொண்டதே பெரிய மகிழ்ச்சி... இதேபோல் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கதையை என் தோழி சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

    நன்றாக முடிந்திருந்தாலும் மனம் சிறுது கனமாகத்தான் உள்ளது
     
    2 people like this.
  4. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நான்தான் முதலாவதாக கருத்து எழுதுகின்றேன் என நினைக்கின்றேன்.... மகிழ்ச்சி/

    "குடி குடியைக் கெடுக்கும்..
    குடி குடும்ப வருமானத்தைக் கெடுக்கும்
    குடி நிம்மதியைக் கெடுக்கும்
    குடி சந்தோஷத்தைக் கெடுக்கும்
    குடி உடல்நலத்தைக் கெடுக்கும்"

    என்று எழுதி இருந்த பலகையின் கீழே தர்ஷினி ஆறாவது வரியாக

    "குடி உங்கள் குழந்தைகளின் மனதையும் எதிர்காலத்தையும் கெடுக்கும்"

    "குழந்தையா குடியா..
    குழந்தை என்றால் குடியை விடுங்கள்..
    குடிதான் என்றால் கருவிற்கு உயிர் கொடுக்காதீர்.."

    இந்த வரிகளில் இருக்கும் வலியை என்னால் உணரமுடிகின்றது.... தர்சினி பிழைத்துக் கொண்டதே பெரிய மகிழ்ச்சி... இதேபோல் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கதையை என் தோழி சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

    நன்றாக முடிந்திருந்தாலும் மனம் சிறுது கனமாகத்தான் உள்ளது
     
    1 person likes this.
  5. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    நிறைவுப் பகுதி வந்தது யாருக்குமே தெரியவில்லையா? யாருமே படித்தது போல் தெரியவில்லையே.......
     
    2 people like this.
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    அனு பா,

    இது உங்களின் முதல் கதை என்று என்னால் ஆரம்பத்திலிருந்தே நம்பமுடியவில்லை, அந்தளவு நன்றாக எழுதியிருந்தீர்கள். தர்ஷு படும் கஷ்டங்கள் அனைத்தையும் நாங்கள் உணருவது போல் இருந்தது. நல்ல கருத்துள்ள கதை அனு பா......

    தர்ஷு - தந்தையின் பிழையால் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்படும் ஒரு குழந்தையின் நிலையையும், அந்த குழந்தையின் மனநிலையையும் வைத்து அழகாய் உருவாக்கி இருந்தீர்கள்.

    கதையில் உள்ள ஒவ்வோரு கதாபாத்திரத்துக்கும் ஒரு முக்கியவம் கொடுத்து, எங்கள் மனதை அதன் எப்படி கவரலாம் என்று தெரிந்து எழுதி இருக்கீர்கள்....

    அருமையான கதை, மேலும் இது போல் கதை பல படைக்க வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  7. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Anu,

    Kadhai thodakkam mudhal irudhi varai arumai.... oru kuzhandhai yin valiyai nangu unarndaen.......... ungal kadhai naan padikka kaaranam, ungal thalaippu...enakku migavum pidiththadhu... aanal pinbu kadhai yum arumai yaaga karuththukkalai solla, thodarndhu padiththaen........ Ungal kadhai yai oru variyil azhgaaga mudivil yezhudiyadhu ennai kavarndhadhu...( oodum megam , Kulir nadhi yaanadhu ).

    Idhaiye thaangittom, innum maattoma enna.?!!!???!! dairiyama aduththa kadhai start pannunga....... naangallam yedhaiyum thaangum idhayam... kandippa comments post pannuvom. Eagarly waiting for next one!!!!!!!

    Vasupradha.S
     
    2 people like this.
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi anu....
    dharshu polachadhu la romba sandhosam ma...
    dharshu ku sanjeev kidachathu avaloda nalla mansukkaga....
    story romba super ah irundhudhu...
    indha update ah rendu varsham kalichu nu start panni konja neram dharshu pathi onnu solladhadhu la romba bayanthutten........

    aprom unga friend surya ku enga sarbavum thanks....
    chumma thandanai nu ella sollama next story um arambinga ma......
    odum megangale eppavume marakka mudiyadhadhu.......
    first story la oru kalakku kalakna madhiri , thodarndhu eludhunga ma....
     
    1 person likes this.
  9. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Very nice story.
    குடியினால் ஒரு குழந்தை எப்படி எல்லாம் கஷ்டப்படும் என்பதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்.
    சஞ்சீவின் தர்ஷுமா என்ற ஒரு வார்த்தை சொல்லுமே இந்த காதலின் ஆழத்தை. மனம் ஒன்றி இக்கதையை படித்தேன்.

    Keep up the good work.
     
    1 person likes this.
  10. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nice Job Anu dear with a social message at the end.

    Unga kavithai elam so Cute. I like it.


    Best wishes for Next Story
     
    1 person likes this.

Share This Page