1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உள்ளபடி உள்ளவர் யார் ?

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 16, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    விலாசம் அற்றவர்களின் விசால மனம்
    பல சமயம் வில்லாக்களில் வசிப்போர்க்கில்லை !
    மழைக்கொதுங்க இடங் கொடாத மாடிகளில்
    அடைப்பிட்டக் கதவுக் கம்பிகளின் பின்
    குளிரூட்டிய நான்கு சுவற்றுக்குள் வாழ்வதைப்
    பெருஞ்சுகம் என்று என்னும் மூடர்களுக்கில்லை !
    ஒருவேளைச் சோற்றுக்குப் பலவாறு துயருற்றும்
    பசியென்று வந்த யாரோ ஒருவருக்கு
    மனமாரச் சோறிடும் ஓலைக் குடிசைகளில்
    ஒண்டி வாழ்பவருக் கிருக்கும் கருணையிலே
    ஒரு சிறிதும் மேற்சொன்ன மேல்வகுப்பிற்கில்லை !
    இப்படியிருக்க அவர்கள் உள்ளவர் என்றும்
    நல்ல உள்ளத்தார் ஏதும் இல்லாதவரென்றும்
    வகுக்கப்பட்டிருக்கும் பொருளாதார விதிகளைக் சற்றே
    சிந்தனை செய்தபடி சிரித்துக் கொள்கிறேன் !
    விந்தையை ஏற்க மறுக்கும் நெஞ்சின்
    வேதனைகளை உள்ளே மூடி வைக்கிறேன் !

    Regards,

    Pavithra
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல பகிர்வு பவி! உள்ளவர் யார் இல்லாதோர் யார் ? சந்திரபாபு பாட்டு ஞாபகம் வருது. பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நன்றி லக்ஷ்மி ! எனக்கும் அந்தப் பாடல் பிடிக்கும்.
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மீண்டும் இப்பாடலைக் கேட்டு இரசித்தேன் :)
     
    jskls likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதில் எனக்கு பிடித்த வரிகள்

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
    .... சேர்நது வாழ்வதில்லை
    .... சேர்ந்து போவதில்லை - அப்பா இந்த மாதிரி பாட்ட பத்தி நிறைய பேசுவார்
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல வரிகள் !
    அப்பாக்கள் எல்லோருமே பெண் குழந்தைகளோடு தத்துவம் பேசுகிறார்கள், அவள் புரிந்து கொள்வாள்,பரிந்து நடப்பாள் என்ற நம்பிக்கை போலும் ! என் தந்தையின் தத்துவ முத்துக்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்தபடியே இருக்கின்றன.....
     
    periamma and jskls like this.
  7. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறி முறையில் -மேதினியில்
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
    பட்டாங்கிலுள்ள படி ( அவ்வை)

    Jayasala 42
     
    periamma likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    படித்துப் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி ! ஒளவையின் வாக்கே என் கருத்தும் !
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு இல்லை என்றால் அவன் ஒன்றும் இல்லாதவனே.
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நன்று சொன்னீர்கள், பெரியம்மா !
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர்- அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.
     
    jskls likes this.

Share This Page