1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    * பாலாவின் ஒருநாள் மெனு இதுதான். காலையில் இரண்டு இட்லி, மதியம் ஒரு கைப் பிடிச் சாதம், இரவு இரண்டு தோசை. 'ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன்!' என கண்கள் விரித்துச் சொல்வார்!

    * பாலாவின் படத்தில் 'சன்ரைஸ் ஷாட்'டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது. ஆனால், சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும்!

    * பாலாவின் திருமண ஏற்பாடுகளின்போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்ட, விளையாட்டாக 'பிதா மகன்' வில்லன் ரோலுக்கு 'மகாதேவன்' என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு!

    * அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷூட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும்!

    * தியேட்டரில் படம் பார்க்கும்போது செல் போனில் பேசினாலோ, எஸ்.எம்.எஸ். ஒலிஎழும்பி னாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார்!

    * எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணி கள்தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார்!!
     
    3 people like this.
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
    கமல் – பூஜா குமார் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டான் நாட்டில் படமாகின்றன.
    தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் ஆப்கனில் இயங்கி வரும் முஜாஹிதீன் தீவிரவாதியாக நடிக்கிறாராம் கமல் ஹாசன்.
    இப்படத்தில் அமெரிக்காவாழ் இந்தியரான பூஜா குமார், இந்திய மாடல் அழகி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கமல் படத்தை தயாரிக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
    சங்கர் இஷான்லாய் இசையமைக்கிறார்கள்.
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    'அமர்க்களம்' இல்லாத அஜீத் !!!

    தமிழ்த் திரையுலகில் அஜீத்திற்கு ' ரொம்ப சிம்பிளான மனிதர் ' என்ற அபிப்ராயம் உண்டு. ' நடிப்பு என்பது என் தொழில், அதனைத் தாண்டி நான் எல்லாரைப் போல ஒரு சாதாரண குடிமகன் ' என்று சொல்லும் அஜீத் தன்னை எதிலும் முன்னிலை படத்தி கொள்ளவதில்லை.

    சென்ற முறை தேர்தலில் ஓட்டு போட செல்லும் போது கூட மக்களோடு மக்களாக நின்று தான் ஓட்டு போட்டார். இவ்வளவு பெரிய நடிகர் மக்களோடு மக்களாக நிற்கிறாரே என்று ஆச்சர்யமாக பேசினார்.

    தற்போது அஜீத் நடித்து வரும் 'பில்லா 2' படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக அஜீத் கடந்த 21ம் தேதி சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்று இருக்கிறார்.

    அங்கு பாதுகாப்பு சோதனைக்காக நிறைய பயணிகள் காத்து நின்றனர். அவர்களுடன் அஜீத்தும் நின்று இருக்கிறார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அஜீத்தை அடையாளம் கண்டு அவரை அணுகி, vip gate வழியாக செல்லும்படி கூறியுள்ளனர்.

    இதனை அஜீத் ஏற்க மறுத்து, பயணிகளுடன் வரிசையில் 40 நிமிடம் காத்து நின்று உள்ளே சென்றார். அஜீத்தின் செயலை பார்த்து உடன் இருந்த சக பயணிகள் பாராட்டினர்.
     
    5 people like this.
  4. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    nice sudha :)
     
  5. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    Ajith Ajith thaan eppovum..thalai pola varuma.. Nice gayyu
     
    1 person likes this.
  6. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,067
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    Ajith- Nice guy
     
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    7,995
    Likes Received:
    9,846
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    Ajith- Nice guy?

    what about KAMAL?Still he busy!

    So all the talented people are always busy.
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    appadiyum sollalam
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பிரபு தேவாவும் நயன்தாராவும் பிரிந்து விட்டார்கள் என்னும் தகவல்களைத் தொடர்ந்து, இப்போது நயன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவதாக செய்திகள் வலம் வருகின்றன. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. அப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், நயன் அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டு அவர் சீதையாக நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராமராஜ்ஜியத்திற்குப் பிறகு, எந்த மொழியிலும் படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இப்போது விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள். விஷ்ணுவர்தனும் "நயன்தாராவுடன் பேசியிருக்கிறோம்.. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை" என தெரிவித்திருக்கிறார். 'பில்லா" படத்தில் நயன் தோற்றமும் நடிப்பும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. எனவே, இப்படத்திலும் அவர் நடிக்கக்கூடும் என்கிறது படக்குழு. நயன் தெலுங்கில் நாகார்ஜுன் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். சம்பளமாக 1.25 கோடி பேசப்பட்டிருக்கிறதாம். தலகூட நடிக்கணும்னா என்ன கசக்கவா செய்யும்?
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,986
    Likes Received:
    8,287
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    மணிரத்னம் இயக்கத்தில் 'தளபதி' படத்தில் கலெக்டர் வேடத்தில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. அதன் பின்னர் 'ரோஜா' படத்தில் கதாநாயகனாக நடிக்க, அதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். 'ரோஜா' சர்வதேச அளவில் திரைப்பட ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அழகான நடிகராக அரவிந்த்சாமி வலம் வந்தார். படங்களில் 'அரவிந்த்சாமி போல அழகான..' என்பது போன்ற வசனங்கள் அதிகம் இடம்பெற்றன. 'தாலாட்டு', 'என் சுவாசக் காற்றே' 'மறுபடியும்' 'மின்சாரக் கனவு', 'புதையல்' போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கத் துவங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தில் அவர் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். 'அலைபாயுதே' படத்திற்குப் பிறகு பலர் நடிக்க அழைத்தும், நடிப்பதை தவிர்த்து வந்தார் அரவிந்த்சாமி. ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்தும் அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மணிரத்னம் இயக்க இருக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். கார்த்திக்கின் மகன் கௌதம், சமந்தா, அர்ஜுன், பசுபதி போன்றோர் நடிக்கும் இப்படத்தில், சமந்தாவின் தந்தையாக நடிக்க இருக்கிறார் அரவிந்தாமி என சொல்லப்படுகிறது. மணிரத்னத்திற்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
     

Share This Page