1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவும் கடந்து போகும்

Discussion in 'Regional Poetry' started by jskls, Jul 4, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதுவும் கடந்து போகும்

    உன் மண்ணில்
    என் தடங்கள்
    உன் காற்றில்
    என் சுவாசம்
    உன் பாதம் பட்ட
    தூசி துகள்கள்
    என் இமையில்
    விழியின் ஒரம்
    நீர் துளிகள்
    உன் நினைவில்...

    வரவேற்பில்
    தன்னிச்சையாக
    தேடும்
    என் கண்கள்
    உன்னை
    உன் குரல் கேட்க
    மெல்ல ஏங்கும்
    என் செவிகள்
    என் இதயத்தை
    இறுக்கி
    கடந்து செல்ல
    முயல்வேன்
    உன் நினைவுகளை
    மட்டுமே
    நெஞ்சில் சுமந்து
    வேரற்ற கொடியாக
    என்றும்
    உன் சேயாக ...
    இதுவும் கடந்து போகும்!
     
    Adharv, kaniths, PavithraS and 2 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிறந்த வீட்டில் நுழையும் போது
    அன்புடன் வரவேற்கும்
    நான்கு விழிகள் தேடி
    ஏங்கும் ஏக்கம் புரிகிறது
    நிதர்சனம் இதுவே
    கலங்க வேண்டாம் மகளே

    என் ஊகம் சரியா
     
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இந்த வலியை ஏற்று கொள்ள மனம் பழகிக்கொள்ளும் . வலி என்றும் மறையாது.
    வாழையின் சில வலிக்கும் உண்மைகளில் இதுவும் ஒன்று.

    உங்கள் கவிதை என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. Can understand your pain.
     
    Adharv, PavithraS and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    absolutely Periamma. நிதர்சனம் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
     
    kkrish likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks for your support @kkrish mam.
    உண்மையே! நம்மை எதிர்பார்க்கும் கண்களுக்கு மனம் ஏங்க தான் செய்கிறது.
     
    kaniths and kkrish like this.
  6. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    :clap2::clap2: yes idhuvum kadanthu pogum...very well expressed ma'am.
     
    jskls likes this.

Share This Page