1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒருத்தி ஒருவனை

Discussion in 'Regional Poetry' started by Thyagarajan, Feb 26, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    From JUST BE SATSANG
    சிறு திருத்தங்களுடன் "ஒருத்தி ஒருவனைப் பாடல்" வரிகள்.... ஒருத்தி ஒருவனை பாடல்
    அறிவில் அகந்தையைக் கரைத்து விட்டால்
    அந்த அறிவுக்குப் பொருளென்ன?
    ஞா… னம்…. ம்…. ம்…. ம்….
    அந்த அகந்தை ஒருவனை மறைத்திருந்தால்
    அந்த மறைப்புக்கு உருவென்ன?
    ஜனனம்…ம்….. ம்…… ம்…..
    நினைப்பும் மறப்பும் நீஙகி விட்டால்
    அந்த நிலைமையில் இருப்பென்ன?
    உறக்கம்…. ம்….. ம்…… ம்…..
    பிறவிகள் மீண்டும் தொடர்ந்திருந்தால்
    பின்னும் மனிதனின் நிலையென்ன?
    சரணம்……
    அறிவில் அகந்தையைக் கரைத்து விட்டால்
    அந்த அறிவுக்குப் பொருளென்ன?
    ஞா… னம்…. ம்…. ம்…. ம்….
    =======
    1
    நனவும் கனவும் பொய்யுருவம்
    அதில் நாளும் கரையுது என்னுருவம்
    நனவும் கனவும் பொய்யுருவம்
    அதில் நாளும் கரையுது என்னுருவம்
    மயக்கம் என்பது பொய்ப்பதிவும்
    அதை மறவாதிருந்தால் சுகம் பெருகும்
    மயக்கம் என்பது பொய்ப்பதிவும்
    அதை மறவாதிருந்தால் சுகம் பெருகும்
    மயக்கம் தெளிய முடியவில்லை - அந்த
    மயக்கம் கூட எனதில்லை
    மயக்கம் தெளிய முடியவில்லை - அந்த
    மயக்கம் கூட எனதில்லை
    நினைக்கும் நினைப்பும் நமதில்லை - அதை
    நினைக்க வைப்பது அதன் தன்மை
    அறிவில் அகந்தையைக் கரைத்து விட்டால்
    அந்த அறிவுக்குப் பொருளென்ன?
    ஞா… னம்…. ம்…. ம்…. ம்….
    =======
    2
    அலைந்தேன் அலைந்தது கிடைக்கவில்லை - என்னை
    அலைக்க வைத்தது இதிலில்லை
    அலைந்தேன் அலைந்தது கிடைக்கவில்லை - என்னை
    அலைக்க வைத்தது இதிலில்லை
    வாழ்வு என்பதே பொய் நடிப்பும் - அதன்
    வழியைப் பார்த்தால் மெய்விளங்கும்
    வாழ்வு என்பதே பொய் நடிப்பும் - அதன்
    வழியைப் பார்த்தால் மெய்விளங்கும்
    உரைத்தேன் உண்மையை கண்டதில்லை - அதை
    உணரும் திறமும் எனக்கில்லை
    உரைத்தேன் உண்மையை கண்டதில்லை - அதை
    உணரும் திறமும் எனக்கில்லை
    கடந்தேன் கடவுளாய்த் தானிருந்தேன் - உள்
    கடக்கவே நீயும் உணர்ந்திடுவாய்
    அறிவில் அகந்தையைக் கரைத்து விட்டால்
    அந்த அறிவுக்குப் பொருளென்ன?
    ஞா… னம்…. ம்…. ம்…. ம்….
    அந்த அகந்தை ஒருவனை மறைத்திருந்தால்
    அந்த மறைப்புக்கு உருவென்ன?
    ஜனனம்…ம்….. ம்…… ம்…..
    நினைப்பும் மறப்பும் நீஙகி விட்டால்
    அந்த நிலைமையில் இருப்பென்ன?
    உறக்கம்…. ம்….. ம்…… ம்…..
    பிறவிகள் மீண்டும் தொடர்ந்திருந்தால்
    பின்னும் மனிதனின் நிலையென்ன?
    சரணம்……
    அறிவில் அகந்தையைக் கரைத்து விட்டால்
    அந்த அறிவுக்குப் பொருளென்ன?
    ஞா… னம்…. ம்…. ம்…. ம்….
    =======
     
    Loading...

Share This Page