1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் காத்திருப்பு.

Discussion in 'Regional Poetry' started by charmbabez, Jul 12, 2013.

  1. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    IMG_20130701_165619.jpg

    நம்பிக்கைகளில் நனைந்து
    நொய்ந்து போன
    என் காத்திருப்பு.

    மனக்கோட்டைக்குள் பதுங்கி
    பாழாய்ப் போன
    என் காத்திருப்பு.

    மாயயைக் கண்டு
    மயங்கிய
    என் காத்திருப்பு.

    கல்லுக்குள் ஈரம்
    எதிர்பார்த்து ஏங்கிய
    என் காத்திருப்பு.

    வெளிவேசத்தை வெகுளித்தனமாக
    விரும்புகின்ற
    என் காத்திருப்பு.

    கானல் நீரைக்கண்டு
    வெகுதூரம் பயணித்த
    என் காத்திருப்பு.

    கோர சுழல் காற்றில்
    சிக்கி தவிக்கின்ற
    என் காத்திருப்பு.

    வலிகளுக்கு வழி
    வகுத்த
    என் காத்திருப்பு.

    பட்டு பட்டு
    திருந்தாத
    என் காத்திருப்பு.

    விட்டு விட்டு
    விலகாத
    என் காத்திருப்பு.

    என்று தணியுமோ
    என் அர்த்தமில்லாத
    இந்த காத்திருப்பு.
     
    Last edited: Jul 12, 2013
    5 people like this.
    Loading...

  2. Angellic

    Angellic IL Hall of Fame

    Messages:
    2,687
    Likes Received:
    2,326
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Lovely pic...

    Awesome poem CB...too good...

    May god put an end to ur waitings soon...My wishes and prayers for that...


    With love,
    Angellic :)
     
    1 person likes this.
  3. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Thank you sooo much angellic for your words :)
     
    Last edited: Jul 22, 2013
    1 person likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Nice lines and a fantastic image CharmBabez.

    Just penned down this seeing the image and reading your lines.
    கடலும் சில முறை பின்வாங்கும்;
    நான் அப்படி என்றும் செய்ததில்லை!
    நிலவும் ஒரு நாள் விடுப்பெடுக்கும்!
    நான் அன்றும் தவறியதே இல்லை!

    என் உறவும் நட்பும் கைகொடுக்கும்
    என என்றும் எண்ணியதே இல்லை!
    அவை போயும் இன்னும் இங்கிருக்கும்
    என் நிலை உனக்கேன் புரியவில்லை?

    நீ வருவாய் என்றே நாளைக்கும்
    நான் காத்துக் கொண்டிருப்பேன் அன்பே!
    ஒரு சிறு நம்பிக்கையில் தான் நானும்
    யுகம் போனாலும், இங்கிருப்பேனே!

    என்றோ வருகின்ற வானவில்லாய்
    நீ இன்றே வந்திடக் கூடாதா?
    அன்றே மறையும் தனிமை எனும் நோய்!
    என்பதை நீயும் அறிவாயா?

    காத்திருத்தல் இனிமை. உண்மை தான்.
    பலன் நிச்சயம் கிட்டியதென்றால் தான்!
    அவ்வாறில்லை எனில் அதுவே தான்
    கொடும் நரகம். ஆம்! அது நரகம் தான்!
     
    3 people like this.
  5. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female

    Thanks rgs ... lovely lines.thanks lot for sharing :)
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    கேள்வியிலே யே பதில் இருக்குதே ..Charmbabez!
    அர்த்தமில்லாததில் இருந்து வெளியே realitykku .வந்தால் காத்திருக்க வேண்டாமே, அர்த்தமில்லாமல்.:)

    Sriniketan
     
  7. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    நன்றி Sriniketan.
     
  8. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Charmbabez,

    Ungal kavidhai yadarthathin velippadudhan. You have described the struggle we go through in our life with stunning vocabulary. You have explained so nicely that expectations lead to disappointments. Doing everything with no expectations makes us lead a happy life. But it is hard to practice it.

    Viswa
     
    1 person likes this.
  9. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    thanks viswa sir.
     
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Nice one.

    Kaaththiruppu - split them - Kaalaththai Thiruppu...

    Time will change and you bring the change.
     
    2 people like this.

Share This Page