1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏற்றம் உண்டானால், இறக்கமும் உண்டு

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Dec 11, 2011.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ஏற்றம் உண்டானால், இறக்கமும் உண்டு
    -------------------------------------------------------------
    பொது அர்த்தம்
    ------------------
    மேன்மை ஏற்படும்போது சிறுமை வருவதும் , ஏற்படும் ; உயர்வு வரும்போது தாழ்வும் வரும். ஆகையால், வாழ்க்கையில், இரண்டையும் ,எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும்; மனப் பக்குவம் வேண்டும்.

    விசேஷ அர்த்தம்
    ---------------------------
    ஏற்றம் உண்டு----------சாஸ்திர விதிப்படி, புண்ய கர்மங்களைச் செய்தால், அதற்கு உரிய ஏற்றம் ---பலன் உண்டு. தானம் செய்தல், ஹோமம் செய்தல், க்ஷேத்ராடனம் போதல், நித்ய கர்மாக்களைச் செய்தல், சந்த்யாவந்தனம் , பகவத் ஆராதனம் இவை போன்றவை செய்தல், -----இதனால் செய்பவர்களுக்கு, ஏற்றம் உண்டு. அதாவது, மேன்மை உண்டு.
    ஏற்றம் உண்டானால் ---இதை, ஏற்றம் உண்டு ---ஆனால் என்று பிரித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால், இங்கு, ஆனால் என்பது முக்கியம்.
    மேன்மை உண்டு, ஆனால்,சாஸ்த்ரங்கள் சொல்லியபடி, புண்ய கர்மாக்களைச் செய்தாலும், நித்ய கர்மாக்களைச் செய்தாலும்,
    அதில் " பங்கம்" ஏற்பட்டால், அதில் குறைவு ஏற்பட்டால், என்று அர்த்தமாகிறது.

    என்ன " பங்கம்" , " என்ன குறை " ? .
    உதாரணம் சொல்வோம்
    கோதானம் மிகச் சிறந்தது. கோதானம் பெறுவோருக்கு, சில லக்ஷணங்கள் உள்ளன; சாஸ்த்ரப்படி உள்ளன. அதைப் போல, தானம் கொடுப்பவன், எப்படி, மனதளவில்/ செய்கையில் இருந்து, தானம் செய்யவேண்டும் என்றும் விதிகள் உள்ளன. இவை போன்றவை, ஹோமம் செய்வதில்,
    ருத்விக்குகளை வரிப்பதில் அன்னமிடுவதில் என்று, எல்லாவற்றிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
    இவைகளை , நன்கு தெரிந்து, புண்ய கர்மாக்கள் செய்வதில் ஈடுபட்டாலும்,
    இவைகளைச் செய்வதில், பங்கம் ஏற்படுகிறது/ குறை ஏற்படுகிறது.
    இப்படிப் பங்கம் ஏற்பட்டால், குறைவு ஏற்பட்டால், இறக்கமும் உண்டு. இங்கு " இறக்கம் " என்றால், "ஆனால்" என்று சொன்னோமல்லவா அதற்கு உரிய பலன்கள் என்று அர்த்தம். "இறக்கமும்" என்று "உம" சேர்த்து, அழுத்தம் கொடுப்பதை, உணரவேண்டும்.

    ஹே, ஆஸ்திகர்களே,
    புண்யகார்யங்களைச் செய்கிறோமென்று, சிலவற்றைச் செய்து, பலன் அடைபவர்கள், அப்படிச் செய்யும்போது, ஏற்படும் சாஸ்த்ரவிரோத செயல்களுக்கும் பொறுப்பு ஆகிறார்கள். அதற்கு உரிய தாழ்வும் வாழ்க்கையில் உண்டு என்று பொருள் ஆகிறது. ஆதலால், வாழ்க்கையில் லௌகிகப்பலன்களை அடைய, சாஸ்த்ர சம்மதமான க்ரியைகளைச் செய்பவர்கள், சாஸ்திரம் விதித்தபடி, மிகவும் ஜாக்ரதையாக, புண்ய கர்மாகளைச் செய்யவேண்டும்;தவறினால் தாழ்வு ஏற்படும் என்பது
    ஏற்றம் உண்டு ஆனால் ( ஏற்றம் உண்டானால்), இறக்கமும் உண்டு என்கிற பழமொழி மூலம் தெரியவருகிறது.

    Nandri - Srishesan
     
    Loading...

  2. hemalathaK

    hemalathaK Platinum IL'ite

    Messages:
    1,460
    Likes Received:
    1,062
    Trophy Points:
    283
    Gender:
    Female
    It is totally agreeable. But please can you list out the right pro recites for each and every punya kariyam?

    Because most of them do them with a good heart and soul, but without their knowledge there are chances of getting done wrongly.
     
  3. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Hema

    It has been listed out clearly above... :)

    Regards
     

Share This Page