1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரசிகன் நல்ல இரசிகன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 19, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காலமொரு கதைசொல்லி...

    வாயைத் திறவாது,
    வார்த்தை பேசாது,
    சைகை கிடையாது,
    சொல்லும் அதிலேது ?
    ஆயினும் திறமைசாலி !

    வாழ்க்கையொரு நாடகம்..

    புதுப்புதுத் திருப்பங்கள்,
    பலப்பல செய்திகள்,
    தினமொரு சுவாரஸ்யம்,
    அதிர்ச்சிகள் இலவசம்,
    ஆனந்தமும் இருக்கும் !

    நானுமதிலோர் பாத்திரம்..

    உறவுகளின் ஊர்வலம்,
    நட்புகளால் தோரணம்,
    எதிரிகளும் சேரலாம்,
    சோகத்தில் சிரிக்கலாம்,
    கயிற்றுப் பாவையாகலாம்!

    மனமுமொரு கதைக்களம்...

    இறந்ததை நினைக்கும்,
    இருப்பதை இழக்கும்,
    வருவதைக் கண்டஞ்சும்,
    நல்லதைத் தள்ளிவிடும்,
    அல்லதைக் கொள்ளும் !
    புலன்களாலே இயக்கமும்..
    பாரென்றும் ,கேளென்றும்,
    பேசென்றும், அடங்காத
    ஆசையால் மூழ்கென்றும்,
    புத்தியைப் பாழாக்கும்,
    சக்தியை வீணாக்கும் !

    தயாரித்து வழங்கியும்,
    தானேயதை இரசித்தும் ,
    கைகொட்டிச் சிரிக்கும்
    இரசிகனோ ஒருவன் !
    அனைத்தையும் தாங்கும்
    மேடையும் அவனே !

    பொம்மைகள் நம்மைக்
    கயிற்றினில் ஆட்டும்
    சாட்டையும் அவனே !
    சாவியைக் கொடுத்து,
    ஆவியைக் கொடுத்து,
    சாவெனும் மருந்தைப்
    பிணியெனக் கொடுத்து ,
    இளமையும், முதுமையும்,
    இரண்டையும் கொடுத்து,
    துயரமும் ,தனிமையும்,
    உயரமும், இனிமையும்,
    வீரமும், தோல்வியும் ,
    வெற்றியும், ஐயமும்,
    இருட்டும், வெளிச்சமும்,
    யாவையும் கொடுத்து
    அனுப்பிய செல்வந்தன் !

    அவன் விருப்பப்படி
    நடிப்பதே லீலை !
    முடிந்ததும் விடைபெற்று,
    நடப்பதே வேலை !
    திரும்பவும் அனுப்பினால்,
    தொடர்வதே மாயை !
    பொம்மை ஆட்டத்தைத்
    தடுத்திட வேண்டில் ,
    சுழற்சியைத் தப்பிக்க
    வழியொன்றே உண்டு !
    ஆசையின் கயிற்றினை
    அறுத்து எறிந்திட்டால்,
    சொல்லற்று, செயலற்று,
    அடங்கி ஒடுங்கிட்டால் ,
    தெய்வந்தான் இரங்கி
    ஓய்வினைத் தருமே !

    Regards,

    Pavithra
     
    Last edited: Oct 19, 2016
    kaniths, vaidehi71 and jskls like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்லதொரு பகிர்வு!
     
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Nice poem!
    Liked these last lines the most!
    Thanks for sharing.
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நன்றி லக்ஷ்மி !

    Thank you, Vaidehi !
     
    jskls and vaidehi71 like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆட்டுவிப்பவன் அவனே .ஆசைகயிற்றினை கட்டவிழ்ப்பவனும் அவனே. நல்லதொரு கருத்து செறிந்த பதிவு
     
    PavithraS and jskls like this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    A nice exposition.Every one is aware of everything.Yet we are unable to come out of shackles.Is this Maayaa? -perhaps.
    Jayasala 42
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிக்க நன்றி,பெரியம்மா !

    Perhaps... The trick lies in us realizing that everything is just a dream and play, in which we are given a role according to our account balance, to amuse that one Master known by many names. . Once we realize that, we stop reacting, our balance gets diminished and so stops the accumulation of debits or credits leading to Nil balance account which eventually ends in Closure of Business. Thank you for dropping by !
     
    periamma and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Chartered Accountant aa?
     
    PavithraS likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Who me ? No !! Ha.. Ha..
     
    jskls likes this.

Share This Page