1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கே எனது கவிதை

Discussion in 'Posts in Regional Languages' started by prana, Dec 17, 2010.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அப்பப்பா...தமிழ்ல தனியா ஸ்னிப்பெட் ஃபாரம் ஆரம்பிச்சதுல இருந்து,என்னுடைய பதிவை ஏற்ற நினைக்கிறேன்,பல அலுவல்களுக்கு நடுவே எங்க நேரம் போங்க..ஷ் இப்பவே கண்ண கட்டுதேன்னு நீங்க சொல்றது என் காதுல விழுகுது.என்ன பண்றது பொதுவாழ்க்கைனு வந்துட்டா இது எல்லாம் இருக்கதான் செய்யும்.ஃபர்ஸ்ட் பதிப்பே ரொம்ப உணர்ச்சி ப்ரயோகமா இருக்க வேணானு பெரிய மனசா முடிவு பண்ணி என் பள்ளி பருவத்தின் ஒரு திருவிளையடலை சொல்கிறேன்,மகா ஜனங்களே கேட்டுக்கோங்க....

    நானெல்லாம் ஒன்னாம் வகுப்புல இருந்து பன்னெண்டாம் வகுப்பு வர ஒரே பள்ளில குப்ப கொட்டுன ஆளு.அதும் பெண்கள் பள்ளி."ஏய் இவன் உன்ன பாக்குறாண்டி,அவன் உன்ட்ட எதோ பேச வராண்டி" அப்படி இப்படினு எந்த ஒரு இம்சைகளும் இல்லாம,ஒரே மகாராணிகளின் ராஜ்யமா இருக்கும் எங்க பள்ளி.அந்த பள்ளிக்கூடத்துல என்ன மாதிரியே சுத்திட்டு இருந்த மூணு புள்ளைகள புடுச்சு போட்டு கம் போட்டு ஒட்டுன திக் ஃப்ரண்ட் ஆக்கிட்டேன்.ரெண்டு பக்கம் யானைகள கட்டி இழுத்தாலும் பிரிஞ்சு வராத நட்பு அது.நாலு பேரும் இருக்கற எடத்த பாத்தீங்கனா,ஒரே சிரிப்பும்,கும்மாளமுமாதான் இருக்கும்.கூட படிக்கற புள்ளைகளே அமைதிய இருங்க படிக்க முடிய மாட்டேங்குதுனு சொல்லுவாங்கனா பாத்துக்கோங்க.அப்படி ஒரு டெரர் அட்டாக் குடுப்போம்.அதும் நான் சிரிச்சேன்னா,சிவகாசி சரவெடி கணக்கா ஊருக்கே கேக்கும்.அப்படி ஒரு அலப்பறைய குடுப்பேன்.இப்படிதான் ஒரு நாள் பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது ஒரு கூத்து பண்ணினோம்..அது(கொசு வர்த்தி சுத்துது...டொய்ங்க்...)

    பத்தாவது பொது பரீட்சை இல்லயா,அதனால புள்ளைங்க எல்லாம் உசுர குடுத்து படிச்சுட்டு இருந்தாளுக.படிக்கும்போது எங்க வேணுனாலும் உக்காந்து படிப்போம்.வெராண்டா,மைதானம்,மாடிப்படி இப்படி எல்லாம்.எங்க குட்டி சுவர் எப்பவும் வெளி வராண்டா தான்,ஒரு தூண் பக்கத்துல உக்காந்துட்டு குரூப் ஸ்டடி தான் எப்பவும்.நான் அப்பவே கதை,கவிதைனு சுத்திட்டு இருந்த ஆளாச்சா,முதல் நாள் எழுதுன ஒரு கவிதைய என் தோழிகளுக்கு படித்து காட்ட எடுத்து வந்திருந்தேன்.நாலு பேரும் சுத்திலும் உக்காந்துட்டு,நடுவுல ஒரு புக் வச்சுட்டு அது மேல அந்த பேப்பர வச்சுருந்தோம்.என்னுடைய கவிதை அரங்கேற்றம்(!) நடந்து கொண்டிருந்தது.அவளுங்க சும்மா நக்கீரர் கணக்க சொற்பிழை,பொருள் பிழை,கூடவே எழுத்து பிழையும் கண்டு பிடிச்சு,கிண்டல் கேலி பண்ணிட்டு இருந்தாங்க.சுத்திலும் என்ன நடக்குது,ஏது நடக்குதுனு கூட தெரியாம,நாலு பேரும்,கவிதையில மூழ்கி போய் இருந்தோம்.அந்த நேரம் பாத்து பக்கத்து வகுப்பு ஆசிரியை(ஆமா கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஒரு பய புள்ளயையும் பாக்க முடியாது...எல்லாம் அல்லி ராஜ்ஜியம் தான்)எங்கள நோட்டம் விட்டு பக்கத்துல வந்துட்டாங்க.வந்தவங்க என்ன கூப்பிட்டு கையில வச்சு இருந்த புக்க கேட்டு வாங்கிட்டு போய்ட்டாங்க.அவங்க வேற புதுசா பள்ளில சேந்தவங்க.எங்களுக்கா ஒண்ணும் புரியல.என்னடா இது ஒண்ணுமே சொல்லாம வாங்கிட்டு போய்ட்டாங்களேனு ஒரே பயமா போய்டுச்சு.ஸ்டிக்ட்டான ஸ்கூல் ஆச்சே.
    "போச்சு டீ,உன் கவித நேரா எச்.எம் ரூம் தான் போக போகுது.."
    "இவங்கள பாத்தாளே கண்டிப்பான ஆள் மாதிரிதான் இருக்கு"
    "மகளே உன் டப்பா டான்ஸ் ஆட போகுது.."
    மூணு பேரும் ஆளுக்கு ஒண்ணு சொல்ல,நான் சரோஜா தேவி கணக்க,மூணு திசையிலும் பாத்து "அய்யகோ" அப்படினு சொல்லிட்டு இருந்தேன்.சரி ஆனது ஆகட்டுனு ஒரு முடிவு எடுத்தவளாய்,அவங்க மூணு பேரையும் அங்கயே இருக்க சொல்லிட்டு,எந்திரிச்சு பக்கத்து க்ளாஸ்கு பொய் அவங்க முன்னாடி நின்னேன்.
    "டீச்சர்.."(ஆமாம்ப்பா பத்தாவது வரைக்கும் அப்படிதான் கூப்டுவோம்)
    "என்ன சொல்லு.."
    "டீச்சர்.."
    "என்ன்ன்ன சொல்லு.."
    "டீச்சர்.."
    "சொல்லும்மா,என்ன,எனக்கு நேரம் இல்ல சொல்லு.."
    "டீச்சர்.."
    "ப்ச் சொல்லுங்கறேன் இல்ல."
    "அது இல்ல டீச்சர்,சாரினு......."
    "இந்தா புக்.இனிமே இப்படி எல்லாம் பண்ண கூடாது.இப்படியா ஒரே புக்க நாலு பேர் வச்சு படிப்பீங்க.என்ன பொண்ணுங்க போ.எல்லாரும் தனி தனியா புக் வச்சுதான் படிக்கனும்.புரிஞ்சுதா."
    (அட ராமா),"தேங்க்ஸ் டீச்சர்,சாரி டீச்சர்"
    வந்து இந்த மூணு பிசாசுகளிடமும் நடந்ததை சொன்னா,
    "எனக்கு தெரியும் டீ,அதுக்கு(சாரி ஃப்ரெண்ட்ஸ்,அவ அப்படிதான் என்ன சொன்னாலும் அப்படி தான் பேசுவா) பகல்ல சரியா கண்ணு தெரியாது அந்த பேப்பர பாத்து இருக்காதுனு"..ஒருத்தி சொல்ல,குனிய வைத்து மொத்தினோம் அவளை.
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உங்கள் பள்ளி நிகழ்வை படித்து நன்கு சிரித்தேன் பிரணா. இன்னமும் தொடருதா உங்க பாச(பச) நட்பு :):)
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    aiyo, aiyo, superah irukku prana, ore siripu dhan padikkum bodhu
     
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அடடா.......ஸ்டைலா கொசுவர்த்தியை சுத்த விட்டு என்ன அட்டகாசமா பிளாஷ் பாக் கதை சொல்லறீங்க பரானா? சிரிச்சு முடியலை எனக்கு.:rotfl

    இது சும்மா சூப்பர். :thumbsup
     
  5. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi
    "Kosu-varthi", "dabba dance", "athukku pagalle kann theriyaathu" :biglaugh........kurumbuthanamaana naatgalai kann munne nirutthivittergal.

    Rasitthu paditthen.
     
  6. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Adadaa, school padikum bodhu romba looty adichurukeenga pola...resicgu sirichen prana :)
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    :rotfl:rotfl:rotfl

    பின்னிட்டீங்க ப்ரனா..சத்தியமா சொல்றேன் உங்க கதை அப்படியே என் கதை போலவே இருக்கு..
    மரத்தடி டிஸ்கஷன், வராண்டா ஸ்டடி, டாய்லட் சீக்ரட்ஸ்,நீங்க கவிதை எழுதி சிக்கின மாதிரி நான் சிட் பாஸ் பண்ணி சிக்கினேன..
    எங்க டீச்சருங்க கூட கண்ணுக்கு முன்னாடி வந்து போயிட்டாங்க..
    யேவ்ல..என்னல?' இந்தப் பேச்சு கூட என்னால இன்னும் மறக்கமுடியாத அழகான் நினைவுகள்..

    :thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsupsuuper...
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotfl:rotflஅப்போ தீபாவளிக்கு உங்க வீட்டுல தனியா பட்டாசு வெடிக்க வேண்டியதில்ல...அப்டி தானே...
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thanks jaya,yes innamum irukku...endha oru sandhishamo,thukkamo mudhalla manasukkulla thonradhu avanga mugam dhan....
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thanks Latha,ungala sirika vachadhu enaku sandhosham dhan..
     

Share This Page