1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எல்லாம் நன்மைக்கே... ஒரு குட்டிக்கதை

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Oct 17, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female


    • ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்..

      அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது..

      அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு..

      இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது..

      அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன..

      மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன..

      மான் தன் இடப்பக்கம் பார்த்தது..

      அங்கே ஒரு வேடன் தன் அம்பை, அந்த மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்..

      மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது..

      ஒரு கருவுற்ற மான்.. பாவம் என்ன செய்யும்?

      அதற்கு வலியும் வந்து விட்டது.
      மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது..

      என்ன நடக்கும்?..

      மான் பிழைக்குமா?...

      மகவை ஈனுமா ? ...

      மகவும் பிழைக்குமா?...

      இல்லை..
      காட்டுத் தீ தான் எல்லாவற்றையும் அழித்து விடுமா?..

      அல்லது
      வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?..

      அல்லது
      புலியின் பசிக்கு உணவாகுமா?..

      பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும்,
      பொங்கும் காட்டாறு மறு புறம்,
      பசியோடு புலியும்,
      வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்..

      மான் என்ன செய்யும்?..

      அந்த மான் எதை பற்றியும் கவலை படாமல் தன் கவனம் முழுவதையும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது..

      ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை..

      அப்போது நடந்த நிகழ்வுகள்..

      மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்..

      அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது..

      தீவிர மழை, காட்டுத் தீயை தீயை அணைத்தது..

      அந்த மான்,
      அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது..

      ***
      வாழ்வின் பெரும் புயலில்,
      பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்..
      நாம் நம் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்..

      அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்..

      கடவுள் தூங்குவதும் இல்லை..

      நம்மை துயரப்படுத்துவதும் இல்லை..

      உன் செயலில் நீ கவனம் செலுத்து..

      மற்றவை நடப்பதெல்லாம் நன்மையாக நடந்தே தீரும்..
    jayasala42
     
    Loading...

  2. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,725
    Likes Received:
    2,519
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Very inspirational story! Only, we should have the strength of mind and devotion, to surrender in full to God.
     
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Reminds me of the bhagavad gita`s gist - Karmanyeva adhikarasthe, ma phaleshu kadhachana! Good story.
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Powerful story on mindfulness
    2. Cosmic forces conspire to lend succour work is being done with full focus on task at hand.
    Thanks and Regards.
     
    vidhyalakshmid likes this.

Share This Page