1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உதயசூரியனுக்கோர் இதய அஞ்சலி !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 8, 2018.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கலைஞர்- இந்தப் பட்டத்திற்குப் பலர்ப் பொருத்தமானவர்களாய் இருப்பினும், அதன் அடையாளமும், ஆளுமையும் ஒரே ஒருவரையேச் சேரும் என்றால் அது மிகையன்று. தி மு க என்றால் பல காலம் நான் திரு. மு. கருணாநிதி என்று தான் எண்ணியிருந்தேன், நகைப்பிற்குச் சொல்லவில்லை, நயத்திற்குச் சொன்னேன். ஏனெனில் திரு. மு.க. தன் திறமையான தமிழால் (தமிழில்) விளையாடுவாரல்லவா ? அதற்கு நானும் ஓர் இரசிகை.

    திருவாரூர்த் திருமகனார், அஞ்சுகத்தின் ஓர்மகனார் , தமிழகத்தின் அரசியலில் நீண்டிருந்தப் பெருமகனார் -திரும்பி வர முடியா ஓரிடத்தைச் சேர்வதற்கு உலகெங்கிலுமுள்ள அவர்த்தம் தொண்டர்களின் விருப்பமின்றிக் கிளம்பிவிட்டார். அவரது அரசியல் கொள்கைகள் மற்றும் தனிப்பட்டச் செயல்கள் பலவற்றோடு எனக்குக் கருத்து வேறுபாடும், பற்பல மனவருத்தங்களும் இருப்பினும், உயிர்ப்பிரிந்த அவரது உடல் இறுதியஞ்சலிக்காகக் கிடத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், வயதிலே காலம் சென்ற என் பாட்டனாரை ஒத்தப் பெரியவருக்காக விழிகசிந்து இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரைப் பற்றியக் கடும் விமர்சனங்களைத் தவிர்க்கிறேன், தவிர்க்க வேண்டுகிறேன். அன்னாரது ஆன்மா அமைதியுறட்டும்.

    பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் இறப்பொன்றே இறுதி !
    சிறப்புடனே வாழ்ந்தவர்க்கது துக்கமில்லை உறுதி !
    செந்தமிழால் கவர்ந்திழுத்துக் கொள்கைகளால் உயர்ந்து
    அந்தமிலாப் பெரும்புகழை ஈட்டிச்சென்றார்க் கலைஞர் !

    ஆண்டுவொரு தொண்ணூறும் அதன்மேல் ஐந்தும்
    நீண்டதொரு நற்காலம் புவியில் வாழ்ந்தார் !
    ஆண்டவனை மறுத்தாலும், அவனின் தொண்டர்
    வேண்டுதல்கள் அவர்க்காக மண்ணில் உண்டு !

    முதல்வரெனத் தமிழகத்தை ஆண்ட போதில்
    விதவிதமாய்த் திட்டங்களை நாட்டுக் கீந்தார் !
    சமத்துவத்தை நிலைநாட்டி சமூகநீதி-இந்த
    சமுதாயம் பெற்றிடவே அவர் உழைத்தார் !

    ஓய்வுக்கு ஓய்வளித்து முதுமையிலும்-அவர்
    ஓயாமல் களப்பணிக்குத் தம்மைத் தந்தார் !
    தீயாக உட்கனலும் திராவிடத்தை-அவர்
    சாயாமல் சரித்திரத்தில் பதித்துச் சென்றார்!

    அவருடைய வசனத்திற்கு மயங்கார் சிலரே !
    அவருடைய தமிழ்வலையில் விழுந்தோர்ப் பலரே !
    மேடையிலேப் பேசும்போது கரவொலி எழும்பும் !
    சாடையாகச் சிலரைச்சொல்லின் நகைப்பொலி குலுங்கும் !

    கலைத்துறையும் திரைத்துறையும் நெருங்கிய பழக்கம்
    விலையிலாத இவர்த்தமிழால் உருகுதல் வழக்கம்
    செம்மொழிக்கு மாநாடு சிறப்பாய் எடுத்தார்
    வள்ளுவர்க்கோர்க் கோட்டத்துடன் சிலையும் கொடுத்தார் !

    பிரதமர்களும் முதல்வர்களும் தலைவர் பலரும்
    அவருடனே அரசியல் நெடும்பயணம் செய்தார் !
    சிறுகட்சிக் குறுங்கட்சித் தலைவர்களையும்-அவர்த்
    தவறாமல் நட்புடனே நடத்திச் சென்றார் !

    சாதிமத வேற்றுமைகள் நீங்கும் வண்ணம்
    பேதமிலா சமுதாயம் மலரும் வண்ணம்
    தீதிலாமல் தமிழகம் முன்னேறும் வண்ணம்
    கோதிலாமல் உழைப்பதுவே இவர்த்தம் எண்ணம் !

    முரசொலியில் அரவணைத்தார் உடன் பிறப்புகளை !
    அரசியலில் வகித்திட்டார்ப் பெரும் பொறுப்புகளை !
    மொழியுணர்வை விதைத்திட்டார்த் தமிழ் மண்ணிலே !
    அழியாது ஞாயிற்றொளி என்றும் விண்ணிலே !

    Regards,

    Pavithra
     
    Karthiga, kaniths, periamma and 3 others like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழ் வானில் என்றும் அஸ்தமிக்காத உதய சூரியன் ...அவரின் தமிழுக்கு தலைவணங்குகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
     
    PavithraS and kaniths like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS Tamil maganukku Thagunthathoru Anjali. Ungal kavidhaiyai paarkkavillai .Athanaal enathu kirukkalgalai pathivu seithuvitten.
     
    PavithraS likes this.

Share This Page