1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் தாய்

Discussion in 'Regional Poetry' started by Rrg, Nov 27, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    என் தாய்.

    கருவினில் உருவாக்கி பலமாதம் தான் சுமந்து,
    கண்ணுறக்க மேதுமின்றி கவனமாய்க் காத்து (உ)வந்து
    உருவான என்னை உலகிற்கு அளித்து
    உத்தமனாய் வாழ்ந்திட வழிவகுத்தாள் என் தாய்.
    என்
    நலம் குன்றின் அவள் நலிந்தாள்; நகுதலினால் மன மகிழ்ந்தாள் .
    மலம் மற்றும் ஜலமனைத்தும் மலைக்காது உடன் களைந்தாள்.
    சீரான உடை அளித்தாள், சிறப்பான கதை படித்தாள்;
    வாயார வாழ்த்துரைத்தாள; வழிதவறா மொழி யுரைத்தாள்.

    கடனென்று நினையாமலென்னை கடமையாய் வளர்த்திட்டாள்;
    உடன் நின்று துணையாகி ஊக்கம் அளித்து உவந்தாள்.
    கண்டவர் தான் வியக்க காளையாய் வளர்ந்த பின்னும்
    கவலை முகம்காட்டில் களைந்திட விரைந்து வந்தாள்.

    கனிவு என்பதை அவள் கண்களில் நிறைந்து கண்டேன்
    பணிவு என்பதை அவளைப் பார்த்ததிலே பயின்றேன்
    தெளிவு என்பதை அவள் சொற்களில் உணர்ந்தேன்
    துணிவு என்பதை அவள் நடத்தையிலே படித்தேன்.

    அவள் உடல்தான் தளர்ந்த தன்றி உள்ளம் என்றும் தளர்ந்த தில்லை;
    கடை நாள் வரையில் அவள் கண்மணியாய் தான் நினைத்தாள்.
    கைகள் வலு இழந்த பின்னும் கண்களிலோ கருணை மழை.
    எத்துணை எடுத்துரைத்தும் அவள் சிறப்போ (இதில்) அடங்கவில்லை.

    நான் அவளிடம் பட்ட கடனுக்கோ அளவில்லை;
    கருவினை ஏற்ற கடன், களிப்போடு சுமந்த கடன்,
    கண்ணுறக்கம் விட்ட கடன், கடும் வலியும் பொறுத்த கடன் ,
    சிறப்பாக உருவாக்கி யிவ்வுலகிற்கு ஈன்ற கடன்,
    பிறப்போடு நிற்காமல் பொழுதெல்லாம் காத்த கடன்,
    பாலூட்டி சீராட்டி பண்பு பல போதித்து
    நோயகல மருந்தளித்து, நோக்காலே அடைகாத்து
    நேரத்தில் உணவளித்து நேர்மையை படிப்பித்து
    பார் புகழ நான் வளர படியாகி நின்ற கடன்;
    காலமெல்லாம் என் நினைவாய், என் நலனே அவள் கனவாய்,
    காலை மாலை கடும் இரவும் காணாது
    கண்ணால் அடைகாத்து கண் மறைந்த தெய்வமவள் - நான்
    காலமெலாம் முயன்றாலும் அவள் கடனிங்கு தீர்ந்திடுமோ?

    கருவினில் உருவான, காலமெல்லாம் தொடர்ந்து வந்த
    கடனுக்கும், அவள் அன்புக் கடலுக்கும் அளவில்லை தான்.

    அன்புடன்
    RRG
     
    rgsrinivasan, periamma and Karthiga like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,741
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Dear Rrg
    This down to earth poem in chaste Tamil eulogising “The Mother” is sure to turn eyes moist with every reader as it did with me.
    2. It makes one to think of the toil the his or her mother did to make an adult out of an infant right from suckling days’.
    3. I am with you in every line of this beautiful poem.
    and Regards.
     
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks dear Thyagarajan.
    I am pleased that you liked the poem.
    Mother is an imponderable subject. More you dig, the more treasures you notice. There are no words in the dictionary to describe the physical suffering she had undergone or the sacrifices she had made to make us a man out of nothing. This is my humble prayer to her, letting her know that she is still with me, in my heart, in every cell of mine she had created.
    Thanks for letting me know your feelings.
    Cheers
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்னைக்கு ஈடு யாரும் இல்லை
    அவளுக்கு இணை அவளே.உதிரத்தை உணவாக்கி தன கருவை வளர்க்கும் உன்னதப்பிறவி
    தங்கள் கவிதை ஒரு களஞ்சியம்
     
    Rrg and Thyagarajan like this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,741
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:சாராம்சத்தை உன்னதமாக புனைந்தார் என் தாய்
    நன்றி .
     
    Rrg likes this.

Share This Page