1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எப்படிச் சொல்வேனடி?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 3, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மற்றுமொரு லிங்கம் என நினைத்தபடி
    சிரத்தை கொஞ்சம் குறைந்தபடி
    நுழைந்தேன் இடித்தாரைச் சபித்தபடி.
    அவரோ என்றும் போல் சிரித்தபடி.

    உள்ளே கால் வைத்ததுமே அன்று
    மின்சாரம் நிற்க, கண் இடுக்கியபடி,
    பார்க்க, தொலைவில் ஒளிர்ந்தபடி
    தெரிந்தது சூடிய பிறையுமடி.

    நெருங்கவும் ஏதோ எண்ணியபடி
    திருமேனியை நானும் பார்த்தபடி
    நின்றிட, அதுவும் துலங்கியபடி
    இருக்கவும் மலர்ந்தேன் வியந்தபடி.

    நெய் தீபம் காட்டவும் ஒளிர்ந்தபடி,
    நின்றார் எம் இறைவன் சிரித்தபடி.
    ஆம்! லிங்கத்தில் முகமும் தெரிந்ததடி.
    அதன் அழகும் என்னைக் கொண்டதடி.

    மனம் இன்றியே நானும் நின்றபடி
    இருந்தேன், 'தள்ளுங்கள்!' என்றபடி
    குரல் கேட்டும் சிலையாய் இருந்தபடி.
    பின் பெயர்ந்தேன் மிகவும் நொந்தபடி.

    வெளிவந்தும், இன்னும் அழுதபடி
    நான் நின்றது நிறைவாய் இருந்ததடி.
    அவர் அழைக்கும் நாள் எது? என்றபடி
    நான் இருப்பதை அவர்க்குச் சொல்லிடடி!

    குறிப்பு: ஈசர் முகம் கண்டு மயங்கியவள் தன தோழியிடம் உரைப்பதாக அமைந்தது இப்பத்தி.
     
    2 people like this.
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    superb sri..
    enakku pidiththa lingam..
    azhagana varigal...
     
  3. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அருமையான வரிகள் ஸ்ரீ...
    மிகவும் ரசித்தேன்.

    சமயப்பற்றில்லாதவரையும் கூட சலனப்படுத்தும் சிறப்புமிக்க லிங்கம். ப்ரணவத்தில் சிம்பாலிசம். எனக்கும் மிகவும் பிடிக்கும்.
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Prana, for your first feedback to this. The lingam that I mentioned here is Sri. Chandramouleeswarar in Thiruvakkarai. And the experience is my mom's. I was so moved when she said, how she felt after seeing it in the feeble light by those earthern lamps. The lingam actually has faces carved in it. Beautiful. Later, I went and saw that too. The last para and the short note are my additions. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes Iniyamalar. Very glad to receive your feedback in this section, after a gap. Thanks a lot. -rgs
     
  6. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    What a wonderful poem. You both are very lucky to have dharshan of Chandramouliswarar. I truly enjoyed your poem and your response to Prana

    Viswa
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot for a nice feedback and adding this to your 'like' list Viswamitra. -rgs
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi RGS. Nice one. How are you?
    I like lingam very much. first seeing the tiltle i thought of the old song it will end as " eppdi solvenadi "only....

    எப்படி சொல்வேன் உங்கள் பாடல் வரிகளின் அழகை !!!!!!!!!!!
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    I was sort of restless yesterday, and was in many minds before writing this AkhilaaSaras.
    Later, I felt happier. Thanks for your appreciation. -rgs
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அழகு சுந்தரன் அவன்,
    எங்கள் ஊர் சொக்கன்,
    செம்பவள மேனியான்,
    பொன் புரிபொன் சடையன்,
    மான் மாலு ஏந்தியவன்,
    புலித்தோலை அணிந்தவன்,
    நிலவு பிறை சூடியவன்,
    தோடுடைய செவியன்,
    சுடலை நீர் அணிதவன்,
    ஆடவல்லான்,ஆனந்த கூத்தன்,
    பித்தன்,பிறை சூடன்,அப்பன்,
    அவன் நாமம் சொல்ல நமகேது ஆயுள்,
    அவன் தாள் பணிந்து பணி செய்து கிடப்போம்,
    அவன்சிக்கன பிடிப்போம்,சீக்கிரமாய் உய்வோம்.
     

Share This Page