1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கே எனது Soulmate

Discussion in 'Posts in Regional Languages' started by divyasselvan, Dec 27, 2011.

  1. divyasselvan

    divyasselvan Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    181
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பே, அத்தான், பாவா, மாமா, டார்லிங், ஸ்வீட் ஹார்ட், கண்ணே, காதலா, காதலி, ஜாக்கியா, ஒப்பா (கொரியன் வார்த்தைகள்) – இப்படி அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் Soulmate மாதிரி ஒரு அழகான வார்த்தை இருக்காது.. “Can you be my valentine”- ன்னு கேக்கலாம்.. “Can you be my Soulmate” என்று கேட்க முடியாது .. அப்படிப்பட்ட ஒரு உறவு .. உருவாக்க முடியாது.. உணர மட்டுமே முடியும்..

    அதிமேதாவித்தனம்மாக யோசித்துப்பார்த்தால் இப்படி ஒருவர் நமக்காக இருப்பது சந்தேகமாக தான் இருக்கும்.. Hypothetical (கேள்விக்குறிய ஒன்று) என்றாலும் ஒரு சில உணர்வுகளை அறிவியல் பார்வையில் ஆராய முடியாது.. உதாரணத்திற்கு .. ஒரு சிலரை பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்.. ஒரு சிலரை பார்த்த உடன் அவர்களது முகம் பளிச்சென்று மனதில் பதிவதுண்டு.. அதெற்க்கெல்லாம் அறிவியல் பார்வையில் காரணங்கள் கண்டு பிடிக்க முடியாது..

    நம்ம தமிழ் சினிமாவிற்கு இது புதிதான விடயமில்லை.. நிறைய படங்களில், ஹீரோவை அறிமுகப்படுத்தி விட்டு, “உனக்குனு ஒருத்தி பொறக்காமலா இருப்பா” என்று ஒரு பெரியவர் சொன்ன உடனே அடுத்த சீனில் ஹீரோயின் அறிமுகமிருக்கும்.. மொழியில் வரும் பல்ப், மணி எல்லாம் எளிதில் மறக்க முடியாது.. ஜே.. ஜே .. மொக்கை என்றாலும் அதுவும் இந்த ஒரு உணர்வை அழகாக காண்பித்தது.. காதலுக்கு மரியாதையில் வரும் - “விட்ட குறை தொட்ட குறை” - வசனம் எளிதில் மறக்க கூடியதும் இல்லை.. “கண்ட நாள் முதல்” படத்தின் க்ளைமாக்ஸில் பிரச்சன்னாவும் இதைத் தான் டெஸ்டினி என்று கூறுவார்..

    இப்படி ஒரு தலைப்பில் அழகான பல விஷயங்களை கொண்ட ஒரு கொரியன் டிராமா பார்த்தேன்.. 12 பாகங்கள் = 12 மணி நேரம் கொண்ட அந்த நாடகத்தை இரண்டே நாட்களில் பார்த்து முடித்தேன்.. அத்தனை சுவாரஸ்யம்..

    பார்த்து முடித்து நாட்கள் ஆன பின்னரும் அந்த நாடகத்தின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. ஆறு முக்கிய கதாப்பாத்திரத்தை சுற்றி நடக்கிறது கதை.. மூன்று ஜோடிகள்..
    Blind Date-ல் சந்திக்கும் பெண்ணை(யூ ஜின்) திருமணம் செய்ய வாக்குறுதி அளித்த பின்னர் தான், அவளது அலுவலகத்திலேயே பணிபுரியும் இன்னொரு பெண் தான் தனது Soulmate என்று உணர்கிறான் கதாநாயகன்.. (ஷின் டோங் வோக்).. லோக்கல் ரயிலில் திருமணத்திற்கு ப்ரபோஸ் பண்ணும் காதலனை (பிலிப்ஸ்) அவமானப்படுத்த கூடாது என்று அவனை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறாள் கதாநாயகி.. (லீ சோ க்யுங்) .. ஆனால் அந்த 5 வருட காதலையும் கை விட்டு வேறு ஒருத்திக்காக சென்று விடுகிறான் அவன்.. காதலன் பிரிந்த வலியில் துடிக்கும் கதாநாயகியின் துயரம் நாயகனால் உணர முடிகிறது.. அவள் மனதில் நினைப்பது கேட்கிறது.. முதலில் இதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பினும்.. மெல்ல மெல்ல அவள் Soulmate என்பதை நம்புகிறான் ஹீரோ.. இதனால் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மிக மிக அழகாக, அதே சமயம் நகைச்சுவையோடும் சொல்லி இருக்கிறார்கள்..
    கதாநாயகியை பார்க்கும் போதெல்லாம் அவளது வலியை எளிமையாக்க எப்போதும் அவள் காதில் தனது MP3 Player வைப்பது.. அதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று தனது சிகையை மாற்றுவது, தன்னை புயல் போல் அடித்து செல்லும் காதலைப் பற்றி தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் சொல்லுமிடம், கடைசி க்ளாமாக்ஸில் பிடிக்கும் வீடியோ.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஹீரோ அத்தனை பொருத்தம்.

    ஹீரோயின் நாம் அடிக்கடி பார்க்கும் பெண் வகையறா.. காதலை தொலைத்து, அதை வெளியில் சொல்லாமல் விசும்புபவள்.. தானும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற அடிப்படை ஆசையோடு குற்ற உணர்வும் கலந்து காட்டுவது சிறப்பு..

    கடைசி ஒரு எபிசொடில் சில வசனங்கள் அத்தனை நச்.. முக்கிய பாத்திரங்கள் போலவே, துணை கதாப்பாத்திரங்களும் இயல்பு.. இதைப் பற்றி எல்லாம் ஒரே பதிவில் சொல்லுவது எளிதல்ல.. ஜாவாபீன்ஸ் (dramabeans.com) மாதிரி ஒரு ஒரு பாகமாக சொன்னால் தான் நல்லா இருக்கும்.. சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் எழுதுகிறேன்…

    ‘Paulo Coelho’வின் ‘பிரைடா’ புத்தகத்தில் இந்த தலைப்பை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.. தன்னிடம் மாயஜாலம் கற்று கொள்ள வந்திருக்கும் பெண்ணே தனது Soulmate என்று உணர்கிறான் மேக்னஸ்.. அவளது வலது தோள்பட்டையின் மேல் மின்னும் அந்த ஒளி அவன் கண்களுக்கு மட்டும் தெரிகிறது .. ஆனால் இதை அறியாமலேயே அவனிடம் மாணவியாக இருப்பாள் கதையின் நாயகி..
    உலகில் பிறக்கும் அனைவரும் அவர்களது Soulmate சந்திப்பது இல்லை.. அப்படியே சந்தித்தாலும் மனம் ஒன்றி வாழ்வை அமைத்து கொள்ளுவதில்லை, கொள்ள இயலுவதில்லை.. அல்லது கடைசி வரை அதே காதலுடன் இருப்பதில்லை… காதல் கல்யாணமும் சரி, நிச்சயம் செய்த கல்யாணமும் சரி.. தன் பங்கிற்கு அவை வேறு வேறு திசையைத் தான் காட்டிக் கொண்டிருக்கிறது.. அப்பா அம்மாவிற்கு பிடித்து, ஊராருக்கு எல்லாம் ஒத்து வந்து, நாம எதிர்ப்பார்க்கும் எல்லா தகுதியும் இருக்கும் அந்த ஒருவனோ ஒருத்தியோ பல நேரங்களில் Soulmate – ஆக இருக்க வாய்ப்பு இல்லை.. இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு நடுவில் இதைப் பற்றி எல்லாம் யோசிக்க யாருக்கு நேரமிருக்கிறது.. இருந்தாலும் இப்படி ஒரு அழகான உணர்வு இருக்கிறது.. அதை ரசிக்கலாம்.. இதோ இந்த கணத்தை அந்த ஒருவரை நினைத்து அதிகமாக அழகாக வாழலாம்..

    கண் கானாத தூரத்திலோ.. பக்கத்து ஊரிலோ.. புத்தகம் படித்து கொண்டோ .. சைட் அடித்து கொண்டோ.. குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டோ தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் Soulmate-ற்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..

    உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் இருந்தால், பகிர்ந்து கொள்ளலாம்..

    Note : Repost from my original blog. I finally found my soulmate and we are married for 7 months now. Started sharing my posts with a positive blog. Will share more if people here like it. Please give your valuable comments.
     
    6 people like this.
    Loading...

  2. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Divya,
    Very beautiful and honest write up:thumbsup
     
  3. rekhanew

    rekhanew Silver IL'ite

    Messages:
    164
    Likes Received:
    60
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Dear Divya,

    Very well expressed and a very well written.
    Congrats on you finding your solemate :)
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Congrats Divya on finding your soulmate..:thumbusp:

    Very good review of the Korean drama and also for "Paulo Coelho"'s storyline jist.

    Very good analysis of how one could not find a soulmate and also if..why they couldn't get along..but sometimes, we do see our soulmate in our better half, with the days passing by, don't we!

    Share your articles here, we love to read it...

    Sriniketan
     

Share This Page