1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஐய்யங்கார் கோவில் புளியோதரை !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Mar 14, 2017.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எத்தனை தான் நன்றாக புளியோதரை செய்தாலும் அது ஐய்யங்கார் கோவில் புளியோதரை போல வரவில்லை என்று அலுத்துக் கொள்பவரா நீங்கள், அப்போ இதை ரெசிபி உங்களுக்காகத்தான் ..........பொறுமையாக படித்து செய்து பார்க்கவும் :)

    ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். :)

    முதலில் பொடி செய்யும் முறையை பார்போம்.

    தேவையானவை:

    தனியா 4 டேபிள் ஸ்பூன்
    கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
    குண்டு மிளகாய் 12 -15
    பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு / பொடி 1/4 டீ ஸ்பூன்
    கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

    இந்தப் பொடியை நிறைய தயார் செய்து வைத்துக்கொண்டு பலவிதமான உணவுவகைகளை செய்ய உபயோகிக்கலாம்...எனவே, இதற்கு all purpose powder (APP)என்று எங்கள் வீட்டில் செல்லப் பேர் வைத்திருக்கிறோம் :)

    செய்முறை :

    பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
    தனியே எடுத்துவைக்கவும்
    அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
    நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.



    அடுத்தது புளி பேஸ்ட் !

    நம் சமையலில் முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளிபேஸ்ட் ஆமாம். இன்றய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளிபேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளிபேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளிபேஸ்ட்

    இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
    பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
    'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
    ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
    பெருங்காயபொடி போடவும்.
    புளிதண்ணியை ஊற்றவும்
    அது நன்கு கொதிக்கட்டும்.
    மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
    நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
    நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
    ஆறினதும் பாட்டில் ல போடவும்.
    நம்ப புளிபேஸ்ட் தயார்.

    குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )



    இப்ப புளியோதரை செய்யலாம்.

    அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 2 கப்
    புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
    பொடித்து தயாராய் வைத்துள்ள பொடி

    தாளிக்க:

    நல்லெண்ணெய்
    கடலை பருப்பு
    உளுத்தம் பருப்பு
    கடுகு
    குண்டு மிளகாய் 2 - 4
    மிளகு 1 டீ ஸ்பூன்ஒன்றாண்டாக பொடிக்கவும்
    எள் 1 டீ ஸ்பூன்
    கறிவேப்பிலை
    வேர்கடலை
    முந்திரி

    செய்முறை:

    ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
    ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
    புளி பேஸ்ட் போடவும்
    செய்து வைத்துள்ள பொடியையும் போட்டு, மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
    சுவையான கோவில் புளியோதரை ரெடி.

    குறிப்பு: இந்தப் பொடியும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போறும். எப்பவேனாலும்
    புளியோதரை ரெடி பண்ணிடலாம். lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.
     
    periamma and Ooviya like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @krishnaamma இப்பவே புளியோதரை சாப்டனும் போல இருக்கே .செய்முறை அருமை
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி , செய்து பார்த்துவிடுங்கள் :)
     

Share This Page