1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் மனம் கவர்ந்த இன்னும் ஒரு காதல் கவிதை

Discussion in 'Posts in Regional Languages' started by mithila kannan, Oct 23, 2008.

  1. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    என் மனம் கவர்ந்த இன்னும் ஒரு காதல் கவிதை
    தலைவி காதல் வயப் படுகிறாள்.தன் காதலை தன் தந்தையிடம் எடுத்து சொல்லி ,தலைவன் வீட்டுக்கு சென்று மணம் பேசி முடிக்க துடிக்கிறது அவள் மனம்.தந்தையிடம் தன் காதலைப் பற்றி எப்படி சொல்வது?அன்றைய தமிழ் பெண்,நாணம் தடுக்கிறது.எனவே தன் தோழியை தந்தையிடம் அனுப்புகிறாள்."என் தந்தையிடம் போய் சொல்,என் மனம் கவர்ந்த தலைவன்நின் பெருமைகளை பற்றி அவரிடம் எடுத்து சொல்.எப்படியாவது என் தந்தை அவர் வீட்டுக்கு சென்று மணம் பேச வேண்டும்"என்கிறாள்.
    தலைவியின் தோழி மிகவும் கெட்டிக்காரி. தலைவியின் தந்தையிடம் எப்படி பேச வேண்டும்,என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் அவளுக்கு கை வந்த கலை.
    தலைவியின் தந்தையை அணுகி,தோழி தன் தலைவி ஒரு இளைஞனிடம் தன் மனதை பறி கொடுத்தாள் என்பவள்தலைவியின் உள்ளம் கவர்ந்தவன்,எப்பேர்பட்ட அருமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்,தன் மனைவியை கண்ணை இமை காப்பது போல் காக்க வல்லவன்,என்று எடுத்துரைக்கிறாள்.
    என் மனதை கவர்ந்த பாட்டு ,தோழியின் சாமர்த்தியத்தை வெளிச்சம் போட்டு காட்டுஇம் பாட்டு இதோ,
    "பூத்த வேங்கை வியன் சினை ஏறி மயிலினம் அகவும் நாடன்
    நன்னுதற் கொடிச்சி மனத் தகத்தோனே"
    என்கிறாள்.இந்த இரண்டு வரிகளில் என்னவெல்லாம் கூறுகிறாள் பாருங்கள்.
    தலைவனின் நாடு வளம் நிறைந்தது,அங்கு வேங்கை மரங்கள் பூத்து குலுங்குகின்றன,மழைக்கு பஞ்சமில்லை,மயில்கள் எப்போதும் மழையின் காரணமாய் ஆடுகின்றன.அது மட்டுமா?தலைவனின் வீட்டார் மற்றும் உற்றார் உறவினர்கள் ஒற்றுமையாய் இருப்பவர்கள்,மயில்கள் கூட்டம் கூட்டமாய் வேங்கை மரத்தின் மீது ஏறி ஒன்றை ஒன்று கூப்பிட்டு மகிழ்வது இதையே காட்டுகிறது என்னும் தோழி,கடைசியாய் கூறுகிறாள்,
    "நன்னுதற் கொடிச்சி மனத் தகத்தோனே என்று.மிக மிக அழகான வரிகள்,பொருள் பொரிந்த வரிகள்.
    "அழகான நெற்றியை உடைய உங்கள் மகளின் மனத்தகத்தோன்,அதாவது அவள் மனதிலே குடி கொண்டவன்,மற்றும் தன் மனதிலே அவளை இருத்திக் கொண்டவன்"என்கிறாள்.எந்த தந்தையால் இந்த வார்த்தைகளுக்கு அடி பணியாமல்,மனம் மகிழாமல் இருக்க முடியும்? தந்தை மனம் மகிழ்ந்து தன் பெண்ணை அவள் மனம் கவர்ந்தவனுக்கே மணம் முடித்து வைக்கிறார்.
    அந்த மாதிரி தோழிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்கிறீர்களா ?அந்த மாதிரி தோழிகளெல்லாம் இப்போது நடை முறையில் பார்க்க முடியாதம்மா.
     
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    you are rocking!
    here's one for you now; will be back later;


    கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோஅதே சென்றன அங்கே
    இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
    ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
     
  3. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    My dear AC
    It is such a pleasure to go back to the sanga kala pattugal.Iam happy you like the post.
    Yes,Karnan songs are great.Kannadasan did a wonderful job.
    love
    mithila kannan
     
  4. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    மிதிலா
    இது எப்படி இருக்கு ?

    தூது செல்ல ஒரு தோழி இல்லை என்று
    துயர் கொண்டால் ஓர் தலைவி
     
  5. gayu_r

    gayu_r Senior IL'ite

    Messages:
    88
    Likes Received:
    1
    Trophy Points:
    15
    Gender:
    Female
    Mithila madam,

    Ungalai kavrndhadhu
    thalaiviyin kaadhalaa ?
    thalaivanin sezhippaa ?
    thozhiyin saadhuryamaa ?
    kavignyarin thamizhaa ?

    Gayu
     
  6. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    அன்பினிய காயு ,
    என்னை இப்போது கவர்ந்தது உங்களின் அருமையான பதில்தான்.
    நன்றி.
    பிரியமுடன்,
    மிதிலா
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    mithila,
    Enjoying your selection of 'kadal kavidhaigal' with AC's nigazh kala kavidhaigal..

    sriniketan
     
  8. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    அன்புள்ள மிதிலா ,
    தங்கள் விளக்கம் மிகவும் அருமை ! ரசித்தேன் ! :thumbsup
    ஒரு வரியில் ஒரு திருமணத்தையே முடித்த தோழியின் சொல்வன்மை பிரமிக்க வைக்கிறது ! அதுதான் கவிதையின் சிறப்பு அம்சமும்கூட !
    சங்க காலத்தோழிபோல் இந்தக் காலத்தில் காண்பது அரிதே ! உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்ரவமாவது செய்யாமலிருந்தால் சரி ! Big Laugh
    அன்புடன்,
    இந்து.
     
  9. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    My dear sri,

    Sorry for replying so late to your very kind fb.You are a gem of a friend to keep motivating me .
    May God bless you.
    love
    mithila kannan
     
  10. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    அன்பினிய இந்து,
    உங்கள் பாராட்டுதலுக்கு நன்றிகள் பற்பல.சங்க கால பாடல்களை எத்தனை தரம் படித்தாலும் அலுக்காதுதான். அந்த கால நட்புக்கு ஈடும் இணையும் கிடையாது.
    பிரியமுடன்,
    மைதிலி
     

Share This Page