1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழில் 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'வேலாயுதம்' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவரும் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் கடந்த 9 ஆணடுகளாக காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு ரித்தேஷ் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. இருப்பினும் இருவரும் பிரியாமல் தொடர்ந்து காதலுக்காக போராடி வந்தனர். இதனால் ஜெனிலியா வீட்டில் சில ஆண்டுகளிலேயே அனுமதி கிடைத்து விட்டது. ஆனால் ரித்தேஷ் தேஷ்முக்கின் தந்தை முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்தேஷ்முக், இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஒருவழியாக அவரிடமும் அனுமதி பெற்று விட்டார் ரித்தேஷ் தேஷ்முக், அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களின் திருமணம் நேற்று காலை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அளவில் ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கரை வேட்டியும் திரைச் சீலையுமா இணைஞ்சிருங்க......
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    சென்ற ஆண்டு மெகா ஹிட் பாடல்களில் ஒன்றுதான் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இடம்பெற்ற 'மாசமா ஆறு மாசமா' பாடல். அப்பாடலுக்கு இசையமைத்த சி.சத்யாவின் இசையமைப்பில் 'சேவற்கொடி' படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலும் தற்போது இந்த வருடத்தின் மெகா ஹிட் பாடலாகியிருக்கிறது. 'கம்பி மத்தாப்பூ கண்ணு கண்ணு' என்ற பாடல்தான் அது. ஏற்கனவே அனைத்து வானொலிகளிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இப்பாடலை கேட்பவர்கள் அனைவரும் 'இது எந்த படம்' என்று கேட்டுகொண்டிருக்க, இப்பாடலை கொண்ட 'சேவற்கொடி' விரைவில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே மெகா ஹிட் ஆகியிருக்கும் இப்பாடல், படம் வெளியானப் பிறகு தமிழகத்தின் எங்கேயும் முணுமுணுக்கும் பாடலாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். பல படங்களில் இணை இயக்குநராகவும், 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதியவருமான இரா.சுப்ரமணியன் இயக்கியிருக்கும் முதல் படம் இது. ஒரு திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் துவங்கும் கதை, அடுத்த வருட சூரசம்ஹாரத்தில் முடிந்துவிடுமாம். தமிழகத்தின் தலை சிறந்த நீச்சல் வீரரான அருண் பாலாஜி, இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தனது 8 வயதிலேயே தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீட்டரை 10.41 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். ஏற்கனவே சாதனை படைத்த குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவருக்கு ஜோடியாக பாமா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இவர் கன்னட 'மைனா' படத்தின் நாயகி. இதில் 'பொல்லாதவன்' படத்தில் நடித்த பவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் 'பிதாமகன்' மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சாய் ஜெகன், மணிமாறன், கூத்துப்பட்டறை தயாள் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை, 'பனேரி பிக்சர்ஸ்' சார்பில் மகரந்த் கமலாகர் தயாரித்திருக்கிறார். அடடே!.... பறந்து பறந்து நீச்சலடிக்கப் போறாங்க போல......
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

    * பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

    * மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

    * மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

    * சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

    * கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.
    [​IMG]
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    [​IMG]


    சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

    * ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

    * முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

    * 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

    * சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

    * உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!

    * ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    [​IMG]



    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பற்றி சில தகவல் துளிகள்...

    * 'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!

    * அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!

    * ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

    * ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!


    * காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

    * நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!

    * சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!

    * எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!

    * தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    [​IMG]

    இயக்குனர் மணிரத்னம் பற்றி சில தகவல் துளிகள் :

    * கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்!

    * மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2... பிறந்த தேதி!

    * முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!

    * படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்!

    * நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

    * பாலாவின் 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!

    * தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்!
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    * பாக்யராஜுக்கு என தனி வாய்ஸ் மாடுலேஷன் உண்டு. மிமிக்ரி கலைஞர்கள் மேடையில் தவறாமல் பயன்படுத்தி கைதட்டல் பெற்றுக் கொள்ளும் குரல் பாக்யராஜுடையது.

    * 'பாக்யராஜ் ஸ்டைல் டான்ஸ்' என்று சொல்லும் அளவுக்கு நடனத்திலும் தனக்கான பாணி உண்டு இவருக்கு.

    * 'கன்னிப் பருவத்திலே' படத்தில் சார் தான் வில்லன். ராஜேஷ் ஹீரோ. வடிவுக்கரசி ஹீரோயின். படம் சூப்பர் ஹிட் !



    * 'அந்த 7 நாட்கள்' மணிரத்னத்திற்கு பிடித்த படம். அது நல்ல திரைக்கதை அமைப்புக்கு ஒரு பாடம் என ஒருமுறை குறிப்பிட்டார் மணிரத்னம்.

    * கதாநாயகனாக தனித்து ஜெயித்துக் கொண்டிருந்த போது, 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார் பாக்யராஜ். துப்பறியும் நிபுணராக அவர் ஏற்று நடித்த பாத்திரம் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    * " சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறது தான் " இது பாக்யராஜ் ஸ்பெஷல் டயலாக். அவரது சீடர்கள் பாண்டியராஜனும், பார்த்திபனும் இதை போகும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.



    * 'புதிய வார்ப்புகள்' படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா' என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க. அப்பா- அம்மா உயிரோடு இல்லை!' என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் பாக்யராஜின் அம்மா. இன்றும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டும் பாக்யராஜுக்கு!


    * ஏவி.எம் நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, 'முந்தானை முடிச்சு' பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது!

    * இயக்குர் ஆவதற்கான முயற்சிகளின்போது அறிமுகமான நடிகை பிரவீணா. அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் நோயுற்று இறந்துவிட்டார் பிரவீணா!

    * 'ராஜா' எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா அளித்த r எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜ் விரலில் மின்னும். இடையில்,அந்த மோதிரம் தொலைந்துபோக, அதே டிசைனில் மோதிரம் அளித்தவர் மனைவி பூர்ணிமா!
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

    கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

    சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

    உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

    உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

    உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

    "போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

    இதெப்டி இருக்கு!
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறிடி…’ என்ற தமிங்கிலீஷ் பாட்டு தாறு மாறாக ஹிட்டானதைத் தாங்க முடியாமல், சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்யூப் வெண்கல விருதை கொடுத்துள்ளது.

    தனுஷ் கொலவெறி என்று எதையோ பாடி, யுட்யூப்பில் ஏற்றி, அதற்கு கிடைத்த ஹிட்ஸை வைத்து பிரபலமாக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்குள் அந்தப் பாட்டு 3 கோடி ஹிட்ஸைப் பெற்றுவிட்டது யு ட்யூப் தளத்தில். அடுத்த சில தினங்களில் அதே ரூட்டைப் பிடித்தார் சிம்பு. உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து ஒரு ட்யூனுக்கு ஏற்பட பாடினார். அதே சோனி மியூசிக் மூலம் இதனை யுட்யூபில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்.

    அதற்கு தோதாக வந்தார் பிஆர்ஓ நிகில் முருகன். அவரது அசத்தல் பிரமோஷன் இந்தப் பாட்டுக்கு ஒரு பலமாக அமைந்துவிட்டது. ஒருவழியாக இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்துவிட, ஒரு விருதைக் கொடுத்திருக்கிறது யுட்யூப். தனுஷுக்கு தங்க விருதைக் கொடுத்தவர்கள், சிம்புவுக்கு கொடுத்திருப்பது வெண்கல விருதாம்.

    இதுகுறித்து அனுப்பப்பட்ட பிரஸ் ரிலீஸில் தன்னை 'சூப்பர் ஸ்டார் சிம்பு' என்று சிம்புவே போட்டுக் கொண்டிருப்பதுதான் காமெடி (நீங்களாவது சொல்லக் கூடாதா நிகில்?!)!

    ஒரிஜினலுக்கு தங்கம்… அதற்குப் போட்டியாக வந்த பாட்டுக்கு வெண்கலம்... ரெம்ப்ப நல்லாத்தான் ஜட்ஜ் பண்றாங்க!!
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரவழைத்த சிம்பு, அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, பேட்டியோ போஸோ தராமலே திருப்பி அனுப்பிவைத்தார்.

    சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம்.

    காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள். ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல், தம்மடித்துக் கொண்டிருந்தாராம் அரைமணி நேரமாய்.

    அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், நேரில் போய் விஷயத்தைச் சொல்ல நிருபரும் போட்டோகிராபரும் சென்றார்களாம். ஆனால் சிம்புவைச் சுற்றி நின்று கொண்டிருந்த அ(த)டியாட்கள், "யோவ்... உங்களையெல்லாம் யாருய்யா உள்ளே விட்டது. போங்க போங்க..." என்று விரட்டியடித்தார்களாம்.

    இதனால் கடுப்பாகி கிளம் எத்தனித்தவர்களை, சிம்புவின் மேனேஜர் வந்து சமாதானப்படுத்தி இருக்கச் சொன்னாராம்.

    ஆனால் அதுவரை தம்மடித்துக் கொண்டிருந்த சிம்பு, சட்டென்று எழுந்து கேரவனுக்குள் போய்விட்டாராம்.

    அவ்வளவுதான்... இங்கே நிருபரும் புகைப்படக்காரரும் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க, சிம்புவோ கேரவனில் செட்டிலாகிவிட்டாராம்.

    இனி வாழ்நாளில் சிம்பு பேட்டியும் வேண்டாம் போட்டோவும் வேண்டாம்.. ஆள விடுங்கப்பா என்று அங்கிருந்து கிளம்பி வந்துள்ளனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து விசாரிக்க நாம் முயன்றபோது, 'இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்று சிம்பு தரப்பில் அலட்சியம் காட்டினர்.

    படம் மட்டுமில்ல... நடவடிக்கை கூட ஒஸ்தியா இல்லையே தம்பி!
     

Share This Page