ஐப்பசி துலா ஸ்நானம் - காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Oct 27, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    காவேரி துலா கட்டம்

    காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

    அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

    இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.

    யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.

    உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.

    ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

    பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.

    நதிகளில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இதன் மூலம் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களால் நதிகள் தங்களது பொலிவை இழந்து தவித்தபோது அனைத்து நதிகளும் ஒன்று கூடி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தன. நதிகளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி தேவியுடன் நதிகளில் புனித நீராடினார். அதன் மூலம் நதிகளுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்கியதாகவும், அவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியுடன் புனித நீராடும்போது நாமும் நீராடினால் நமது பாவங்களும், தோஷங்களும் நம்மை விட்டு அகலும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    தோஷங்கள், பாவங்கள் விலக உங்கள் ஜாதகத்தில் பொருத்தமான நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் கடைமுக தீர்த்த வாரியில் நீராடுவது மிகவும் நல்லது.


    ஐப்பசி மாதத்தைத் தமிழில் துலா மாதம் என்பார்கள். துலா என்றால் தராசு. தராசு எவ்வாறு நடுநிலையைத் தன் முள் காட்டி நிற்கிறதோ, துலா மாதமும் பகலையும் இரவையும் சமமாகத் துல்லியமாகக் கொண்டுள்ளது என்பதை குறிக்கவே துலா மாதம். சூரியன் இந்த மாதம் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார் எனவே இதுவும் ஒரு காரணமாயிற்று.

    Read more at: ஐப்பசி துலா ஸ்நானம் - காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்

    துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
     
    suryakala likes this.

Share This Page