1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயற்கையின் வினோதங்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Nov 1, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    இலையுதிர் காலத்தின் வண்ணக் கலவைகள்,
    இயற்கையின் ஓவியமாகச் சில இடங்களில்!

    தன் காலம் முடிந்த பின்னும் பூத்தன, அழகிய
    மென் மலரான ரோஜாப் பூக்கள், தோட்டத்தில்.

    அக்டோபர் மாதம் ரோஜாவா என வியந்திட,
    அதற்கும் மேல் இன்னொரு வியப்பு வந்தது!

    வெண்மை நிறம் அதிகம் காணா வேளையில்,
    வெண்மைப் பனிப் பொழிவு, அதைச் சேர்த்தது!

    விநோதமாக, திடீப் பனிப் பொழிவும் வந்தது!
    வினோதம் கண்டு, உள்ளம் மிகத் துள்ளியது!

    முதல் முறை அனுபவிக்கும் நல்லவை இனிதே!
    முதல் முறை நான் கண்ட பனிப்பொழிவு, இதே!

    அதீத ஆவலில், கையுறையும் கூட அணியாது,
    அந்தப் பனித் துளிகளைப் பிடிக்க விழைந்தேன்!

    சுடும் சூரியனின் கடும் வெப்பமும், குளிப் பனி
    தரும் நடுக்கமும், இந்த விஜயத்தில் கிடைக்க,

    இயற்கை அன்னையின் புதுப் பரிமாணங்களை,
    வியந்து போற்றி, மன நிறைவும் அடைந்தேன்!

    சின்னச் சின்னப் புதுமைகளையும், மனதிலே
    எண்ணி எண்ணி ஆனந்திக்க அறிதல், நலமே!

    :)...:thumbsup

    பனிப் பொழிவில் சிறைப்பட்ட ரோஜா! 30-10-2011, Boston.

    [​IMG]
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Tks for sharing the photo. Nature's beauty no one can define and put it in a nut shell which is always an unimaginable one.
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree,

    Nice to get your feed back. Thank you. :)
     

Share This Page