1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பாக

Discussion in 'Stories in Regional Languages' started by Coolsea, Oct 19, 2012.

  1. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-34


    "திவி... வாட் எ சர்ப்ரைஸ்... வா... உள்ள வா.. " ஸ்வரூபன் அவளை வாய் நிறைய புன்னகையுடன் வரவேற்க...


    " நிருபமாவ பார்க்க வந்தேன்... மும்பைக்கு கிளம்பறதா சொன்னா..." நிருபமாவை பார்வையால் தேடியபடி அவள் நின்ற இடத்தில் இருந்தே பேசிக் கொண்டிருக்க...


    "அவ ஷாப்பிங் போயிருக்கா... வர ரெண்டு மணி நேரம் ஆனாலும் ஆகலாம்.. ரெண்டு நாள் ஆனாலும் ஆகலாம்... நீ உள்ள வா திவ்யா..." மீண்டும் அவன் அழைக்க ...


    "ஐயோ நான் போன் பண்ணிட்டு தானே வந்தேன்... வீட்லே இருக்கேன்னு தானே சொன்னா..." திவ்யாவுக்கு தவிப்பாக இருந்தது... மனதிற்குள் நிருபமாவை திட்டித் தீர்த்தாள்...


    "ஸோ வாட்... அவ இல்லேன்னா என்ன... நீ உள்ள வா... " திவ்யாவிடம் அப்படி சொன்னவன் மனதிற்குள் நிருபமாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்..


    "அம்மா இருக்காங்களா..." என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த கேள்வியை கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தாள் திவ்யா...


    "யாரும் இல்லை... நான் மட்டும் தான் இருக்கேன்... இப்போ உன்ன கடிச்சு முழுங்க போறேன்... என்ன பண்ணுவே... பயப்படாம உக்காரு... என்ன சாப்பிடறே... காபி டீ எல்லாம் எனக்கு போட தெரியாது... பெட்டெர் ஐ வில் கிவ் யூ சம்திங் chill ... நான் வர்றதுக்குள்ள எந்திரிச்சு ஓடிப்போயிடாத... டோன்ட் இன்சல்ட் மீ... " சொல்லிவிட்டு அவன் டைனிங் ஹாலில் இருந்த பிரிட்ஜில் இருந்து குளிர்பானங்களை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்தான்...


    அமைதியாக வாங்கிக் கொண்டவள் அதை பருக வாய்க்கு அருகே கொண்டே போனபோது "திவி... அதுல மயக்க மருந்து கலந்திருக்கேன்... ஓகேன்னா குடி..." ஸ்வரூபன் மீண்டும் அவன் சேட்டையைக் காட்ட... லேசான புன்னகையுடன் குடித்து முடித்தாள் திவ்யா...


    "இந்த கிப்ட் மட்டும் நிருபமா கிட்ட குடுத்திருங்க ஸ்வரூபன்... ஐ வான்ட் டு கோ நௌ..." கால் டேக்சிக்கு போன் செய்வதற்காக அவள் செல்லை எடுக்க அதை பிடுங்கிக் கொண்டான் ஸ்வரூபன்...


     
  2. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    gl.jpg

    Episode-35


    "எதுக்காக வீட்லதான் இருக்கேன்னு நிரூ பொய் சொன்னான்னு கொஞ்சமாவது யோசிச்சியா... நாம்ப ரெண்டு பேரும் தனியா மீட் பண்ணணும்னு ப்ளான் பண்ணி தான் சொல்லி இருக்கா... நீ வரப்போற விஷயத்த என்கிட்டே கூட அவ சொல்லிட்டு போகல... ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் எ சான்ஸ் லைக் திஸ்... " சொல்லிக்கொண்டே முன்வாசல் கதவை தாளிட்டவன்


    "மாடிக்கு வா... ஐ வான்ட் டு ஷோ யூ சம்திங்..." அவள் அனுமதியைக் கேட்காமல் கை பிடித்து அழைத்துக் கொண்டு படியேற அவன் பிடியில் இருந்து கையை விடுவிக்க முடியாமல் திவ்யா அவன் பின்னாலேயே போக வேண்டி இருந்தது...


    பூட்டியிருந்த ஒரு அறைக் கதவை திறந்தான் ஸ்வரூபன்... மிகவும் பெரியதாகவும் இல்லாமல் மிகவும் சிறியதாகவும் இல்லாமல் மீடியமாக இருந்தது.. நான்கு மதில்களை ஒட்டி நான்கு பெரிய கேன்வாஸ்கள் துணி போட்டு மூடப்பட்டிருக்க...



    "இது நான் மட்டுமே யூஸ் பண்ற ரூம் திவி... இத க்ளீன் பண்றதுக்கு கூட வேற யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்... அம்மா கூட கேப்பாங்க ... அப்படி என்னடா அந்த ரூம்ல இருக்குன்னு... நேரம் வரும்போது சொல்றேன்னு சொல்லிடுவேன்... நான் கீழ ஹால்ல இருக்கேன் திவி ... நீ இந்த கேன்வாஸ்ல இருக்கறத நிதானமா பொறுமையா பார்த்துட்டு வா... டேக் யுவர் ஓன் டைம்.. அவங்க எல்லாம் திரும்பி வர இன்னும் நிறைய நேரம் இருக்கு... "


    ஸ்வரூபன் அங்கிருந்து சென்றுவிட முதல் கேன்வாசை திறந்து பார்த்தவள் சிலையாக நின்றுவிட்டாள்...


    முட்டுக்காடு ஏரியின் பின்னணியில் அவள் படகில் அமர்ந்த்திருந்த காட்சி... தத்ரூபமாக வரைந்திருந்தான்... காற்றில் கலைந்து இருந்த அவள் கூந்தல் முதல் அணிந்திருந்த உடை வரை அச்சு அசலாக அப்படியே... !!


    படகில் பயணம் செய்யும்போது ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்று திவ்யாவுக்கு நன்றாகத் தெரியும்... படகு கிளம்பிய பிறகுதான் கேமராவை காரிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக நிருபமா தலையில் அடித்துக் கொண்டாள்... பின் எப்படி இது சாத்தியம்... இப்படியெல்லாம் கூட மனதில் உருவங்களை பதிய வைக்க முடியுமா என்ன...?? திவ்யாவுக்கு மலைப்பாக இருந்தது...


    அதற்கு அடுத்த கேன்வாஸ் நவராத்திரியின் போது ஸ்வரூபன் வீட்டு டைனிங் டேபிளில் சாய்ந்தபடி அவள் நின்றுகொண்டு இருந்தது... அப்படி நின்று கொண்டிருந்தபோது தான் ஸ்வரூபனை முதன் முதலாக அவள் பார்த்தாள்... அந்தக் காட்சி அவளுக்கும் நன்றாக நினைவு இருந்தது...


    வைத்த கண் வாங்காமல் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள் திவ்யா... இது நிச்சயமாக ஹார்மோன்களின் கோளாறுகளினால் வந்த காதல் அல்ல... அவன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் அவள் கலந்து இருக்கிறாள் ... தான் அப்படி பேசியது அவனை எப்படி புண்படுத்தி இருக்கும் என்று இப்போது மிக மிக தெளிவாக புரிய திவ்யாவுக்கு அழுகை வரும் போல இருந்தது... மிகவும் ஸ்ரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்...


    மூன்றாவது கேன்வாஸ்... அவள் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள்... இது எப்போது நடந்தது... அவன் அலுவலகம் வந்ததையே நான் கவனிக்கவில்லையா... திவ்யாவுக்கு தலை சுற்றும் போல இருந்தது... நான்காவது கேன்வாஸ்... அவள் ஸ்கூட்டியில் போய்க்கொண்டே பின்னால் தொடர்ந்து வரும் காரை திரும்பிப் பார்த்தது... மிகவும் அழகாக வரைந்திருந்தான்... எவ்வளவு நேரம் அதையே பார்த்துக் கொண்டு நின்றாளோ.... இனம் புரியாத உணர்வுகள் இதயத்தை பிசைந்து கொண்டு இருந்தன...


    அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மீண்டும் எல்லாவற்றையும் துணி போட்டு மூடிவிட்டு அறைக் கதவை பழையபடி படி பூட்டிவிட்டு கீழே இறங்கி வந்தாள் திவ்யா...


    சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு அவனையே பார்க்க... "பிடிச்சிருந்ததா..." ஒரே ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து புறப்பட அவள் விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டத் தொடங்கியது... இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு குலுங்க குலுங்க அழுதபடி அங்கிருந்த சோபாவில் சரிந்தாள்....



    [​IMG]
     
  3. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-36


    "திவி... ஏன் அழறே... வாட் இஸ் ராங் வித் யூ..." பதறிப் போனான் ஸ்வரூபன்... "திவி ப்ளீஸ்.. அழாத..." அவள் அழுகை நின்றபாடில்லை... அவசரமாக உள்ளே சென்று ஐஸ் வாட்டர் கொண்டு வந்தான் ஸ்வரூபன்... அவள் கொஞ்சம் சமாதானம் ஆகட்டும் என்று காத்திருந்த நேரத்தில் நிருபமா போன் செய்தாள்...


    "டேய் திருடா... என்னடா நடக்குது அங்க... நான் அத்தைக்கு தெரியாம ஒளிஞ்சிகிட்டு நின்னு பேசறேன்... சீக்கிரம் சொல்லு..." நிருபமா ஆர்வமாய் கேட்க...


    "உக்காந்து அழுதுகிட்டு இருக்கா.. அதுதான் நடக்குது" ஸ்வரூபன் பதில் சொல்ல...


    "அடப்பாவி எல்லைய தாண்டி ஏதாவது நடந்துடுச்சா... ஏண்டா அவ அழறா..." நிருபமா வேறு அர்த்தத்தில் கேட்க ...


    "அடச்சீ... நீயும் உன் கற்பனையும்... நீ வீட்டுக்கு வா ... உதைக்கறேன் ராஸ்கல்... அவ கிட்டயே போன் பண்ணி கேளு... எதுக்கு அழறான்னு... எனக்கும் ஒண்ணும் புரியல... சரி... நான் அவள வீட்ல விட்டுட்டு வரேன்...


    இங்க எந்த சந்தேகமும் வராம பார்த்துக்கோ... தேங்க்ஸ்டீ kvr .... நீ வெறும் சேட்டர்பாக்ஸ்ன்னு நினைச்சேன் ... இப்படி ஒரு சான்ஸ் க்ரியேட் பண்ணி குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..."


    "நம்ப தேங்க்ஸ் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... மொதல்ல நீ அவள வீட்டுக்கு கொண்டு போய் விடு கார்த்திக்... என்னால அத்தையையும், மாமாவையும் ரொம்ப நேரம் இழுத்து பிடிக்க முடியாது... "


    நிருபமாவிடம் பேசி முடிக்கும் நேரத்தில் திவ்யாவின் அழுகை நின்றிருந்தது...வாஷ்பேசினில் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்....


    "போன் குடுங்க ஸ்வரூபன்... கால் டேக்சி கூப்பிடணும்" திவ்யா கேட்க..


    "நானே கொண்டு போய் விடறேன்... வீட்டுக்கு தான திவி..." அவளிடம் செல்லைக் கொடுத்தபடி ஸ்வரூபன் கேட்க...


    "ஸ்கூட்டி ஆபீஸ் பார்க்கிங்க்ல இருக்கு ஸ்வரூபன்... ஆபீஸ்லையே இறக்கி விட்டுடுங்க..."


    வீட்டைப் பூட்டிக்கொண்டு திவ்யாவும், ஸ்வரூபனும் காரில் அமர கார் திவ்யாவின் அலுவலகம் நோக்கி விரைந்தது...!!





     
  4. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-37


    "நீங்க கிளம்புங்க ஸ்வரூபன்..." திவ்யா எவ்வளவு சொல்லியும் ஸ்வரூபன் கேட்கவில்லை...


    "நீ ஸ்கூட்டி எடு... வீடு வரைக்கும் நான் பாலோ பண்ணிட்டு வரேன்... யூ ஆர் டூ இமோஷனல் நௌ.... ஒழுங்கா வீடு போய் சேர்ந்தியான்னு எனக்கு தெரியணும்..." ஸ்வரூபன் சொல்லிக் கொண்டிருக்க...


    திவ்யா காரில் இருந்து இறங்க..... சற்று தூரத்தில் நிறுத்தியிருந்த மற்றொரு காரில் இருந்து வெறி கொண்ட விழிகள் இரண்டு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தன...


    பல நாட்கள் கழித்து வெளி உலகை பார்க்க வந்திருந்தான் வசீகரன்... முதலில் திவ்யாவை பார்க்க வேண்டும் போல இருக்க நேராக அவள் அலுவலகத்திற்கே வந்துவிட்டான்... ஆபீசில் அவளைப் பற்றி விசாரித்தபோது இரண்டு மணி நேரம் பெர்மிஷனில் போயிருப்பதாக தகவல்
    வந்தது...


    அதற்குள் அடுத்த தெருவில் இருந்த ட்ரேவல் ஏஜென்டிடம் தன் பாஸ்போர்ட் ரின்யூவலுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு மீண்டும் திவ்யாவின் அலுவலகத்திற்கு நேர் எதிரே காத்திருந்த போதுதான் ஸ்வரூபனுடன் வந்து இறங்கினாள்....


    யாருடன் எங்கே போய்விட்டு வந்து இறங்குகிறாள்...?? மீண்டும் ஸ்வரூபனின் கார் திவ்யாவின் ஸ்கூட்டியை பின்தொடர வசீகரனின் மனதில் தீ எரியத் தொடங்கியது... அவனும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல தெருமுனை வரை சென்றுவிட்டு ஸ்வரூபனின் கார் வேகம் எடுத்தது... ஸ்வரூபன் கார் எண்களை அவசரமாக குறித்துக் கொண்டான் வசீகரன்...


    திவ்யா வீட்டிற்குள் நுழைந்து ஸ்கூட்டியை நிறுத்த இரண்டு நிமிடம் இடைவெளி விட்டு வசீகரனின் கார் உள்ளே நுழைந்தது ...


    "வாங்க அத்தான்... உடம்பு நல்லா ஆயிடுச்சா..." எப்போதும் போல் வரவேற்றாள் திவ்யா...!!


    "இப்போ தான் ஆபீஸ் ல இருந்து வர்றியா திவ்யா... " எந்த பாவனையும் இல்லாமல் சாதாரணமாக கேட்டபடி வசீகரன் வீட்டுக்குள் நுழைய ....


    "வசீ கண்ணா ... எப்படிடா இருக்கே... நல்லா நடக்க முடியுதா... இப்போ வலி ஏதும் இல்லையே..." வசுந்தரா ஓடி வந்து வரவேற்றாள்..


    "சரி ஆயிடுச்சு அத்தே... பைக் மட்டும் எடுக்க வேண்டாம்னு அப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு... இனிமே எங்க போறதுன்னாலும் கார்தான்... அதுதான் கவலையா இருக்கு... என்ன இருந்தாலும் பைக் ல சுத்தற மாதிரி வராது..." வசீகரன் பேசிக் கொண்டிருக்க... திவ்யா உடை மாற்ற தன் அறைக்கு சென்றாள்...


    "திவ்யா தினமும் இந்த டைம் க்கு தான் வீட்டுக்கு வருவாளா அத்தே... ரொம்ப லேட் ஆகுது போல இருக்கே..." வசீகரன் அவள் மேல் அக்கறை கொண்டவனாக கேட்க...


    "சொல்ல முடியாது வசீ... ஆபீஸ் வேலைய பொறுத்து... சில சமயம் ஓவர்டைம் இருக்குன்னு சொல்லுவா... அது இருக்கட்டும்..இன்னைக்கு தேங்காய் பால் ஆப்பம்.. ரெண்டு பேரும் சாப்பிடுங்க... அப்புறம் பேசலாம்... அண்ணிய அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல வசீ... இங்க வந்தே ரொம்ப நாள் ஆச்சே..." வசுந்தரா சொல்லிக்கொண்டே தட்டுகளில் ஆப்பம் எடுத்து வைத்து பரிமாற...


    திவ்யாவும் சாப்பிட அமர்ந்தாள்... "அப்புறம் அத்தான்... எப்பவும் போல ஆபீஸ் போறீங்களா... லீவ் எக்ச்டன்ட் பண்ணி இருக்கீங்களா... " திவ்யா வசீகரனிடம் பேசிக்கொண்டே சாப்பிட இருவரும் பேசும்போது குறுக்கே நிற்க விரும்பாமல் ரொம்பவும் வேலை இருப்பது போல் பின்கட்டுக்கு சென்று விட்டாள் வசுந்தரா...


    "இன்னும் டென் டேஸ் லீவ் எக்ச்டன்ட் பண்ணி இருக்கேன் திவ்யா... நீ ஏன் இவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வரே... இப்படி எல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டு சம்பாதிச்சு தான் ஆகணும்ன்னு என்ன இருக்கு... நான் இன்னைக்கு தான் வீட்ட விட்டே வெளிய வந்தேன்... முதல்ல உன்ன தான் பார்க்கணும்னு ஆசையா இருந்தது... நேரா உன் ஆபீஸ்கே வந்துட்டேன்... நீ உன் சீட்ல இல்லேன்னு சொன்னாங்க... எங்க போயிருந்தே திவ்யா.."


    திவ்யாவுக்கு துணுக்கென்று இருந்தது... ஸ்வரூபனோடு வந்து இறங்கியதை பார்த்திருப்பானோ... "எத்தன மணிக்கு ஆபீஸ் வந்தீங்க வசீ அத்தான்.." திவ்யா பரபரப்பாய் கேட்க...


    "ஒரு மூணு இல்ல மூன்றரை மணி இருக்கும்... சரியா ஞாபகம் இல்ல... நீ இல்லன்னு தெரிஞ்சவுடனே அப்படியே ட்ரேவல் ஏஜன்சி போயிட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு அத்தையாவது பார்க்கலாமேன்னு வீட்டுக்கே வந்துட்டேன்... ட்ரேவல் ஏஜன்சில ரொம்ப நேரம் உக்கார வெச்சிட்டான் ... இல்லன்னா இன்னும் சீக்கிரமாவே வந்திருப்பேன்..." கோர்வையாகப் பொய் சொல்லிக் கொண்டு இருந்தான் வசீகரன்...


    நல்ல வேளை... தான் ஸ்வரூபனுடன் வந்து இறங்கியதை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டாள் திவ்யா...


    "நீ ஆபீஸ் ல இல்லாம எங்க போயிருந்தே..." மீண்டும் அவன் விடாமல் கேட்க...


    "ஒரு கஸ்டமர்... டிசைனிங் அர்ஜெண்டா வேணும்னு கேட்டிருந்தாங்க... அவங்க ஆபீஸ் ல வெச்சே செஞ்சு குடுத்துட்டு வரவேண்டியதா இருந்தது... சில சமயம் இந்த மாதிரி வேலையும் பண்ண வேண்டி இருக்கும் அத்தான்.." சளைக்காமல் புளுகினாள் திவ்யா...


    திவ்யா சாப்பிட்டுக் கொண்டிருக்க அடிக்கண்ணால் அவளை நோட்டம் பார்த்துக் கொண்டு இருந்தான் வசீகரன்... "என்னிடமா பொய் பேசுகிறாய்... கண்டவனோடு காரில் வந்து இறங்கியது எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா திவ்யா... என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்கிறேன்.." வசீகரனின் மனதில் எரிமலையே வெடித்துக் கொண்டு இருந்தது...!!




     
  5. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-38


    நிருபமா மும்பை கிளம்பிவிட வீடு வெறிச்சென்று இருந்தது... ஹேமலதாவுக்கு எப்போதும்விட இந்த முறை நிருபமா கிளம்பிய போது மிகவும் வேதனையாக இருந்தது...


    "உன்ன மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்ட சுத்தி சுத்தி வரணும்னு ன்னு தாண்டி நான் ஆசைப்படறேன்.... நடக்கவே மாட்டேங்குது... நீயாவது அவனுக்கு சொல்லிட்டு போகக் கூடாதா... நீயும் ஊருக்கு போயாச்சுன்னா எனக்குன்னு இவ்ளோ பெரிய வீட்ல யார் இருக்கா..." நிருபமா ஊருக்கு கிளம்பும் முன் ஆயிரம் முறையாவது இதை அவளிடம் புலம்பி இருப்பாள் ஹேமலதா... அவளுக்கு தேவையான இனிப்புகளில் இருந்து துணிமணி வரை பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தாள்...


    போதாதற்கு கிளம்பும் நேரத்தில் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று ஒரு கோல்ட் வாட்ச் அன்பளிப்பாக கொடுத்தான் ஸ்வரூபன்... திவ்யா கொடுத்த கிப்டையும் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் நிருபமாவிடம் கொடுத்துவிட்டான்...


    "இதுக்கு மேல ரெண்டு பேரும் எந்த பிரச்சனையும் வளர்க்காம ஒழுங்கா மேரேஜ் இன்விடேஷன் அனுப்புற வழிய பாருங்க..." போகும் முன் ஸ்வரூபனை நேரிலும் திவ்யாவை போனிலும் மிரட்டி விட்டு சென்றாள் நிருபமா... தினமும் அவளிடம் பேசிப் பழகிவிட்ட திவ்யாவுக்கு நிரூ மும்பை சென்றது கை ஒடிந்தது போல இருந்தது...


    அன்று இரவு வழக்கம் போல போன் செய்தான் ஸ்வரூபன்... "இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல தூது போக ஆள் இல்ல திவ்யா ... எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெயிட் டீலிங் தான்... உன் சைட்ல ரூட் க்ளியர்னா நானும் அம்மாகிட்ட பேசிடுவேன்... நாலு வருஷம் மனசுக்குள்ள குடும்பம் நடத்தியாச்சு... இனி போன்லையே லவ் பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு பொறுமை இல்ல... நீயா உங்க வீட்ல பேச்ச ஆரம்பிக்கிறயா.. இல்ல நான் உன்ன கடத்திட்டு வந்திடவா... யுவர் சாய்ஸ்.." எப்போதும் போல் அவன் கேலி பாதி நிஜம் பாதி என்று பேசிக்கொண்டிருக்க...


    "என் பக்கம் ஒண்ணும் ப்ராப்ளம் இருக்காது ஸ்வரூபன்... நீங்க நேரடியா அப்பாகிட்ட பேசி நிச்சயம் டேட் கூட பிக்ஸ் பண்ணிடலாம்... எனக்கும் சீக்கிரம் அங்க வரணும் போல இருக்கு.." திவ்யாவும் அவனைப் போலவே கிண்டல் பாதி விஷயம் பாதி என்று பேசிக் கொண்டிருக்க...



    "மெயில் செக் பண்ணிட்டு தூங்கு திவி... தேர் இஸ் சம்திங் ஸ்பெஷல் பார் யூ..." ஸ்வரூபன் கால் கட் செய்ய...


    அவசரமாக மெயில் ஓபன் செய்தாள் திவ்யா...


    திவி..!!
    அன்று உன்விழிகளில் பெருகிய நீர் என் உயிரை நனைத்தது...

    நான் அறிவேன் -
    அது காதலின் மிகுதியால் ஏற்பட்ட நயாகரா அருவி என்று ...!!

    அன்று தொட்டுவிடும் தூரத்தில் நீ...
    உன் இமைகளை முத்தமிடும் தொலைவில் நான்...


    காமுகன் என்று நீ எண்ணிவிடக் கூடாதே ..!!
    காத்திருக்கிறேன் உரிமைக்காக!! ... நம் உறவுக்காக...!!


    திவ்யாவின் உடலிலும், உணர்வுகளிலும் ஏதேதோ மாற்றங்கள் நிகழ தலையணையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்...!!


     
  6. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-39


    "திவி... குட் மார்னிங்... இப்போ நம்ப விஷயத்த அப்பா, அம்மாகிட்ட சொல்றதா இருக்கேன்... நீ உங்கவீட்ல பேசியாச்சா..." ஸ்வரூபன் கேட்க...


    "நீங்க தனியா நான் தனியான்னு பேசறதவிட இவங்க நாலு பேரையும் ஒண்ணா மீட் பண்ண வெச்சிட்டா ஒரே வேலையா முடிஞ்சிடும் ஸ்வரூபன்... உங்க வீட்லயே வெச்சி பேசிட்டா எந்த குழப்பமும் வராதுன்னு நினைக்கறேன்... நமக்கும் அதுதான் எந்த தலைவலியும் இல்லாம ஸ்மூத்தா முடியும் " திவ்யா தயக்கமாய் சொல்ல...


    "ரைட்... நீ சொல்ற மாதிரியே பண்ணிடுவோம்... பெட்டெர் ஐடியா... வீட்ல பேசிட்டு போன் பண்றேன்.. பை..."


    "ஸ்வரூபா... டிபன் சாப்பிட வா... ஆபீஸ் கு லேட் ஆகலையா... அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமாம்..." ஹேமலதா குரல் கொடுக்க...


    "வந்துகிட்டே இருக்கேன்... குட் மார்னிங் பா... என்ன விஷயம் சொல்லுங்க..." கைகளை பரபரவென்று தேய்த்தபடி ஸ்வரூபன் கேட்க....



    "நிருபமா இப்பதான் போன் பண்ணினா... கல்யாண சாப்பாடு சாப்பிட எப்ப வரலாம்ன்னு உன்கிட்ட கேக்க சொன்னா..." வேதநாயகம் பேசிக் கொண்டிருக்க...


    "அத பத்தி தான் இன்னைக்கு உங்ககிட்ட பேசறதா இருந்தேன்... அவளே ஆரம்பிச்சிட்டாளா... அது மட்டும் தான் சொன்னாளா ...வேற எதுவும் சொல்லி வெச்சிருக்காளா..." ஸ்வரூபன் ஆழம் பார்க்க...


    "பொண்ணு பேரு திவ்யா... வசுந்தரா ஆன்ட்டீ பொண்ணு... நாலு வருஷமா கார்த்திக் அவள மனசுக்குள்ளயே லவ் பண்ணிக்கிட்டு இருக்கான் ன்னு சொன்னா..." ஹேமலதா சொல்ல...


    "ஹூம்... kvr ன்னு சும்மாவா பேர் வெச்சேன்... சரியான ஓட்ட வாய்... இனி நான் பேச என்ன இருக்கு... பெரியவங்க என்ன செய்யணுமோ செய்ய வேண்டியது தான்..." ஸ்வரூபன் புன்னகையுடன் சொல்ல...


    "சரியான திருட்டுப் பயடா நீ... எவ்ளோ கமுக்கமா இருந்திருக்கே... பெத்தவளே புள்ள மனச கண்டு பிடிக்க முடியல... " ஹேமலதா சொல்லிக் கொண்டிருக்க...


    "நீங்க மொதல்ல திவ்யாவோட அப்பாவையும், அம்மாவையும் நம்ப வீட்டுக்கு வர சொல்லி பேசுங்க... அவங்க இங்க வந்த பிறகு விஷயத்த சொன்னா போதும் ... மத்த சம்பிரதாயம் எல்லாம் அதுக்கு பிறகு டிஸைட் பண்ணிக்கலாம்..." ஸ்வரூபன் திட்டவட்டமாக சொல்ல...


    எதிர் கேள்வி எதுவும் இல்லாமல் ஹேமலதா அப்போதே வசுந்தராவுக்கு போன் செய்தாள்.... "வசு ... நீயும் உன் வீட்டுக்காரரும் வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வர முடியுமா... ஸ்வரூபனுக்கு சம்பந்தம் பேசலாம்னு இருக்கேன்... நீங்களும் கலந்துகிட்டா நல்லா இருக்கும்... காலைல பத்து மணிக்கெல்லாம் வந்திடுங்க... நேர்ல வந்து கூப்பிடவா வசு..."


    "நமக்குள்ள இதெல்லாம் என்னக்கா... நீங்க போன் ல சொன்னதே சந்தோஷம்... அவசியம் வர்றோம் கா... பொண்ணு எந்த ஊரு... என்ன பேரு... "ஆர்வம் தாங்காமல் வசுந்தரா கேட்க...


    "எல்லாம் இங்க வந்த பிறகு தெரிஞ்சிக்கோ... சீக்கிரம் வந்தா எனக்கும் ஒத்தாசையா இருக்கும்... மறக்காம உன் பொண்ண கூட்டிகிட்டு வா... நான் சொல்றது புரியுதா... திவ்யா கண்டிப்பா வரணும்..." ஹேமலதா அழுத்தம் கொடுத்து சொல்ல...



    "அவசியம் கூட்டிட்டு வரேன் கா... நீங்க சொன்னதாவே சொல்லிடறேன்... " வசுந்தரா பதில் சொல்ல... அந்த பக்கம் ஸ்வரூபனும், வேதநாயகமும் கமுக்கமாக சிரித்துக் கொண்டு இருந்தனர்....


    "அந்த காலத்து சரோஜா தேவி எல்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கணும் ஹேமா... சும்மா அசத்தரே..." மனைவியை கேலி செய்து கொண்டிருந்தார் வேதநாயகம்...


    "உங்க பையனோட டிராமாவ விடவா... நாலு வருஷமா நம்பகிட்ட நடிச்சிருக்கான்... எனக்கு நாலு நிமிஷம் பேசறுத்துக்குள்ள உதறலா இருக்கு...

    கமுக்கமாக சிரித்துக் கொண்டான் ஸ்வரூபன்...!!



     
    Rajijb, hisandhiya and shiviz like this.
  7. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Red roses with wedding rings.jpg

    Episode-40


    ஸ்வரூபன் செல்லில் தகவல் சொன்ன உடனேயே நடந்த , நடக்கப் போகிற விஷயங்களை எல்லாம் சுந்தரத்திடம் போனில் தெளிவாக சொல்லி விட்டாள் திவ்யா.. ஹேமலதாவின் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள் என்று வசுந்தரா சொன்னதுமே சுந்தரம் வருவதற்கு சம்மதிக்க.... ஞாயிற்றுக் கிழமையும் இனிதாய் விடிந்தது...


    ஸ்வரூபன் திவ்யாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்க... சுந்தரம் தன் குடும்பத்தோடு காரில் வந்து இறங்கினார்... இளம் லேவேண்டர் வண்ண புடவை திவ்யாவின் நிறத்திற்கு எடுப்பாய் இருக்க ஸ்வரூபனின் பார்வை அவளைத் தழுவிச் சென்றது.... வெட்கப் புன்னகையுடன் அவனை ஓரப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே காலடி வைத்தாள் ...


    "வாங்க... வாங்க..." வாய் நிறைய புன்னகையுடன் சுந்தரத்தை இரு கை கூப்பி வரவேற்றார் வேதநாயகம்... "வா வசுந்தரா... வாம்மா திவ்யா..." என்று வாய் நிறைய வரவேற்றாள் ஹேமலதா...


    வசுந்தராவும், திவ்யாவும் ஹேமாவைப் பின் தொடர்ந்து உள்ளே செல்ல... வேதநாயகமும் , சுந்தரமும் ஹாலில் அமர்ந்து உரையாடத் தொடங்கினர்...
    "இவன் தான் என் மகன் ஸ்வரூபன் கார்த்திகேயன்... உங்க பொண்ணு சொல்லி இருப்பாளே... எல்லாம் இந்த காலத்து பசங்க... அவங்க வாழ்க்கைக்கு எது சரின்னு படுதோ செய்யட்டும்..." வேதநாயகம் பூடகமாய் ஆரம்பிக்க...


    "மாப்பிள்ளைய நான் ஏற்கனவே பார்த்து பேசி இருக்கேனே... என்ன மாப்பிள்ளை தம்பி... நாம்ப ஏற்கனவே சந்திச்சிருக்கோம் ன்னு அப்பா கிட்ட சொல்லலையா..." வார்த்தைக்கு வார்த்தை ஸ்வரூபனை மாப்பிள்ளை என்று அழைத்து தனக்கு பூரண சம்மதம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் சுந்தரம்....


    உள்ளே டைனிங் ஹாலில் ஹேமலதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.... " பொண்ணு வீட்டுக்காரங்க எத்தன மணிக்கு வர்றதா சொல்லி இருக்காங்க ஹேமாக்கா ... உங்க சொந்த பந்தமெல்லாம் யாரையும் காணோமே... இனிமே தான் வரப்போறாங்களா... " வசுந்தராவின் கேள்வி திவ்யா, ஹேமா இருவருக்குமே சிரிப்பை வரவழைக்க ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்...


    "பொண்ணும் வந்தாச்சு... பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்தாச்சு... இனி சம்பந்தம் பேச வேண்டியது மட்டும் தான் பாக்கி... புரியலையா வசுந்தரா... திவ்யாவுக்கும், ஸ்வரூபனுக்கும் தான் நிச்சயம் பேசப் போறோம்... ரெண்டு பேரும் ரொம்ப நாளா காதல் காதல் ன்னு சுத்திகிட்டு இருந்திருக்காங்க... நமக்கு தான் அது தெரியாம போச்சு....நிருபமா சொன்ன பிறகு தான் எனக்கே தெரியும் " ஹேமலதா சொல்ல திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் வசுந்தரா... தட்டில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் அவளைப் பார்த்து " ஈ " என்று இளிப்பது போல இருந்தது...


    கணவனும், மகளும் எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்த போது மனதின் மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த வசீகரனின் ஆசையை முற்றிலும் துடைத்து விட்டு சகஜமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயன்றாள் வசுந்தரா... தாய் படும் அவஸ்தை திவ்யாவுக்கு சிரிப்பாக இருந்தது...


    "என் வாழ்க்கைய நான் முடிவு பண்ணிகறேன்னு ஏற்கனவே சொன்னேனே " என்ற ரீதியில் திவ்யா அவளைப் பார்க்க இனி தான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது வசுந்தராவுக்கு நன்றாகவே புரிந்தது...


    இதற்குள் குளிர்பானங்களை கண்ணாடி தம்ளர்களில் ஊற்றி ஹேமலதா திவ்யாவின் கையில் கொடுத்து "கொண்டு போய் குடுத்துட்டு வாம்மா " என்று சொல்ல... குளிர் பான ட்ரேயுடன் முன்ஹாலுக்கு வந்தாள் திவ்யா...


    "வாம்மா மருமகளே... வந்த உடனே உன் மாமியார்காரி உனக்கு வேல குடுத்துட்டாளா... இவன் தான் மா என் பையன் ஸ்வரூபன்... இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா... " வேதநாயகம் வம்படியாய் பேச...


    தன் முல்லைப்பூ பல்வரிசை தெரிய அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கினாள் திவ்யா...


    "ஸ்வரூபா... அவள மாடிக்கு கூட்டிட்டு போய் பேசிகிட்டு இருடா... நாங்க பெரியவங்க என்னவோ பேசிக்கறோம்... நீ ரெண்டு பேரும் ஏன் எங்கள சுத்திகிட்டு... போம்மா திவ்யா... ரெண்டு பேரும் மாடிக்கு போங்க..." வேதநாயகமே காதல் ஜோடிகளை தனிமையில் இருக்க அனுமதிக்க அவரது வார்த்தைக்கு அங்கு மறுவார்த்தை பேச எவரும் இல்லை..!!


     
    3 people like this.
  8. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    tumblr_m8jerrCacA1rzxnmpo1_500.jpg

    Episode-41


    கை வைத்தால் வழுக்கும் போன்ற கன்னம், செதுக்கி வைத்த மோவாய்... அவள் உதடுகளில் குடியிருந்த லேசான துடிப்பு , பேசும்போது அதற்கேற்றார் போல் நாட்டியமாடும் கண்கள் ஸ்வரூபனின் அருகாமையால் நாட்டியமாடுவதை நிறுத்தி சொக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க அவன் கைகளுக்குள் சிறை இருந்தாள் திவ்யா...


    மாடியில் தன் மூச்சுக்காற்று படும் தூரத்தில் அவள் முகத்தை ரசித்துக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.... அவளுக்கும் விலக வேண்டும் என்று தோன்றவில்லை... விழிகளும், விழிகளும் மௌன மொழி பேசிக் கொண்டிருக்க அவன் விரல்கள் அவள் காதோர கூந்தலை அளைந்து கொண்டிருந்தன...

    உடலின் ரசாயன மாற்றங்கள் சுனாமியின் தாக்கங்களை ஏற்படுத்த அவன் மார்பில் முகம் புதைத்தாள் திவ்யா... நிற்க முடியாமல் கால்கள் நடுங்குவது போல் இருக்க அவன் முதுகில் அவள் கரங்கள் இறுக்கமாய் படிந்தன...



    "திவ்யா.." காதோரம் அவனது ரகசிய குரல் .... அவன் முரட்டு மோவாய் அவள் தோள்பட்டையில் மெலிதாக உரச உணர்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமானது... அது காதலா, காமமா, தவமா எதுவுமே புரியாத நிலை... இரண்டு இதயங்களின் ஆர்ப்பரிப்பு அடங்கி உடலால் சங்கமிக்காமல் உணர்வுகளால் சங்கமித்த வேளை...


    எவ்வளவு நேரம் அப்படியே நின்று கொண்டு இருந்தார்களோ... மெல்ல தான் இருக்கும் இடம் நினைவு வர அவனிடம் இருந்து விலக முயன்றாள் திவ்யா... உடலின் உஷ்ணம் குறைய இருவருமே சற்று நேரம் விலகி அமைதியாக இருந்தார்கள்... அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் முதுகு காட்டி ஜன்னலோரம் நின்று கொண்டாள் திவ்யா... கைகளின் நடுக்கம் இன்னும் குறையவில்லை... ஜன்னலின் க்ரில் கம்பிகளை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் திவ்யா...


    ஸ்வரூபனும் தன்னை சுதாரித்துக் கொள்ள மிகவும் போராடிக் கொண்டு இருந்தான்... இரண்டு உள்ளங் கைகளையும் தன் கன்னத்தில் வைத்து அழுந்தத் தேய்த்துக் கொண்டான்... குளிர் ஜுரம் வந்தது போல இருந்தது... பொறு...பொறு... இன்னும் சில நாட்கள் தான்... அதற்கு பிறகு திவ்யா முழுக்க முழுக்க உனக்கே சொந்தம் ....


    தனக்குதானே சமாதானம் சொல்லிக் கொண்டு தன் ஷெல்பில் இருந்த ஆல்பங்களை எடுத்தான் ஸ்வரூபன்... ஏழெட்டு ஆல்பங்கள் தூக்க முடியாத கனத்தில்... "திவி... இங்க வா..." ஸ்வரூபனின் குரல் அவளை அழைக்க... கனவில் நடந்து வருபவள் போல நடந்து வந்தாள் திவ்யா...


    "இந்த ஆல்பம் எல்லாம் பாரு... என்னோட சின்ன வயசு போட்டோஸ்... பேமிலி டூர் போனது... வீட்ல நடந்த கெட் டு கெதேர்ஸ் எல்லாமே இருக்கு... சிட்..." அவள் தோளில் கை வைத்து தன் கட்டிலில் உட்கார வைத்தான் ஸ்வரூபன்... அவனுக்கும் அவள் அருகே உட்கார்ந்து பார்க்க வேண்டும் போல இருந்தது... இருவரும் நெருங்கி இருக்க இருக்க உள்ளத்தின் அமைதியை உடலின் ஆர்பாட்டம் ஜெயித்து விடுமோ என்று பயமாக இருந்தது ...


    "நீ பார்த்துகிட்டு இருடா... ஐ வில் கம் வித்தின் எ பியூ மினிட்ஸ்..." ஸ்வரூபன் விலகிச் செல்ல... அவன் ஏன் செல்கிறான் என்று அவளுக்கும் புரியாமல் இல்லை...



    ஒவ்வொரு ஆல்பமாக எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் திவ்யா... மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது... திருச்சியில் இருந்த போது நிறைய குடும்ப நண்பர்கள் கூட்டம் ... பாதி ஆல்பம் திருச்சி வாழ்க்கையைத் தான் பேசிக் கொண்டு இருந்தது... நிறைய புகைப்படங்கள் ஸ்வரூபன் தான் எடுத்திருப்பான் போல இருந்தது... அவனுடைய படங்கள் அதிகமாக இல்லை... அவன் கல்லூரி கால நண்பர்களுடன் இருந்த படங்கள் திவ்யாவுக்கு சிரிப்பை வரவழைத்தன... ஒல்லியாக நெடுநெடு வென்று இருந்தான்...


    ம்ம்... அவளுக்கும் ஞாபகம் திருச்சியில் அவனைப் பார்த்தது ஞாபகம் வந்தது... முதல் பார்வையிலேயே ஸ்வரூபனின் அசாத்திய உயரம் கண்ணில் பட அம்மாவைத் தேடி அவள் அவசரமாக வீட்டுக்குள் ஓடியதும் நினைவு வந்தது... அப்போதெல்லாம் இது போன்ற உணர்வுகள் ஏதும் கிளர்ந்தெழாத நேரம்...


    மனதின் சபதங்களை உடலின் சபலங்கள் உடைத்து எறிவதை நினைத்து சிரித்துக் கொண்டாள் திவ்யா... பொறு திவ்யா பொறு... இன்னும் சில நாட்கள் தான்... நீ மிசஸ்.திவ்யா ஸ்வரூபனாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை... அதுவரை உன்னைக் கட்டுப் படித்துக் கொள் .... ஒப்புக்கு சப்பாணியாய் ஒரு சமாதானம் தனக்கு தானே சொல்லிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் திவ்யா... கைகளை பின்னங் கழுத்தில் கோர்த்தபடி ஜன்னலருகே நின்றிருந்தான் ஸ்வரூபன்...



    "கீழ போலாமா.." திவ்யாவின் குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைக்க...


    "அதுக்குள்ளே ஆல்பம் எல்லாம் பார்த்தாச்சா..." வியப்பாய் கேட்டான் ஸ்வரூபன்...


    இல்லை என்று தலை ஆட்டினாள் திவ்யா... "இன்னொரு நாள் பார்க்கலாம்... எதுவுமே மனசுல பதிய மாட்டேங்குது..." எங்கோ பார்த்துக் கொண்டு அவள் மெல்லிய குரலில் பதில் சொல்ல... அவளுடைய நிலை ஸ்வரூபனுக்கும் புரிந்தது... மெல்ல அவள் அருகில் வந்தான்...


    "யூ ஆர் வெரி ஸ்ட்ராங் இன் சச் மேட்டர்ஸ்... நான் தான் ரொம்ப வீக்... கரெக்டா திவி..." அவள் மோவாயை நிமிர்த்தி விழியோடு விழி கலந்து அவன் கேட்க... வெட்கம் தாங்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் திவ்யா... அவள் படும் அவஸ்தையை கண்டு ரசித்துக் கொண்டிருந்தவன் அவளுடைய பின்னங் கழுத்தில் உதடு பதித்து "தலையெல்லாம் கலைஞ்சிருக்கு... டிரெஸ்ஸிங் டேபிள் பார்த்து சரி பண்ணிக்கிட்டு கீழ வா... நான் முதல்ல போறேன்..." ஸ்வரூபன் அவள் பின்னால் நின்றபடியே சொல்ல... திரும்பிப் பார்க்க முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள் திவ்யா..!!






     
  9. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Weeding-Quotes-Wallpaper-7.jpg

    திவ்யா கீழே இறங்கி வந்தபோது ஸ்வரூபன் மட்டும் தான் ஹாலில் இருந்தான் ... வேதநாயகம், சுந்தரம் இருவரும் ஐயரைப் பார்த்து நல்ல நாள் குறிப்பதற்காக சென்றிருக்க... வசுந்தரா, ஹேமா இருவரும் கிச்சனில் இருந்தனர் ... ஸ்வரூபன் திவ்யாவைப் பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்த செல்லமாக பழிப்பு காட்டிவிட்டு உள்ளே சென்றாள் திவ்யா...


    "வாம்மா... என்ன சாப்பிடறே... ஜூஸ் கூட குடிக்காம மாடிக்கு போயிட்டே..." ஹேமா அவளை அன்புட
    ன் விசாரிக்க....


    "எதுவும் வேண்டாம் அத்தே... நான் எதுவும் ஹெல்ப் பண்ணணுமா... " என்று திவ்யா கேட்டுக் கொண்டிருந்த போதே சுந்தரமும், வேதனாயகமும் வந்து சேர நாட்களை தள்ளிப் போடாமல் ஐப்பசி மாத வளர்பிறையிலேயே நிச்சயமும், முஹூர்தமும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகி இருந்தது...


    அனைவரின் முகங்களிலும் சந்தோஷப் புன்னகை பூக்க அன்று மதிய விருந்து அமர்களப்பட்டுக் கொண்டு இருந்தது... பையனைப் பெற்றுவிட்டோம்... மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என்ற பந்தா எதுவும் இல்லாமல் வேதநாயகம் சாதாரணமாக பழகிய விதமே சுந்தரத்தின் மனதில் தன் பெண் வாழப்போகும் இடத்தைப் பற்றிய நிறைவை
    ஏற்படுத்தி இருந்தது...


    தட்டு மாற்றுவதற்கான நிகழ்ச்சியை நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து அதற்கு அடுத்த நாளே சுந்தரத்தின் வீட்டில் வைத்துக் கொள்வதாக முடிவானது...


    ஸ்வரூபனின் மோதிர அளவும், திவ்யாவின் மோதிர அளவும் குறித்துக்கொள்ளப்பட மதிய உணவு முடிந்து சுந்தரம் தன் குடும்பத்தோடு விடை பெற்றார்..... திவ்யா தன் வருங்கால மாமனார், மாமியார் காலில் விழுந்து ஆசி பெற்றுவிட்டு கிளம்பினாள்... ஹேமலதாவிற்கு கண்களில் நீர் துளிர்த்தது... ஸ்வரூபனிடம் பார்வையாலேயே விடைபெற்றாள் திவ்யா...!!


     
    Rajijb and hisandhiya like this.
  10. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-43

    வசுந்தரா தன் அண்ணனையும், அண்ணியையும் நேரில் சென்று அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க... போனில் அழைத்தால் போதும் என்று ஒரே முடிவாக சொல்லிவிட்டார் சுந்தரம்... விஷயம் தெரிந்து அன்று மாலையே தாட்சாயனி வீடு தேடி வந்து திவ்யாவை சபித்து விட்டு சென்றாள்...


    "உனக்கு உன் காதல் பெருசுன்னா என் பையன் உன் மேல வெச்சிருந்ததும் அதே காதல் தானடி... அவனுக்கு மட்டும் மனசு வலிக்காதா... என்னைக்காவது ஒரு நாள் உன் மனசு மாறும்ன்னு காத்திருந்தானே ... கிறுக்குப் பய ... இப்படி திடுதிப்புன்னு நிச்சயம் பண்ற அளவுக்கு வந்து நிக்கறீங்க...


    நீ மட்டும் இல்லடி... உன் அம்மாவும் கைகாரிதான்... நீ காதலிக்கற விஷயத்த இவ்ளோ நாள் அமுக்கமா மூடி மறைச்சிருக்கா இல்ல... சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு போ... எவ்ளோ நாள் நிம்மதியா இருக்கப் போறேன்னு நானும் பார்க்கறேன்... என் வயித்தெரிச்சல் உன்ன சும்மா விட்டுடுமா... " தாட்சாயனி பொங்கித் தீர்க்க... எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் ராஜதுரை... வசீகரன் அங்கு வரவே மறுத்துவிட்டான்...


    "அண்ணி வாய்க்கு வந்தது எல்லாம் பேசிகிட்டு இருக்காங்க... பார்த்துகிட்டு சும்மா நிக்கறீங்களே அண்ணே... "வசுந்தரா தன் அண்ணனை உதவிக்கு அழைக்க


    "அவ பேசறுதுல என்ன தப்பு... சின்ன வயசுல இருந்து வசீக்கு திவ்யாதான்னு
    வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டு இப்போ திடீர்னு மாத்தி பேசுனா? .... நாங்க ஏதாவது அந்த மாதிரி பேச ஆரம்பிச்சோமா... நீயாதான் சின்ன வயசுல இருந்து வசீ வசீ ன்னு அவன கொஞ்சி கொஞ்சி வளர்த்தே... நீயாதான் என் பொண்ணு உனக்கு தாண்டான்னு பேச ஆரம்பிச்சே...... அவனும் உன் பேச்ச நிஜம் ன்னு நம்பி அப்படி ஒரு எண்ணத்த வளர்த்துகிட்டான்...


    எங்க பையனோட மனசையும் நாங்க பார்க்கணும் இல்ல... விஷயம் தெரிஞ்சதுல இருந்து இன்னும் ஒரு வாய் தண்ணி கூட அவன் வாய்ல இறங்கல... ஏம்மா திவ்யா... உனக்கும் அந்த கார்த்திகேயனுக்கும் நாலு வருஷமா லவ் இருந்ததாம்... வசுந்தரா போன் ல சொல்றா... அத முதல்லையே என் பையன் கிட்ட சொல்லி இருக்கலாமே... அவனாவது ஒழுங்கா இருந்திருப்பான் இல்ல..." ராஜதுரை சொல்ல...


    வசுந்தராவை எரித்து விடுவது போல பார்த்தாள் திவ்யா... சுந்தரத்திற்கும் அடச்சீ என்று இருந்தது...


    இனி இவர்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று தன் அறைக்கு சென்று விட்டாள் திவ்யா... வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே சாபத்தோடா ஆரம்பிக்க வேண்டும் என்று சலிப்பாக இருந்தது.... ச்வரூபனுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னாள் திவ்யா... எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்
    ...!!

     
    Rajijb and hisandhiya like this.

Share This Page