இந்தியப் பெண்களின் மனநிலையில் மாற்றம்!

Discussion in 'Jokes' started by mathangikkumar, Feb 14, 2012.

 1. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,656
  Trophy Points:
  283
  Gender:
  Female
  பெண்மணிகளால் பெருமை பெற்ற நாடு இப்பாரத நாடு! ‘மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்’ என்று பாடி பெருமைப்பட்டனர் நம் பெரியோர்கள்.

  உண்மைதான்! உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன - அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஷெர்மனி, இங்கிலாந்து, சீனா, ஷப்பான் என்று எத்தனை எத்தனை நாடு கள்! அவற்றில் பலவும் ‘போக’ நாடுகள்! உலக இன்பங்களில் துய்த்து, அலுத்து, இறுதியில் நிம்மதியற்ற மனத்துடன் வாழ்நாட்களை முடித்துக்கொள்ளும் மக்கள் நிறைந்த நாடுகளாகும்.

  ஆனால், அவற்றில் ஏதாவது ஒரு நாட்டிலாவது ஒரு சீதை, ஒரு கண்ணகி, ஒரு நளாயினி, ஒரு சாவித்திரி, ஒரு சந்திரமதி, ஒரு அனுசூயை அவதரித்தது உண்டா? தன் கற்பின் சக்தியினால் சூரியனே உதயமாகாமல் தடுத்து நிறுத்தினாள் நளாயினி. தன் கணவரின் பாதோதகத்தினால் (திருவடிகளைக் கழுவிய தீர்த்தத்தின் மகிமையால்) மும்மூர்த்திகளையும் தன் குழந்தைகளாக்கிப் பாலூட்
  டிய பெருமை பெற்றாள் அனுசூயை. காசி நகரின் வீதிகளில் தன்னையும், தன் ஒரே பிள்ளையும், ராஷ குமாரனுமான லோஹிதாஸனை தன் கணவர், ஏலம் விட மனதில் சிறிதளவும் தயக்கமில்லாமல் ஒப்புக்கொண்ட உத்தமி சந்திரமதி. அன்னியர்கள் இப்புண்ணிய பூமியை அடிமையாக்க முயற்சி செய்தபோது வீரப் போர் புரிந்து, போர்க் கள த்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரப் பெண்கள் ஜான்ஸி ராணி லட்சுமிபாய், வீரநங்கை வேலுநாச்சியார் ஆகியோர்.

  பகைவர்களின் கையில் சிக்கி, கற்பை இழப்பதைவிட உயிர் துறப்பதே மேல் என்று 800 ராஷபுத்திர ஸ்த்ரீகளுடன் தீக்குளித்து தெய்வநங்கையாக மாறினாள் சித்தூர் ராணிபத்மினி.

  தன் மானமும், கற்பும், அடக்கமும், ஒழுக்கமும், பண்பும், நேர்மையுமே பெண்களுக்கு உண்மையான அணிகலன்கள் என்பதை உணர்ந்து, இந்தியப் பெண்கள் வாழ்ந் ததால் தன்னிகரற்ற பெருமையையும், புகழையும் சேர்த்தனர் ஞானபூமியான புண்ணிய பாரதத்திற்கு!

  இந்தியப் பெண்களின் மனநிலையில் மாற்றம்!

  இத்தகைய மகத்தான பெருமைவாய்ந்த பாரதத் தாயின் வயிற்றில் பிறக்கும் பாக்கியம் செய்துள்ள பெண்கள், மேற்கூறிய பெருமைகளைப் பெற்ற ஸ்த்ரீ ரத்தினங்களின் வழியில் வந்தவர்கள் தாங்கள் என்பதை மறந்துவிட்டனர் போன்று தோன்றுகிறது. மேலைநாட்டு நாகரிகக் கவர்ச்சியினால் கவர்ந்திழுக்கப்பட்டு, தங்கள் பண்புகளையும், உயர்ந்த பழக்க வழக்கங்களையும் மறந்து வருவது கவலையை அளிக்கிறது. உடுத்தும் உடை, உண்ணும் உணவு, பேச்சு ஆகிய அனைத்திலுமே தவறான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நாகரிகம் என்ற பெயரில் அடக்கம் எங்கேயோ போ[​IMG]ய் ஒளிந்துகொண்டு விட்டது.

  ஒரு சிறு உதாரணத்தை இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.

  அந்தக் காலத்தில், பெண்கள் நடுநெற்றியில் அழகாக, சற்று பெரிய அளவில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது வழக்கம். குங்குமம் என்பது தூய மஞ்சள் பொடியைக் கொண்டு செய்யப்படுவது. மஞ்சளுக்கு மருத்துவ குணம் உண்டு.

  நடுநெற்றியில் 12 சூட்சும நாடிகள் சந்திக்கின்றன என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. அதாவது, அந்த முக்கிய நாடிகள் ஒன்று சேருமிடம் (Junction).

  உதாரணமாக, நமது இரு காதுகளுக்கும் சற்று முன்பாக, பக்கம் ஒன்றிற்கு நான்கு சூட்சும நரம்புகள் உள்ளன. வயோதிக காலத்தில், இவை வலு இழப்பதால், ஞாபகத்திறன் குறைகிறது. இந்த எட்டு நரம்புகளும்கூட நடுநெற்றியில் சேருகின்றன.

  ஆதலால்தான், பெண்மணிகள் நடுநெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

  ஆனால், நாகரிகம் என்ற பெயரில், தற்காலத்தில் பல பெண்கள் குங்குமப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. பலர் இரு புருவங்களுக்கு இடையே மிகச் சிறியதாக புள்ளிபோல் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள். பலர் பிளாஸ்டிக்கினால் செய்த பொட்டுகளை வைத்துக்கொள்கிறார்கள். இது கெடுதல்.

  நமது ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொள்வது போலாகிவிடுகிறது, நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் உபதேசித்த பழக்க வழக்கங்களை விட்டுவிடுவதால்!

  நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்துள்ள பெண்கள் Commercial education அதாவது பணம் சம்பாதிப்பதற்காகவே படிப்பு என்ற நோக்கத்தில் படித்து, வேலைக்கும் சென்றுவிடுகின்றனர். இதனால் திருமணமும் பெண்களுக்குத் தள்ளிப் போகிறது.

  பருவ வயதில் திருமணமாகாமல் இருப்பதால் உணர்ச்சிபூர்வமாக, பெண்களுக்குப் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. முன்கோபம், பெரியோர்களையும், பெற்றோர்களையும் எதிர்த்துப் பேசுவது, உறக்கமின்மை, தவறான எண்ணங்கள் ஆகியவை ஏற்பட்டு, புத்தி சபலமடைந்துவிடுகிறது. இதனை மனுதர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், ஆயுர்வேதம், மன இயல்பு நூல்கள் ஆகிய அனைத்தும் உறுதி செய்கின்றன.

  இதனால் பல குடும்பங்கள் பலவித சோதனைகளுக்கு ஆளாகி, நிம்மதியை இழந்து வருவதைத் தற்காலத்தில் பார்க்கமுடிகிறது. திருமணம் ஆனபின்பு, மிகக் குறுகிய கால த்திலேயே கணவர் - மனைவியரிடையே மனகசப்பு, வாக்குவாதம், பரஸ்பர வெறுப்பு ஆகியவை ஏற்பட்டு, இறுதியில் விவாகரத்து வரை சென்றுவிடுவதற்கு முக்கியக் காரணம் பல இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்திற்கு முன்பிருந்தே எதிர்காலம் பற்றிய பல கற்பனையான எதிர்பார்ப்புகள் உருவாகிவிடுவதும், திருமணத் திற்குப் பின் இத்தகைய கற்பனையான எதிர்பார்ப்புகளுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணரும்போது, இல்வாழ்க்கையே கசந்து விடுகிறது. தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வாழ்க்கை அமைந்துவிட்டதாக கணவரும், மனைவியும் நினைத்துக்கொள்கிறார்கள். இத்தகைய மனப் போராட்டத்தினால், ஒ ருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்ள முடிவதில்லை. ஒருவருக்காகவே ஒருவர் என்ற எண்ணம் ஏற்படுவதற்குப் பதிலாக ஒருவருக்கொரு வர்எதிரிடையாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

  மேலும், பருவ வயதைத் தாண்டி திருமணம் செய்துகொள்வதால், மனமும் சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்க மறுக்கிறது. வாழ்க்கையின் இந்த இயற்கை நியதிகளைத் தங்கள் ஞான சக்தியால் அறிந்துகொண்டதால்தான் நமது ஆன்றோர்களும், சான்றோர்களும், பெ[​IMG]ரியோர்களும், தக்க பருவ வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர். இதனையே ஷோதிட சாஸ்திரமும் வலியுறுத்துகிறது.

  வாழ்க்கை என்பது இன்பத்தை அனுபவித்து, இறுதியில் இறைவனை அடைவதற்காகவே! பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. ஆதலால், நம் பெண் குழந்தைகளை அன் புடனும், பாசத்துடனும் வேண்டிக்கொள்கிறேன் - நமது புராதன பண்பு, கலாசாரம், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் ஆகியவற்றிற்குத் திரும்பும்படி!

  ‘‘கமர்ஷியல்’’ படிப்பினால் சந்தோஜமான இல்லற வாழ்வைப் பெறமுடியாது. பெண்கள் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்பதில்லை. To be a House wife and a mother itself, is a full time job!

  சம்பாதிக்கும் பொறுப்பு கணவருக்கு. அந்த சம்பாத்யத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும் நன்கு பராமரித்து, குடும்பம் ஒரு கோயில், இல்லறம் ஓர் இனிய அனுபவம் என்பதை உருவாக்கும் தகுதியும், சக்தியும் பெண்களுக்கு மட்டுமே உள்ளது.

  பெண்கள் குடும்ப நிர்வாகத்தை மட்டும் பார்த்துக்கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கமாகும். குழந்தைகளும் நன்கு வளரும்.

  என்றும் அன்புடன்,
  உங்கள்
  ஏ.எம்.ஆர்.
   

Share This Page