1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பாக

Discussion in 'Stories in Regional Languages' started by Coolsea, Oct 19, 2012.

  1. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    1wr.jpg

    Episode-44

    "வசீகரன் செல் நம்பர் குடு திவ்யா..." ஸ்வரூபன் கேட்க...


    "எதுக்கு ஸ்வரூபன்... அத்தான் ஏதாவது தாறுமாறா பேசப்போறாரு..." திவ்யா தயங்க..


    "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீ குடுக்கப்போறையா இல்லையா..." ஸ்வரூபன் அதட்டலாய் கேட்க... வேறு வழி இல்லாமல் கொடுத்தாள் திவ்யா..


    மறுநாள் குறித்த நேரத்தில் தட்டு மாற்றும் வைபவம் அழைக்கப்பட்ட உறவினர்களோடு இனிதே நடைபெற அத்தையும், மாமனும் வராவிட்டாலும் வசீகரன் அங்கு வந்திருந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது...


    வந்தது மட்டும் அல்லாமல் ஸ்வரூபனோடு சகஜமாக பேசிக் கொண்டு இருந்தான்... இருவருக்கும் இடையே என்ன பேச்சு வார்த்தை நடந்திருக்கும் எப்படி சமாதானம் ஆனார்கள் என்று திவ்யாவுக்கு மண்டையைக் குடைந்து கொண்டு இருந்தது...

    ஸ்வரூபனிடம் "வசீகரன் என்ன சொன்னான்" என்று திவ்யா கேட்க... என்ன லவ் பண்ற வேலைய மட்டும் நீ பாரு... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் "... கண்சிமிட்டிவிட்டு கிளம்பி விட்டான் ஸ்வரூபன்...


    எப்படியோ எல்லாம் சுமுகமாக முடிந்தால் சரி என்று அந்த பேச்சை அதோடு விட்டு விட்டாள் திவ்யா... விரலில் இருந்த நிச்சய மோதிரம் நிருபமாவை நினைவுக்கு கொண்டு வர அவளுக்கு போன் செய்தாள் திவ்யா...!!



     
    Rajijb and hisandhiya like this.
  2. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Romantic_Quote_1.jpg

    Episode-45


    "நிரூ... திவி பேசறேன் பா... " திவ்யாவின் குரல் ஒலிக்க...


    "கங்க்ராட்ஸ் திவி... இப்போதான் கார்த்திக் போன் பண்ணினான்... ரிங் மாத்தியாச்சு ன்னு சொன்னான்... என்னால அங்க பக்கத்துல இருந்து பார்க்க முடியலையே ன்னு வருத்தமா இருக்கு... பட் போட்டோஸ் அண்ட் வீடியோஸ் எனக்கு அனுப்பிட்டான்... ஐ வாஸ் ஜஸ்ட் வாட்சிங் இட்...


    ஹ்ம்ம்... இனி ஒரே ஹேப்பி ட்ரீம்ஸ் தான் இல்லையா திவி... உங்க ரெண்டு பேரையும் பார்த்த பிறகு எனக்கும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டா நல்லா இருக்குமேன்னு ஆசையா இருக்குப்பா... ஐ வான்ட் டு என்ஜாய் தட் த்ரில் பா ..." நிருபமா சொல்ல கலகலவென்று சிரித்தாள் திவ்யா...


    "ஆல் தி பெஸ்ட் நிருபமா... சொல்ல முடியாது... ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்கு லவ் மேரேஜ்ன்னு யாராவது சொல்லி இருந்தா சிரிச்சிருப்பேன்.. ஸீ... ஹௌ இட் ஆல் ஹேப்பெண்ட்.... இப்போ நினைச்சா கூட எப்படி ஆரம்பிச்சது... எப்படி நடந்தது... எல்லாம் கனவு மாதிரி இருக்கு... உனக்கும் அந்த மாதிரி சடனா க்ளிக் ஆகலாம்... அந்த மாதிரி ஏதாவுதுன்னா சொல்லுப்பா... நான் தூது போறேன்..." திவ்யா சொல்ல...


    "ஹா..ஹா... என்னோட மேட்டர்ல எல்லாம் தூது போற விஷயமே கிடையாது...எனக்கு உன்ன பிடிச்சிருக்கு... உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையாடான்னு நானே நேரடியா கேட்டுடுவேன்..


    திவி... நமக்கே தெரியாம நமக்குள்ள வர்ற வைரஸ் தான் காதல்... மெதுவா மனசு முழுக்க பரவி... ம்ம்... சச் எ லவ்லி பீலிங்... எனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலையே திவி.. நேச்சுரலா ஆரம்பிக்கணும்...ஹூம்.. பார்ப்போம்... வீடியோஸ் எல்லாம் பார்த்துட்டு மறுபடியும் கால் பண்றேன்..பை " நிருபமா பேசி முடிக்க...


    அந்த காதல் வைரஸ் தனக்குள் எப்போது எப்படி நுழைந்தது என்று ஆராய்ந்து கொண்டு இருந்தாள் திவ்யா...!!


    கல்யாண பட்டு, நகைகள் வாங்குவதிலும், பத்திரிகை அடித்து சொந்த பந்தங்களுக்கு அனுப்புவதிலும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க... ஐப்பசி மாத வளர்பிறை முஹூர்த்தமும் ஆனந்தமாய் வந்து சேர்ந்தது...


    திருமணத்திற்கு இரண்டு வாரம் முன்னதாகவே நிருபமா தன் பெற்றோர்களுடன் வந்து சேர்ந்துவிட... சென்னையின் மிகப் பெரிய திருமண மண்டபங்களுள் ஒன்று ஸ்வரூபன்-திவ்யா திருமணத்திற்காக பதிவு செய்யப் பட்டு இருந்தது....


    ஸ்வரூபன் தன் தொழில் வட்டத்தில் இருந்த அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தான்... வேதநாயகம் தன் பங்குக்கு வங்கி வட்டார நண்பர்களை குடும்பத்தோடு அழைத்திருக்க...சுந்தரத்தின் பத்திரிகை அலுவலக நண்பர்களும் சேர்ந்து கொள்ள... உறவினர்களுக்கு சமமாக நண்பர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது...


    ஸ்வரூபனின் நெருங்கிய கல்லூரித் தோழர்கள் மட்டும் குடும்பத்தோடு வந்திருக்க... மணமகன் அறையில் நண்பர்கள் கூட்டம் கூடி கும்மியடித்துக் கொண்டு இருந்தது...


    தாட்சாயணியும், ராஜதுரையும் எவ்வளவு அழைத்தும் திருமணதிற்கு வர மறுத்துவிட்டதால் வசீகரன் மட்டும் வந்திருந்தான்.. "வாங்க பாஸ்... ஜோதில ஐக்கியமாகுங்க... " என்று ஸ்வரூபனின் நண்பர்கள் வட்டம் வசீகரனையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள...


    இங்கே மணமகள் அறையில் நிருபமாவின் அரட்டைக் கச்சேரி ஓங்கி இருந்தது... போதாததற்கு சுசிதா, சந்தியா என்று அலுவலக தோழிகளும் சேர்ந்து கொள்ள... திவ்யாவின் நிலை பெரும்பாடாய் இருந்தது...



    நிச்சயதார்த்தம் முடிந்து மாலை ரிசப்ஷன் நடை பெற்றுக் கொண்டிருந்த நேரம்... ஆர்கெஸ்ட்ராவின் கான மழை அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருக்க... வண்ண வண்ண ரோஜா மலர்களால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த மேடையில் ஆடம்பரமான குஷன் சோபாவில் திவ்யாவும், ஸ்வரூபனும் அருகருகே அமர்ந்திருக்க கேமரா பிளாஷ்கள் பளிச்சிட்டுக் கொண்டு இருந்தன...


    என்னதான் சாதாரணமாக இருப்பது போல இருந்தாலும் வசீகரனால் தன் உள்ளக் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை... தான் நிற்க வேண்டிய இடத்தில் ஸ்வரூபன் நிற்கிறானே என்று தன்னையும் மீறி காழ்ப்புணர்ச்சி வந்து கொண்டு தான் இருந்தது... மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்... அப்பா, அம்மாவைப் போல தானும் இந்த திருமணத்திற்கு வராமலே இருந்திருக்கலாமோ என்று கூட தோன்றியது...


    நண்பர்கள் கூட்டம் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வசீகரனை தேட... அவன் எங்குமே கண்களுக்கு தென்படவில்லை... !!


    மறுநாள் காலை அதிகாலை முஹூர்த்தம் என்பதால் ரிசப்ஷன் முடிந்ததும் அவரவர் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட... மண்டபத்தின் இரைச்சல் குறைந்து அமைதியாக இருந்தது... !!


     
    Rajijb and hisandhiya like this.
  3. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    புதிய இடம் ... தூக்கம் வராமல் உலாவிக் கொண்டு இருந்தாள் நிருபமா... சற்று நேரம் பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று உட்கார வானத்து நட்ஷத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டு இருந்தன...


    "எவ்ளோ ஸ்டார்ஸ் இருக்குன்னு எண்ணிகிட்டு இருக்கியா kvr ... இங்க வந்து தனியா உக்காந்துகிட்டு இருக்கே... தூங்கலையா..." சற்று நேரம் பால்கனியில் உட்காரலாம் என்று வந்த ஸ்வரூபனும் அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார...


    "கல்யாண மாப்பிள்ளை... நீயே ஒரு மணி வரைக்கும் முழிச்சிக்கிட்டு இருக்கே... நான் தூங்குனா என்ன... தூங்கலேனா என்ன... ரிசப்ஷன் ல நின்ன அசதியே உனக்கு இல்லையா கார்த்திக்... உன்னோட திவ்யா தான் அசதி தாங்காம நல்லா குறட்டை விட்டு தூங்கறா...."நிருபமா சொல்லிக்கொண்டிருக்க... ஸ்வரூபன் எதையோ கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்...


    "என்னடா அப்படி பார்த்துகிட்டு இருக்கே..." நிருபமா ஆர்வமாய் கேட்க...


    "ஷ்... கொஞ்சம் பேசாம இரு... என் கூட வா... சத்தமில்லாம வரணும்..." என்னவோ மர்மமாக இருக்கிறதே என்று சத்தமில்லாமல் பின் தொடர்ந்தாள்
    நிருபமா...


    அதிகமாக வெளிச்சம் இல்லாத இடம்... ஆள் இருப்பதே தெரியாத அளவுக்கு இருட்டாக இருந்த இடத்தில் அமர்ந்திருந்தான் வசீகரன்... "வசீகரன்..." என்று மெல்லிய குரலில் அழைத்துக் கொண்டே அவன் அருகே சென்றான் ஸ்வரூபன்... எதற்கும் இருக்கட்டும் என்று சற்று தள்ளியே நின்றாள் நிருபமா... வசீகரனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை... ஸ்வரூபனுக்கு அவன் அங்கே உட்கார்ந்து இருந்த நிலை சந்தேகத்தை கிளப்ப அவசரமாக அவனுக்கு சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தான்... இருந்தது...


    குடித்திருக்கிறான் என்பது அருகில் கிடந்த காலி பாட்டிலை வைத்தே தெரிய... வசீகரனின் பாக்கெட்டில் என்னவோ வெள்ளையாக நீட்டிக் கொண்டு இருந்தது... செல்லின் டார்ச் ஒளியில் அதை எடுக்க... அது ஓர் கடிதம்...

    அன்புள்ள திவ்யா...


    ஆயிரம் தான் உன் வருங்காலக் கணவன் விளக்கம் சொல்லி என்னை திருமணத்திற்கு அழைத்திருந்தாலும் இன்று மாலை நீ அவனருகே நின்று சிரித்துக் கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை... நான் இருக்க வேண்டிய இடத்தில் வேறு யாரோ நிற்கிறான் என்பதை துளியளவும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை... இப்பொழுது நான் நினைத்தால் கூட உன்னைத் தூக்கிக் கொண்டு போய் தாலி கட்ட முடியும்... எனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும்... ஆனால் என்ன பிரயோஜனம்... ஸ்வரூபன் அன்று சொன்னபடி மனதில் அவனை வைத்துக் கொண்டு எனக்கு பிள்ளை பெற்றுத் தர நீ என்ன தரம் கெட்டவளா ? இல்லவே இல்லை...


    நீ இல்லாத வாழ்க்கை இனி எனக்கு இனிக்கப் போவது இல்லை திவ்யா ... என் முடிவைத் தேடிக் கொண்டேன்.. அடுத்த பிறவியிலாவது நீ எனக்கு சொந்தமாக வேண்டும் திவ்யா... உன் நினைவுகளுடன் பிரிந்து செல்லும் -வசீகரன்.


    "ஷிட்...ஷிட்... என்ன ஒரு காரியம் பண்ணி வெச்சிருக்கான்... நிரூ .... ஒரு நிமிஷம் இங்கயே நின்னு பார்த்துக்கோ... ஐ வில் கெட் மை கார் கீஸ்... யாருக்கும் எந்த சந்தேகமும் வரவேண்டாம்... ஹி ஹாஸ் அடம்ப்டட் சூசைட்...:"


    சொல்லிவிட்டு ஸ்வரூபன் ஓட அதிர்ச்சியின் உச்சத்தில் யாரும் பார்த்து விடக் கூடாதே என்ற பயத்தில் நின்று கொண்டு இருந்தாள் நிருபமா...


     
    Rajijb and hisandhiya like this.
  4. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-47

    சுந்தரத்தின் அறைக் கதவு தட்டப் படும் சப்தம் மெலிதாக கேட்க... அரைத் தூக்கத்தில் எழுந்து வந்து கதவு திறந்தார் .... ஸ்வரூபன் நிற்பதைக் கண்டதும் ஏதோ கேட்க வந்தவர் "ஷ்" என்று வாய் மேல் விரல் வைத்து சட்டை அணிந்து கொண்டு வரும்படி அவன் சைகை காட்ட.... என்னவோ ஏதோ என்று சட்டையை அணிந்தபடி அவன் பின்னாலேயே சென்றார்...


    கீழே சென்றதும் வசீகரன் உட்கார்ந்திருந்த இடத்தை கை காட்டிவிட்டு ஸ்வரூபன் தன் காருக்கு ஓட... நிருபமா அதற்குள் நடந்த கதையை சுந்தரத்திடம் சொல்லி முடித்தாள்.... ஸ்வரூபன் காரை அவர்கள் இருந்த இடத்திற்கே கொண்டு வர வசீகரனை தூக்கி காரில் போட்டுவிட்டு ஸ்வரூபனும், சுந்தரமும் ஏறி அமர...


    "நிரூ... நான் திரும்பி வர லேட் ஆனாலும் ஆகலாம்... நீ ரூமுக்கு போய் படு... யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்... அதையும் மீறி யாராவது கேட்டா ரிலேடிவ் க்கு உடம்பு சரி இல்லன்னு போயிருக்காங்கன்னு சொல்லு... காட் இட்... சீக்கிரம் போய் படு..." எதற்கும் இருக்கட்டும் என்று அவன் குடித்து விட்டு போட்டிருந்த பாட்டிலையும் கையோடு எடுத்துக் கொண்டான் ஸ்வரூபன்...


    "மாமா .... இது போலீஸ் கேஸ் ஆகாம பாக்கணும்... என்ன பண்ணலாம்..." டிரைவிங்கில் இருந்தபடியே ஸ்வரூபன் கேட்க...



    "டாக்டர் பிரகாஷ் கிட்ட போங்க மாப்பிள்ளை... என்னோட பிரெண்ட் தான்... போன் பண்ணி சொல்லிடலாம்... நாம போறதுக்குள்ள வந்திடுவான்... இந்த மாதிரி கேஸ் எல்லாம் அவன் தைரியமா எடுப்பான்... அவனுக்கு டிபார்ட்மென்ட்ல தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க... பார்த்துக்கலாம்.. "


    சுந்தரம் பதில் சொல்ல வசீகரன் எழுதி வைத்த கடிதத்தை அவரிடம் காட்டினான் ஸ்வரூபன்... படித்துப் பார்த்தவர் அதிர்ந்து போனார்...



    "நல்ல வேளை... இந்த லெட்டர் வேற யார் கண்ணுலயாவது பட்டிருந்தா என் பொண்ணோட மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்திருக்கும்...

    இவனோட சூசைட் க்கு அவ தான் காரணும்னு என் ஆபீஸ் ல இருக்கறவங்களே எழுதித் தள்ளிடுவாங்க... ராஸ்கல்...


    என்னைக்காவது என் பொண்ணு இவன காதலிக்கறேன், கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாளா... இவன் இந்த கல்யாணத்துக்கு வரலேன்னு யார் அழுதா... பொழைச்சிட்டான்னா சரி... இல்ல நம்ப எல்லாருக்குமே பெரிய சிக்கல் ஆயிடும்... என்னத்த குடிச்சான்னு தெரிஞ்சா முதலுதவியாவது பண்ணலாம்...


    காதல் தோல்வின்னு கதையும் பண்ணி சாகறதுக்கும் இடம் தேடியிருக்கான் பாருங்க... திட்டம் போட்டு தான் வேல பாத்துருக்கான்... உண்மையான காதல் ன்னா அவன் வீட்லயே சாக வேண்டியதானே... யார் கண்ணுலையும் படறதுக்கு முந்தி இந்த லெட்டர தீ வெச்சு கொளுத்துங்க..." போகும் வழி முழுதும் தன் வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்..


    எவ்வளவு வேகமாக போக முடியுமோ அந்த வேகத்தில் போய்க் கொண்டிருந்தான் ஸ்வரூபன்... !!



    டாக்டர் பிரகாஷின் கார் நின்றிருக்க ஸ்ட்ரெட்சருடன் ஸ்டாப் நர்ஸ் தயாராக இருக்க... டக்கென்று வசீகரனை உள்ளே அழைத்துச் சென்றனர்...



    "நீங்க கிளம்புங்க மாப்பிள்ளை... இந்த தலை வலியெல்லாம் நான் பார்த்துக்கறேன்... காலைல முஹூர்த்தம் வெச்சிகிட்டு இங்க வந்து உக்காரணும்னு உங்களுக்கு என்ன தலை எழுத்து... " சுந்தரம் வருத்தப்பட்டு சொல்ல...



    அதனால் ஒன்றும் இல்லை என்பது போல் அவர் தோளை தட்டிக் கொடுத்தான் ஸ்வரூபன்... !!

     
    Rajijb and hisandhiya like this.
  5. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    உள்ளே வசீகரனுக்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு இருந்தது... சுந்தரத்திற்கும், ஸ்வரூபனுக்கும் அசதியில் உடல் கெஞ்சிக் கொண்டு இருக்க விபரீதமான விஷயம் என்பதால் பொறுமையாக உட்கார்ந்து இருக்க வேண்டி இருந்தது... அரைமணி நேரம் கழித்து டாக்டர் பிரகாஷ் வெளியே வர..


    "ச்லீபிங் டோஸ் தான் எடுத்திருக்கான் சுந்தரம்... அல்கஹால் சேர்த்து கன்ச்யூம் பண்ணதுனால ரொம்ப பாஸ்டா ரியேக்ட் பண்ணி இருக்கு... இன்னும் கொஞ்சம் டிலே ஆயிருந்தா நிச்சயம் டேன்ஜெர் லெவல் தான்... கம்ப்ளீட்டா வாமிட் பண்ண வெச்சிருக்கேன்... ஹி இஸ் அலைவ்... பட்...கான்சியஸ் வர லேட் ஆகலாம்... "



    "போலீஸ் கேஸ் ஆகாம பார்த்துக்கோ பிரகாஷ்... கான்சியஸ் வந்த பிறகு கூட உன்னோட கஸ்டடிலையே இருக்கட்டும்... நாங்க வர்ற வரைக்கும் டிஸ்சார்ஜ் பண்ண வேண்டாம்... காலைல பொண்ணு கல்யாணத்துக்கு முஹூர்த்தம் வெச்சிகிட்டு இங்க இவனோட போராடிகிட்டு இருக்கேன்..." சுந்தரம் வேதனையுடன் சொல்ல...




    "ஐ நோ... நானும் என் மிசஸ் அழைச்சிக்கிட்டு எர்லி மார்னிங் மண்டபத்துக்கு வரலாம்னு இருந்தேன்... திடீர்னு உன்கிட்ட இருந்து போன் வரவும் சடன் ஷாக்... சார் யாரு..." ஸ்வரூபனை காண்பித்து டாக்டர் பிரகாஷ் கேட்க...




    "இவர்தான் பா என் பொண்ண கட்டிக்க போற மாப்பிள்ளை... ஸ்வரூபன் கார்த்திகேயன்... இவர் மட்டும் இவன சரியான நேரத்துக்கு பார்த்திருக்கலேனா நாங்க குடும்பத்தோட காலைல போலீஸ் ஸ்டேஷன் ல இருந்திருப்போம்... இவர் எனக்கு மாப்பிள்ளை இல்ல... குலதெய்வம்...



    உன் பொறுப்புல அவன விட்டுட்டு போறேன் பிரகாஷ்... கல்யாணம் முடியற வரைக்கும் இங்கயே வெச்சு சமாளி... மண்டபத்துக்கு வந்து ஏதும் கலாட்டா பண்ணிட போறான் ... இப்பவே மணி மூணு... அஞ்சரை மணிக்கு முஹூர்த்தம்... இனி எங்க நாங்க தூங்கறது... போய் குளிச்சிட்டு ரெடியாகவேண்டியதுதான்..."



    "நீ புறப்பட்டு சுந்தரம்... அங்க ஆக வேண்டியது பாரு... இவன நான் பார்த்துக்கறேன்... அதையும் மீறி ஏதாவது பிரச்சனைன்னா நமக்கு எல்லா லெவல்லையும் ஆள் இருக்கு... டோன்ட் வொரி..." டாக்டர் பிரகாஷ் தைரியம் சொல்லி அனுப்ப... வண்டியைக் கிளப்பினான் ஸ்வரூபன்... தூக்கமில்லாத கண்கள் கோவைப் பழமாய் சிவந்திருந்தன...



    "வசீகரனோட பேரன்ட்ஸ் க்கு இன்பார்ம் பண்ண வேண்டாமா மாமா... ஏதாவது வில்லங்கம் ஆயிடப் போகுது..." ஸ்வரூபன் கேட்க...



    "அவங்க வந்தாலும் வில்லங்கம் தான் மாப்பிள்ளை... என் பையன நீங்க கொன்னு புதைச்சுட்டீங்கன்னு அந்த அம்மா ஊருக்கெல்லாம் ந்யூஸ் குடுத்துடும்... முதல்ல அந்த பய கண்ண திறக்கட்டும்... என்ன, எதுன்னு விசாரிச்சிட்டு என்ன செய்யணும்னு பார்ப்போம்... எல்லாம் அந்த வசுந்தரா கழுதைய சொல்லணும்..." சுந்தரம் எகிறிக் கொண்டு இருக்க....



    மண்டபத்தில் இருப்போர் தேடுவதற்கு முன்னர் சுந்தரமும், ஸ்வரூபனும் வந்து சேர்ந்தனர்... !! அப்போதுதான் ஒரு சில அறைகளில் விளக்கு எரிய ஆரம்பித்து இருந்தது...



    "மாப்பிள்ளையும், மாமனாரும் இந்நேரத்துக்கு எங்க போயிட்டு ஜோடி போட்டு வர்றீங்க..." வம்புக்கென்றே அலையும் பெருசு ஒன்று வக்கணையாய் கேட்க...



    "கீழ தோட்டத்துல உக்காந்து சில முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருந்தோம் அப்பு... நீங்க ஏன் அதுக்குள்ளே எந்திரிசிகிட்டு... படுக்க வேண்டியது தானே.." சுந்தரம் முந்திக் கொண்டு பதில் சொல்ல...



    "மாப்பிள்ளை தம்பி அதிகமா சீர் வரிசை கேட்டாராக்கும்... அதான் ரகசியமா பேசுநீகளோ... இந்த காலத்து பசங்களே அப்படி தான்பா... எங்க காலம் மாதிரி வராது... குடுத்தத வாங்கிட்டு பேசாம இருப்போம் " பெருசு அபாண்டமாய் பேசிக் கொண்டிருக்க... சுந்தரம் ஸ்வரூபனை தவிப்புடன் பார்த்தார்.. .



    " கூல் அங்கிள்... நான் போய் குளிச்சி ரெடி ஆகறேன்...திவி என்திரிச்சிட்டாளா பாருங்க..." என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான் ஸ்வரூபன்..!!
     
    Rajijb, nivetamohan and hisandhiya like this.
  6. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    தேவாதி தேவர்கள் எல்லாம் ஆசீர்வதிக்க குறித்த முஹூர்தத்தில் ஸ்வரூபன்-திவ்யா திருமணம் இனிதே நடை பெற்றது...


    இடையே ஒரு முறை வசீகரனுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று டாக்டர் பிரகாஷ் தெரிவிக்க... ஸ்வரூபனும், சுந்தரமும் பார்வையாலேயே தங்கள் நிம்மதியை பரிமாறிக் கொண்டார்கள்...



    மண்டபம் காலி செய்து பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்த வேகத்தில்...



    "சம்பந்தி... ரொம்ப அவசரமா பத்திரிகை ஆபீஸ் வரைக்கும் போக வேண்டி இருக்கு... ஒரு மணி நேரத்துல திரும்பி வந்திடறேன்..." வேதநாயகத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு சுந்தரம் டாக்டர் பிரகாஷை தேடிச் செல்ல... வசீகரன் மயக்கம் தெளிந்து கண் விழித்திருந்தான்...



    "மனுஷனாடா நீ... நீயும் வாழமாட்டே... அடுத்தவங்களையும் வாழ விடமாட்டே... சாகறதா இருந்தா உன்வீட்லையே சாக வேண்டியது தானே.... எதுக்குடா என் குடும்பத்த குலை அறுக்கறே... என் பொண்ணு உன்ன காதலிக்கறேன்னு சொன்னாளா... உன்ன கல்யாணம் பண்ணிகறேன்னு அவ வாய்ல இருந்து என்னைக்காவது ஒரு வார்த்தை வந்ததா... நீயா எதையோ வளர்த்துகிட்டு ....


    ஏண்டா... ஏண்டா... ஊர் உலகத்துல வேற பொண்ணா உனக்கு கிடைக்காது... துரத்தி துரத்தி என் குடும்பத்துக்கு இம்சை குடுக்கணும்னு வந்தியா... ஹாஸ்பிடல் ஆச்சேன்னு பார்க்கறேன்... இல்ல நடக்கறதே வேற... மொத்தமா என் குடும்பத்த கூண்டுல ஏத்தணும்னு திட்டம் போட்டியா... " சுந்தரம் அடிக்குரலில் அவனிடம் எகிறிக் கொண்டு இருக்க...



    டாக்டர் பிரகாஷும் மற்றொருவரும் உள்ளே நுழைந்தனர்... "என்னப்பா தம்பி... உடம்பு எப்படி இருக்கு... " அந்த புதியவர் கேட்க... சுந்தரம், வசீகரன் இருவருமே பிரகாஷின் முகத்தை பார்த்தனர்...



    "நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருங்க சுந்தரம்... சார் பார்த்துக்குவாறு... " டாக்டர் பிரகாஷ் சொல்ல... சுந்தரத்திற்கு ஏதோ புரிந்தது போல இருந்தது...



    "மீடியால வேல பாக்கறியா தம்பி... ஆள் அம்சமா இருக்கே... அங்கேயே நாலு விளம்பரப் படம் பண்ணோமா...சீரியல்ல நடிச்சோமான்னு இல்லாம எதுக்காக இவங்க வாழ்க்கைல டிராமா பண்ணிக்கிட்டு இருக்கே...அந்த பொண்ணு தான் உன் மேல விருப்பமில்லா ன்னு சொல்லுச்சாமே ... பிறகென்ன... தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம்னு தெரியுமா தெரியாதா... வீணா சட்ட சிக்கல்ல மாட்டி வாழ்க்கைல ஒண்ணுமில்லாம போயிடாதப்பா...


    தம்பி இங்க நடந்தது எதுவும் வெளிய வரக்கூடாது புரியுதா... மீறி ஒரு வார்த்த கசிஞ்சது..... இல்ல அந்த பொண்ணு விஷயத்துல மறுபடியும் வாலாட்டுனேன்னு தெரிஞ்சது ஆளே இருக்கற இடம் தெரியாமா காணாம போயிடுவே... நீ மட்டும் இல்ல... உன் மொத்த குடும்பமும் காணாம போயிடும்... நான் போலீசும் இல்ல... லாயரும் இல்ல... அண்டர் கிரௌண்ட் வேல பார்க்கற ஆளு ... போட்டுத் தள்றது நமக்கொண்ணும் புதுசு இல்லப்பா... புரிஞ்சு நடந்துக்க...பிரகாஷ் இவன டிஸ்சார்ஜ் பண்ணலாம்னா அனுப்பி விடுங்க... போகட்டும்... " வந்தவர் வந்த சுவடு தெரியாமல் கிளம்பிவிட...



    அவமானத்திலும், மிரட்டலிலும் மிரண்டு போய் உட்கார்ந்து இருந்தான் வசீகரன்... !!



    தொடர்ந்து வந்த டாக்டர் பிரகாஷின் மிரட்டலை அடுத்து வசீகரன் சர்வமும் அடங்கி வெளியேற... சுந்தரம் பிரகாஷுக்கு ஆயிரத்து ஓராவது முறையாக நன்றி சொல்லிக் கொண்டு இருந்தார்...



    "என்ன பண்றது சுந்தரம்... சில சமயம் சட்டரீதியா பண்ண முடியாத சில விஷயங்கள இந்த மாதிரி ஆளுங்க மூலமா தான் சாதிக்க வேண்டி இருக்கு... எல்லா விஷயத்தையும் அம்பலத்துக்கு கொண்டு வர முடியுமா... சொல்லுங்க... நீங்க புறப்படுங்க சுந்தரம்... வீட்ல ஆகவேண்டியது பாருங்க... இத ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடுங்க..." டாக்டர் பிரகாஷ் சுந்தரத்தை அனுப்பி வைத்தார்...
     
    Rajijb, helennixy, Vaishnavie and 4 others like this.
  7. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா

    quotes-love-text-couple-quote-Favim.com-467208.jpg


    இனி வசீகரனால் எந்த தொல்லையும் இருக்காது.. திவ்யாவுக்கோ மற்றவர்களுக்கோ எந்த விவரமும் தெரிய வேண்டியது இல்லை என்று சுந்தரம் ஸ்வரூபனிடம் பூடகமாக தெரிவிக்க அதை அவன் நிருபமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.


    "அப்பா ! ஆள விட்டது சனியன். நீ இப்போவாவது கொஞ்சம் தூங்கி எந்திரி கார்த்திக்... நைட் மதன காமராஜன் வேலையெல்லாம் பார்க்கணும்." என்று கண்ணடித்தாள் நிருபமா.



    அன்று இரவு மல்லிகையின் மணமும் ஊதுபத்தியின் மணமும் போட்டி போட்டுக் கொண்டு ஸ்வரூபனின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்க திவ்யாவின் வருகைக்காக காத்திருந்தான். எழில் தேவதையாக அவள் முதலிரவு அறையில் கால் வைக்க கைகளை பரபரவென்று தேய்த்துக் கொண்டு அவளையே பார்த்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தான் ஸ்வரூபன்.



    மொத்த வெட்கத்தையும் குத்தகைக்கு எடுத்தவளாய் திவ்யா அவன் அருகே வர அவள் கையில் இருந்த பால் சொம்பு எனக்கேன் வம்பு என்று மேஜையின் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது. ஸ்வரூபனின் முரட்டுக் கைகள் அவளை வளைத்துப் பிடித்திருக்க...


    "காந்தர்வ கன்னிய கைபிடிக்க நாலு வருஷம் காத்திருந்தாச்சு... இனி நாலு நிமிஷம் கூட வேஸ்ட் பண்றதா இல்ல" ஸ்வரூபன் அவளை நெருங்க
    காதலும், காமமும் இணைந்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் எழுதப் பட்டுக் கொண்டு இருந்தது.


    அடுத்து வந்த காலை நேரமெல்லாம் யுகங்களாய் தெரியஇரவுகள் எல்லாம் விடியலைத் தள்ளிப் போடேன் என்று கெஞ்சிக் கொண்டிருக்க ஒரு வாரம் உருண்டு போனதே தெரியவில்லை.



    ஸ்வரூபன் ஹனிமூனுக்கு கோவா செல்லலாம் என்று முடிவு செய்யதம்பதியர் இருவரும் கோவா நோக்கி பயணமானார்கள். பகலானால் என்ன, இரவானால் என்ன? தேனிலவு ஜோடிகளுக்கு மோகமும், காதலும் கேட்டுக் கொண்டா வருகிறது. ஹோட்டல், கடைவீதி என்று சுற்றிவிட்டு வெண்மணல் கடற்கரையில் காதல் ஜோடிகளின் களியாட்டங்கள் கண்ணில் படும் நேரத்தில் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு காட்டேஜுக்கு வந்துவிடுவான் ஸ்வரூபன்.


    கோவாவில் இருந்த ஒரு வாரமும் பன்னீரில் நனைந்த ரோஜாவாய் ஸ்வரூபனின் அன்பில் திக்குமுக்காடிப் போனாள் திவ்யா. ஹனிமூன் முடிந்து வந்தபிறகு சிற்சில சடங்குகள் , சம்பிரதாயங்கள் என்று நாட்கள் நகர்ந்தோடதிருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.


    மீண்டும் ஓர் இனிய இரவு. அச்சம், மேடம், நாணம் எல்லாம் அவன் முன்னே அற்றுப் போக ஸ்வரூபனின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் திவ்யா.


    திடீரென்று ஞாபகம் வந்தவளாய்... "ஸ்வரூபன்... திடீர்னு வசீ அத்தான் எப்படி மாறுனாறு ? எங்கிட்ட போன் நம்பர் வாங்கிட்டு அப்படி என்ன பேசுனீங்க? மோதிரம் மாத்துனப்போ கூட உங்கள ரொம்ப தெரிஞ்சா மாதிரி பேசிகிட்டு இருந்தாரே..." எதைப் பற்றிப் பேசக்கூடாது என்று ஸ்வரூபன் நினைத்தானோ அதையே திவ்யா ஆரம்பிக்க...



    "முடிஞ்சு போன கதை எல்லாம் மறுபடியும் எதுக்குடா ? இன்னைக்கு என்ன அத்தியாயம் எழுதறதுன்னு பார்ப்போம்" பேச்சை மாற்றும் விதமாக அவன் அவள் முகத்தருகே குனியஅவன் முகத்தின் மீது விரல்களை வைத்து தள்ளி விட்டாள் திவ்யா...



    "எனக்கு இப்போ என்ன நடந்ததுன்னு தெரிஞ்சாகணும் " திவ்யா தீவிரமாய் கேட்க...



    'வேண்டாண்டா செல்லம். அது என்னோட போகட்டும். அதுநான் சொன்னா வீணா நம்ம ரெண்டு பேருக்குள்ள மறுபடியும் சண்டை வரும்" ஸ்வரூபன் மீண்டும் அவளிடம் நெருங்க...



    'அதெல்லாம் ஒரு சண்டையும் வராது. நீங்க சொல்லுங்க.அதெப்படி ஒரே நாள்ல வசீ மாறமுடியும்.தெரிஞ்சிக்கலேனா மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. " திவ்யா பிடிவாதமாய் இருக்க...



    "குட நைட்.." என்று சொல்லிவிட்டு அவளுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிப் படுத்தான் ஸ்வரூபன்..



    மறுநாள் காலை."கார்த்திக்...என்னடா ஆச்சு? காலைல இருந்து திவ்யா உர்ருன்னு இருக்கா... என்கிட்டே கூட சரியா பேசல" நிருபமா ஸ்வரூபனிடம் கேட்க...


    "அவளுக்கு வேற என்ன வேல. ஒண்ணும் இல்லாத விஷயத்த எல்லாம் ஒடச்சி பார்க்கணும்னு ஆசைப்படுவா "



    "ஒண்ணும் இல்லாத விஷயம்னா தைரியமா சொல்ல வேண்டியது தானே. அத ஏன் மறைக்கணும்? அப்போ ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம.." திவ்யா அறையின் உள்ளே இருந்து குரல் கொடுக்க...



    "என்னத்த மறைச்சிட்டாங்க. சில விஷயங்கள் ஸ்மூத்தா நடக்கணும்னா சிலது எல்லாம் செஞ்சு தான் ஆகணும்.நான் போன் பண்ணி வரச் சொன்னதும் உன் அத்தான் பீச் ல வந்து நின்னுகிட்டு எகிருனான். நான் திவ்யாவ தூக்கிட்டு போய் கட்டாயத் தாலி கட்டுவேன். அதுஇதுன்னு பெனாத்திக்கிட்டு இருந்தான். பப்ளிக் பிளேஸ்ல அவனோட நின்னு நான் சண்ட போடணுமா? இல்ல ஒரு வாள கைல எடுத்துகிட்டு நீயா நானான்னு கத்திச் சண்டை போடணுமா?



    ஏற்கனவே நாலு வருஷமா மனசுக்குள்ள மறுகியாச்சு.ஒரு வேளை அவன் நிஜமாவே உன்ன தூக்க நினைச்சி அதுக்கு பிறகு நான் ஏன் ஹீரோயிசம் எல்லாம் காட்டி உன்ன மீட்டுக்கிட்டு வந்து தாலி கட்டறதுக்குள்ள நீ அவ்வையார் ஆயிட்டா என்ன பண்றது?! அதுதான் ஒரே ஒரு பொய் சொன்னேன்.உன் அத்தான் மொத்தமா ஆப் ஆயிட்டான்.." ஸ்வரூபன் தன் பங்குக்கு எகிற.....

    "அந்த ஒரு பொய் தான் என்னன்னு நான் கேக்கறேன்? நீங்க சொல்ற வரைக்கும் விடமாட்டேன்." திவ்யா மீண்டும் முறுக்கிக் கொள்ள...



    "அவன்தான் சொல்ல விரும்பல இல்ல. விட்டு தொலையேன் திவ்யா.உருகி உருகி லவ் பண்ண வேண்டியது. வேல முடிஞ்சதும் டாம் அண்ட் ஜெரி மாதிரி அடிச்சிக்க வேண்டியது. எப்படியோ போங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஆசையே போயிடும்.."


    கணவன் மனைவி விவகாரத்தில் இதற்கு மேல் தலையிட வேண்டாம் என்று நிருபமா கீழே இறங்கிச் செல்ல...



    "எல்லாம் உங்களால தான்.." என்று திவ்யா ஸ்வரூபனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.


    இருபத்து நான்கு மணி நேரம் மோதலிலும் ஊடலிலும் செல்ல அன்றைய இரவு மெத்தென்று அவன் முதுகோடு வந்து ஒட்டிக் கொண்டாள் திவ்யா..


    "உன் இடத்துக்கு போ... நகரு... திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னான் ஸ்வரூபன்.அவள் விரல்கள் அவன் முதுகில் கோலமிட்டுக் கொண்டு இருந்தது.



    "இன்னும் எவ்ளோ நாள் இந்த கோபமாம்? எங்கிட்ட என்ன விஷயம் ன்னு சொல்லிட்டா நான் ஏன் மறுபடியும் கேக்கப் போறேன்.." திவ்யா சிணுங்கும் குரலில் கேட்க...



    டபக்கென்று திரும்பிப் படுத்தான் ஸ்வரூபன். "இல்லடா செல்லம்.. உன்மேல எனக்கென்ன கோபம்? நல்ல விஷயத்துக்காக பொய் சொல்லலாம்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. நீ எனக்கு எந்த வில்லங்கமும் இல்லாம கிடைக்கணும்னு தானே நானும் அப்படி சொன்னேன் " கோபத்தை விட அதிகமாக தாபம் தலை தூக்கஅவள் இதழ்களை தன் விரல்களால் வருடியபடியே ஸ்வரூபன் சொல்ல...



    "அதுதான் என்னன்னு கேக்கறேன். உங்களுக்கும் எனக்கும் நடுவுல என்ன ரகசியம். சொல்லுங்க ப்ளீஸ்" அவன் காதுகளில் அவள் ரகசியம் பேச..



    அவள் விரல்களின் ஸ்பரிசம் ஏற்படுத்திய மோகம் அவனை வாய் திறக்க வைத்தது " கல்யாணத்துக்கு முன்னாடியே நீ...." பாதியில் நிறுத்தினான் ஸ்வரூபன்...



    "ம்ம்...நான்..." திவ்யா தொடர...



    "எனக்கு சொந்தமாயிட்டதா சொல்லிட்டேன்" ஸ்வரூபன் சாவகாசமாய் சொல்ல...



    "அடப்பாவி. என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கீங்க. கட்டிக்க போற பொண்ண பத்தி இப்படி பேச வெக்கமா இல்ல." அவன் தலை முடியைப் பிடித்து ஆங்காரமாய் உலுக்கிக் கொண்டிருந்தாள் திவ்யா.



    "திவி விடும்மா. வலிக்குதுடா. வேற யாராவது இத சொல்லி இருந்தா தப்பு. நான் தானே சொன்னேன். வேற எதுக்காவது அந்த கிறுக்கன் அடங்குவானா சொல்லு? அணில் கடிச்ச பழம்னு பேசாம போயிட்டான். புரிஞ்சிகோடா" ஸ்வரூபன் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டு இருந்தான்...


    "என்ன இருந்தாலும் நீங்க அப்படி பேசுனது தப்பு" திவ்யா புலம்பிக் கொண்டே இருக்க ...


    மனைவியின் கோபத்தை ரசித்தவன் அவள் இதழ்களை முத்தமிட மீண்டும் இருவருக்கும் ரத்த நாளங்கள் எல்லாம் ரேஸ் விட ஆரம்பித்தன.


    இந்த ஊடலும்,
    கூடலும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்தாலும் இணை பிரியாமல் அவர்களை வாழ வைப்பது தான் காதல்.. !!

    [தீபாவளிக்குப் பின் தொடரும்]
     
    Rajijb and hisandhiya like this.
  8. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&#2

    diwali-greetings-2012.jpg

    Happy Diwali friends !!
     
  9. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா

    without-each-other.jpg

    வசீகரன் தன் மீடியா நிறுவனம் மூலமாக சிங்கப்பூருக்கு மாற்றல் வாங்கி இருந்தான். அங்கேயும் அவர்களுக்கு கிளை இருந்தது. அன்று ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் பிரகாஷ் அவனை டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப அவமானமும் , அசிங்கமும் தாங்காத குழப்பத்தில் தான் வீடு போய் சேர்ந்தான் வசீகரன். நடந்த கேவலத்தை யாரிடமும் சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை.


    "வேண்டாம் வேண்டாம் ன்னு சொல்ல சொல்ல கேக்காம அந்த வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தாச்சா" உள்ளே நுழையும் போதே தாட்சாயணி அங்கலாய்க்க...



    'என்னடா சாதிச்சே? வருஷக் கணக்கா அவளையே நினைச்சிகிட்டு இருந்து என்ன சாதிச்சே? என்னடா குறைச்சல் உனக்கு? அவன் அவன் அமெரிக்கா ல வேலை கிடைக்குமா? ஆஸ்திரேலியால வேலை கிடைக்குமான்னு தேடி தேடி போயிட்டு இருக்கான். காதல்ன்னு ஒண்ணு வந்துட்டா அப்பா, அம்மா, படிப்பு, தொழில் எல்லாம் மட்டரகமா தெரியுமா உனக்கு. எந்த முகத்தோட உன்னால அங்க போக முடிஞ்சதுன்னு தெரியல. சை... உன்ன நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. அவ மேல காட்டுன அக்கறைய மேற்படிப்புலையோ, தொழில்லையோ காட்டி இருந்தா இந்நேரம் நாலு பேரு பாராட்டுற மாதிரி வந்திருக்கலாம்.



    போதை. எல்லாம் போதை. குடி போதை. காதல் போதை. எல்லா போதையும் ஒண்ணா சேர்ந்தா சிக்கி சீரழிய வேண்டியது தான். ஒரு பாட்டில் விஷம் வாங்கிட்டு வாடா. நானும் அம்மாவும் ஒரேயடியா போய் சேர்ந்துடறோம். அதுக்கப்புறம் நீ உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணிக்கோ. உன்ன கேக்க ஆள் அரவம் இருக்காது. உன்ன தாடி வளர்த்த தேவதாசா பார்க்கவாடா மார்லையும், தோள்ளையும் தூக்கிப்போட்டு வளர்த்தேன்"



    ராஜதுரை குலுங்கிக் குலுங்கி அழ வாழ்க்கையில் முதல் முறையாக தன் தந்தை அழுவதை பார்த்தான் வசீகரன். அப்பா என்று கதறிக் கொண்டே அவன் அவர் மடியில் விழுந்தான்.



    "போறியா. வெளிநாட்டுக்கு போறியா சொல்லு. எவ்ளோ செலவானாலும் கவலை இல்ல. நான் தர்றேண்டா. என் புள்ள நல்லா இருந்தா எனக்கு போதும். நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சா அதச் செய். காலப்போக்குல உன் மனசும் மாறும். நீ இவ்ளோ நாளா நடந்துகிட்டது கூறுகெட்ட தனம்னு உனக்கே ஒரு நாள் புரியும்."



    ராஜதுரையும், தாட்சாயணியும் மாறி மாறி பேசியது மனதிற்குள் நிழலாய் வர பெருமூச்சு விட்டான் வசீகரன்..



    போகும் முன் சுந்தரத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது...



    "நான் வசீகரன் பேசறேன்..." தயக்கமாய் ஆரம்பித்தான்..



    " என்னப்பா. அடுத்து என்ன ரகளை பண்ணப்போறே. இப்போதான் அவங்க வாழ்க்கைய ஆரம்பிச்சு இருக்காங்க. விட்டுடுப்பா அவங்கள.." கெஞ்சும் குரலில் கேட்டார் சுந்தரம்.



    'நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்க தான் போன் பண்ணேன் மாமா. நான் ஆரம்பத்துல இருந்து நடந்துகிட்டது எல்லாமே முட்டாள்தனம். திவிக்கு என்ன பிடிக்கலேன்னு தெரிஞ்ச உடனே நான் ஒதுங்கி இருக்கணும். தப்பு பண்ணிட்டேன்." வசீகரன் வருத்தப்பட்டு பேச...



    "நீ ஆரம்பத்துல பண்ணது தப்பு இல்லப்பா. கல்யாண மண்டபத்துல பண்ணியே அதுதான் உலக மகா தப்பு. உனக்கு ஏதாவது ஆயிருந்தா உன் அப்பா, அம்மாவுக்கு யார் பதில் சொல்றது. இல்ல அந்த பாவம் திவ்யாவ தான் நிம்மதியா வாழ விட்டிருக்குமா?



    உண்மைலேயே நீ நல்லவனா இருந்தா தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருப்பியா? அப்படி ஒரு லெட்டர் தான் எழுதி வெச்சிருப்பியா? அது யார் கைலயாவது சிக்கி இருந்தா திவ்யாவுக்கும் சேர்த்து தானே கேவலம். நீ திவ்யா மேல வெச்ச காதல் உண்மையானதா இருந்திருந்தா இப்படி சிக்கல்ல மாட்டி விடணும்னு நினைச்சிருக்க மாட்டே. உனக்கே தெரியாம உன்கிட்ட ஒரு போலித்தனம் இருக்கு. அத மொதல்ல சரி பண்ணு. மத்த நல்லது எல்லாம் உன் வாழ்க்கைல தானா நடக்கும். எப்போ பிளைட் ன்னு சொல்லு. நானும், வசுந்தராவும் ஏர்போர்ட் வர்றோம். நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்."



    சுந்தரத்தின் பேச்சு வசீகரனுக்கு சுளீர் என்று அறைந்தது போல இருந்தது. பிளைட் வரும் நேரத்தை சொன்னவன் "திவ்யா கிட்ட சொல்லிடுங்க மாமா... எனக்கு அவகிட்ட நேரடியா பேச சங்கடமா இருக்கு... "



    "நடந்த விஷயம் எல்லாம் எனக்கும் , மாப்பிளைக்கும் மட்டும் தான் தெரியும். அவ மாமியார் வீட்ல தான் இருக்கா. நீங்களே பேசுங்க. மண்டபத்துல நடந்த எதையும் அவகிட்ட சொல்ல வேண்டாம்..." சுந்தரத்திற்கு மனம் நிறைவாக இருந்தது.



    ஸ்வரூபன் வீட்டு டைனிங் டேபிள் களை கட்டி இருந்தது.


    "என்ன கார்த்திக். நேத்து டாம் அண்ட் ஜெரி பைட் எல்லாம் நைட்டே சரி ஆயிடுச்சு போல இருக்கே. திவி முகத்துல புதுசா ஜோதி தெரியுது..." நிருபமா திவியை கலாய்க்க....



    "அதெல்லாம் புருஷன் பொண்டாட்டின்னா அப்படிதான் அடிச்சிக்குவோம் புடிச்சிக்குவோம். உனக்கும் கல்யாணம் ஆனா தெரியும்... " திவ்யா நிரூவிடம் சொல்லிக் கொண்டிருக்க செல்போன் ஒலித்தது.



    வசீகரன் தான் அழைத்திருந்தான். ஸ்வரூபனை பார்த்தாள் திவ்யா. என்ன என்பது போல் சைகையில் கேட்டான். "வசீ அத்தான் போன் பண்றாரு..." பேசு என்பது போல சைகை காட்டினான் ஸ்வரூபன்.



    'சொல்லுங்க அத்தான் " திவ்யாவின் குரல் ஐஸ் முனையாய் நெஞ்சை கிழிக்க ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான் வசீகரன்...



    "நான் சிங்கப்பூர் போறேன் திவ்யா. இங்க இருந்தா உன்னோட நினைவாவே இருக்கும். என்னோட கம்பனிலேயே மாற்றல் வாங்கிட்டேன். போகறதுக்கு முந்தி உன்கிட்ட பேசிட்டு போகணும் போல இருந்தது. நான் இது வரைக்கும் உன் மனசுக்கு பிடிக்காத வகைல நடந்திருந்தா மன்னிச்சிடு திவ்யா " வசீகரன் உருக்கமாய் சொல்லிக் கொண்டிருக்க திவ்யாவுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.



    "அத்தான் சிங்கப்பூர் க்கு மாற்றல் வாங்கிட்டு போறாராம்" அவளுக்கு தொண்டை அடிப்பது போல இருந்தது. பேச முடியாமல் போனை வைத்துக் கொண்டு நிற்க நிருபமா அவள் கையில் இருந்த போனை வாங்கினாள்.



    "ஹலோ மிஸ்டர் வசீகரன். நான் ஸ்வரூபன் கசின் நிருபமா பேசறேன். என்ன உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. பட் ஐ நோ யூ ப்ரெட்டி வெல்.. ஸ்வரூபன் உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கான். யூ ஹாவ் காட் இம்மென்ஸ் லவ் அண்ட் அபெக்ஷன் இன் யூ மேன். உங்கள கட்டிக்க போறவ ரொம்ப குடுத்து வெச்சவ. எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டு எந்த விஷயமா இருந்தாலும் ஸ்ட்ரெயிட்டா, மேன்லியா டீல் பண்ணி பாருங்க. நிச்சயம் ஹிட் ஆகும். தைரியம் புருஷ லட்சணம். ஆல் தி பெஸ்ட். கார்த்திக், திவ்யா ரெண்டு பேரும் ஏர்போர்ட் நிச்சயம் ஏர்போர்ட் வருவாங்க..." அவர்கள் இருவரின் சார்பாக நிருபமாவே பேசி முடிக்க...



    கோவிலுக்கு சென்றிருந்த வேதநாயகமும், ஹேமலதாவும் அப்போது தான் உள்ளே நுழைந்தனர். திவ்யா அவர்களுக்கும் சேர்த்து டிபன் பரிமாறினாள்.



    'அடுத்தது நம்ப நிரூ கல்யாணம் தான். கோவில்ல உனக்காக தாண்டி ரொம்ப நேரம் வேண்டிகிட்டு வந்தேன். எப்போ எங்கள எல்லாம் மும்பைக்கு கூட்டிட்டு போறே " ஹேமலதா நிருபமாவின் நெற்றியில் குங்குமத்தை கீற்றாய் வைக்க...



    "வாழ்க்கைல சண்டையே போடாதவனா ஒருத்தன் கிடைச்சா சொல்லுங்க அத்தே. நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கறேன்... " என்று நிருபமா சொல்லவும் ஸ்வரூபனும், திவ்யாவும் சேர்ந்து சிரித்தனர்.



    "சண்டை போடாத புருஷன் பொண்டாட்டி ன்னு உலகத்துல ஒருத்தருமே கிடையாது. இவ்ளோ வயசாச்சு. இன்னும் உன் மாமா என்ன வம்புக்கு இழுத்துகிட்டு தான் இருப்பாரு. நானும் சேன்ஸ் கிடைக்கறப்போ திருப்பி குடுத்து கிட்டு தான் இருப்பேன். அதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை போரடிச்சு போயிடும்டா செல்லம். புருஷனும் பொண்டாட்டியும் சண்ட போட்டுக்கறது கூட ஒரு தனி சுகம். மனசு நிறைய அன்பிருந்தா வந்த சண்டையெல்லாம் வந்த வேகத்துலயே திரும்பிப் போயிடும். நேத்து நம்ப ஸ்வரூபனும், திவ்யாவும் அடிச்சிகிட்டாங்களே அந்த மாதிரி. டேய்... இனிமே கத்தறதா இருந்தா ரூம் கதவ சாத்திகிட்டு கத்து. கீழ வரைக்கும் கேக்குது." ஹேமலதா தன் மகனை வார திவ்யாவும், நிருபமாவும் கலீரென்று சிரித்தனர்.



    "ஆம்பளைங்க பொழப்பு எல்லாம் இப்படி சிரிப்பா போச்சு..." வேதநாயகம் கமென்ட் அடிக்க ...



    "நிரூ. உனக்கு சென்னைலயே வரன் பார்க்கவா. இப்படியே காலம் முழுக்க எங்களோட கலகலன்னு இரேன் " திவ்யா கெஞ்சலாய் கேட்டாள் ...



    "சும்மா நடிக்கறா நிரூ... மறுபடியும் எங்களுக்குள்ள சண்டை வந்தா தூது போக ஆள் வேணும் இல்ல. அந்த பயத்துல தான் உன்ன இங்கயே இருக்க சொல்றா" ஸ்வரூபன் மனைவியை சீண்ட யாருக்கும் தெரியாமல் நறுக்கென்று அவனைக் கிள்ளினாள் திவ்யா.



    ஆஅ என்று வேண்டுமென்றே அவன் அலற... சிறுசுகளின் சீண்டல் பெரியவர்களுக்கும் ஆனந்தத்தை கொடுக்க நிருபமாவுக்கும் இவர்கள் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.



    "நீ சொன்னபடியே செஞ்சிடலாம் திவ்யா. சீக்கிரமா எனக்கேத்த ஆளா பாரு." நிருபமா சம்மதம் தெரிவிக்க அனைவர் முகங்களும் மகிழ்ச்சியில் பிரகாசித்தன. வாழ்க்கையை ஜீவனோடு வைத்திருக்கும் ஊடலும், கூடலும் நிறைந்த இந்த இணையில்லா திருமண பந்தம் உலகம் உள்ளளவும் நிலைக்கட்டும்...!!

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    என்றும் அன்புடன்-சுகந்திரமேஷ்@coolsea
     
    Rajijb and hisandhiya like this.
  10. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&#2

    nice one suganthi ramesh,.loved every bit of it.. please let me know if you have any other stories and links..
     
    1 person likes this.

Share This Page