1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 26

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Jan 17, 2012.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 26

    ஓடும் மேகமாய் நான்
    நல்துளி யாசிக்கும் சிப்பி நீ!
    புறம் பார்த்து பயந்தேன்
    புணராமல் தவித்தேன்
    அகம் காட்டி அழைத்தாய்
    அகமுருகி நீராகிவிட்டேன்
    சேர்த்துக்கொள் உன்னில்
    சிப்பிக்குள் முத்தாய் என்னை!!!

    அன்று திருநெல்வேலியில் மனநலமருத்துவர் திலகவதி அன்று கூறியவை சஞ்சீவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஏன் குடிப்பவர்களைப் பார்த்தால் தர்ஷினி இப்படி நடந்துக் கொள்கிறாள். அதுவும் அவளின் சுய நினைவு இல்லாமல் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தான் அது.

    "சின்ன வயதிலிருந்து குடிப்பழக்கத்தால் அவளோட அப்பா நடந்துகிட்டதைப் பார்த்ததால குடிச்சிட்டு வர்றவங்களைப் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்குமோ அப்படிங்கற பயம் அவ மனசுல இருக்கும்.. தர்ஷினி நடந்துக்கிறது ஒரு வகையான எஸ்கேப்பிசம்.. அவள் அதுக்கு மேல யோசிக்க விரும்பிறதில்லை.. ஆனா அவளோட மூளை சும்மா இருக்கிறதில்லை.. அவளுக்கு சின்ன வயசுல இருந்து குடிக்கிறவங்க மேல இருக்கிற கோபத்தை அவ மூளை இப்போ காமிக்க ஆரம்பிச்சிடுது.. இது தன்னிச்சையா அவளோட கண்ட்ரோல் இல்லாமலேயே நடந்துடுது.. இது நிக்கனும்னா அவ யோசிக்க ஆரம்பிக்கணும்.. அவளோட மூளை அவளோட சுய நினைவுக்கான கண்ட்ரோல வரணும்.." என்று கூறியிருந்தார்.

    அன்று தர்ஷினி அவள் கட்டுப்பாடில்லாமல் நடந்துக்கொண்ட பொழுது கூட சஞ்சீவின் குரல் அவளின் மூளையை எட்டியது. அந்த தைரியத்தில் இன்று அவன் இந்த அக்னிபரிட்சைக்கு தயாராகிவிட்டான்.

    அவன் பார்த்தால் அவள் திரும்பி பார்க்காமல் செல்வாள் என்று அவனுக்கு தெரியும். அதனால் தான் அவன் கண்டுக்கொள்ளாமல் சுற்றினான். அவன் எதிர்பார்த்தபடியே அவள் கண்கள் இவனைத் தேட ஆரம்பித்தன. இதோ அவள் கண்ணெதிரிலேயே கையில் மது கிண்ணத்தோடு காட்சி அளித்தும்விட்டான்.

    தர்ஷினியை கவனிக்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்த சஞ்சீவ் தன்னை அவள் மதுவோடு கிண்ணத்தோடு பார்த்துவிட்டதை அறிந்து மெதுவாக அந்த கூட்டத்திலிருந்து வெளியில் வந்தான். அவள் மண்டப வாசலில் இருந்து ஆவேசமாக அவனை நோக்கி வர, அவன் விருந்துக்கான அறையிலிருந்து அவளை நோக்கி வந்தான். நடுவில் இருந்த தோட்டத்தை அவன் தாண்டுமுன் தர்ஷினி அவனிடம் வந்துவிட்டாள்.

    வந்தவள் அவனை ஆவேசமாக அடிக்க ஆரம்பிக்க அவள் இருக்கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவளை அப்படியே இழுத்து அந்த பக்கமாய் இருந்த நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் சென்றான். வரவேற்பு முடிந்து வெகு நேரமாகிவிட்டதால் அந்த பக்கம் யாரும் வரவில்லை. அங்கு சென்றபின்னும் அவள் அடிப்பதை நிறுத்தவில்லை.

    இதை ஓரளவு எதிர்பார்த்து இருந்தாலும் அவளின் ஆவேசம் அவனைத் திணற வைத்தது. "தர்ஷுமா. கேளு.. தர்ஷுமா சொன்னா கேளு.. தர்ஷு.." என்று அவன் கூப்பிட்டது எதையுமே அவள் சட்டை செய்யவில்லை. சிறிது நேரம் போராடி பார்த்த சஞ்சீவ் அவள் இருகைகளையும் ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அவளை வேகமாக ஒரு அறை விட்டான். அந்த அடியில் ஓரளவு சுயநினைவிற்கு வந்த தர்ஷினியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

    அழுகையினூடே "நீங்களுமா.. சஞ்சீவ்.. இந்த விஷயத்துல நா உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்.. கெடுத்துட்டீங்க.. எல்லாமே போச்சு.. இனி என் கண்முன்னாடி நிக்காதீங்க.. போய்டுங்க.. போய்டுங்க.." என்று மடிந்து உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

    அவளது வேதனையைக் கண்டு மனம் துடித்தாலும் அவளருகே அமர்ந்து "குடிக்கிறவங்களை பார்த்தா உனக்கு என்ன கோபம் தர்ஷுமா.. யார் யாரோ குடிக்கிறதுக்காக நீ ஏன் இவ்ளோ எமோஷன் ஆகனும் தர்ஷு.." என்று மெல்ல ஆரம்பித்தான்.

    கண்கள் சிவக்க கோபமாக நிமிர்ந்தவள் "யார் யாரோவா.. நீங்க யாரோவா" என்று கேட்டாள் தர்ஷினி.

    "என்னை விடு.. அன்னைக்கு கூட நீ இப்படி நடந்துகிட்ட.. ஏன் யாரோ குடிச்சா உனக்கு என்ன"

    "எங்க அப்பாவை என்கிட்டே இருந்து பிரிச்ச அந்த சின்னசாமியும் யாரோ தான்.. அந்த குடியினால நான் எவ்ளோ வேதனை அனுபவிச்சிருக்கேன் தெரியுமா.. என்னை கண்ணுக்குள்ள வச்சி பாத்துகிட்ட என் அப்பா என்னை திரும்பி கூட பார்க்கல.. அவங்க நடவடிக்கையினால எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சி நின்னேன்.. எனக்குரிய அடையாளமே 'அந்த குடிக்காரன் பொண்ணு தானே' அப்படின்னு வந்ததே.. அப்போ நா உடைஞ்சி போய் நின்னது எனக்கு தான் தெரியும்.. கூனி குறுகி ஒரு முதுகெலும்பே இல்லாம நான் என்னுடைய குழந்தைக் காலத்தை கழிச்சது எனக்கு தான் தெரியும்... யார்கிட்டயும் எதையும் பேசாம நான் எனக்குள்ளேயே சுருங்கி போனது எனக்கு மட்டும் தான் தெரியும்.. கடைசில... கடைசில.. என் மடியிலேயே.. " என்று கதறி அழுதவளை ஆதரவாக அணைத்து முடிக் கோதிவிட்டான் சஞ்சீவ்.

    அந்த செய்கையில் கொஞ்சம் சமாதானம் அடைந்தவள் போல் நிமிர்ந்தவள் "இப்படி இன்னும் எத்தனை தர்ஷினி இருக்காங்க தெரியுமா.. எத்தனை குழந்தைங்களை இது மாதிரி முதுகெலும்பு இல்லாம மாத்திட்டு இருக்கு தெரியுமா... எனக்கு அப்படியே எல்லாத்தையும் கொன்னுடனும் போல வருது.." என்று அவள் ஆத்திரத்தில் கத்தியதில் சஞ்சீவே ஒரு கணம் ஆடிபோய்விட்டான்.

    அவள் மீண்டும் தொடர்ந்தாள் "இன்னைக்கு நீங்களும்.. நீங்களும்.. அந்த கன்றாவியை கையில வச்சிக்கிட்டு.. " என்று மறுபடியும் உடைந்து அழ, "தர்ஷுமா.. நிமிர்ந்து பாரு.. இவ்வளவு பக்கத்துல நான் உட்கார்ந்திருக்கேன்.. இன்னும் நான் குடிச்சிருக்கேனா இல்லையான்னு உனக்கு தெரியலையா.. அப்படியே யோசிக்கிறத நிறுத்தாம சுத்தி நடக்குறதுல கொஞ்சம் கவனம் வை.. நா குடிக்கவே இல்லை.. என் கையில இருந்தது தான் கிளாஸ்.. மத்தபடி உள்ளே இருந்தது வெறும் கோலா தான்.. நீ இந்த மாதிரி ஒரே பிடியில யோசிக்கிறது தான் பிரச்சினையே.. சுத்தி நடக்கிறதா பார்த்து கவனிச்சி பாருமா... உன்னோட செயல்களை உன்னோட கன்ட்ரோல்ல கொண்டுவா.. யோசிச்சி நடந்துக்கணும் தர்ஷுமா.. " என்று அவன் மென்மையாக கூறினான்.

    அவன் குடிக்கவில்லை என்று கொஞ்சம் முகம் தெளிந்தாலும் அவனது கடைசி வரியில் ஆத்திரம் கொண்டு "என்ன யோசிச்சி பார்க்கணும்.. இன்னும் அந்த பாழாப்போன குடி என்னை என்னவெல்லாம் கஷ்டப்படுத்திச்சினு யோசிச்சி பார்க்கணுமா..." என்று வெடித்தாள் தர்ஷினி.

    ஒருமுறை அவள் தோளை அழுத்தமாய் தடவி விட்டுவிட்டு அவன் தொடர்ந்தான். "தர்ஷுமா பாரதியார் ஒரு கவிதையில சொல்லியிருப்பார்
    'சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்' நீயம் போனதையே நினைச்சி கலைப்படுற மூடத்தனத்தை தான் செய்துட்டு இருக்க... யோசிச்சி பாரு நீ இப்படி செய்றதுனால போனது எல்லாம் திரும்ப வர போகுதா.. ஏதோ குடிச்சிட்டு உன் கண்ணுல படுறவங்க மேல உன் கோபத்தை காமிக்கிறதுனால உலகத்துல உள்ள எல்லா தர்ஷினியையும் காப்பாத்திட முடியுமா.. " என்று அவன் கேட்க அமைதியாய் அதை கேட்டுக் கொண்டிருந்தாள் தர்ஷினி.

    சூரியனை சூழ்ந்த மேகமாய் அவளது அறிவை சூழ்ந்திருந்த ஆத்திரம் விலகி அறிவு விழித்துக் கொள்ள அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

    சஞ்சீவ் வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பேசினான். "பாருமா நீ இப்படி நடந்துக்கிறதுனால ஒன்னும் ஆகபோறதில்லை.. அதைவிட நீ உருப்படியா ஏதாவது பண்ணலாம்... குடிப்பழக்கத்தை நிறுத்துறதுக்கு எத்தனையோ மறுவாழ்வு மையம் இருக்கு.. அங்க இருக்கிறவங்ககிட்ட நீ பட்ட கஷ்டத்தை சொல்லி அவங்க குழந்தைங்களைக் காப்பாத்தலாம்.. உனக்கு தெரிய குடிக்கிறவங்களை மறுவாழ்வு மையத்துல சேக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணலாம்.. பாதிக்கப்பட்ட குழந்தைகளோட முன்னேற்றத்துக்கு ஏதாவது பண்ணலாம்.. இதைவிட்டுட்டு அர்த்தமே இல்லாம நீ நடந்துக்கிறதுல என்ன நன்மை நடந்துட போகுது தர்ஷுமா.." என்று அவளையே திருப்பி கேட்டான்.

    அவன் எதிர்பார்த்த படியே அவனின் வார்த்தைகள் அவளின் மனதையும் மூளையையும் எட்டியது. இன்னொரு முறை அவள் தலையை தடவியவன் எழுந்தான். சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவள் மெல்ல எழுந்து அவன் கண்களைப் பார்க்காமல் "என்னை.. என்னை கொஞ்சம் வீட்ல விட முடியுமா" என்று கேட்டாள்.

    தலையசைத்தவன் அங்கிருந்த தன்னுடைய காரில் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர அவள் வந்து முன்னால் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவர்கள் வீடு வரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தபின்னர் காரை விட்டு இறங்க போன தர்ஷினியை "ஒரு நிமிஷம் தர்ஷுமா" என்ற சஞ்சீவின் குரல் தடுத்தது.

    "தர்ஷுமா.. உன்னை கஷ்டபடுத்தனும்னு இன்னைக்கு இந்த பேச்சை ஆரம்பிக்கல.. நீ படுற வேதனை எனக்கு புரியுது.. உன்னை அதுல இருந்து வெளில கொண்டு வரணும்னு தான் ஆரம்பிச்சேன்.. என்னைக்கா இருந்தாலும் நான் உனக்கு துணை இருப்பேன் தர்ஷுமா.. தப்பான வழில போக மாட்டேன்.. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.." என்றவன் பதிலுக்காக அவள் முகம் பார்த்தான்.

    அவனை சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவள் ஒன்றும் சொல்லாமல் இறங்கி சென்று விட்டாள்.

    வீட்டுனுள் சென்று படுத்தவளால் கண்களை மூட முடியவில்லை. சஞ்சீவ் பேசிய விஷயங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. மூளை யோசிக்க ஆரம்பித்தது. ஆம்.. அர்த்தமற்ற செய்கையினால் என்ன லாபம்.. அவன் சொல்வது போல உருப்படியாக செய்யலாம். படுக்கையில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த சுந்தரி அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    கிட்டத்தட்ட விடியும் நேரம் வரை யோசித்தவள் கடைசியாக முழுவதுமாய் சிந்தை தெளிந்தாள். கடைசியாக அவன் சொன்னது ஞாபகம் வந்தது. "என்னைக்கா இருந்தாலும் நான் உனக்கு துணை இருப்பேன் தர்ஷுமா.." சிந்தை தெளிந்த உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சஞ்சீவின் நினைவை மனம் முழுதும் நிரப்பிக் கொண்டது.

    அன்று ஆற்றங்கரை ஓரத்தில் அவன் தோளில் சாய்ந்து கதறியபோதும் சரி, அருணோடு சாப்பிட சென்ற அன்று அவன் கையில் மயங்கிய போதும் சரி, இன்று அவன் பேச்சிற்கு அவள் மனம் அமைதியடைந்து கேட்கும் போதும் சரி, தர்ஷினியின் ஆழ்மனது சஞ்சீவை மட்டுமே தேடியது. இதை நினைத்து பார்த்த தர்ஷினிக்கு சிரிப்பு தான் வந்தது. தன் முழு மனதோடு அவனிடம் ஒன்றிவிட்டு தன் காதலையும் சொல்லிவிட்டு அவனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து பார்த்தாள். அவளுக்கே முட்டாள் தனமாக தெரிந்தது.

    அவனுடைய வேலை அவளுக்கு பிடிக்காத துறை தான். என்ன தான் சஞ்சீவ் நல்லவனாக நடந்துக் கொண்டாலும் அதில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவிடமாட்டார்கள் என்பது அவள் அறிந்த விஷயமே. ஆனால் அன்று அவன் எடுத்து வெற்றிபெற்ற சங்கரநாதன் வழக்கில் அந்த கமிஷனர் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாராமே.. ஒரு வேளை அங்கேயும் நல்லவர்கள் இருப்பார்களோ.. தலைமை சரியாக இருந்தால் ஒரு வேளை அனைத்தும் சரியாக இருக்குமோ..

    'சரி இதோடு அவன் வேலையைப் பற்றி எண்ணுவதை விட்டு விட வேண்டும்.. அவன் நிச்சயமாக நல்லவனாக இருப்பான் அந்த நம்பிக்கை இருக்கிறது. இதுவரை தன்னை கொஞ்சம் கூட எந்த விஷயத்திலும் வற்புறுத்தாமல் நிதானமாக பொறுமையாக எடுத்துக் கூறுகிறான்.. இருந்தாலும் ரொம்ப தான் பொறுமை அவனுக்கு.. இனியும் பொறுமையை சோதிக்கக் கூடாது... காலையில எழுந்ததும் சம்மதம் சொல்லிடனும்..' என்ற அரும்பெரும் முடிவை மிக சீக்கிரமாக அதாவது ஒரு எட்டு வருடங்கள் கழிந்த இந்த விடியலின் போது எடுத்திருந்தாள் நம் தர்ஷினி.

    அதன் பிறகு அவளது நினைவு அவனை சந்தித்ததிலிருந்து ஒவ்வொன்றாய் அசைபோட ஆரம்பித்தது. 'திருட்டு ராஸ்கல் இன்னைக்கு கைல கிளாஸ் வச்சுட்டா நிக்கிற.. இனி கல்யாணத்துக்கு அப்புறம் விளையாட்டுக்கு கூட நீ அந்த கிளாசை கையில எடுக்க கூடாது.. எடுத்த உன்கிட்ட இருக்கிற லத்தியை வாங்கி உன்னையே அடிப்பேன்..' என்று செல்லமாக மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.

    இனிய கனவுகளோடு விடிந்தும் விடியாமையுமாக அவனைப் பார்க்க மாடிப்படிகளில் ஏறினாள் தர்ஷினி. எறியவளுக்கு சஞ்சீவின் வீட்டின் கதவில் தொங்கிய பூட்டைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது.

    'இவ்வளவு நாள் காத்திருந்துவிட்டு இப்போ எங்கடா போன' என்று மனதுக்குள் அவனை அர்ச்சித்தவள் கண்களில் அந்த கதவு கொண்டியில் சொருகி வைக்கப்பட்டிருந்த வாழ்த்து அட்டை பட்டது.

    'ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ டியர்' என்று ஆரம்பித்திருந்த வாழ்த்து அட்டையில் பின்னால் தர்ஷுமா என்று ஆரம்பித்து எழுதியிருந்தான்.

    "இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா."

    என்ற பாரதியார் பாடலை அவன் கைப் படவே எழுதியிருந்தான். அதற்கு கீழே

    "தர்ஷுமா, ஏன் இந்த கார்டை இங்கே வச்சிருக்கேன் பார்க்கிறியா.. எப்படியும் இரவு முழுவதும் உன்கிட்ட இருக்கிற சின்ன மூளையை கசக்கி பிழிஞ்சி யோசித்திருப்ப.. காலைல என்னை தேடி வருவேன்னு தெரியும்.. ஒரு தெளிவான முடிவு எடுத்தியா... இன்னும் முடிவுக்கு வரலானா இந்த கார்டை இருந்த இடத்துல வச்சிட்டு கீழே போய் இன்னும் யோசி.. ஒரு முடிவிற்கு வந்தப்புறம் என் நம்பருக்கு கூப்பிடு..

    ஊருக்கு கோவில் கொடைக்கு போகிறேன்.. வரும் வியாழன் காலை திரும்பி வருகிறேன்.. அதற்குள் கூப்பிட்டு விடு கண்ணமா .. நாம் வாழ்ந்து தான் பார்ப்போமே.."

    நீ கூப்பிட காத்திருக்கும்
    சஞ்சீவ்."

    என்று முடிந்திருந்தது அவன் கடிதம்.

    'தெரியுதுல நான் தேடி வருவேன்னு அப்புறமும் என் போனாராம் மகராசன்.. ஆனா சும்மா சொல்லக்கூடாது நான் என்ன பண்ணுவேன்னு என்னைவிட உனக்கு நல்லா தெரிஞ்சிருக்குது.. இதுக்காகவே நான் உனக்கு கூப்பிடமாட்டேன்.. இன்னும் அஞ்சே அஞ்சு நாள் எனக்காக காத்திட்டு இருடா என் சஞ்சீவ்' என்று மனதுக்குள் கூறிவிட்டு அந்த அட்டையை எடுத்துக் கொண்டு ஒரு துள்ளலோடு கீழே இறங்கி சென்றாள் தர்ஷினி.

    வாசலிலே அவள் அம்மா சுந்தரி நிற்க ஒரு கணம் திகைத்து நின்ற தர்ஷினி மறுகணம் அவரைக் கட்டி கொண்டாள். அவளின் மனமாற்றம் அவருக்கு புரிய ஆனந்தத்தில் பனித்த கண்களை துடைத்து கொண்டு அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

    சஞ்சீவ் இன்னும் ஐந்து நாள் காத்திருக்கட்டும் என்று நினைத்த தர்ஷினியால் தான் இந்த ஐந்து நாள் காத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கடந்தது. வியாழக்கிழமை எப்பொழுது வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.

    தான் பேசியது போதும் தர்ஷினி மனம் குழம்பாமல் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் யோசிக்கட்டும் என்று நினைத்த சஞ்சீவ் தன் ஆச்சி அழைத்துக் கொண்டிருந்த கோவில் கொடை விழாவிற்கு கிளம்பி சென்று விட்டான். அங்கே சென்று ஒவ்வொரு நாளும் அவளின் அழைப்பிற்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். சீக்கிரம் வியாழக்கிழமை வரட்டும் அவளை நேரில் சென்றே பார்த்துவிடலாம் என்று அவனும் வியாழக்கிழமைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

    காதலர் இருவரும் தவம் போல் காத்திருந்த ஐந்து நாட்கள் கழிந்து வியாழக்கிழமையும் அழகாக விடிந்தது. முந்தின நாள் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பிடித்து இன்று வந்துக் கொண்டிருக்கும் சஞ்சீவிற்கு எதோ பல வருடப் பிரிவிற்கு பிறகு தர்ஷினியைப் பார்க்க போவது போல் உற்சாகமாக இருந்தது.

    அந்த உற்சாகத்தில் இன்று தான் சங்கரநாதன் உன்னை வலிக்க வலிக்க அடிக்கிறேன் என்று கூறிய பதினைந்தாம் நாள் என்பது சுத்தமாக மறந்துவிட்டிருந்தது.

    இங்கே விடியற்காலையிலேயே எழுந்த தர்ஷினிக்கோ இருப்பே கொள்ளவில்லை. ஐந்து நாள் பொறுத்தவளுக்கு இதற்கு மேலும் தாங்காமல் ரயில் நிலையத்திற்கு கிளம்பிவிட்டாள்.

    இதோ இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கின்றன ரயில் வருவதற்கு. எட்டு வருடங்கள் அவனை காக்கவிட்டு, பின் இந்த ஐந்து நாட்கள் தானும் காத்திருந்த தர்ஷினியால் இந்த ஐந்து நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை.

    சஞ்சீவி கைபேசியில் அழைத்தாள். 'தர்ஷுமா காலிங்..' என்று தன் கைபேசியில் வருவதைப் பார்த்துவிட்டு துள்ளி குதிக்காத குறையாக சஞ்சீவ் அதை உயிர்பித்து காதிற்கு கொடுத்தான்.

    "தர்ஷுமா.. சொல்லு எங்கே இருக்க.." என்று சஞ்சீவ் கேட்க, "ரயில்வே ஸ்டேஷன்ல.. உங்களைப் பார்க்க தான்" என்று தர்ஷினியின் பதில் தேனாய் வந்து அவன் காதில் பாய்ந்தது. உற்சாகத்தில் ஒரு முறை நிஜமாகவே துள்ளிக் குதித்துவிட்டான். சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க அங்கிருந்து நகர்ந்து வாசல் பக்கம் வந்தான்.

    வாசல் கதவில் சாய்ந்துக் கொண்டு வேண்டுமென்றே "என்னை பார்க்கவா.. எதுக்கு" என்று புரியாதது போல் கேட்டான். "ம்ம்ம் அதுவந்து.. சஞ்சீவ் சஞ்சீவ்னு ஒருத்தர் இருக்கார்.. என்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டே என்கிட்டே சவால் விட்டார்.. அவருகிட்ட நான் தோத்துட்டேன் சொல்லி அவர் கேட்டதை சொல்லலாம்னு தான் வந்தேன்.." என்று வெட்க சிரிப்பு கலந்த குரலில் கூறினாள்.

    "ம்ம் எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.. " என்ற சஞ்சீவின் குரல் சந்தோஷத்தில் திளைத்திருந்தது.

    "நீங்க இறங்கி வாங்க சொல்றேன்"

    "ம்ஹ்ம் இப்பவே சொல்லு"

    "சஞ்சீவ்.. சஞ்சீவ்.. அது வந்து.. அது வந்து.. ஐ.. ஐ லவ் யூ.."

    "என்னது என்னது எனக்கு கேட்கல.. இன்னும் ஒரு தடவை சொல்லு.."

    "சஞ்சீவ்.... ஐ லவ் யூ....." என்று அவள் சூழ்நிலையை மறந்து கத்த சுற்றி இருந்தவர்கள் திரும்பி பார்த்தனர்.

    அதற்குள் ரயில் நிலையத்தை அடைய சஞ்சீவின் கண்கள் தர்ஷினியை தேடின. அதோ அதோ.. கண்டுபிடித்துவிட்டான் அவன்... "மை டியர் தர்ஷுமா.." என்று அவன் உதடுகள் முனுமுனுத்தன.. ரயில் நிற்பதற்காக காத்திருந்தான்.

    அவளை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் என்று நினைத்த அவனுக்கு சிறிது நேரத்தில் உலகமே தட்டாமாலை சுற்றியது.

    காரணம் தர்ஷினியை சுற்றி நிற்பவர்கள்.. சஞ்சீவின் போலீஸ் கண்கள் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டன தர்ஷினியை சுற்றிநிற்பவர்கள் சங்கரநாதனின் ஆட்கள்!!!!

    ஒரு கணம் உயிர் போய் உயிர் வந்தது சஞ்சீவிற்கு.

    இது எதுவும் தெரியாமல் ரயில் நின்று சஞ்சீவைக் காணபோகும் தருணத்திற்காக காத்திருந்தாள் தர்ஷினி தன்னை சுற்றி நிற்கும் ஆபத்தை உணராமல்.

    நின்றும் நிற்காமலுமாய் நின்ற ரயிலில் இருந்து குதித்த சஞ்சீவ் அவளை நோக்கி ஓடி வந்தான். பிளாட்பாரத்தின் அந்த கோடியிலிருந்து அவன் ஓடி வந்தான். தன்னை நோக்கி தான் ஓடி வருகிறான் என்று தர்ஷினியும் ஓரடி முன்னால் எடுத்து வைத்தாள். அடுத்த அடி எடுத்து வைக்கும் முன்னால் அவள் காலில் ஒரு அடி விழுந்தது. கூட்டம் சிதறி ஓடியது.

    கீழே விழுந்தவள் நிமிர்ந்து பார்க்கும் முன் அடுத்த அடி அவள் முட்டில் விழுந்தது. சுருண்டு விழுந்து விட்டாள் தர்ஷினி. வலி உயிர் போனது. அடுத்த அடி அவளது முதுகுத்தண்டை பதம் பார்த்தது. மேலும் நான்கைந்து அடிகள் சராமாரியாக விழுந்தது.

    சஞ்சீவிற்கோ தன் உயிர் தன்னிடம் இல்லை.. "தர்ஷுமாமாமாமாமா.. " என்று அலறலுடன் அவன் ஒருபுறம் ஓடி வர, மறுபக்கம் இந்த சம்பவத்தைப் பார்த்து ரயில்வே போலீசார் ஓடி வந்தனர்.

    சஞ்சீவ் ஓடி வருவதை ஒரு குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், சுருண்டு அரை மயக்கமாய் விழுந்துக் கிடந்த தர்ஷினியை தூக்கி நிறுத்தினான். தர்ஷினியின் பாதியாக மூடிய கண்களுக்குள் சஞ்சீவ் ஓடி வருவது தெரிந்தது.

    அவள் கைகளை பின்னால் சேர்த்து ஒருவன் பிடிக்க மற்றொருவன் கத்தியை அவள் வயிற்றில் சொருகினான். சஞ்சீவ் "டேய்... " என்று கத்திக் கொண்டு அவர்களை நெருங்கிவிட அவளை அப்படியே கீழே போட்டுவிட்டு தண்டவாளத்தை தாண்டி ஓடினர். ரயில்வே போலீசார் அவர்களைத் தொடர்ந்து ஓட சஞ்சீவ் ஓடி வந்து தர்ஷினியைத் தூக்கினான். முழு மயக்கத்திலிருந்தாள் தர்ஷினி.

    அவன் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது. வாய் "தர்ஷுமா.. தர்ஷுமா.. நான் வந்துட்டேம்மா.. இப்போ எல்லாம் சரியாய்டும்..ஒன்னும்மில்லடா தங்கம்.. இப்போ வலி எல்லாம் போய்டும்.. கொஞ்சம் பொறுத்துக்கோடா.. " என்று கூறிக் கொண்டிருந்தது.

    அவளைத் தூக்கி கொண்டு ஓடிய சஞ்சீவ் அங்கிருந்த ரயில்வே போலீஸ் ஜீப்பை எடுக்குமாறு கேட்டுக் கொண்டு பின்னால் தர்ஷினியோடு அமர்ந்தான். ஜீப் மருத்துவமனை நோக்கி ஓடியது. நல்லவேளையாக பக்கத்திலேயே அரசு மருத்துவமனை இருக்க அடுத்த ஐந்தாம் நிமிடம் தர்ஷினி மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் போய்க் கொண்டிருந்தாள். அதற்குள் அவளுக்கு ஏகப்பட்ட இரத்தம் வெளியேறி இருந்தது. ஜீப்பில் இருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றும் போது வலி தாங்க முடியாமல் தர்ஷினி மயக்கத்திலிருந்து சிறிது வெளி வந்தாள்.

    வந்தவள் கண்களுக்கு சஞ்சீவின் முகம் தெரிய அவனை நோக்கி "உங்க.. உங்க வேலைல.. நீங்க எவ்வளவு நேர்மையா இருக்கீங்க.. ம்ம்ம்.. அதுக்கு என்மேல விழுந்த.. இன்னக்கு விழுந்த.. அடிதான் சாட்சி.. இப்போ மனபூர்வமா உங்களை காதலிக்கிறேன்... ஒரு உறுத்தலும் இல்லாம.." என்று திக்கி திணறி வலியில் முனங்கியவாறே கூறினாள்.. பாதி காற்று தான் வந்தது.. ஆனாலும் சஞ்சீவிற்கு புரிந்தது. அவன் மனம் துடித்தது. வார்த்தையால் சொல்ல முடியாத வேதனை அவன் மனம் பட்டுக் கொண்டிருந்தது. அதோடு தர்ஷினி மயக்கமானாள். அவளை ஐ.சி.யூ விற்குள் கொண்டு சென்றனர்.

    வெளியில் உயிரைக் கையில் பிடித்துக் காத்துக் கொண்டிருந்த சஞ்சீவின் கைபேசி சிணுங்கியது. இயந்திரத்தனமாய் எடுத்து காதில் வைத்தான்.. "என்ன தம்பி.. உன் லவ்வரை அடிசிட்டாங்கலாமே.. குத்த வேற செஞ்சிட்டாங்களாம்.. ஹா.. ஹா.. ஹா.. இன்னைக்கு நான் சொன்ன பதினஞ்சாவது நாள்.. உன்னை அடிக்கனும்னு தான் நம்ம பசங்களை அனுப்பி வச்சேன்.. அப்புறம் பாத்தா 'சஞ்சீவ் ஐ லவ் யூ' னு ஒரு குட்டி கத்திட்டு இருக்குனு சொல்றானுங்க.. அப்போ தான் புரிஞ்சது அங்க அடிச்சாதான் உனக்கு இன்னும் வலிக்கும்னு.. அதான் அடிச்சிட்டோம்.. ஹா ஹா ஹா.." என்று சங்கரநாதன்.

    பதில் பேச தெரியாமல் கைபேசியை வைத்தான். இதை தான் விதி என்று சொல்வதோ.. அங்கு தர்ஷினியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

    மேகம் ஓடும்..

    அனு
     
    1 person likes this.
    Loading...

  2. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    முகப்புக் கவிதை நன்றாக உள்ளது?

    தர்ஷினி என்ன செய்தாள் பாவம்? ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை?

    மிகவும் வேதனையாக உள்ளது
     
    1 person likes this.
  3. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    story is nice.

    Cheers,
    Sweety
     
    1 person likes this.
  4. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    very nice episode
     
    1 person likes this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Anu..
    very nice long update da..
    kathai mudiya poguthunu ninaikum pothu than varuthama iruku da, atha pokka adutha kathaiya seekiram thodangidu.. :)
    kutthu patta dharshu va thookittu sanjeev alarunathu KhaKa Khaka suriya alarunatha niyabaga paduthichu ma..
    dharshu kuthu pattathu kastama irunthalum yeppadiyum ava seekiram kunamaagi namma sanjeev kuda santhosama valva nu theriyum.. so manasa thida padutthikitten :)
    KhaKa Khaka kuda compare pannen but antha climax kuduthiratha da chellam.. i kw u wil give happy ending only :)
    -devi.
     
    2 people like this.
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi anu...
    starting kavidhai ye super ah irundhudhu...
    dharshu kaga sanjeev edutha steps ellam kalakkal...
    kadaisila sankaranathan ipdi pannitane...
    dharshini ku onnum aagadhu... she wil be safe ...
     
    1 person likes this.
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    அனு பா.......

    தர்ஷு நல்லா யோசிச்சு நல்ல முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேரபோராங்கனு.... இருந்தா இந்த நேரத்துல தான் இப்படி நடக்கனுமா?.......
    தர்ஷு பாவம் பா.... அவள காப்பாத்துங்க பா......
    சஞ்சீவ் அவங்கள சும்மா விடாத........சொல்லிடேன்
    சீக்கரம் அடுத்த பகுதிய போடுங்க பா......
    ரொம்ப நல்லா எழுதுறீங்க பா........
     
    1 person likes this.
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Anu,

    Darshu ku ivalo valiya thandhadhu kashtama irundhudu..Aana ava inime kandippa sanjeev ah thappa nenakka maatta......avanoda true love for her and job rendayum correct ah purinjukitta... adhanaala kandippa rendu paerayum chamatha serthu vekkanum. . No villathanam........

    Vasupradha.S
     
    1 person likes this.
  9. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Anu,
    Dharshuvai Sanjeev evvalavu azhagaa handle panraan
    enbathai rasichu padichu
    aval padi padiyaana matrangalil
    engam manasaiyum magilchi kadalil mithakka vitta neenga
    en ippadi theedeernu athe kadalil sogathai kalanthu moozhgadikareenga.
    Neenga seyyarathu konjam kooda nalla illai sollitten.
    Sanjeev ellathukkum kaaranam namma Anu thaan...
    Avangakukku un treatmentai konjam kodu... pothum
    Un Dharshuvukku ennaikum poorna aayusu Thaan.
     
    1 person likes this.
  10. THAMIZH16

    THAMIZH16 Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    14
    Trophy Points:
    18
    Gender:
    Female
    அடுத்த பகுதி எப்போது வரும். தர்சினியைச் சந்திக்க ஆவலாய் இருக்கின்றேன்.
     
    1 person likes this.

Share This Page