1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயல்பும், அரிதும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 28, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அரிதாக இல்லாளைப் பாராட்ட முனைந்தவரும்,
    அவளுடைய நற்குணங்கள் பல சொல்லிப் புகழ்ந்து,
    தவறாக ஒரு வார்த்தை சொல்ல முறைத்தவளும்,
    நிறுத்துமாறு ஆணையிட்டாள் வேகத்துடன் தடுத்து.

    ஒரு சொல் மாறிப் போன வினை என்றவருக்கு,
    அங்கு சொல் மாரி பொழிந்தது மிக நீண்ட நேரம்!
    இறக்கி விட்டீர் எனை! என்று சொன்னவளுக்கு,
    ஈடாய் என்ன சொல்ல முடியும் பாவம் அவரும்?

    வல்லிய குரலெழுப்பி விட்டார், அது நின்றிடவில்லை.
    அவ்விடம் நீங்கிட நினைத்தார் அது நடக்கவுமில்லை.
    சற்று நேரம் பொறுமை காத்தார் முடியவுமில்லை
    பருவ மழை போல் அதற்கும் இடைவெளியில்லை.

    ஒரு வழியாய் அது நிற்கவும், ஓய்ந்திருந்தவர்,
    ஏன் அப்படி பாய்ந்தாள் என பயந்து வினவவும்,
    பெரும்பாலும் இப்படித் தான் நீரும் பாய்பவர்!
    உணர்த்துகிறேன் உமக்கு என அவளும் சொல்லவும்,

    குனிந்தவர் தலை நிமிர சற்று நேரம் ஆனது
    அங்கு நிலவிய மௌனம் மிகவும் அடர்த்தியானது.
    அதன் பிறகு அவ்விடத்தில் இனிமை வந்தது.
    இருவருக்கும் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    (அவருக்கு) அடி விழுந்தது..
    விழுப்புண் கண்டது..
    (பாவம் என்று ) அவள் மருந்து போட்டது ...
    இதையெல்லாம் விட்டுடீங்க..:biglaugh

    (ஆனாலும் உங்க வீட்ல நடப்பதை எல்லாம் இப்படி பொதுவில் சொல்லீட்டீங்களே . ரொம்ப்ப்ப நல்லவர் நீங்க :thumbsup)

    என் வேண்டுகோளை ஏற்று...புனைந்துள்ள இன்றைய கவிதைக்கு நன்றி RGS!:cheers
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Well. Trying to write in all genres that I can. Thanks for your feedback. idhai ellaam thaaNdiya, naan migavum vazindha tharuNamum onRu uNdu. pinnaaLil adhai.... ezudha muyalgiRen. -rgs
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Yes...I see that you are exploring various genres(Including Limericks) Keep going:cheers

    Antha mukkiyamaana tharunathaip patri ariya mihundha aaval(aduththavanga kashtathaik kekka evvalavu aaval parunga :bonk). seekiram ezhuthunga.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    mmm. enna oru aaval ungaLukku? ezudhalaam enum en aaval thaLLi pOgiRadhE!!!! -rgs
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    படித்ததும் நான் சொல்ல நினைத்ததை எல்லாம் அபிசிங் சொல்லிட்டாங்க ஸ்ரீ. ஹ்ம்ம்...இனி நான் என்ன சொல்ல?

    @abhising என்னப்பா, இப்படி ஒரு wavelength ?
     
  7. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    இதில் அதிசயம் என்ன லதா?
    எல்லாமே நமக்கு தெரிஞ்ச விஷயம் தானே. :exactly:
    வழக்கமா நம் எல்லார் வீட்லயும் நடக்கிறதைதானே சொல்லீருக்கார்:biggrin2:
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Paavam Abhising, unga counterpart. Are you ripping him apart? :) -rgs
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Good One...able to visuvalize his (unga) face!! :rotfl
     
    Last edited: Mar 1, 2011
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    oru vazhi paNNiduveenga pOla irukkE ellaarum? :) Glad to receive your feedback Malarvizhi. Thanks. -rgs
     

Share This Page