1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பாக

Discussion in 'Stories in Regional Languages' started by Coolsea, Oct 19, 2012.

  1. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நான் இங்கு புதிய உறுப்பினர். இதற்கு முன் சில குறு நாவல்கள் வேறு தளத்தில் எழுதி இருக்கிறேன். என்னுடைய முதல் கதைப் பதிவாக "என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? " நம் இண்டசில் பதிவு செய்கிறேன்.


    என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? தொடர் கதை - பாகம்-1



    சில நாட்களாகவே இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது. தினமும் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது அவள் ஸ்கூட்டியை ஒரு போர்ட் கார் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் திவ்யா அதை சாதாரண விஷயமாகத்தான் நினைத்தாள். ஆனால் தன்னைத் தான் அந்த வண்டி தொடர்கிறது என்பதை இந்த இரண்டு மூன்று நாட்களில் அவள் நன்கு அறிந்திருந்தாள். திவி இதற்கெல்லாம் பயப்படும் ரகம் இல்லை.


    ஆனால் தன்னைத் தொடர்வது யாராய் இருக்கும் என்ற மண்டைக் குடைச்சல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருந்தது. அவள் வீடு இருக்கும் தெரு முக்கு வரை வந்துவிட்டு அந்த போர்ட் அப்படியே நேராக சென்றுவிடும்... வில்லனோ, ஹீரோவோ யாராக இருந்தாலும் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்... ஏற்றப்பட்ட கறுப்புக் கண்ணாடியை தவிர வேறு ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறதே .. ஹூம்... சரி விடு திவி... சம்பளம் இல்லாமல் உனக்கு ஒரு செக்யூரிட்டி கார்ட்... தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள் திவ்யா..!!



    "சிநேகம்" என்று கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்ட தங்க நிற எழுத்துக்கள். அழகான சிறிய பங்களா... வசுந்தரா வாசலிலேயே காத்துக் கொண்டிருக்க... "மம்மி செல்லம்.. எனக்காக வாசலையே பார்த்துகிட்டு இருக்கியா..." என்றபடி உள்ளே நுழைந்தாள் திவி...



    வசுந்தரா-சுந்தரம் தம்பதிகளின் ஒரே செல்ல புத்ரி. வசுந்தரா இல்லத்து அரசி. சுந்தரம் ஒரு புகழ் பெற்ற வாரப் பத்திரிகையில் சப் எடிட்டராக இருந்தார். வீட்டில் திவி வைத்தது தான் சட்டம்... சாப்ட்வேர் டிசைனராக உள்ளூரிலேயே ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் வேலை... ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு துள்ளல் நடையோடு உள்ளே சென்றவளை பின் தொடர்ந்தாள் வசுந்தரா...


    முகம் அலம்பி கைகால் கழுவி வேறு உடைக்கு மாறி... "அம்மா... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்... வயிறு கா கா ன்னு கத்துது... " என்றபடியே திவ்யா தன் அறையில் இருந்து வெளியே வர டைனிங் டேபிள் மீது காலிபிளவர் குருமாவும், மெத்து மெத்தென்ற சப்பாத்திகளும் தயாராக இருந்தன. ஹூம்ம் என்று குருமா வாசனையை மோப்பம் பிடித்தபடி திவ்யா அமர மகள் சாப்பிடுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள் வசுந்தரா.



    என்ன வசு... இன்னைக்கு ரொம்ப சைலன்டா இருக்கே... வீட்ல ஏதும் பிரச்சனையா... திவி தன் தாயை செல்லமாக வம்பிழுக்க... அவளை அடிப்பது போல் பாவனை செய்தாள் வசுந்தரா..!!



    "இன்னைக்கு வசீகரன் வந்திருந்தான்..." என்று வசுந்தரா சொல்லி முடிக்க திவ்யாவின் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போனது.



    "எத்தன முறை சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு உறைக்க மாட்டேங்குது..." கடுப்பாக முணுமுணுத்துவிட்டு கைகழுவ எழுந்து போனாள் திவ்யா..



    "சரியா சாப்பிட்டு போ திவி... அரைகுறையா முடிச்சிருக்கே "..வசுந்தரா பதட்டமாக சொல்ல...



    "அவன் பேரக் கேட்டாலே எனக்கு மூட் அவுட் ஆகும் ன்னு தெரியும் இல்ல... அப்புறம் எதுக்கு அந்த வசீகரன பத்தி பேசிகிட்டு... நீயே சந்தோஷமா சாப்பிடு போ..." அவசரமாக தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள் திவ்யா... மனம் தீக்கங்குகளாய் புகைந்து கொண்டு இருந்தது.


    ********************************************************************



    Episode-2


    திவ்யாவின் தாய்மாமன் மகன்தான் வசீகரன்... தாய்மாமனுக்கு உள்ளூரிலேயே பெரிய அளவில் டிம்பர் வியாபாரம்.... வசீகரன் அவருக்கு ஒரே மகன்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஒரு பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான்.. படிப்பிலோ , அழகிலோ, அந்தஸ்திலோ எந்த குறையும் சொல்வதற்கே இல்லை... வசீகரன் குணம் மட்டும் அவ்வப்போது கேள்விக்குறியாக வளைந்து விடும்?


    அவனுடைய சிகரெட் பழக்கத்தை கூட ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம்... ஆனால் குடி... அது திவ்யாவால் சகிக்கவே முடியாத ஒரு கெட்ட விஷயம் ... வாரம் தவறாமல் நண்பர்களோடு சேர்ந்து ஏற்றிக் கொண்டால் மட்டுமே ஜென்ம சாபல்யம் என்று நினைக்கும் அளவுக்கு போதையைத் தேடுபவன் வசீகரன்.. அந்த ஒரு காரணத்திற்காகவே திவ்யா அவனை வெறுக்க... அவனோ திருமணத்திற்கு பின் எல்லாவற்றையும் விட்டுவிடுவதாக சத்தியம் செய்கிறான்... இதை எல்லாம் யார் நம்புவது என்று திவ்யா அவனை வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்... அவள் எத்தனை முறை வெறுத்து ஒதுக்கினாலும் மீண்டும் மீண்டும் வீடு தேடி வந்து அப்பா, அம்மா மனதை பேசிப் பேசியே கரைக்கிறானே என்று திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது... எண்ண ஓட்டங்களில் மூழ்கி இருந்தவளை வசுந்தராவின் குரல் கலைத்தது....


    திவ்யா... கோவிலுக்கு போயிட்டு வரலாம் வர்றியா... வசுந்தரா அறைக் கதவை தட்ட...


    பத்து நிமிஷத்துல ரெடியாகி வந்திடறேன்... அறைக்கதவை திறக்காமலேயே பதில் சொன்னாள் திவ்யா...


    அன்று ஏகாதசி என்பதால் பெருமாள் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு திவ்யா டோக்கன் வாங்கிக் கொண்டிருக்க அப்போதுதான் அந்த போர்ட் கார் கண்ணில் பட்டது... தேவி தரிசனத்திற்காக தினமும் அவளை பின்தொடர்ந்து வரும் அதே போர்ட் வண்டி.. ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி அதில் இருந்து இறங்க... இறக்கி விட்ட வேகத்தில் வண்டி வேகமெடுத்துச் சென்றது....


    திவ்யா... என்ன வேடிக்க பார்த்து கிட்டு இருக்கே... கை நிறைய துளசியும் , இரண்டு தாமரை மொட்டும் வாங்கிக் கொண்டு வசுந்தரா நின்று கொண்டு இருக்க....


    ஹாங்... ஒண்ணும் இல்லம்மா... யாரோ தெரிஞ்சவங்க வண்டி மாதிரி இருந்தது... அதுதான் பாத்துகிட்டு இருந்தேன்... சமாளித்தாள் திவ்யா....


    வசுந்தரா... புதிய குரல் கேட்டு தாயும், மகளும் திரும்பிப் பார்க்க... போர்ட் காரில் இருந்து இறங்கிய அந்த பெண்மணி தான்...


    ஹேமாக்கா... நீங்க எப்படி இங்க... திருச்சில இல்ல இருந்தீங்க... எப்போ சென்னை வந்தீங்க... வசுந்தரா மகிழ்ச்சியுடன் அவளை விசாரித்துக் கொண்டு இருக்க... திவ்யா குழப்பமாக பார்த்துக் கொண்டு நின்றாள்....


    அவருக்கு இங்க ட்ரான்ஸ்பர் ஆகி ரெண்டு மாசம் ஆகுது வசுந்தரா... திருச்சில உன் உறவுக்காரங்க கிட்ட விவரம் சொல்லி இருந்தேனே... உனக்கு தகவல் சொல்லலையா...ஹூம் ... நீதான் திருச்சி பக்கம் வந்தே நாலு வருஷம் ஆச்சே...... இது உன் பொண்ணு திவ்யா தானே..... வரிசையாக பேசிக் கொண்டே போனாள் ஹேமலதா...


    என் பொண்ணு தான் ஹேமாக்கா... நாங்க இப்போ திருச்சி பக்கம் வர்றதில்ல ஹேமாக்கா... ஒரு விஷயத்துல அவங்களுக்கும் என் வீட்டுக்காரருக்கும் வாய்த் தகராறு ஆகிப் போச்சு.... திவ்யா... இவங்கள ஞாபகம் இருக்கா... திருச்சில அத்தை வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்காங்க.. நாலு வருஷம் முன்னாடி அங்க ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தப்போ நீ கூட அவங்க வீட்டு கார்டன் ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னியே... வசுந்தரா அவளுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருக்க....


    ஒ.. ஆமாம்மா... இப்போ ஞாபகம் வருது... சாரி ஆன்ட்டி... நான் ஒரே ஒரு தடவ தான் உங்கள பாத்தது .... திடீர்னு இங்க பாக்கறப்போ டக்குன்னு ஞாபகம் வரல... ரியலி சாரி ஆன்ட்டி... திவ்யா ஹேமலதாவை அடையாளம் தெரிந்து கொண்ட தினுசில் பேசி முடிக்க .... வசுந்தரா, ஹேமா , திவ்யா மூவரும் கோவில் பிரகாரத்தை சுற்றி வரத் தொடங்கினர்....


    திவ்யாவின் நினைவுகளோ ஸ்வரூபனை சுற்றி வரத் தொடங்கியது... ஒரே ஒரு முறை அவனைப் பார்த்திருக்கிறாள்... நான்கு வருடம் முன்பு திருச்சியில் திருமணத்திற்கு போன போது ஹேமலதாவின் வற்புறுத்தல் தாங்காமல் வசுந்தரா திவ்யாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்ல அந்த பங்களா முகப்பை அலங்கரித்த பிரம்மாண்டமான மலர் தோட்டத்தை விழி விரிய பார்த்தபடி உள்ளே சென்றாள் திவ்யா... சும்மாவே மலர்கள் என்றால் கொள்ளை பிரியம்... இதில் வண்ண வண்ண மலர்கள் அணிவகுத்து நிற்க... வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் திவ்யா.. வசுந்தரா ஹேமாவுடன் பேசிக் கொண்டே உள்ளே சென்றுவிட ....


    வசுந்தரா அழைத்ததைக் கூட கவனிக்காமல் தோட்டத்தை ரசிப்பதிலேயே மூழ்கி இருந்த திவ்யா திடீரென்று டாமியின் குறைக்கும் சத்தம் வெகு அருகில் கேட்க அரண்டு போய் பார்த்தாள் ....


    "ஹே.. டாமி... கம் ஹியர்... அவங்க நம்ம கெஸ்ட்.." தன் பொமரேனியனை அழைத்தபடி வந்து கொண்டு இருந்தான் ஹேமலதாவின் ஒரே மகன் ஸ்வரூபன்.... இருவரின் பார்வையும் சந்தித்தது ஒரே ஒரு நிமிடம் தான்.... அம்மாவைத் தேடி உள்ளே விரைந்தாள் திவ்யா...


    "திவ்யா... நான் கூப்பிட்டு கிட்டே இருக்கேன் எண்ண யோசனைல இருக்கே..." வசுந்தராவின் குரல் பழைய நினைவுகளை கலைக்க...


    அப்படியானால் அந்த போர்டில் தினமும் தன்னைத் தொடர்ந்து வருவது ஸ்வரூபனா?! கேள்விக்கு விடை தெரியாமல் நின்றாள் திவ்யா.
     
    Last edited: Oct 19, 2012
    8 people like this.
    Loading...

  2. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Last edited: Oct 19, 2012
    1 person likes this.
  3. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    2 people like this.
  4. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-3

    மூலவருக்கு அர்ச்சனை செய்து மற்ற சந்நிதி தெய்வங்களை வணங்கி வெளியே வந்த போது ஒரு மணி நேரம் கடந்து இருந்தது... அதற்குள் ஹேமலதாவும், வசுந்தராவும் போன கதை, வந்த கதை எல்லாம் பேசி முடித்திருக்க .... இருவரும் தங்கள் முகவரிகளையும், செல்போன் எண்களையும் பகிர்ந்து கொண்டு இருந்தனர்... திருச்சி பழக்கம் சென்னையிலும் தொடரப் போகிறதா அல்லது வாழ்க்கை வேறு விதத்தில் வட்டமிடப் போகிறதா என்பது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்...!!


    வண்டி டோக்கனை கொடுத்து விட்டு திவ்யா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுப்பதற்கும் அந்த போர்ட் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.... ஸ்வரூபன் தானா என்று பார்த்து விடும் ஆவலில் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள் திவ்யா... காரில் இருந்து டிரைவர் இறங்க சப்பென்று ஆகிப் போனது...


    சின்னையா எங்கப்பா... நீ வந்திருக்கே... என்று டிரைவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் ஹேமலதா...


    தம்பியும், பெரிய ஐயாவும் அவசரமா ஏர்போர்ட் வரைக்கும் போயிருக்காங்க அம்மா... வேற வண்டி எடுத்துகிட்டு போயிருக்காங்க... உங்கள அழைச்சுகிட்டு வர சொல்லி சின்னையா தான் எங்கிட்ட சொல்லிட்டு போனாரும்மா... டிரைவர் பணிவாக சொல்லிக் கொண்டு இருக்க...


    பாரு வசுந்தரா... என்ன கூட்டிட்டு போக ஸ்வரூபன் வருவான்... அப்படியே நீயும் அவன பாத்தா மாதிரி இருக்கும்... ரொம்ப வருஷமாச்சே ன்னு நினைச்சேன்... கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு சுத்தறான்...திருச்சில கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி ஒண்ணு நடத்தறான்... இங்க வந்த பிறகு இங்கயும் ஒரு ப்ரான்ச் ஆரம்பிச்சிருக்கான்... எப்போ பாரு வேல..வேல... ஹூம்.. அவனுக்கும் காலாகாலத்துல ஒரு கால் கட்டு போடணும்... பெருமாள் என்ன நினைச்சிருக்காரோ... வரேன்மா திவ்யா... போயிட்டு வரேன் வசு... ரெண்டு பேரும் அவசியம் வீட்டுக்கு வரணும் பா... ராஜூ... வண்டி எடுங்க... என்று ஹேமலதா உள்ளே ஏறி அமர... திவ்யாவும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்....


    வீட்டுக்கு வந்ததும் கைகால் அலம்பிய பின் ஹாயாக டிவியை ஆன் செய்தாள் திவ்யா... அதற்குள் சுந்தரத்தின் கார் வாசலில் ஹாரன் அடிக்க... துள்ளலோடு ஓடினாள் திவ்யா... சின்ன வயதில் ஆரம்பித்த பழக்கம்.... ஹை... அப்பா வந்தாச்சு என்று குதித்துக் கொண்டே ஓடியது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது....


    பாத்து போடி... இன்னும் சின்ன பாப்பான்னு நினைப்பு... வசுந்தரா சத்தமாக சொல்லிக் கொண்டிருக்க....


    அவ எப்பவுமே எனக்கு சின்ன குழந்தை தாண்டி... நீ இங்க இருக்கற வரைக்கும் இப்படியே இருடா செல்லம்... என்று சொல்லிக் கொண்டே சுந்தரம் உள்ளே நுழைந்தார்...


    இங்க இருக்கற வரைக்குமா... வேற எங்கயாவது போகப் போறேனா என்ன... திவ்யா தன் கண்களை அகல விரித்து கேட்க....


    ம்ம்... ஒரு NRI மாப்பிளையோட ஜாதகம் வந்திருக்குடா... ரொம்ப நல்ல இடம்... பொருந்தி வந்தா உன்ன அவரோட ப்ளைட் ஏத்திற வேண்டியது தான்.. சிரித்துக் கொண்டே சுந்தரம் சொல்ல...


    உங்களுக்கும், அம்மாவுக்கும் வேற வேலைதான் என்ன... எப்போ பாரு கல்யாணம் பத்தியே பேசிகிட்டு... போங்கப்பா... அலட்சியமாக சொல்லிவிட்டு திவ்யா டைனிங் டேபிளில் அமர... இரவு உணவு மட்டும் மூவரும் சேர்ந்து தான் உண்பது என்பது அந்த வீட்டின் எழுதப் படாத சட்டமாக இருந்தது...!!

    ********************************************************************

    Episode-4

    மறுநாள் காலை அலுவலக நேரம்... எப்போதும் போல் திவ்யா தன் பணியில் ஈடுபட்டிருக்க...


    திவி...இன்னைக்கு ஒரு புது ப்ராஜக்ட் உன் டேபிள் க்கு வந்திருக்குப்பா... ஹெட் உன்ன வந்து பாக்க சொன்னாரு பா... போகிற போக்கில் உடன் பணி செய்யும் சந்தியா ஊதுகிற சங்கை ஊதிவிட்டு போக... அடுத்த சில நிமிடங்களில் திவ்யா தன் ப்ராஜக்ட் குழு தலைவியான ரீமாவின் அறையில் இருந்தாள்... நாற்பது வயதை தாண்டியவள் ரீமா... ஹெட் என்ற பந்தா எல்லாம் எதுவும் கிடையாமல் சக தோழி போல பழகுவாள்... பிறந்த இடம் கொல்கொத்தா என்றாலும் பல வருடம் சென்னையிலேயே தன் கணவருடன் தங்கி விட்டதால் தமிழ் தடங்கல் இன்றி பேச வரும்...தமிழில் எழுதும் போது மட்டும் எதற்கு எந்த "ல" எந்த "ர" என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருப்பாள்..


    திவ்யா... இது ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கேட்டிருக்கற டிசைனிங்... பார்ட்டி புதுசு... நாம செஞ்சு தர்ற டிசைனிங் பெஸ்ட் இம்ப்ரஷன் க்ரியேட் பண்ணணும்... உன்னால ஹேண்டில் பண்ண முடியுமா... இல்ல வேற டேபிள் கு அனுப்பட்டுமா... இன்னைக்கு ஈவினிங்குள்ள உன்னோட பதில சொன்னா போதும்... ஹெல்ப்புக்கு சுசிதாவையும், சந்த்யாவையும் சேர்த்துக்கலாம்... இந்த ப்ராஜக்ட் பத்தி வேற எந்த டீடெயில்ஸ் வேணும்னாலும் அந்த கம்பெனி ஹெட்டையே கான்டாக்ட் பண்ண சொல்லி சொல்லி இருக்காங்க... மெயில் ஐடீஸ் , செல் நம்பர்ஸ் எல்லாம் அதுலயே இருக்கு... ஜஸ்ட் கோ த்ரூ தி பைல்.... ரீமா சொல்லி முடிக்க பைலை எடுத்துக் கொண்டு தன் டேபிளுக்கு வந்தாள் திவ்யா...


    "எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்"... பைலில் இருந்த பெயர் தெரிவிக்க... மற்ற விவரங்களை படித்துப் பார்த்தாள்... பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது... தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் திவ்யா...


    என்னப்பா... மண்டை பிச்சிங் ப்ராஜக்டா.. நல்ல கஷ்டமான வொர்க் எல்லாம் உன் தலைலயே வந்து விழுது பாரு... பேசாம வேற யார்கிட்டயாவது விடும்மா... சுசிதா சொல்லிக் கொண்டு இருக்க...


    போப்பா... சேலஞ்சிங் ஆ எடுத்து பண்ணாதான் நல்லா இருக்கும்... ஒப்புக்கு சப்பாணியா பண்றதுல என்ன த்ரில் இருக்கு... திவ்யா எப்போதும் போல கடமையே கடவுள் என்ற ரீதியில் பேச....


    உன்ன திருத்தவே முடியாது .... என்ன கூட்டு சேர்க்காத... வேற யார வேணா புடி... நான் ஒரு வாரம் லீவ்ல போலாம் ன்னு இருக்கேன்... இனிமே தான் ரீம்ஸ் கிட்ட பர்மிஷன் கேக்கணும் என்று எஸ் ஆனாள் சுசிதா....


    திவ்யா எதையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடும் ரகம் இல்லை... முடியாது என்று மற்றவர்கள் நினைப்பதை முடித்துக் காட்டுவேன் என்று பந்தயம் கட்டும் ரகம்... மேற்கொண்டு சில தகவல்களும், விளக்கங்களும் தேவை என்று எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் க்கு மெயில் அனுப்பினாள்... அன்று மதியம் மூன்று மணி அளவில் நேரில் வரமுடியுமா என்று கேட்டு பதில் வந்தது... சில விளக்கங்களை மின்முகவரியில் தருவது விட நேரில் விளக்கப் படக் குறிப்புகளுடன் தருவது பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது....


    அதுவும் சரிதான் என்று திவ்யாவுக்கு தோன்ற எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலக முகவரியை குறித்துக் கொண்டாள் திவ்யா ... ரீமாவிடம் தான் அந்த ப்ராஜக்டை ஏற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டு அன்று மதியம் நேரில் சென்று பார்ப்பதற்கும் ஒப்புதல் வாங்கிக் கொண்டாள் .... சுசிதாவுக்கு பதிலாக ஜெயந்த் அந்த வேலையை பகிர்ந்து கொள்வது என்று முடிவாக.... மீண்டும் ஒருமுறை அந்த ப்ராஜக்ட் குறிப்புகளை ஆழ்ந்து படித்தாள் திவ்யா... புரியாத விஷயங்களை தனியாக ஒரு டைரியில் குறித்துக் கொண்டு நிமிர்ந்த போது மதிய உணவிற்கான நேரம் என்று வயிறு காலிங் பெல் அடிக்க தன் மினி ஹாட் பேக்கை எடுத்துக் கொண்டு சக தோழிகளைத் தேடி வந்தாள் திவ்யா...


    வாங்க திவி மேடம்... நாங்க எல்லாம் பாதி சாப்பாடு காலி பண்ணியாச்சு... ஆடி அசைஞ்சு வர்றீங்க... சந்தியா கேலி செய்ய...


    ஏய்... அவ வொர்க் ஆல்கஹாலிக் ன்னு உனக்கு தெரியாதாப்பா... இன்னைக்கு நேத்தா இப்படி பண்றா... அவ குணமே அதுதான்... ம்ம்... ஸ்கூல் பெல் அடிக்கறதுக்குள்ள சாப்பிட்டு முடி திவி என்று சுசிதா கேலி செய்ய கலீரென்ற சிரிப்பு அறை முழுவதும் எதிரொலித்தது....!!

    ******************************************************************

    Episode-5

    மதியம் மூன்று மணி... திடீரென்று வேறு ஒரு அவசர வேலையை ரீமா திவ்யாவிடம் ஒப்படைத்து இருந்ததால் எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன் செல்லும் பணியை ஜெயந்த் மேற்கொண்டு இருந்தான்... திவ்யா குறித்து கொடுத்த குறிப்புகளுக்கும் சேர்த்து அவன் விளக்கங்கள் கேட்டுக் கொண்டு, மற்ற சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டு ஜெயந்த் திரும்பி வந்தபோது மணி ஐந்துக்கு மேல் ஆகி இருந்தது....


    ஷ்... அப்பா......என்றபடி ஜெயந்த் திவ்யாவுக்கு எதிரே நாற்காலியில் அமர...


    என்ன ஜெயந்த்... ரொம்ப டயர்ட் ஆயிட்டிங்களா... திவ்யா கேட்க...


    இப்படி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லம்மா... ஒரு கேள்வி கேட்டா ஒரு மணி நேரம் க்ளாஸ் எடுக்கறான்... பேசாம நீயே போயிருக்கலாம் திவி.... உன்னோட வொர்க் சின்சியாரிட்டிக்கும் அந்த ஆளோட லெக்சர்க்கும் சரியா இருந்திருக்கும்... ரெண்டு மணி நேரம் காலேஜ் ல உக்காந்து கன்ஸ்ட்ரக்ஷன் தியரி படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு... தலையை சிலுப்பிக் கொண்டான் ஜெயந்த்... களுக்கென்று சிரித்தாள் திவ்யா... ஆனா ஒண்ணு.... ஆள் சினிமா ஹீரோ மாதிரி இருக்கான்... இந்த தொழில விட்டுட்டு சினிமா சான்ஸ் ட்ரை பண்ணான்னா கண்டிப்பா ஒரு ரவுண்ட் வருவான்... ஜெயந்த் சொல்லிக் கொண்டிருக்க...


    அப்படி யாருப்பா அந்த ஆணழகன்... நீயே ஆஹா ஓஹோன்னு பேசறேன்னா நிச்சயம் ஹீரோவா தான் இருப்பான் என்றபடி சுசிதா வந்து சேர....


    இந்த மேட்டர் எல்லாம் கரெக்டா உன் காதுல விழுந்துடுமே... சம்மனே இல்லாம ஆஜர் ஆகறத பாரு... ஹீரோ பேரு ஸ்வரூபன் .... எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர்... ஹெட் ஆபீஸ் திருச்சில.... ப்ரான்ச் இப்போதான் சென்னைல போட்டிருக்காங்க... அட்ரஸ் தரேன் நோட் பண்ணிக்கோ... இந்த டீடைல்ஸ் போதுமா... இன்னும் ஏதாவது வேணுமா... ஜெயந்த் சுசிதாவை கிண்டல் செய்து கொண்டிருந்தான்... ஜெயந்தும் , சுசிதாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்... கேலியும், கிண்டலும் அவர்களுக்கு இடையே வெகு சகஜமாக இருக்கும்....


    சரி ஜெயந்த்... நீங்க ரீமா மேடம் கிட்ட டீடெயில்ஸ் சொல்லிடுங்க... நான் வீட்டுக்கு கிளம்பறேன்... என்றபடி திவ்யா புறப்பட.... மனம் மீண்டும் ஸ்வரூபனை நினைக்கத் தொடங்கியது....


    பைலில் எந்த இடத்திலும் ஸ்வரூபன் என்ற பெயர் கண்ணில் படவில்லையே... கார்த்திகேயன் என்றுதானே கையெழுத்து இருந்தது... கம்பெனியின் ஓனர் ஸ்வரூபன் என்று ஜெயந்த் திட்டவட்டமாக சொல்கிறான் ... ஸ்வரூபன் கம்பெனி என்று தெரிந்திருந்தால் தானே நேரில் சென்று இருக்கலாம்... தன் மனம் போன போக்கை நினைத்து திவ்யாவுக்கு சிரிப்பாக இருந்தது... இன்று அந்த போர்ட் கார் தன் கண்ணில் படுகிறதா என்று வரும் வழி முழுவதும் பார்வையால் தேடினாள் திவ்யா ...ம்ஹூம் .... வீடு வந்து சேரும் வரை கண்ணில் படவில்லை...திவ்யாவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஆகக் கூட இருந்தது... எதற்காக ஸ்வரூபனைத் தேடுகிறாய் திவ்யா..? ஏன் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்...? மனம் அதட்டலாய் கேட்க... விடை தெரியாத கேள்விகளோடு வீடு வந்து சேர்ந்தாள் திவ்யா..!!

     
    Last edited: Oct 20, 2012
    4 people like this.
  5. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா

    Episode-6


    வசுந்தரா யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருக்க... போன்ல யாரு என்பது போல் சைகை காட்டிவிட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள் திவ்யா..


    இரு சொல்றேன் என்பது போல வசுந்தராவும் பதில் சைகை காட்டிவிட்டு தன் பேச்சினைத் தொடர... செல்லமாக பழிப்பு காட்டிவிட்டு உள்ளே போனாள் திவி...


    டைனிங் டேபிளில் இருந்த ஹாட்பேக் சிற்றுண்டி ரெடி என்பதை உணர்த்த அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்தாள் திவி... ஆபீசில் இருந்து வந்ததும் நொறுக்கு தீனியெல்லாம் அவளுக்கு ஆவதில்லை... நான்கு வேளையும் அம்மாவின் கைமணம் வேண்டும்... ஆவி பறக்க காஞ்சிவரம் இட்லி தயாராக இருக்க அதற்கு தொட்டுக் கொள்ள இரண்டு வகை சட்னி... உலகத்தையே மறந்து உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள் திவ்யா...


    வந்து பரிமாறுவேன் இல்ல... அதுக்குள்ள என்னடி அவசரம்... வசுந்தரா கேட்டுக் கொண்டே அருகில் வர...


    உனக்கு தான் செல்போனே உலகம் ன்னு ஆயிடுச்சே... நீ வர்ற வரைக்கும் நான் காத்திருந்தா எனக்கும் வயசாயிடும்... உன்னோட இட்லிக்கும் வயசாயிடும்... ம்ம்... இன்னும் ரெண்டு வை... திவி சொல்லிக் கொண்டிருக்க...


    உன்னோட முதுகுல ரெண்டு வெக்கறேன்.... ஹேமா கிட்ட தாண்டி பேசிகிட்டு இருந்தேன்... நவராத்திரி க்கு கொலு வெச்சிருக்கேன்... பாக்க வான்னு கூப்பிடறா... காலைல இருந்து மூணு போன் ஆயிடுச்சு ... போகலேன்னா நல்லாவா இருக்கும்... அதுதான் பேசிகிட்டு இருந்தேன்... என்றபடியே அவள் தட்டில் இன்னும் இரண்டு இட்லி வைத்தவள்... நீயும் வாயேன் திவ்யா... எந்நேரமும் ஆபீஸ் வீடுன்னு தான இருக்கே... இந்த மாதிரி எல்லாம் நாலு இடத்துக்கு போனா வந்தாதானே ஜனங்க பழக்கமாவாங்க... வசுந்தரா கேட்டுக் கொண்டிருக்க...


    வேறு எந்த இடமாக இருந்தாலும் திவ்யா நிர்தாட்ஷன்யமாக மறுத்து இருப்பாள்... ஆனால் ஸ்வரூபன் வீடு... அவனை பார்க்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது திவ்யாவுக்கே நன்றாக தெரிந்தது... நான்கு வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக பார்த்த ஒருவனை ஏன் மனம் தேடுகிறது என்று அவளுக்கும் புரியவில்லை... கேட்டவுடனே வருகிறேன் என்று மகள் தலை ஆட்டவும் வசுந்தராவுக்கே ஆச்சரியமாகிப் போனது...


    ஹேமலதாவின் வீட்டு முகவரி கேட்டவள் "ரொம்ப தூரம்மா... கால் டாக்சி ல போயிடலாம்" என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்க...


    "கொலுவுக்காக போறோம்... புடவை கட்டிக்கிட்டு தலைல கொஞ்சம் பூ வெச்சிகிட்டு வாடி... " என்று வசுந்தரா கெஞ்சிக் கொண்டு இருக்க...


    "பூ மட்டும் வேணா வெச்சிக்கறேன்... எப்பவும் போல சல்வார் தான்...திடீர்னு புடவை கட்டிக்கிட்டு தடுக்கி விழ என்னால முடியாது.." திவ்யா பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்..


    அழகிய மயில் வண்ண சல்வாரில் மிதமான அலங்காரத்துடன் கிளம்பிய மகளை திருஷ்டி கழித்தாள் வசுந்தரா... "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு " என்று வசுந்தரா சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் செல்போனிலேயே கால் டாக்சியை அழைத்திருந்தாள் திவ்யா!!

    ******************************************************************

    Episode-7


    திருச்சி வீட்டை போல பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் இதுவும் வசதியான ஆட்கள் வாழும் பகுதிதான்... ஒவ்வொரு வீடும் ஒவ்வெரு தினுசாக பணத்தை வாரி இறைத்து கட்டப் பட்டிருக்க... "எஸ்கே" என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த பங்களாவின் முன் கால்டாக்சி நின்றது... கேட் அகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்க... கொலுவுக்காக வந்தவர்கள் அப்போதுதான் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து கொண்டு இருந்தனர்... நிறைய பேரை அழைத்திருந்தார்கள் போல இருக்கிறது... வெறும் கையேடு போகக்கூடாது என்ற சம்பிரதாயத்துக்காக ஆப்பிள், ஆரஞ்சு, சாத்திக்குடி என்று பழவகைகளும், மல்லிகை சரமும் வாங்கி இருந்தாள் வசுந்தரா...


    "வா.. வசு... வாம்மா திவ்யா... "வாய் நிறைய வரவேற்றாள் ஹேமலதா....


    பிரம்மாண்டமான ஹால்... அங்கே பிரதான இடத்தில் கொலு வைக்கப்பட்டிருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தது... விலை உயர்ந்த சோபா செட்டுகள் ஒரு புறம் போடப்பட்டிருக்க கொலு பார்க்க வருபவர்கள் அமர்வதற்கு ஜமுக்காளம் விரிக்கப்பட்டு இருந்தது .... கொலுப்பாட்டு, ஹாரதி , சுண்டல் விநியோகம் என்று நேரம் கழிந்ததே தவிர... ஸ்வரூபன் கண்ணில் படுவதாகவே இல்லை... திவ்யாவுக்கு ஏன் வந்தோம் என்று இருந்தது.... வந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் இடத்தைக் காலி செய்ய... திவ்யாவும் வசுந்தராவும் புறப்பட தயாரானார்கள்..


    "வசு... உனக்கு என்ன கிளம்பறதுக்கு அவசரம்... இன்னைக்கு எங்க வீட்ல சாப்பிட்டு போலாம்... "விடாப்பிடியாய் ஹேமலதா வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல... ஹாலை அடுத்து ஒரு சிறிய டைனிங் ஹால் ... அதை ஒட்டிய கிச்சன் என்று வீட்டின் அமைப்பு அழகாக இருந்தது....


    "டிபன்லாம் ஒண்ணும் வேண்டாம் கா.. இப்போதான் சுண்டல் வேற சாப்பிட்டிருக்கோம்.. மணி எட்டுக்கு மேல ஆச்சுக்கா... நாங்க கிளம்பறோம் ... அவரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திடுவாரு... இன்னொரு நாள் சாவகாசமா பாக்கலாம் கா "என்று வசுந்தரா சொல்லிக் கொண்டிருக்க..


    ஒரு அஞ்சு நிமிஷம் பொறும்மா... உக்காரு வந்திடறேன்... என்று தன் அறைக்கு சென்று எதையோ குடைந்து கொண்டு இருந்தாள் ஹேமலதா...


    "என்னம்மா... நேரமாகுது... இதுக்குதான் நான் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வர்றது இல்லை... கால் டேக்சிக்கு போன் பண்றேன்... கிளம்பலாம்.." டைனிங் ஹால் டேபிளில் சாய்ந்தபடி முகத்தை சுளித்து திவ்யா சொல்லிக் கொண்டிருக்க... போர்டிகோவில் கார் கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது...


    "அம்மா... அப்பா போன் பண்ணினாரு... பெங்களூர்ல வேலை முடிய இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்... ஹி வில் பி பேக் ஒன்லி ஆன் சன்டே... " கார் சாவியை சுழற்றியபடி சொல்லிக் கொண்டே வந்த ஸ்வரூபன் வசுந்தராவையும், திவ்யாவையும் சற்றும் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகக் குறிப்பிலேயே தெரிந்தது... திவ்யாவை அங்கு கண்டு வேகத்தில் ஸ்வரூபனுடைய பார்வையில் ஒரு மின்னல் வெட்டிச் செல்ல...


    "நான் இங்க இருக்கேன் ஸ்வரூபா ... வசு... என்னோட பையன் ஸ்வரூபன்... ஆள் அடையாளம் தெரியுதா ... ஜிம்முக்கெல்லாம் போய் ஆளே ரொம்பவும் மாறிட்டான்.. " என்றபடி கையில் ஒரு புடவைப் பெட்டியுடன் ஹேமலதா வந்து சேர்ந்தாள் .... வணக்கம் என்று வசுந்தராவுக்கு கைகுவித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ஸ்வரூபன்.


    திவ்யாவுக்கு மனசுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கத் துவங்கி இருந்தன... என்னவென்று சொல்ல முடியாத ஒரு இதம் மனதிற்குள் பரவுவதை உணர்ந்தாள்... யாரைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக மண்டைக்குள் நண்டு பிராண்டியதோ... ஒருவழியாக அவனைப் பார்த்தாகி விட்டது... நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அவனிடம் நிறைய வித்தியாசம் இருந்தது... ஜெயந்த் சொன்னது போல ஒரு வாட்டசாட்டமான ஹீரோவைப் போல தான் இருந்தான் ஸ்வரூபன்...


    எவ்வளவு மறுத்தும் கேட்காமல் தேங்காய், பூ, பழம், ஆகியவற்றோடு புத்தம் புது புடவையும் வைத்துக் கொடுத்தாள் ஹேமலதா... " கோவில்ல உன் பொண்ண பார்த்தப்போவே அவ கலருக்கு இந்த புடவை நல்லா இருக்கும்னு தனியா எடுத்து வெச்சிட்டேன் வசு... " என்று ஹேமலதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கால் டேக்சியின் அழைப்பு ஒலிக்க.... திவ்யாவும், வசுந்தராவும் ஹேமலதாவிடம் விடைபெற்றனர்... கால் டேக்சி புறப்படுவதை மாடியில் தன் அறை ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.!!



     
    Last edited: Oct 20, 2012
  6. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-8


    அம்மாவும், பொண்ணும் சாவகாசமா ஊர சுத்திட்டு வர்றீங்க... காலம் கெட்டு கெடக்குது... கொஞ்சம் சீக்கிரமா வீடு வந்து சேரக் கூடாதா... எப்போதும் விட சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்த சுந்தரம் கேட்டுக் கொண்டிருக்க...



    அப்பா... சுண்டல் எடுத்துக்கோங்க... நவராத்திரி பிரசாதம்... என்று ஒரு தட்டில் வைத்து நீட்டினாள் திவ்யா... அம்மாவோட க்ளோஸ் ப்ரென்ட் ஹேமா ஆன்ட்டி வீட்டு பிரசாதம் .... கொலு அது இதுன்னு ஒரே தடபுடல்...



    யாரு வசு... ஹேமான்னு உனக்கு யாரும் ப்ரென்ட் இருக்கறதா ஞாபகம் இல்லையே... சுந்தரம் சுண்டலை வாயில் போட்டபடியே கேட்டுக் கொண்டிருக்க...



    நாம்ப திருச்சி அத்தை வீட்டுக்கு போறப்போ அங்க நாலு வீடு தள்ளி இருந்தாங்களே... ஹேமலதான்னு... அவ வீட்டுக்காரர் கூட பேங்க்ல டிவிஷனல் மேனஜரா இருந்தாரே... இப்போ ப்ரோமோஷன் , ட்ரான்ஸ்பர் ரெண்டும் கிடைச்சு இங்கயே வந்துட்டாங்க... திடீர்னு பெருமாள் கோவில்ல சந்திச்சுகிட்டோம்.. கொலு வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வான்னு விடாம அனத்துனா.. ரெண்டு பேருமா போயிட்டு வந்தோம்... வசுந்தரா சொல்லி முடிக்க...



    நீ யார சொல்றேன்னே தெரியல வசு.. ஆனா சுண்டல் நல்லா இருக்கு... சுந்தரம் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள் திவ்யா...



    சரியா போச்சு... விடிய விடிய ராமாயணம் கேட்டுன்னு சொல்வாங்களே.. அந்த மாதிரி இருக்குப்பா... வாங்க சாப்பிடலாம்... சுந்தரம், வசுந்தரா, திவ்யா மூவரும் டேபிளில் அமர கடிகார முள் ஒன்பதை தாண்டி இருந்தது ... தன்னுடைய பத்திரிகை அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டே சுந்தரம் சாப்பிட்டுக் கொண்டு இருக்க திடீரென்று வசுந்தராவின் செல்போன் அலறியது...



    இந்த நேரத்தில் அண்ணன் போன் செய்வானேன் ... என்ன அவசரமான விஷயமோ என்று வசுந்தரா போனை காதில் வைக்க ... " வசு... நான் அண்ணன் பேசறேம்மா... வசீகரன்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு... அடி கொஞ்சம் பலம் தான் ... கால்ல ப்ராக்ச்சர் ஆயிருக்கு... ப்ளேட் வெக்கணும்னு சொல்லி இருக்காங்க.. அப்போலோல அட்மிட் பண்ணி இருக்கேன்.. மச்சான் கிட்ட விஷயத்த சொல்லிட்டு உடனே வா..." வசுந்தராவின் அண்ணன் சொல்லிக் கொண்டிருக்க..



    இப்போவே கிளம்பி வரேண்ணா... என்று அவசரமாக வசுந்தரா சொல்ல... சுந்தரமும், திவ்யாவும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தனர்...



    சுந்தரத்திடம் விஷயத்தை சொல்லிவிட்டு அரைகுறையாக சாப்பாட்டை முடித்துக் கொண்டு வசுந்தரா அவசரமாக கை கழுவியபடி " நீயும் வர்றியா திவ்யா... " என்று மகளை கேட்க...



    "அந்த குடிகாரன் எக்கேடு கெட்டா எனக்கென்ன... இதே மாதிரி குடிச்சுகிட்டு இருந்தா ஆக்சிடன்ட் ஆகவேண்டாம்.. குடல் வெந்தே செத்துடுவான் " திவ்யா வெடுக்கென்று பதில் சொல்ல... பளாரென்று அவள் முகத்தில் அறை விழுந்தது... அதிர்ந்து போனாள் திவ்யா...



    "உனக்கு அவன பிடிக்கலேன்னா அதோட நிறுத்திக்கோ... அவன் எப்போ சாவான்னு நீ தீர்மானிக்க வேண்டாம்... " வசுந்தரா கோபமாக சொல்லிவிட்டு உள்ளே செல்ல...



    "என்னடா குட்டிமா... அவ அண்ணன் குடும்பத்த பத்தி தப்பா பேசுனா அவளுக்கு பிடிக்காதுன்னு தெரியும் இல்ல...தெரிஞ்சே வாயக் குடுக்கணுமா..." சுந்தரம் திவ்யாவை சமாதானப் படுத்திக் கொண்டிருக்க...



    "வீட்ட பத்திரமா பூட்டிக்கோ... நான் இப்போ வருவேனா இல்ல காலைல வருவேனா தெரியாது... அப்பா மட்டும் இன்னும் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்திடுவாரு... புரியுதா... " கோபம் குறையாமல் வசுந்தரா சொல்லிவிட்டு செல்ல...



    சுந்தரத்தின் கார் கிளம்பியதும் வீட்டை உட்புறம் பாதுகாப்பாய் பூட்டிக் கொண்டு டிவியை ஆன் செய்து சோபாவில் அமர்ந்தாள் திவ்யா... அடி வாங்கிய கன்னம் இன்னும் சுறுசுறுவென்று எரிந்து கொண்டு இருந்தது... வசுந்தராவின் அளவுக்கு அதிகமான அண்ணன் உறவு பாசத்தை வைத்துத்தான் வசீகரன் இங்கே அடிக்கடி வந்து போய்க் கொண்டு இருக்கிறான்... இனி அவனுக்கு முழுவதும் குணமாகும் வரை ஒரு தொல்லையும் இருக்காது... நிம்மதியான பெருமூச்சு ஒன்று திவ்யாவிடம் கிளம்பியது...!!


     
    Last edited: Oct 21, 2012
    2 people like this.
  7. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-9


    வசீகரன் மயக்கம் தெளியாமல் ICU வில் கிடந்தான் ... "ரத்தத்துல இருக்கற போதை கம்ப்ளீட்டா குறைஞ்ச பிறகு தான் ஆபரேஷன் பண்ண முடியும் ன்னு சொல்லிட்டாங்க... எப்பவும் விட இன்னைக்கு ஓவரா அடிச்சிருக்கான்..." அண்ணன் ராஜதுரை சொல்லிக் கொண்டு இருக்க... அண்ணி தாட்சாயனிக்கு அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது...



    "ஏன்தான் இவனுக்கு இந்த பழக்கமோ... எல்லாம் இந்த குடிங்கற சனியனால வந்தது... " தன் அண்ணனிடம் புலம்பிவிட்டு தாட்சாயனியிடம் சென்று அமர்ந்தாள் வசுந்தரா...



    "அழாதீங்க அண்ணி... எல்லாம் சரி ஆயிடும்.." வசுந்தரா சொல்லிக் கொண்டிருக்க...



    "எல்லாமே உன் பொண்ணால வந்த வினைதானே... அவள மறக்க முடியாம தான வீட்ல தினமும் பொலம்பிகிட்டு இருக்கான்... ஊர்ல வேற பொண்ணா இல்ல... விட்டு தொலைடா ன்னு சொன்னா அவனுக்கு எங்க உறைக்குது... இன்னைக்கும் அவள நினைச்சு தான் குடிச்சிருப்பான்... தறி கெட்ட பய...எங்க குடும்பத்த வேர் அறுக்கரதுக்குன்னே பொறந்துருக்கா நீ பெத்த அருமை ரதி ரம்பை... ஊருக்குள்ள எவன் தான் குடிக்கல... உன் அண்ணன் மட்டும் ரொம்ப யோக்யமா என்ன... நாங்க எல்லாம் குடும்பம் நடத்தாம தான் போயிட்டோம்... சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு ஆரம்பிச்ச பேச்சு.. இப்போ என் புள்ளையோட காலையே காவு வாங்கிடுச்சு .. " அழுகையினூடே நீட்டி முழக்கி தாட்சாயனி அபாண்டமாய் குற்றம் சாட்ட...



    திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் வசுந்தரா.. திவ்யா அவள் ஆயிற்று அவள் வேலை ஆயிற்று என்று இருக்கிறாள்... தேவையில்லாமல் அவளை இதற்கு குற்றம் சாட்டுவானேன்... இப்போது வசுந்தராவின் கோபம் திசை மாறிக் கொண்டு இருந்தது... சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் "காலைல வந்து பாக்கறேன் அண்ணி" என்று புறப்பட முகத்தை நொடித்துக் கொண்டாள் தாட்சாயனி... அண்ணனிடம் சொல்லிக் கொண்டு சுந்தரத்தோடு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது மணி பனிரெண்டை எட்டி இருந்தது... பீப் ஹோல் வழியாக யார் என்று பார்த்துவிட்டு கதவு திறந்தாள் திவ்யா...



    "இன்னும் தூங்கலையா திவிம்மா... " தாயின் குரலில் இருந்த கரிசனம் மகளது கோபத்தையும் இளககிவிட...



    "தூங்காம இருக்கத்தான் மருந்து குடுத்துட்டு போனியே.." கன்னத்தை தடவிக் கொண்டே திவ்யா சொல்ல...



    "சாரிடா.. "என்று அவளை அணைத்துக் கொண்டாள் வசுந்தரா...!!



    "ம்ம்.. சரி சரி ... எல்லாம் போய் தூங்கற வேலைய பாருங்க... காலைல எந்திருச்சு ஆபீஸ் போகவேண்டாமா... திவி... நீ போய் தூங்குடா செல்லம்.. உன் அம்மாவோட கோபம் பவர்கட் மாதிரி... எப்போ வேணா வரும் எப்போ வேணா போகும் ... அதெல்லாம் பெருசா எடுத்துக்கவே கூடாது "... அந்த நேரத்திலும் சுந்தரம் தன் மனைவியை கேலி செய்து கொண்டிருக்க...



    "குட்நைட் மா... குட்நைட் பா... " என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றாள் திவ்யா... வேலையின் தீவிரம், ஊர் சுற்றிய அலுப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொள்ள கட்டிலில் விழுந்த வேகத்தில் உறங்கிப் போனாள் திவ்யா..!!


    *****************************************************************


    Episode-10


    அங்கே ஸ்வரூபன் வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்... நான்கு வருடம் முன்பு ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நிமிடம் பார்த்த திவ்யா நீங்காத நினைவாய் அவன் மனதில் பதிந்து போனது அவனுக்கு மட்டும் தான் தெரியும்... அந்த அழகான மலர் தோட்டத்தை விழிகள் விரிய வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திவ்யா தான் அவனது மனதிலும் காதலை பூக்கச் செய்தவள் என்று அவனது நாடி நரம்புகளுக்கு மட்டுமே தெரியும்... இருவருக்குமே எதையும் வெளிப்படுத்தும் வயது அது அல்ல என்பதால் எல்லாம் தனக்குள்ளேயே ரகசியமாய் பூட்டி வைத்திருந்தான் ... தனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் அவளுக்கும் ஏற்பட்டிருக்குமா... இல்லை இது ஒரு தலை காதலாய் போய் விடுமா... சிந்தனைகள் பலவாறாய் வலை பின்னிக் கொண்டிருக்க... அன்று டாமி குறைத்தபோது அவள் துள்ளி அதிர்ந்தது ஞாபகம் வர தனக்குள் சிரித்துக் கொண்டான் ஸ்வரூபன்... எல்லாமே நேற்று நடந்தது போல இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது...

    அதற்கு பிறகு படிப்பு, கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் என்று மூழ்கி விட்டாலும் திவ்யாவின் நினைவுகள் மீண்டும் தென்றலாய் தீண்ட வேண்டும் என்பதற்காகவே சென்னையில் அவன் கண்ணில் பட்டாள்... அன்று தான் சென்னையில் ப்ரான்ச் ஆரம்பிக்கும் விஷயமாக சில தகவல்களை சேகரிக்க தன் நண்பனை பார்க்க வந்திருந்தான் ஸ்வரூபன்... காரை பார்க் செய்துவிட்டு இறங்கியவன் கண்களில் தேவதையாய் தென்பட்டாள் திவ்யா... யாரை மீண்டும் பார்க்க முடியுமா என்று நான்கு வருடங்களாக மனதின் மூலையில் தவித்துக் கொண்டிருந்தானோ ...அவள்..இதோ அவன் கண்ணெதிரே ...சற்று தொலைவில்.. !!

    சந்த்யாவுடன் பேசியபடியே தன் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் திவ்யா... அவள் சந்த்யாவிடமும், சுசிதாவிடமும் பேசிக் கொண்டிருந்த தோரணையில் அவளுடைய ஆபீஸ் ஆகத்தான் இருக்கும் என்பது ஸ்வரூபனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது.. ஸ்கூட்டி போன திசையை மனதிற்குள் குறித்துக் கொண்டவன் அடுத்த ஒரு வாரமும் அதே இடத்தில் காத்திருந்து அவள் அலுவலகம் முடிந்து கிளம்பும்போது தன் போர்டிலேயே அவளைப் பின் தொடர்ந்து சென்னையின் போக்குவரத்து நெரிசலை மீறி... சிக்னல்களில் காத்திருந்து... ஒரு வழியாக அவள் இருப்பிடத்தை நிச்சயப்படுத்துவதற்குள் ... அப்பப்பா...... கடைசி இரண்டு நாட்கள் அவனது போர்ட் காரை அவள் சந்தேகப்பட்டு அடிக்கடி திரும்பிப் பார்க்க... அந்த பார்வையின் ஸ்பரிசத்திர்க்காகவே மீண்டும் அவளை தொடர வேண்டும் போல இருந்தது... திவ்யாவைப் பற்றிய நினைவுகளின் ஸ்பரிசம் ஸ்வரூபனைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்க...

    மணி பார்த்தான்... எலெக்ட்ரானிக் பச்சை விளக்குகள் அர்த்தஜாமம் இரண்டு மணி என்று சொல்லிக் கொண்டிருக்க... இவ்வளவு நேரம் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோமா ... என்று இதழோரம் பூத்த புன்னகையுடன் உறங்கிப் போனான் ஸ்வரூபன்..!!


     
    Last edited: Oct 21, 2012
  8. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Floral_Arrangements.jpg
    Episode-11


    காலையில் எழுந்து அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தாள் வசுந்தரா... வசீகரனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும்... தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா... காலை உணவையும், மதிய உணவையும் சமைத்து முடித்து டேபிளில் வைத்தவள் சுந்தரத்தை எழுப்பி ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் என்று விபரம் சொல்லிவிட்டு திவ்யாவை எழுப்பச் சென்றாள்...


    அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் தாயின் அழைப்பைக் கேட்டு கண்விழிக்க...


    "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணும்மா நானும் வர்றேன்... பிடிக்குதோ இல்லையோ ஹாஸ்பிடல்ல இருக்கறப்போ போய் பாக்கறது தான் நாகரீகம்.. அப்பா ரெடி ஆகறதுக்குள்ள நானும் குளிச்சிட்டு வந்திடறேன்..." தூக்கக் கலக்கத்திலேயே அவள் சொல்லிக் கொண்டிருக்க திவ்யாவின் பேச்சு வசுந்தராவுக்கு வியப்பை அளித்தது ... கணவனும், மகளும் வரும் வரை காத்திருந்து கிளம்பினாள்....


    அதிகாலையிலேயே ஆபரேஷன் முடிந்து வசீகரனை ரூமுக்கு மாற்றி இருந்தார்கள்... வலது காலில் ப்ளேட் வைத்து எலும்பு சேர்மானம் ஏற்படுத்தி இருக்க... முகத்தில் கையில் என்று அங்கங்கே கீறல்கள்... ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது... பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தது... கொண்டு சென்ற டிபனை அங்கிருந்த ஷெல்பில் வைத்துவிட்டு "எப்படி இருக்கு வசீ..? " என்று வசுந்தரா அருகில் செல்ல...


    "வாங்க அத்தை... இந்த நொண்டி மாப்பிள்ளை எப்படி இருக்கான்னு பார்க்க வந்தீங்களா... " வசீகரனின் பதில் வசுந்தராவுக்கு கண்ணீரை வரவழைக்க..


    "எல்லாம் சரி ஆயிடும் டா.. ப்ளேட் வெச்சிகிட்டவங்க எல்லாம் நேரா நிமிர்ந்து நடக்கறது இல்லையா என்ன... இந்த மாதிரி பேசாத வசீ... உனக்கு ஒண்ணும் ஆயிடலே... எத்தன பேரோட புகைச்சலோ... உன்ன இந்த மாதிரி படுக்க வெச்சிடுச்சு... " திவ்யாவை முறைப்பாகப் பார்த்துக் கொண்டே தாட்சாயனி சொல்ல...


    திவ்யாவுக்கு ஏன் வந்தோம் என்று இருந்தது...." உடம்ப பாத்துக்கோங்க அத்தான் " என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வெளி வராண்டாவிற்கு வந்து விட்டாள்... சுந்தரமும், ராஜதுரையும் தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க... ஆஸ்பத்திரிக்கே உரித்தான டெட்டால் வாடையும், மருந்து வாசனையும் வயிற்றைப் பிசைய...


    காற்றோட்டமாக நின்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. மெதுவாக அந்த காரிடாரில் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று எதிரே வந்து கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்து நின்றாள்... ஜாகிங் போய்விட்டு அதே உடையோடு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தான் ஸ்வரூபன்... அங்கிருந்த லேப் நர்சிடம் அவன் எதையோ கேட்டுக் கொண்டிருக்க... அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் திவ்யா... நர்சிடம் பேசிவிட்டு எதேச்சையாக திரும்பியவன் திவ்யாவைப் பார்த்து விட விழிகளும், விழிகளும் விளக்கம் கேட்டன...


    "ஹலோ... மிஸ்... திவ்யா... நீங்க எங்க இங்க... யாருக்கு என்ன ஆச்சு. " ரொம்பவும் பழகியவன் போல நெருங்கி வந்து அவன் கேட்க ....


    "ரிலேடிவ் ஒருத்தருக்கு ஆக்சிடன்ட்... போன் ப்ராக்ச்சர்... இங்க தான் அட்மிட் பண்ணி இருக்காங்க... நீங்க எங்க சார் இங்க..." திவ்யா அமைதியாக பதில் சொல்ல...


    "டோன்ட் சே சார்...ஸ்கூல் ஹெட்மாஸ்டர கூப்பிடற மாதிரி இருக்கு... கால் மீ ஸ்வரூபன் ஆர் ஸ்வரூபன் கார்த்திகேயன்.. அப்பாவோட மெடிகல் ரிபோர்ட் வாங்க வந்தேன்.. கொஞ்ச நாளா அவருக்கு அல்சர் ப்ராப்ளம்... எஸ்கே ப்ராஜக்ட் எந்த அளவுக்கு இருக்கு... அன்னைக்கு உங்க ஆபீஸ் மெயில் பார்த்தவுடனே நீங்க தான் என்ன கான்டாக்ட் பண்ண வருவீங்கன்னு நினைச்சேன் மிஸ். திவ்யா... உங்களுக்கு எப்படின்னு தெரியல... ஐ ஸ்டில் ரிமம்பர் தி டே ஐ ஸா யூ இன் திருச்சி..." நான் உன்னை மறக்கவில்லை என்பதை எந்த ஒரு சுற்றி வளைப்பும் இல்லாமல் தெளிவாக அவன் பேசி முடிக்க...


    பிரமிப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா...


    "ஹலோ.. வாட் ஹாபன்ட்... எனிதிங் மிராகுலஸ்...!!" ஸ்வரூபன் குரல் அவளை மீண்டும் இழுத்து வர...


    "இல்ல சார்... சாரி.. சாரி.. ஸ்வரூபன்... புதுசா பாக்கற ஒருத்தர் கிட்ட இவ்ளோ ப்ரீயா பேசமுடியுமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... " திவ்யாவின் பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைக்க...


    "என் விழியில் பட்ட நாளில் இருந்து என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாய் பெண்ணே"... மனதிற்குள் நினைத்தவன்..


    "யூ ஆர் நாட் எ ஸ்ட்ரேஞ்சர் டூ மீ... போர் இயர்ஸ் முன்னாடியே நாம ரெண்டு பேரும் மீட் பண்ணியாச்சு... நீங்க மறந்துட்டிங்க... அவ்ளோதான்... ஐ விஷ் ஐ ஹாவ் யுவர் பெர்சனல் மெயில் ஐடி... டிசைனிங் சம்பந்தமா திடீர்னு ஏதாவது கேட்கணும்னு தோணுச்சுன்னா ஆபீஸ் ஹவர்ஸ்காக வெயிட் பண்ண வேண்டாம் பாருங்க... நம்பிக்கை இருந்தா குடுங்க... அதர்வைஸ் இட்ஸ் ஓகே..."


    இவன் எல்லாமே பளிச் பளிச் என்றுதான் பேசுவானோ... வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற தினுசில் இருக்கிறான்....

     
    Last edited: Oct 22, 2012
  9. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-12


    தன் பெர்சனல் மெயில் ஐடியைக் கொடுத்தாள் திவ்யா... தன் செல்லிலேயே அதை ஏற்றிக் கொண்டான் ஸ்வரூபன் கார்த்திகேயன்...


    அதற்குள் சுந்தரம் அவளைத் தேடி வர... தன்னுடைய அலுவலக கஸ்டமர் என்ற ரீதியில் ஸ்வரூபனை அறிமுகப் படுத்தி வைத்தாள் திவ்யா... அறிமுக மரியாதைக்காக இரண்டு நிமிடம் சுந்தரத்திடம் பேசிவிட்டு ஸ்வரூபன் விடை பெற்றுச் செல்ல... "போலாமா திவிம்மா... நம்ப ரெண்டு பேருக்குமே ஆபீஸ் கு லேட் ஆகுது... உங்க அம்மா இன்னைக்கு முழுக்க இங்க தான்... "


    சுந்தரமும், திவ்யாவும் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி எட்டரை... அவசரமாக ப்ரேக்பாஸ்ட் முடித்து , அவசரமாக லன்ச் பேக் செய்து அதைவிட அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் திவ்யா... ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்று மக்கர் செய்தது...


    ஐயோ... அப்பா... வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது... நீங்களே என்ன ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு போங்க... கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள் திவ்யா...!!


    சுந்தரம் மகளை ஆபீசில் இறக்கி விட்டு தன்னுடைய பத்திரிகை அலுவலகத்துக்கு கிளம்ப... "ஈவினிங் நான் ஆட்டோ பிடிச்சு வந்திடறேன்பா..." என்று சொல்லிக் கொண்டிருந்தாள் திவ்யா...


    எப்போதும் போல் வேறு எண்ணங்களுக்கு இடமில்லாமல் வேலை ஓடிக்கொண்டு இருந்தது... இடையே வசுந்தரா இரண்டு முறை போன் செய்து தான் இரவு தான் வரமுடியும் ... திவ்யா மாற்றுச் சாவி எடுத்துக் கொண்டாளா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.... மாலை அலுவலகம் முடிந்ததும் அன்றைய வேலைகளை பற்றிய குறிப்புகளை ரீமாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள் திவ்யா...வானம் மேகமூட்டமாய் இருக்க மழை வேறு பெரிதாக பிடிக்கும் போல இருந்தது... ஆட்டோவுக்காக காத்திருந்த நேரத்தில் அவளை உரசியபடி அந்த போர்ட் வந்து நிற்க...


    "வீட்டுக்கு போக தான் வெயிட் பண்றீங்கன்னா ஐ வில் டிராப் யூ... நோ ப்ராப்ளம்... என்னோட ப்ரென்ட் எ பார்க்க வந்தேன்... நீங்க நிக்கறத பார்த்து என் வண்டி தானா நின்னுடுச்சு..... " என்றபடி ஸ்வரூபன் வண்டியில் இருந்து இறங்க...


    "இல்ல ஸ்வரூபன்... நான் ஆட்டோகாக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... எனிவே தேங்க்ஸ் பார் ஆஸ்கிங்..." அவசரமாக திவ்யா பதில் சொல்
    ல....


    "நான் உங்கள கிட்னாப் பண்ணிடுவேன்னு பயமா இருக்கா ... தைரியமா வாங்க... " ஸ்வரூபன் அவளைக் குறும்பாக பார்த்து விட்டு சொல்ல... திவ்யாவுக்கு சிரிப்பாக இருந்தது... அதற்கு மேல் மறுக்கத் தோன்றாமல் அவனோடு வண்டியில் ஏறிக் கொண்டாள்....


    "உங்க வீடு எங்க இருக்கு... எந்த வழில போகணும்னு கரெக்டா சொல்லுங்க திவ்யா... " ஸ்வரூபன் வேண்டுமென்றே கேட்க...


    "உண்மைலேயே எங்க வீடு எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா ஸ்வரூபன்... இதே கார் என்ன பாலோ பண்ணத பல தடவ நான் பாத்திருக்கேன்..." பொய் சொல்கிறானே என்று திவ்யா ஆச்சரியமும், கோபமும் கலந்து கேட்க...


    "இஸ் இட்... ஒரு நாள் கூட ஏண்டா என்ன பாலோ பண்றேன்னு கேக்க தோணலையா... " ஸ்வரூபன் கேட்க...

    இதற்கு என்ன பதில் சொல்வது என்று திவ்யாவுக்கு குழப்பமாக இருந்தது... பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தவள் கார் திசை மாறி செல்வதை அறிந்து
    பரபரப்பானாள்...
     
    Last edited: Oct 22, 2012
  10. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் கண்ணில் ஏன் விழுந்தாய் ? -தொடர் கதை - பா&am

    Episode-13


    "ஸ்வரூபன்.. இந்த ரூட் இல்ல... நீங்க தப்பான ரூட்ல போறீங்க... வண்டி ரிவர்ஸ் எடுத்து லெப்ட் ல கட் பண்ணி போங்க..." திவ்யா பதற்றத்துடன் பேச...


    "உன்ன கிட்னாப் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு தானே வண்டில ஏத்துனேன்... இனிமே பீல் பண்ணி ப்ரயோஜனம் இல்லை திவ்யா... "
    ஸ்வரூபன் சிரித்துக் கொண்டே சொல்ல...


    "ப்ளீஸ் ஸ்வரூபன்... விளையாடாதீங்க... வண்டிய நிறுத்துங்க... நான் இறங்கிக்கறேன்... " திவ்யா கெஞ்சலும், மிரட்டலும் சேர்ந்த குரலில் கேட்டுக் கொண்டிருக்க... ஸ்வரூபன் காரை நிறுத்தினான்... அவசரமாக இறங்க முயன்றாள் திவ்யா...


    "ஒரு பத்து நிமிஷம் என்னோட ஆபீஸ்ல கால் பதிச்சிட்டு அப்புறம் ஓடலாமே... " ஸ்வரூபன் கேலியாய் சொல்ல... நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா...


    "எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்" என்று நியான் போர்ட் பளிச்சிட்டுக் கொண்டு இருந்தது... இப்போது என்ன சொல்கிறாய் என்பது போல ஸ்வரூபன் அவளைப் பார்க்க திவ்யாவின் முகத்தில் டன் டன்னாக அசடு வழிந்து கொண்டு இருந்தது... முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்...!!


    ஸ்வரூபனை பின் தொடர்ந்து அலுவலகத்திற்கு சென்றாள் திவ்யா... ரொம்ப பெரிது என்று சொல்ல முடியாது... மீடியமான இடம்... அதையே அழகாக அலங்கரித்து வைத்திருந்தான்... அலுவலகம் காலியாக இருந்தது ... மணி ஆறரை நெருங்கி விட்டதால் ஊழியர்கள் ஒருவரும் இல்லை... தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் ஸ்வரூபன்...


    "ஸோ... இந்த ஏழையின் அலுவலகம் இதுதான்... தங்கள் கருத்து என்னவோ... " நாடக பாணியில் ஸ்வரூபன் பேசிக் கொண்டிருக்க...


    "நிறைய சினிமா பார்ப்பிங்களா ஸ்வரூபன்... ஒண்ணோ பயமுறுத்தறீங்க... இல்லைன்னா டயலாக் பேசறீங்க..." திவ்யா சொல்லிக் கொண்டிருக்க...


    "நான் உன்ன ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன் திவ்யா... இவ்ளோ பயப்படுவேன்னு எதிர்பார்க்கலே..." ஸ்வரூபன் சாதாரணமாக சொல்ல...




    "ஹலோ... நான் ஒண்ணும் பயப்படற டைப் கிடையாது.... ரொம்ப ப்ராப்ளம்னா எடுத்து சொருகிடுவேன்... வீணா ஒரு நண்பனோட உயிர் என் கையால போக வேண்டாமேன்னு பார்த்தேன்.. அதுவும் பேசிப் பழகி இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல... அதுதான் கொஞ்சம் யோசிச்சேன்..." என்று தன் ஹேன்ட்பேகில் இருந்த ஸ்க்ரூட்ரைவரை எடுத்துக் காட்ட அந்த அறையே எதிரொலிக்கும் அளவுக்கு சிரித்தான் ஸ்வரூபன்...


    "கிரேட் வெபன்... பயங்கரமான ஆயுதம்... நான் இத எதிர்பார்க்கவே இல்ல திவ்யா... ஐ ஆம் ரியலி ஸ்கேர்ட்..." பயந்தவன் போல அவன் முகத்தை வைத்துக் கொள்ள... திவ்யாவுக்கு எரிச்சலாக இருந்தது... அங்கிருந்து கிளம்ப முயன்றாள்....


    "ஹேய்... வெயிட்... வெயிட்... சாரி... விளையாட்டுக்கு தான் சொன்னேன்... ரியலி யூ ஆர் கரேஜியஸ்.... ஆனா ஒரு விஷயம் சொன்னியே... பேசிப் பழகி இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகலேன்னு... அது மட்டும் தப்பு... என்னோட இதயத்தை கேட்டுப் பார் திவ்யா... இந்த நாலு வருஷமா உன்கிட்ட நான் என்ன என்ன பேசுனேன்னு சொல்லும்... ரைட் ப்ரம் தி டே ஐ ஸா யூ இன் திருச்சி டில் நௌ... அந்த மாதிரி வைப்ரேஷன்ஸ் உனக்கு இது வரைக்கும் வந்ததா வரலையான்னு எனக்கு தெரியாது ... ஆனா இனிமே வர சான்சஸ் உண்டு.. " ஸ்வரூபன் அவள் கண்களை ஊடுருவ...



    இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது திவ்யாவின் முறையாக இருந்தது...


    " ஹௌ ஆர் யூ ஸோ ஷ்யூர் மிஸ்டர் ஸ்வரூபன் கார்த்திகேயன்... என்னோட மனசுல என்ன பீலிங்க்ஸ் அண்ட் வைப்ரேஷன்ஸ் வரணும்னு நான் தான் அனுமதி குடுக்கணும்... நோ ட்ரெஸ்பாஸிங்... ஐ ஆம் நாட் ஸோ வீக் இன் சச் மேட்டர்ஸ் ... அப்படி வரும்போது பார்த்துக்கலாம்... இப்போ கிளம்பலாமா... இட் இஸ் டூ லேட்... மதியம் சாப்பிட்டது... வயிறு ரொம்ப கத்துதுப்பா... " திவ்யா புறப்பட...


    "ஹாவ் இட்... " என்று ஒரு மெகா சைஸ் கிட்கேட்டை அவளிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை பூட்டினான் ஸ்வரூபன்... வழி முழுவதும் எதுவும் பேசாமல் கார் ஓட்டுவதில் கவனமாக இருந்தான் ஸ்வரூபன்... திவ்யாவுக்கு சங்கடமாக இருந்தது... ரொம்பவும் கேலி பேசி மனதை நோகடித்து விட்டோமோ... இந்த ஒரு வாரமாக நீயும் தானே அவனைப் பார்க்க வேண்டும் என்று அலைந்தாய்... எதற்கு இந்த போலி வேஷம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள்...



    அவர்கள் வீட்டு தெருமுனையில் அவளை இறக்கி விட்டு அவள் வீடு போய் சேரும் வரை காரிலேயே காத்திருந்து பார்த்து விட்டு கிளம்பினான் ஸ்வரூபன்... இறங்கும்போது அவள் தான் தேங்க்ஸ் என்று சொன்னாளே தவிர அவன் தலை அசைத்ததோடு நிறுத்திக் கொண்டான்... ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை... !!
     
    Last edited: Oct 22, 2012
    2 people like this.

Share This Page