1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உரத்த சிந்தனை ...

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Sep 5, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சந்தேகங்களுக்கும் விளக்கங்களும் இடையில்
    சந்தோஷங்கள் தொலைப்பது சரியா ?
    உரத்த சிந்தனை, அவ்வளவே !

    பேசாத வார்த்தைகளுக்கு அர்த்தமுண்டா ?
    உண்டென்று அறிய நேர்கையில்
    அதிகம் பேசி உறக்கமிழக்கிறேன் !

    கேட்பது சுலபமென்று கேள்விகள்
    தொடுக்கப்பட்டால் விடை கொடுப்பது
    கடினமென்று மௌனமாதல் பிழையா ?

    வினாவிற்கும் விடைக்கும் இடைப்பட்ட
    காலத்தில் அலைபாயும் மனதுக்கு
    கடிவாளம் எப்படிப் போடுவது ?

    விடை கிடைத்தப் பின்னும்
    வருத்தம் விடைபெறாது இருப்பதை
    எவ்வாறு எடுத்துக் கொள்வது ?

    ஒவ்வொரு முறையும் என்னை
    நிரூபித்துக் கொள்ள வேண்டிய
    தருணங்களைக் கண்டு அஞ்சுகிறேன் !

    அச்சம் செயலாக்கம் குறித்தல்ல!
    அதன் பின்விளைவாய் ஏதோவொரு
    மனவருத்தம் நிகழும் என்றே !

    எப்போதும் பொய் உரைப்பதில்லை
    என்றாலும் புண்படுத்தும் என்றுணர்ந்தால்
    சிற்சில மெய்யும் உரைப்பதில்லை !

    நித்தமொரு அனுபவமென்று அறிந்திருந்தாலும்
    வாழ்வின் அவ்வப்போதைய நிகழ்வுகளைக்
    கடக்கையில் ஆச்சரியம் கொள்கிறேன் !

    ஏட்டிலே இல்லாத எத்தனையோ
    பாடங்களை நினைவுகளாய் அவை
    வழங்குவதை வியந்து நோக்குகிறேன் !

    கற்றதை அன்றாடத்தில் கடைபிடிக்க
    முயன்று அதில் வெற்றிகளும்
    அவற்றோடு தோல்விகளும் அடைகிறேன் !

    விசித்திரங்களில் முதலிடம் வாழ்க்கைக்கே!
    அதிர்ச்சியும் ஆச்சரியமும் தவறாமல்
    வழங்கும், தினசரி வாழ்க்கைக்கே !

    எண்ணங்களுக்கு வார்த்தை வடிவிட்டுப்
    படித்துப் பார்த்தேன் , சட்டென்று
    மனங்குளிர்ந்து இதழ் விரிந்தது !

    குழப்பம் விடைபெற்றுக் கொண்டது !
    தெளிவான சிந்தனை பிறந்தது!
    தொலைத்த நிம்மதி கிடைத்தது !

    என்னுள்ளே ஏற்பட்டது என்னவென்று
    அறிந்து கொள்ள விழைகிறீர்களா ?
    உங்களிடமே கேட்டு உணருங்கள் !

    Regards,

    Pavithra
     
    Last edited: Sep 5, 2017
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அய்யோடா இவங்க உரத்த சிந்தனை
    நம்ம உறக்கத்தை கெடுத்து
    உறைக்கும்படி சிந்திக்க
    வைக்குதே

    நல்ல சிந்தனை
     
    jskls and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உறக்கம் கலைந்து கவிதைப் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள் போல? எப்போதும் உண்ட மயக்கத்திலேயே இருந்தால் அப்படித்தான்,மண்டையில் போட்டு எழுப்பி விடுவோம் !:smash2::laughing:
    பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே !
     
    jskls and GoogleGlass like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ha ha neengalum mandaila poda aarambichiteengla :roflmao:
     
    PavithraS likes this.

Share This Page