1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 8

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Jan 31, 2012.

 1. Saagini

  Saagini Silver IL'ite

  Messages:
  1,149
  Likes Received:
  39
  Trophy Points:
  83
  Gender:
  Female
  இதுவரை இல்லாத உணர்விது - 8

  முதல் நாள் இரவு பெய்த மழையில் சாலைகள் எல்லாம் தங்கள் தூசு நீங்கி பள பளத்தன . மண் வாசனை மணம் விசியது . மெல்லிய குளிர் காற்று மேனியை தழுவி செல்ல , அந்த அதிகாலை பொழுதில் பனிதுளியுடன் தலை சாய்த்து சிரித்த பூக்களை கண்களால் ரசனையுடன் தழுவிக்கொண்டே ஓடினான் சந்தோஷ் நம் கதையின் நாயகன் . ( " ஒரு நாயகன் உதயம் ஆகிறான் . ஊரார்களின் இதயம் ஆகிறான் " . மக்களே hero entry கொடுத்தாச்சு . இப்போ உங்க எல்லாத்துக்கும் " சந்தோஷ " மா ?? )


  அவன் ரசிப்பதை தடை செய்வது போல் அவன் அலைபேசி சிணுங்கியது . இதுக்கு தொலைபேசின்னு பேரு வச்சதுக்கு பதிலா தொல்லைபேசின்னு பேரு வச்சுருக்கலாம் என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டு அதை எடுத்து பேச தொடங்கினான் .

  காலை எட்டு மணிக்கு தன் குடும்பத்திற்கு உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார் கண்மணி . மஹேந்திரனும் நிமிஷாவும் மதுராவை அழைத்து வர தயாராகிக் கொண்டிருந்தனர் .

  காலிங் பெல் ஒலிக்கவும் ஜாக்கிங் சென்ற சந்தோஷ்தான் திரும்பி வந்து விட்டான் என்று கதவை திறந்த கண்மணி அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டார்.

  தன் எதிரே பயத்தில் திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்த மதுரவாணியை பார்க்க அப்படியே அச்சு அசல் சின்ன வயது ராஜியேதான் . (அந்த திரு திரு முழியதான சொல்லுறிங்க கண்மணி மேடம் ?? )  அவர் எதுவும் கூறாமல் தன்னையே உற்று நோக்கி கொண்டிருக்கவும் பயந்த சுபாவியான மதுராவிற்கு பயம் ஜெட் வேகத்தில் ஏறியது .

  " நிம்மி... " என்று தயங்கி தயங்கி வந்த அவள் அழைப்பில் நினைவுலகத்திற்கு திரும்பியவர் ,

  " வாணிமா " என்று கட்டிக் கொண்டார் .

  " யாரு மணி ?? " என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் ராஜம்.

  " நம்ம வாணி அத்தை . எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டா பாருங்க " என்று மகிழ்ச்சியாக கூறினார் .

  " அப்படியே ராஜியை போல அச்சு வார்த்தாப்புல இருக்கா " என்று நெட்டி முறித்தார் .

  " நிம்மி சீக்கிரம் அப்பாவை அழைச்சுட்டு வா " என்று குரல் கொடுத்தார் கண்மணி .

  " என்னாச்சும்மா ?? " என்று ஒரு கையில் பேப்பரோடும் மறுக்கையில் காபி கோப்பையோடும் வந்து நின்றான் சபரிஷ் கண்மணியின் மூத்த மகன் .

  " சபரி இது யாருன்னு தெரியுதான்னு பாரு ?? " என்று மதுராவை காட்டவும் அவள் தர்மசங்கடத்துடன் நெளிந்தாள் .

  சற்று உற்று பார்த்தவன் " அட நம்ம வாணி " என்று புன்னகைத்தான் .

  " என்னது வாணியா ?? " என்று அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே வந்தாள் ராகினி சபரிஷின் மனைவி .

  " ஹாய் வாணி , நீ இதுவரை அறிந்திராத இந்த குடும்ப உறுப்பினர் . என் பெயர் ராகினி . இவரை கல்யாணம் பண்ணி ரெண்டு வருசமா குப்பை கொட்டிக்கிட்டுருக்கேன் " என்று கூறி கொண்டிருந்தவள் சட்டென்று அமைதி ஆனாள் .

  அதற்கு காரணம் மஹேந்திரன் . தொழிலாளிகளிடம் சற்று கண்டிப்பு காட்டி காட்டி அதுவே இன்று அவர் குணமாய் மாறி விட்டிருந்தது . நூறு வார்த்தை பேசும் இடத்தில் பத்தே வார்த்தைகள் தான் பேசுவார் . பத்து வார்த்தை பேசும் இடத்தில் தன் கண்களாலேயே மற்றவர்களை அடக்கி விடுவார் .

  மற்றவர்களிடம் இருந்து வெளிபடுவது அந்த கம்பிரத்திற்கான மரியாதையா இல்லை பயமா என்று பிரித்துணர முடியாது .

  அவர் சந்தேகத்துடன் கண்மணியை நோக்க அதற்கு அவர் ' ஆம் ' என்று புன்னகையுடன் தலையசைத்தார்.

  சின்னதாய் புன்னகை மின்ன , " வாம்மா , எப்படி இருக்கே ? " என்று வினவினார் .

  " நல்லா இருக்கேன் " என்று படபடப்புடன் புன்னகைத்தாள் .

  அதே சமயம் அங்கு வந்த நிமிஷா , " ஹேய் வாணி " என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் .

  புன்னகை மலர நின்றவளிடம் ,

  " சாரிடா நான் நேத்திக்கு அப்படி பேசி இருக்க கூடாது " என்று மன்னிப்பு கேட்டாள் நிமிஷா .

  " பரவாயில்லை விடுடா " என்று கூறியவள் முகத்தில் தோன்றி மறைந்த வலியை கண்டவர்கள் ' இனி ராஜேஸ்வரியை பற்றி யாரும் பேச கூடாது ' என்று மானசீகமாக முடிவெடுத்தனர் .

  ஆனால் இங்கு அவளுக்கு நேர போகும் சில பல சம்பவங்களால் தன் தாய் இன்று இருந்திருக்க கூடாதா என்று மனம் ஏங்க போவதை உணர்வது கடினமே .

  ( ஜாக்கிங் சென்ற நம் கதாநாயகனை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம் . வாருங்கள் நாம் சென்று நம் கதாநாயகனை சற்றே பார்த்து விட்டு வருவோம் ) .

  ஆறடி உயரத்தில் , மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்தோடு நெற்றியில் அலை அலையாய் வந்து விழுந்த சிகையை ஒதுக்கி விட்டபடி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தான் .

  மற்றவர்களை எளிதில் எடை போடும் கூர்மையான பார்வை , சிரிக்கும் போது உடனிருப்பவர்களையும் அதில் இணைக்க தூண்டும் மந்திர புன்னகை , இடைவிடாது செய்த உடற்பயிற்சியின் பயனாய் மெருகேறிய உடல்கூறு என மொத்ததில் ஆண்மைக்கு இலக்கணமாய் திகழ்ந்தான்.

  (கேமரா மூவ் back to home )

  இனி ராஜியை பற்றி யாரும் பேச கூடாது என்று அனைவரும் மானசீகமாய் முடிவெடுத்த சமயம் தன் ஜாக்கிங்கை முடித்துக் கொண்டு போன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தான் சந்தோஷ் .

  சந்தோசை கண்ட நிமிஷா ,

  " அண்ணா வாணி வந்திருக்கா " என்றாள் மகிழ்ச்சியோடு .

  போன் பேசிக் கொண்டே அவளை பார்க்காமலே " ஹாய் " என்று கை காட்டிவிட்டு மாடிப்படியை நோக்கி சென்றான் .

  தன்னை கடந்து சென்றவனை ஒரு நொடி நோக்கியவள் , திரும்பி மற்றவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க துவங்கினாள் .

  இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடி படிக்கட்டில் ஏறி சென்றவன் , ஏதோ தோன்றவும் சட்டென்று நின்று குனிந்து நோக்கினான் . மதுராவை பார்த்தவன் " நான் அப்புறம் பேசுறேன் " என்று போனை துண்டித்தான் .  அங்கேயே நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான் . சற்றே படபடப்போடு கைகளை பிசைந்து கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்த மதுராவை பார்க்க அவனுக்கு சுவாரசியமாய் இருந்தது . ( உக்கும் ஒருத்தி பயந்தோடயும் படபடப்போடையும் பதில் சொல்லுறத பார்க்க உனக்கு சுவாரசியாமாய் இருக்கா ?? எல்லாம் நேரம்தான் )

  மதுராவிற்கென்று தனியறை ஏற்பாடு செய்துக் கொடுத்தார் கண்மணி .

  சரியாக ஒன்பது மணிக்கு ஆண்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட அடுத்த நாள் நடக்க போகும் நிச்சயதார்தத்தை பற்றி பெண்கள் அனைவரும் பேச துவங்கினர் .

  வீட்டை சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் மதுரா .

  " வாணி வா போய் தோட்டத்தை பார்க்கலாம் . அங்கே தான் நாளைக்கு டெக்கரேட் பண்ணி பா•பே வைக்க போறாங்க " என்று அழைத்து சென்றாள் ராகினி .

  தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது வாணியின் தோளில் கை போட்ட கண்மணி தூரத்தில் நின்ற மரத்தை காண்பித்து ,

  " அது என்னன்னு தெரியுதா ?? " என்றார் .

  அவர் காட்டிய திசையை நோக்கியவள் முகம் மலர ,

  " அம்மா வச்சதுதானே ? " என்று கண்மணியை நோக்கினாள் .

  " அதுவேதான் " என்று அவர் கூறியதும் அந்த மரத்தை நோக்கி விரைந்தாள் .

  மதுராவின் சிறு வயதில் அவள் தாய் இங்கு செடி நட்டு வைத்து வளர்த்தது அவளுக்கு தெளிவாக நினைவில் இருந்தது.
  அன்று இருந்ததை போலவே தோட்டம் இன்றும் திகழ்ந்தது . சின்னதாய் இருந்த செடிகள் பெரிதாகி இருந்தது . புதிதாய் சில செடிகள் நடப்பட்டு இருந்தன . இதை தவிர்த்து அங்கு பெரிதாய் எந்த மாற்றமும் நிகழவில்லை . வீட்டை தான் இடித்து கட்டி இருந்தனர் .

  தன் தாய் வைத்த மரத்தை தொட்டு பார்த்தவளுக்கு அவரே தன் கூட இருப்பதை போல் பரவசம் தோன்றியது . அதையே புன்னகையோடு சுற்றி சுற்றி வந்து தொட்டு பார்த்துக் கொண்டிருந்தவளின் தோள் தொட்டு நிறுத்தினார் கண்மணி .

  " என்னம்மா ?? " என்று புன்னகையோடு அவர் வினவ ,

  " ஒண்ணும் இல்லை " என்று புன்னகையோடும் கண்ணீரோடும் தலையசைத்தாள் .

  " தோட்டம் அப்போ இருந்தது போலவே இப்பவும் இருக்கே ? மாற்றம் ஏதும் பண்ணலையா ? " என்று வினவினாள் .

  " இந்த இடம்தான் உங்க அம்மாக்கு ரொம்ப பிடிச்ச இடம் . எப்போதும் இங்கதான் இருப்பா " என்று அந்த நாள் நியாபகம் கண்களில் மின்ன சொன்னார்.

  " அத்தே மதியம் என்ன பண்ணுறது ? அவங்க எல்லாம் ஆபிஸ்ல இருந்து வந்துடுவாங்களே ? " என்றாள் ராகினி .

  " சனிக்கிழமையும் ஆபிஸா ? " என்று வினவியவள் அதிக பிரசங்கித்தனமாய் கேட்டு விட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டாள் . (இது எல்லாம் அதிக பிரசங்கித்தனமா ? உன்ன எல்லாம் என்ன பண்ணுறதுனே தெரியலையே ? )

  " எப்பவும் இருக்காது . ஏதாச்சும் முக்கியமான வேலை இருந்தால் மட்டும் சனிக்கிழமை ஆபிஸ் இருக்கும் " என்று விளக்கமளித்தார் கண்மணி.

  சமையல் கட்டில் வேலையாக இருந்த ராகினி மற்றும் கண்மணியிடம் வந்தாள் மதுரா .

  சும்மா அமர்ந்திருக்க மனமின்றி , " நான் ஏதாச்சும் உதவி பண்ணட்டும்மா? " என்றாள் தயக்கத்துடன் .

  " பரவாயில்லமா " என்று மறுக்க எத்தனித்த கண்மணியிடம் ,

  " அதான் ஆசைப்பட்டு கேட்குதில்ல விடு , வாணியும் உதவி பண்ணட்டும் " என்று அவளுக்காக பரிந்து பேசினார் ராஜம் .

  " சரி அத்தே " என்று புன்னைகைத்தவர் ,

  " வாணி அந்த காய்களை வெட்டுமா " என்றதும் புன்னகையோடு அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற துவங்கினாள் .

  மனநிறைவுடன் தன் வேலையை தொடர்ந்தார் கண்மணி .

  அப்பொழுதுதான் நினைவு வந்தவராய் , " ஆமா நிம்மி எங்க ? " என்றார் .

  கீரையை ஆய்ந்து கொண்டிருந்த ராகினி ,

  " அவ இந்நேரம் கனவுலகத்துல சஞ்சரிச்சுட்டு இருப்பா . நீங்க அவளை தேடுறது வேஸ்ட் " என்றாள் .

  அப்பொழுது யாரோ காலிங் பெல் அடிக்க ,

  " அலங்கார வேலை பார்க்குறவங்க வந்துட்டாங்க போல . நான் போய் அதை கவனிக்குறேன் . நீங்க ரெண்டு பேரும் சமையல் வேலையை பார்த்துக்கோங்க " என்றவர் வேகமாக அங்கிருந்து சென்றார் .

  சமைக்க துவங்கிய மதுராவிற்கு எவ்வளவு காரம் , உப்பு சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பி போனாள் . அருகே நின்றிருந்த ராகினியை எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழித்தவள் ,

  " இவ்வளவு காரம் போதுமா ? " என்றாள் மெல்லிய குரலில் .

  அவளை திரும்பி பார்த்தவள் , " போதும் " என்று சொல்லி விட்டு அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் திரும்பிக் கொண்டாள் .

  என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்றவள் வாயை திறக்க எத்தனிக்க ,

  " என்ன ? "என்று திரும்பி அவரே வினவினாள் .

  " இல்லை இவ்வளவு உப்புன்னு... " பாதி வாக்கியத்தை மென்று முழுங்கினாள் .

  அவளை பார்த்து புன்னகைத்தவள் ,

  " என்னை என்னன்னு கூப்பிடறது தான் இப்போ உனக்கு பிரச்சினை இல்லையா ? " என்று அவள் வினவியதும் அசட்டு சிரிப்பு சிரித்தாள் .

  " என்னை அக்கான்னு கூப்பிடு " என்றவள் ,

  " இவ்வளவு உப்பு போதும் " என்று எடுத்து காட்டி விட்டு வாணலியில் போட்டாள் .

  சமர்த்தாய் தலை அசைத்தவள் , புன்னகையோடு அந்நாளை கழிக்க தயாரானாள்.

  --உணர்வுகள் விளையாடும்....​
  - நூருல் & நிலா​
  :thumbsup
   
  2 people like this.
  Loading...

 2. devivbs

  devivbs Platinum IL'ite

  Messages:
  1,572
  Likes Received:
  1,073
  Trophy Points:
  283
  Gender:
  Female
  hi NooruNila..
  hero intro kudutthu santhosa padutha Santhosh ne per vatchuteengala pa..
  Mathu Mahendran veetukku thaan vara nu sollama ippadi engala kavala pada vatchuteengale pa.. aanalum inga avalukkaaga sogam kaathutu irukku nu solli kavala pada vaikkureengale!
  neenga kathayin naduve podum comments ku naan periya visiri pa..
  kolunthanukku Mathu va jodi serka ippave thannai akka nu kooppida sollitale Ragini..
  Mathu maratthai sutthi paarttha scene very touching ma.. nice..
  -devi.
   
  1 person likes this.
 3. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Kadhai superah poguthu pa. Madhura enga poga poralonnu engala yosikka vachittu ippadi coolah avala Nimisha veetukku vara vachiteengale............
   
  1 person likes this.
 4. Padhmu

  Padhmu IL Hall of Fame

  Messages:
  9,920
  Likes Received:
  1,882
  Trophy Points:
  340
  Gender:
  Female
  going on very interesting.
   
  1 person likes this.
 5. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hi ma...
  madhura nimmi veetuku than varanu sollama nalla bayamurutheetenga...
  nimmi's family s so sweet.... madhura kitta ellarum passam ah irukkanga......
  santhosh eppo madhu kitta pesuvan....
   
  1 person likes this.
 6. JananiSubbu

  JananiSubbu Silver IL'ite

  Messages:
  300
  Likes Received:
  57
  Trophy Points:
  68
  Gender:
  Female
  hi...
  indha update nadula iruka comments super....
  kadaisila hero veetukue madhura vanthuta..it was a surprise shock!!!
   
  1 person likes this.

Share This Page