1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இப்படியும் ஒரு சமாதானம்

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Oct 22, 2010.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பாரதிக்கு தான் செய்த கத்திரிக்காய் கொழுக்கட்டையை பார்க்க பார்க்க சந்தோஷமாக இருந்தது.ஒரு மணி நேர மெனக்கெடல் பயனுள்ளதாய் இருந்தது.என்ன கொஞ்சம் ஷேப் தான் சரியா வரவில்லை.ஏடாகூடமாய் இருந்தது.எப்படி இருந்தால் என்ன எல்லாம் வயிற்றுக்குள் போவதுதானே.ஒரு கொழுக்கட்டையை இரண்டாய் பிய்த்து வாயில் வயித்தவள் முதலில் சற்று முகம் சுளித்தாள்.பிறகு சுதாரித்துக்கொண்டு, பரவாயில்ல நல்லா தான் வந்துருக்கு,டிவி பார்த்து ஒரு பலகாரம் இவ்ளோ பிரமாதமாய் பண்ணுவதே பெரிய விஷயம் இல்லயா.மனதுக்குள் தேற்றிக்கொண்டவளாய் முகம் கழுவ சென்றாள்.சிவா வருவதற்குள் தலை சீவி,பளிச்சென்று இருக்க வேண்டும்.வந்ததும் தான் செய்த கொழுக்கட்டையை சாப்பிட வைக்க வேண்டும் என்று எண்ணியவாறே வேலையில் இறங்கினாள்.

    தன்னுடைய அலங்காரத்தை அவள் முடிக்கவும் சிவா வரவும் சரியாக இருந்தது.உள்ளே வந்தவன்,
    "ஏய் பாரதிக்குட்டி இன்னிக்கு என்ன ரொம்ப கலக்கலா இருக்கற.இந்த உலகத்துலயே என் பொண்டாட்டி தான் ரொம்ப அழகு".அருகில் வந்து அவளை கொஞ்சினான்.
    "இது தான வேணாங்கறது....நேத்து அந்த பூச்சு கடிச்சு கண்ணுகிட்ட வீங்கி இருக்கு.உங்களுக்கு நக்கலா",பொய் கோபம் காட்டினாள் பாரதி.
    "கண்டு பிடுச்சிட்டியா,வெரி இன்டெலிஜென்ட் போ...",சிவா கூற,
    "உங்கள..போய் குளிச்சுட்டு வாங்க,உங்கள அப்பறம் வச்சுகறேன்"
    "நீ இப்பவே என்ன வச்சுகிட்டுதானே இருக்கற.."அவன் கண் சிமிட்டினான்.
    "கடவுளே உங்க மொக்க தாங்க முடியல. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் செஞ்சுவச்சுருக்கேன்.சீக்கரம் போய் குளிங்க"
    மாட்டினேண்டா சாமி என்று மனதில் நினைத்தவனாய் சிவா குளியலறை நோக்கி சென்றான்.இந்த இரண்டு வருடமாய் இதுதானே நடந்து கொண்டு இருக்கிறது.பாரதி எதாவது டிவி,புக் பார்த்து புது புது ஐட்டம் செய்வதும் அதை சிவாவிடம் டெஸ்ட் செய்வதும்.குளித்துவிட்டு வந்தவன் டேபிள் மீது இருந்த கொழுக்கட்டையை கையில் எடுத்து பார்த்தான்.
    "பாரதிம்மா, இன்னிக்கு ஸ்பெஷல் என்ன பனியாரமா?"எடுத்து வாயில் வைத்தவன் திரும்பி அவளை பார்த்துவிட்டு,அவள் பார்க்காததை ஊர்ஜிதம் செய்து கொண்டு என்ன கொடுமை இது என்று தலையில் அடித்துக் கொண்டான்.உள்ளிருந்து வெளிப்பட்டவள்,
    "ம்ம் பணியாரம் இல்ல ஆப்பம்"
    "ஓ ஃபர்ஸ்ட் அப்ப்டிதான் நெனச்சேன்,அப்பறம் சைஸ பாத்துட்டு மாத்தி சொல்லிட்டேன்"
    "எல்லாம் என் தலை எழுத்து பார்த்து பார்த்து ஒவ்வொண்ணும் செய்றேன் பாருங்க நீங்க இதும் பேசுவீங்க,இதுக்கு மேலயும் பேசுவீங்க.இது கொழுக்கட்ட,எதுல பண்ணுனேன் தெரியுமா,கேட்டா ஆச்சிரிய படுவீங்க.."
    "ஆமாம இப்ப கூட ஆச்சர்யம்தான் படறேன் ஹி ஹி"
    "ரொம்ப இளிக்காதீங்க,காலையில டிவில ஒரு குக்கரி ஷோ பாத்தேங்க,அதுல தான் போட்டாங்க.கத்திரிக்காய் கொழுக்கட்டை.எப்படி இருக்கு சொல்லுங்க..."
    "ம்ம்ம்ம்ம்ரொம்பபப நல்லாஆஆஆ இருக்கு.."
    "என்ன கொஞ்சம் ஷேப் தான் நல்லா வரல இல்லீங்க"
    "ஆமாமா ,நான் கூட பனியாரம்னு நெனச்சேன் இல்ல.."
    "பூரணத்துல கொஞ்சம் உப்பும்,காரமும் ஜாஸ்த்தி,இல்லாட்டி இன்னும் சூப்பரா இருந்துருக்கும் இல்ல"
    "எக்சாக்ட்லி"அட ராமா ஏன் என்ன இப்டி கொல்லுற.அந்த ஒரு வார்த்தையுடன் நிறுத்தி இருந்திருக்கலாம்.விதி யாரை விட்டது.
    "எங்க அம்மா கூட பலாசுளைல ஒரு தரம் பண்ணுனாங்க பாரு,அது கூட கொஞ்சம் நல்லாதான் இருந்துச்சு.
    சுள்ளென்றது பாரதிக்கு.சண்டை போட இந்த காரணம் போதாதா."இப்ப என்ன சொல்ல வரீங்க.அவங்க பண்ணுனா எல்லாம் நல்லா இருக்கும்.நான் பண்ணுனா எதும் நல்லா இருக்காது அப்ப்டிதானே"
    "அய்யோ பாரதி,நீ ஏன் இப்டி தப்பா புரிஞ்சுக்கற,நான் அப்டி சொல்லல,நீ எத்தன ஐட்டம் இந்த மாதிரி சூப்பரா பண்ணி இருக்கற எனக்கு தெரியாதா.."
    "இந்த கிண்டல் கேலி எல்லாம் இங்க வேணாம்.இனிமே எதாவது நான் செஞ்சு குடுத்தேனா என்னை ஏன்னு கேளுங்க.உங்களுக்கு நைட் டிபன் கட்,இந்த கொழுக்கட்டயும் கட்.உங்க கூட பேசவே எனக்கு பிடிக்கல".சொல்லிவிட்டு விருட்டென அறைக்கு சென்றாள்.
    தப்பிச்சேண்டா சாமி இந்த கொழுக்கட்டைட்ட இருந்து என்று நினைத்தவனாய் சந்தோஷமாக கிரிக்கெட்டில் மூழ்கினான் சிவா.
    அவனுக்கு தெரியும் இந்த சண்டை இன்னும் இரண்டு நாட்களாவது தொடரும்.இன்னும் ஒரு வாரத்துக்கு எந்த புதிய முயற்சியுலும் இறங்க மாட்டாள்.அடுத்த பிரச்சனை அடுத்த வாரம் தான்.அப்போ பாத்துக்கலாம்.அடுத்த நாள் காலையிலும் எதும் பேசாமல் சிவா ஆபிஸ் கிளம்பிவிட்டான்.அலுவலகத்திலிருந்து ஐந்து முறை போன் செய்தும் அவள் எடுக்கவில்லை.சாயந்திரம் கடைக்கு கூட்டி சென்று சமாதானம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.
    சாயந்திரம் வந்ததும் அவளிடம் கடைக்கு செல்லலாம் என்று சொல்ல பதில் பேசாமல் கிளம்ப தயாரானாள்.கோபத்தை எல்லாம் இதில் காட்ட கூடாதே.தன் காரியம் கெட்டிவிடும் என்று அவளுக்கு தெரியாதா.அவளுக்கு வாங்க வேண்டிய லிஸ்டை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
    ஆனந்தா ஸ்டோர்ஸ் வந்ததும் பைக்கில் இருந்து இறங்கியவள்,நேராக கடைக்குள் சென்றாள்.வண்டியை பார்க் பண்ணிவிட்டு வந்து கொண்டிருந்தான் சிவா.அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் பாரதியால் கருதப்படும் சம்பவம்.
    கடையை நோக்கி வந்து கொண்டிருந்தவன் வழியில் ஒரு நாய் ஒன்று படுத்திருக்க,கவனிக்காதவன் அதன் வாலை சற்றே மிதிக்க,லேசாக கண் அயர்ந்து கொண்டிருந்த அந்த நாய்,கோபத்தில் கடிக்க அவன் பக்கத்தில் வர,இதை சற்றும் எதிர் பாராத சிவா ஓட்டம் எடுக்க ஆரம்பித்தான்.போகும் வழியில்,நின்றிருந்த சைக்கிள் ஸ்டேண்டு மீது அவன் விழ,எல்லா சைக்கிளும் பட படவென்று கீழே சரிந்தது.சரிந்த ஒரு சைக்கிள் பக்கத்தில் இருந்த ஆயாவின் மீது லேசாக பட,கையில் வைத்திருந்த பழ கூடையை போட்டுவிட்டு ஆயா தடுமாற,அதை தாங்க போன ஒரு தாத்தா பேலன்ஸ் பத்தாமல் தானும் ஆயாவுடன் சேர்ந்து விழ,அங்கே ஒரு ரண களம் நடந்து கொண்டிருந்தது.எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க, பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு என்ன செய்வது என்றே புரியாமல் அவள் கத்த தொடங்க,"அய்யோ அந்த நாய யாராவது பிடிங்க,அவர காப்பாத்துங்க".
    தூரத்தில் இருந்து பார்க்கயில் யார் யாரை துரத்துகிறார்கள் என்றே தெரியாத வேகத்தில் நாயும் சிவாவும் ஒருவரை ஒருவர் மிந்த,பத்து நிமிட போராட்டத்துக்குப்பின் பேண்ட்டில் சிறு கிழிசலும்,முகத்தில் அப்பிய மண்ணும்,களைந்த தலை முடியுடனும் சிவ வந்து சேர்ந்தான்.
    "அச்சோ என்னாச்சுங்க,அந்த நாய் எங்க,ரொம்ப அடிப்பட்டுடுச்சா,,"கவலையுடன் பாரதி அவன் அருகில் வந்தாள்.
    "ஓடுன வேகத்துல,போய் ஒரு கடைக்குள்ள் புகுந்துட்டேன்,அங்க இருந்தவங்க நாய விரட்டிடாங்க." அவன் பரிதாபபாய் முடித்தான்.
    "திரும்பி நின்னு ஒரு முறை முறச்சிருந்தீனா,அந்த நாய் ஓடியே போய் இருக்கும்,அதுக்குள்ள ஒரு ஆர்ப்பாட்டமே பண்ணிட்டியேப்பா" பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் சொல்ல,என்ன சொல்வதென்றே தெரியாமல் இருவரும் கடையை விட்டு வெளியில் வந்தார்கள்.
    "சாரீங்க,என்னாலதான் இதெல்லாம்.என்ன சமாதனம் பண்ணதானே கடைக்கு கூட்டிட்டு வந்தீங்க,ரொம்ப சாரி"
    "அடிப்பாவி,இத வீட்ட்லயே நீ சொல்லி இருந்தா,இந்த ஓட்டம் மிச்சம் ஆய்ருக்கும்ல."பரிதாபமாய் சொன்ன கணவனை கைத்தாங்களாய் அழைத்து சென்றாள் பாரதி.
    எப்படியோ இந்த முறை ஒரு நாயின் புண்ணியத்தால் சண்டை ஒரே நாளில் முடிந்து விட்டது.என்ன கொஞ்சம் எக்ஸ்ட் ரா அலைச்சல் அவ்வளவுதான்.:drowning
     
    Loading...

  2. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    very cute prana.

    sure to bring a smile along.
    thnx for posting.
    i liked that 'butterfly effect' accident. cool..:cheers
     
  3. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hi Prana
    romba pramadhamana kadhai
    ennale serikame irukka mudiyale ...tat too siva manasule ooditrunda dialogues ellam romba realistic a tatrubama irundudu....


    super super super
     
  4. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Ha ha !! Nice story.. Actually its not a story.. These are the scenes which happen in all young married couples.. The way you narrated it was too superb.. apdiya kan munnadi nadakra madhiri irukudhu.. too humorous...
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Malar,thanks a lot for your response.....yes its not at all a major one....:)
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female

    Thanks Swaran,,,,mostly ellar veetlaum nadakaradhu ilaya indha dialouges lam...ur baby is too cute....my kisses to her..
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female

    Thanks deepa,yes u are correct..indha 'testing' ellar veetlaum irukkum ilaya....
     
  8. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    தினமும் ஒவொரு வீட்டிலும் அரங்கேறும் நாடகத்தை தத்ரூபமாக மனக்கண் முன் உங்கள் கதையின் மூலம் கொண்டுவந்து விட்டீர்கள். வெரி குட் பரானா

    ரமா வியாசராஜன்
     
  9. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    i laughed with tears in my eyes when read the chasing incident... very cute story... you have shown the incidents very clearly... i still cant control laughing rethinking the line

    தூரத்தில் இருந்து பார்க்கயில் யார் யாரை துரத்துகிறார்கள் என்றே தெரியாத வேகத்தில் நாயும் சிவாவும் ஒருவரை ஒருவர் மிந்த,பத்து நிமிட போராட்டத்துக்குப்பின் பேண்ட்டில் சிறு கிழிசலும்,முகத்தில் அப்பிய மண்ணும்,களைந்த தலை முடியுடனும் சிவ வந்து சேர்ந்தான்.


    I know how embarrasing after the incident is over... because I have been a victim quite a few times.... :)
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Good story i enjoyed your lines a lot.keep it up prana:thumbsup
     

Share This Page