1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல். எந்நேரமும் பெரும் தீயாக மாறிவிடும் அளவுக்கு கனன்று கொண்டிருக்கிறது சினிமா தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையிலான பகைமை. காரணம், பெப்சியின் ஊதியப் பிரச்சினை. இனி ஊதிய ஒப்பந்தமெல்லாம் கிடையாது... எங்கள் இஷ்டம்தான் என்று தயாரிப்பாளர்கள் தடாலடியாக அறிவித்துவிட்ட நிலையில், பெப்சி அடுத்த கட்ட போராட்டத்தை ரொம்ப கவனத்துடன் முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் பக்கம் நிற்கிறார். இனி எனக்கு வசதியான ஆட்களை வைத்து வேலை வாங்கிக் கொள்கிறேன் என தனது பரிவாரத்துடன் போய் தேனியில் முகாமிட்டுவிட்டார், தனது 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்துக்காக. ஆனால் இந்தப் படத்தின் நாயகன் இயக்குநர் அமீர் பெப்சியின் பக்கம் நிற்கிறார். பெப்சியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இயக்குநர் சங்க பொதுச் செயலர் என்ற முறையில் இயக்குநர்களின் சம்பள உயர்வை அமீரே அறிவித்துவிட, இது இன்னும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
    இந்த நிலையில், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் பாரதிராஜா. ஆனால் படப்பிடிப்புக்குப் போக வேண்டிய அமீரோ சென்னையிலேயே உட்கார்ந்துவிட்டார். இதனால் பாரதிராஜாவின் படத்திலிருந்து அமீர் விலகல் என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. விஷயத்தை உறுதிப்படுத்தாமல் இயக்குநர் பாரதிராஜா மௌனம் காக்கிறார். இந்தப் பக்கம் அமீரோ, பாரதிராஜாவின் ரியாக்ஷனைப் பார்த்துவிட்டு பேசலாம் என அமைதி காக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்துக்கு ஹீரோவாக ஒப்பந்தமானவர் பார்த்திபன். பின்னர் என்ன காரணத்தாலோ, பார்த்திபனை சொல்லாமல் கொள்ளாமல் கழட்டிவிட்டு அமீரை ஹீரோவாக்கினார் பாரதிராஜா.
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினி, நடிகர் கார்த்தி குடும்பத்தார் ஆகியோர் நிதியுதவி அளித்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்காக புயல் நிவாரண நிதிக்காக ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக கமல்ஹாசன் இன்று(01.02.12) வழங்கினார்.
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். 'நண்பன்' படத்துக்கு முன் ஆக்ஷன் - த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜித் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாருக்கான். நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின் 'அக்னிபாத்' பட விருந்தில் சிரிஷ் குந்தரை அடித்துவிட்டார் ஷாருக்கான். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அடித்துக்கொண்ட இருவரையும் சமாதானப்படுத்தினர், ஃபராகானின் சகோதரர் சஜித் கானும் பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவும். இதன் விளைவு நேற்று மும்பை மன்னாட்டில் உள்ள ஷாருக்கான் வீட்டுக்கு ஃபராகானும் சிரிஷ் குந்தரும் சென்றனர்! ஷாருக்கானை நேரில் சந்தித்து இருவரும் மனம் விட்டுப் பேசினர். பின்னர் வெளியில் வந்த சிரிஷ், "அன்றைக்கு என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியாது. அவரவருக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டனர். ஆனால் நாங்கள் எங்களுக்குள் இருந்த மன வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டோம். இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள்," என்றார்.
    மேலும் அவர் கூறுகையில், "சண்டை நடக்காத பார்ட்டி ஏது... அன்று நன்றாகக் குடித்திருந்தோம். ஏதோ விவாதம்... மனதுக்குள் இருந்த ஆத்திரத்தை கொட்டிவிட போதை ஒரு வாய்ப்பு... அப்படி வந்த சண்டைதான் அது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. முன்னை விட நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். குறிப்பாக எனக்கும் ஷாருக்கானுக்கும் இருந்த பிரச்சினை மட்டுமல்ல... என் மனைவி ஃபராவுக்கும் ஷாருக்குக்கும் இருந்த வேறுபாடுகள்கூட நீங்கிவிட்டன. இந்த சண்டைகூட நல்லதுக்குதான்," என்று கூறியுள்ளார். இயக்குநர் ஃபராகான் கூறுகையில், "நாங்கள் ஷாருக் வீட்டில் 3 மணி நேரம் இருந்தோம். பேசினோம், சிரித்தோம், நெகிழ்ந்தோம், அழுதோம்... இப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தது. என் தம்பிக்கும், தயாரிப்பாளர் நாடியாவாலாவுக்கும் நன்றி," என்றார். இதுகுறித்து ஷாருக்கான் தனது ட்விட்டரில், "குடும்பத்துக்குள் சண்டை வருவது போலத்தான் இது. எல்லாம் நன்மைக்கே," என்று தெரிவித்துள்ளார்.
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழ் சினிமாவில் 'அம்சமான ஆன்டி' என்று பெயரெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 'பிரிவோம் சந்திப்போம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. தமிழில் இதுவரை 33 படங்கள் செய்துவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களிலும் வருகிறார்.இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் படத்துக்கு 'ஆரோகணம்' என்று தலைப்பு வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணா. சத்தமில்லாமல் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், இப்போது கிட்டத்தட்ட முடித்தேவிட்டார். தனது படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அரைச்ச மாவையே அரைக்காமல் புதுசா, கொஞ்சம் நேர்மையா ஒரு படம் வந்தால் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமா 'மௌனகுரு'. ஒரு சீரியஸான விஷயத்தை சீரியஸாகவே சொல்லாம ரொம்ப ஜாலியா சொல்லலாம். பாஸிட்டிவ்வா அணுகலாம் அப்படித்தான் 'ஆரோகண'த்தை எடுத்திருக்கேன். மனசுக்கு நெருக்கமா நடந்த, பார்த்த ஒரு விஷயத்தை இதில் சொல்லி இருக்கேன். 'ஆரோகணம்' படத்தை முதல் முதலாக என் சொந்த பேனரில், சொந்த பணத்தில் ஆரம்பித்தேன். ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி செய்யும் போது இன்னொருத்தர் காசில் விளையாட பயம் எனக்கு. முதல் பாதி முடித்து ஒரு டிவிடியை மெடிமிக்ஸ் நிர்வாகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி அவரே கையிலெடுத்துக்கொண்டார். நான் ரொம்ப பெரிய இயக்குநராகனும்னு படம் பண்ணவில்லை. எனக்கு இருக்கிற அறிவில் இந்த படத்தை பண்ணியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன்," என்றார். சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி, விஜயசாரதி ஆகியோருடன் விரேஷ், ஜெய் குஹேரனி என இரண்டு புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இந்தப் படத்தில் லட்சுமி. சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய 'யுத்தம் செய்' படத்துக்கு இசை தந்த கே இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்', 'ஈரம்', 'எங்கேயும் எப்போதும்' படங்களின் எடிட்டர் கிஷோர் 'ஆரோகண'த்தை எடிட் செய்கிறார். சரி... இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா என்றால்.... சிரித்தபடி, "கே.எஸ். ரவிக்குமார் ஸ்டைலை இந்தப் படத்தில் ஃபாலோ பண்றேன்", என்றார்!
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் 'தோனி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா நடந்த இடம் கோட்டூர்புரம் அண்ணா நூலகம். சமீபகாலமாக தமிழ்சினிமா ஏரியாவிலேயே தென்படாத பிரகாஷ் ராஜ், பல நாள் கழித்து வந்த சந்தோஷத்தில் உற்சாகமாகவே அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவரது உற்சாகத்தை சற்றே நடுக்கமுற வைத்தார் இயக்குநர் சிகரம் பாலசந்தர். அந்த விழாவில் அவர் பேசியது அப்படியே இங்கே. பிரகாஷ் ராஜை சில சமயங்களில் எனக்கும் பிடிக்கும்; பல சமயங்களில் எனக்கு பிடிக்காது. என்ன இப்படி பண்றான்? இது தப்பில்லையா..? என அடிக்கடி அவனைப்பற்றி யோசிப்பேன். இப்பொழுதுகூட நிறைய தவறுகள் செய்து கொண்டிருக்கிறான். அவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை! ஆனாலும் அவனது திறமையை மதித்து நான் வாழ்த்த வந்திருக்கிறேன்! தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ், படப்பிடிப்பு காலை 6 மணிக்கு என்றால் 10 மணிக்கு வருவதும், சில சமயங்களில் வராமலே போவதையும் கேள்விப்பட்டு எனக்கு கோபம், கோபமாக வரும்! என்னிடம் இன்னமும் பணிவாகத்தான் இருக்கிறான். அவன் பீக்கில் இருந்தபோது அவனை எனது டி.வி., சீரியலில் நான் நடிக்க வைத்ததை பார்த்து பலரும் பலவாறாக டி.வி சீரியலில் நடிக்காதே என அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவன், "அவர் என் குருநாதர்., அவர் மேலே இருந்து கீழே குதி என்றால் நான் குதிப்பேன்" என்று அவன் சொல்லியிருக்கிறான். இதை நான் கேள்விப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதே நேரம் பிற தவறுகளையும் அவன் திருத்திக் கொள்ள வேண்டும்" என்றார். குருநாதர் சொல்லை அப்படியே பின்பற்றும் பிரகாஷ் ராஜ் இதன் பிறகு எப்படி நடந்து கொள்வாரோ? அந்த குருநாதருக்கே வெளிச்சம்!
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    விஷால் தற்போது நடித்து வரும் படம் 'சமரன்'. இதில் த்ரிஷா, சுனைனா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தினை இயக்கிய திரு இப்படத்தினையும் இயக்கி வருகிறார். 'கோ' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரிச்சர்ட் நந்தன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 'சமரன்' படத்தின் வில்லன் பாத்திரத்திற்கு முதலில் பிரகாஷ் ராஜை ஒப்பந்தம் செய்தார்கள். அதன் பிறகு அவர் 'சமரன்' படத்தில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில், 'சமரன்' படத்தின் வில்லனாக மனோஜ் பாஜ்பெயி நடித்து வருகிறார். பாங்காக்கில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இவரும் கலந்து கொண்டுள்ளார். மனோஜ் மட்டுமன்றி இன்னொரு முக்கிய பாத்திரத்தில் 'சர்வம்', 'கச்சேரி ஆரம்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்த ஜே.டி.சக்கரவர்த்தியும் நடித்து வருகிறார்.
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் 'போடா போடி'. சரத்குமார் மகளான வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகமாகும் படம் இது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார். தரண் இசையமைத்து வருகிறார்.
    'போடா போடி' படம் குறித்து சில தகவல்கள் இதோ:
    * ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையில் மூன்று கட்டங்களைப் பதிவு செய்யும் படம் இது.
    * படப்பிடிப்பு முழுவதுமே லண்டனில் நடத்தி இருக்கிறார்கள். படத்தின் கதைக்கு ஏற்ப, லண்டனில் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
    * கதைக்கு தேவைப்பட்டதால், ஒரு குழந்தையை பிறந்த உடனேயும், 6 மாதங்கள் கழித்தும் இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
    * சிம்புவின் நடிப்பு இப்படத்தின் வித்தியாசமாக இருக்கும். இதுவரை நீங்கள் திரையில் பார்க்காத சிம்புவை இப்படத்தில் பார்க்க இருக்கிறீர்கள் என்கிறது படக்குழு.
    * இதுவரை சிம்பு நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'போடா போடி'.
    * சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
    * ஒளிப்பதிவாளராக duncan telford என்கிற வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகிறார்.
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கௌதம். கௌதம் மேனன் படம் என்றாலே பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் 'நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. முதன் முறையாக கௌதம் மேனன் - இளையராஜா இப்படத்திற்காக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.இது குறித்து ஜீவா தனது டிவிட்டர் இணையத்தில், "நானும், இளையராஜாவும் இணைவது உண்மைதான்... ஆம்.. 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தான்!" என்று தெரிவித்துள்ளார்.
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'அக்னிபாத்' வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரிஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாருக்கான். ஃபராகானும் ஷாருக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான 'அக்னிபாத்' படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார். விருந்து நடந்து இடத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் அங்கு நின்று கொண்டிருந்த இயக்குநர் சிரிஷ் குந்தரை நோக்கி வேகமாக சென்றார். பின்னர் திடீரென அவருடைய நீளமான தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். சிரிஷ் குந்தர் முகத்தில் ஷாருக்கான் மாறிமாறி குத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த உணவகத்தின் உரிமையாளரான பாபா தீவான் தலையிட்டு ஷாருக்கானை பிடித்து வேறுபக்கமாக அழைத்துச் சென்றார். ஆனால் அவரை வெளியேறச் சொன்னார் ஷாரூக். உடனே சஞ்சய் தத் தலையிட்டு, ஷாருக்கை அழைத்துச் சென்றுவிட்டாராம். அவர் மட்டும் வராமலிருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகிவிட்டிருக்கும் என்கிறார்கள். பின்னர் இயக்குநர் சிரிஷ் குந்தர், விருந்து நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது அவருடைய முகம் முழுவதும் வீங்கி காணப்பட்டது.
    சிரிஷ் குந்தரின் மனைவி பிரபல இயக்குநர் ஃபராகான் ஆவார். இவரும், ஷாருக்கானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஷாருக் தனது 'மேமுஹன் நா' மற்றும் 'ஓம் ஷாந்தி ஓம்' படங்களை இயக்கும் வாய்ப்பை ஃபராகானுக்கு தந்திருந்தார். ஏராளமான படங்களில் ஷாருக்கானுக்காக நடனம் அமைத்தவர் அவர்தான். ஆனால் 'தீஸ் மார் கான்' படத்தில் ஃபராகான் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்ய, பிரச்சினை ஆரம்பமானது. சிரிஷ் குந்தரும் ஒரு காலத்தில் ஷாருக்கின் நண்பராக இருந்தார். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாருக்கை மோசமாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் இயக்கிய 'ஜோக்கர்' படத்துக்கு ஷாருக் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில், ஷாருக்கின் 'ரா ஒன்' படம் குறித்து கேவலமாக விமர்சித்திருந்தாராம் சிரிஷ். இந்த நிலையில், நேற்றைய விருந்துக்கு வந்த ஷாருக்கை மிகவும் கோபப்படுத்தும் விதத்தில் சிரிஷ் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில்தான் ஷாருக் வெளுத்தாராம். எனினும் இதுபற்றி போலீசில் புகார் தரப்போவதில்லை என்று ஃபராகான் தெரிவித்து உள்ளார். "ஒருவரை அடிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது மோசமான விஷயம் என்றும் அடிக்கடி கூறுவார் ஷாருக். அவரா இப்படிச் செய்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது," என்றார் ஃபராகான். இந்த சண்டையின் போது நேரில் பார்த்த அனைவருமே, ஷாருக் பக்கம் தவறில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு கத்ரீனா கைஃபின் பிறந்த நாள் விருந்தில் ஷாருக்கானும், சல்மான் கானும் கைகலப்பில் இறங்கி பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்! இவிங்களுக்கு வேற வேலையே இல்லப்பா........
     

Share This Page