1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னத பிறவி

Discussion in 'Regional Poetry' started by periamma, Oct 6, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பூமிக்கு வந்த போது எதுவும் கூட வரவில்லை
    பூமியை விட்டு போகும்போதும் கூட எதுவும் வருவதில்லை
    இதை உணர்ந்த மக்கள் மாக்களாகி போவதேன்
    நான் எனது என்ற மமதை கொண்டு அலைந்து
    அனைத்தும் தனக்கே என உரிமை கொண்டாடி
    எதிலும் எப்போதும் நானே முதல் என
    மூடத்தனம் கொண்டு அலையும் மாந்தரே
    ஒரு நொடி ஒரு பொழுதாகிலும் உன்னை
    உன் கண் முன் நிறுத்தி உற்று பார்த்ததுண்டா
    அகக்கண் கொண்டு அகத்தை அளவிட்டால்
    உனக்கு தெரிவது பூஜ்யமே
    முன்னே பலரை செல்ல விட்டு
    அவர் பின்னே நீ நடந்து செல்
    அப்போது தெரியும் உன் தவறுகள்
    தவறை உணர்ந்து திருந்தி
    சரியான வழியில் பயணித்தால்
    புகழும் பெருமையும் தானே சேரும்
    உன்னத பிறவி நீ என்ற பெயர்
    விண்ணுலகம் செல்லும் போது
    உன் கூடவே துணை வரும்
     
    jskls, Rrg, PavithraS and 3 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @iyerviji @kaniths விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
     
    kaniths likes this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சூப்பர்ம்மா

    அகக்கிணறு ஆழ்கிணறு
    ஆழம் அறிவார் யாருமிலை
    அறியாத ஆழம் தனை மதியாதே
    அகந்தையில் அழிவோறே அதிகமிங்கே
     
    jskls, Rrg, periamma and 1 other person like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மனிதராய்ப் பிறந்தோர்த் தவறிழைத்தல் இயற்கை,அதைத் திருத்திக் கொள்ளலாம்.ஆனால் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்தால், அது தப்பாகும். மீண்டும் மீண்டும் தப்பு செய்தால், அது பாவமாகிய தீவினையாகும். அதுவே உறுத்து வந்தூட்டும் என்பதை நினைவு படுத்தும் வகையில் அமைந்த நல்லதோர் அறிவுரை, பெரியம்மா ! மிக்க நன்றி !
     
    jskls, Rrg and periamma like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass
    உண்மை உண்மை முற்றிலும் உண்மை .

    நான் எனும் அகங்காரம்
    எனதெனும் மமங்காரம்
    ஞானத்தின் எதிர் வேதம்
    ஊனத்தின் அடையாளம்
    என்று யேசுதாஸ் பஜகோவிந்தம் தமிழ் பாடலில் பாடி உள்ளார் .
     
    jskls, Rrg and GoogleGlass like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS மிக்க நன்றி மா
     
  7. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    “நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கும் இவ்வுலகில் - தன்
    நிலையறியா மாந்தர் நிலைத்திருக்க விழைகின்றார்.
    போதுமெனும் புரிதலிலை; பொன் பொருளோ போதவில்லை (என)
    போட்டியிட்டு சண்டையிட்டு பொய் வாழ்க்கை வாழுகிறார்.”
    இவ்வாறு
    வேண்டியதை விட்டு விட்டு வேண்டாத பொருள் தேடும்
    வீணர்களை கண்டித்து வரி வரியாய் வடித்துள்ளீர்;
    ‘பெரியம்மா’வின் பொறுப்பை சிறப்பாக செய்துள்ளீர்.
    கவிதைக்கும் நன்றி. கருத்துக்கும் நன்றி!
    அன்புடன்,
    RRG
    (பி கு): மீண்டும் கதை எழுத சென்று விட்டேன். இருப்பினும் கவிதையும் கூட வரும்.:blush:
     
    periamma likes this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்லதோர் அறிவுரை கவிதை பெரியம்மா
    மமதை அகற்றி பார்ததவர்க்கு அக கண் திறப்பது உறுதி
     
    Rrg and periamma like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg
    உணர்ச்சிகளின் தாக்கமே கவிதைகள் .அதனை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி .
    உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும் .மீண்டும் தமிழ் உயிர் பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி
     
    Rrg likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls மிக்க நன்றி லக்ஷ்மி
     

Share This Page