1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 6

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Jan 29, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 6


    ராஜேஸ்வரியையும், மதுரவாணியையும் அங்கே அனைவரும் ராணியை போல் தாங்கினர் . அவர்களின் சின்ன முதலாளியின் மனைவியும் மகளும் ஆயிற்றே . எப்பொழுதும் அமைதியாய் இருக்கும் இருவரையும் அனைவருக்கும் பிடித்து போனதில் அச்சர்யம் ஏதும் இல்லையே .

    ராஜேஸ்வரி தன் மகளிடம் எப்போதும் கூறும் வாசகம் ,

    " யாருக்கும் எப்போதும் தொந்தரவா இருக்க கூடாது " இது அவள் கணவன் அவளுக்கு கூறிய வாசகம் .

    " தகுதிக்கு மீறி ஆசை படக் கூடாது " இது அவள் பாட்டி எடுத்துரைத்தது.

    " அடுதவங்க பொருளுக்கு ஆசை படக்கூடாது " இது அவள் தன் மகளுக்கு எடுத்துரைப்பது.

    எதிர்காலத்திற்காக தன் மகளை இப்போதே தயார் செய்தாள் ராஜி.
    தாயின் ஒவ்வொரு வாக்கியமும் மதுரவாணியின் மனதில் கல்லில் பதித்த சுவடுகள் ஆயின.

    மஹேந்திரன் குடும்பத்தார் மாதம் ஒரு முறை வந்து போயினர் . மஹேந்திரன் புதிதாய் தொடங்கிய தொழில் சூடு பிடிக்க அவர் அதை மேம்படுத்துவதில் முழு மூச்சோடு முனைந்தார் . கண்மணிக்கு தன் பிள்ளைகள் மற்றும் கணவர் பின் ஓடவே நேரம் சரியாக இருந்தது . இதனால் அவர்கள் சுந்தரபாண்டியபுரம் செல்வது குறைந்தது .

    ராஜேஸ்வரி அங்கு சென்ற ஒரு வருடதிற்கு பின் வீரபாண்டியன் இயற்கை எய்தினார் . இறப்பதற்கு முன் தன் சொத்தில் ஒரு பகுதியை ராஜேஸ்வரியின் பெயரில் எழுதி வைத்திருந்தார் .

    அவர் இறுதி ஊர்வலத்திற்கு மஹேந்திரன் வந்திருந்தார்.

    அவர் ஊருக்கு திரும்பும்போது ராஜியிடம் , " இனியும் நீ இங்க இருக்கணுமா ராஜி ? ? வா நம்ம வீட்டிற்கு போகலாம் " என்று அழைத்தார்.

    இதனை கண்மணியும், ராஜமும் ஆமோதித்தனர் .

    ஆனால் ராஜியோ " இல்லண்ணா நாங்க இங்கயே இருந்திறோம் . இங்க நிறைய வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு " என்று மறுத்துவிட்டாள் .

    அதன் பிறகு அவரும் வற்புருத்தவில்லை .

    மஹேந்திரன் குடும்பத்தினர் கிளம்பி சென்ற மூன்றாம் நாள் தயாளன் முன் வந்து நின்றாள் ராஜி .

    " என்னம்மா விசயம் ? " என்று அவர் வினவவும் அவர் கையில் சில பத்திரங்களை கொடுத்தாள் .

    " என்னதுமா இதெல்லாம் ? " என்றார் புரியாமல்.

    " இது எல்லாம் அய்யா எனக்கு கொடுத்த பத்திரம் "

    " அதை ஏன்மா எங்கிட்ட கொடுக்குறே ? "

    " என்னை மன்னிச்சிடுங்க . எனக்கும் எம் புள்ளைக்கும் இது வேண்டாம் "

    " ஏன்ம்மா ? "

    " அவுக வேணாமுன்னு உதறின சொத்துல எனக்கு எந்த உரிமையும் கிடையாது . அதுனால எனக்கு இந்த சொத்து வேண்டாமுங்க "

    " இது உன் புள்ள... " என்று அவர் எதோ பேச துவங்கவும் ,

    " அவளுக்கும் வேண்டாமுங்க . நாங்க ரெண்டு பேரும் வேண்டாமுன்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கோம் . தயவு செஞ்சு வற்புருத்தாதிங்க " என்றவர் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

    இங்கு நடந்த எந்த ஒரு விசயமும் மஹேந்திரனுக்கு தெரியாது . அவர் அடுத்த வாரம் திரும்பி வந்த போது ராஜேஸ்வரி இருக்கும் இடத்தை அவரால் அறிய முடியவில்லை .

    தன் குழந்தையை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விட்டாள் ராஜி .

    தாய் மனதையும் நிலையையும் புரிந்து நடந்து கொண்டாள் மதுரவாணி .

    மற்ற பிள்ளைகள் விளையாட கிளம்பினால் தன் தாய்க்கு உதவி செய்ய அமர்ந்து விடுவாள் மதுரவாணி .

    ராஜிக்கு அவள் கற்று கொண்ட சமையல் கலையும் , தையல் கலையும் கை கொடுத்தது . அதனை கொண்டு சற்று நல்ல பள்ளியிலேயே மதுரவாணியை படிக்க வைத்தார்.

    சற்று சுட்டிகையான மதுரா பள்ளியில் எப்போதும் முதல் மாணவியாக திகழ்ந்தாள் . பனிரெண்டாம் வகும்பு தேர்வில் மாவட்டதிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள்.

    பள்ளியின் ஹெட்மாஸ்டர் தனக்கு தெரிந்தவரிடம் சொல்லி மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறினார் . ஆனால் தான் முடிந்த அளவு விரைவாக படிப்பை முடித்து கொண்டு தன் தாயிற்கு உதவ வேண்டும் என்று அந்த படிப்பை மறுத்து கம்ப்யூட்டர் படிப்பில் சேர்ந்தாள் .

    அவளுடைய மதிப்பெண்ணின் காரணமாக அவளுக்கு மெரிட்டில் சீட் கிடைத்தது . ஹாஸ்டல் செலவுக்கு மட்டும் அவள் தாய் பணம் கட்டினார் .

    ஒரு வருட படிப்பு முடித்து விடுமுறைக்கு நல்ல மதிப்பெண்களுடன் ஊருக்கு திரும்பிய மதுரா தன் அன்னையை கண்டதும் அதிர்ந்து விட்டாள் .



    எப்பொழுதுமே ராஜேஸ்வரி சரியாக சாப்பிட மாட்டார் . மதுரா தான் வற்புருத்தி உணவு உட்க்கொள்ள வைப்பாள் . அதனாலேயே அவர் மெலிந்த தேகத்துடனே இருப்பார் .

    இம்முறை அவள் ஊருக்கு சென்ற போது முன்னே இருந்ததை விட பாதியாகி இருந்தார் .

    " என்னம்மா இப்படி ஆகிட்டே ? சரியா சாப்பிடுறது கூட இல்லையா? " என்று நா தழுதழுக்க தன் அன்னையை கட்டிக் கொண்டாள்.

    ஐந்து மாத பிரிவு இருவரையும் உணர்ச்சிமயமாக்கியது . பொங்கல் விடுமுறைக்கு வந்தவள் பரிட்சை எல்லாம் எழுதி விட்டு மே மாத கடைசியில் தான் ஊர் திரும்பினாள் .

    தன் கணவனின் பிரிவை மகளை பார்த்து ஓரளவு திட படுத்தி கொண்டவாரால் மகளின் பிரிவை தாங்க முடியவில்லை . அதுவே அவரை நொடிய செய்தது .

    " அதெல்லாம் இல்லடா . நான் நல்லா இருக்கேன் . நீ எப்படிம்மா இருக்க . பரிச்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா ? " என்று அவர் வினவியதும் வேகமாய் தலையசைத்தவள் ,

    " ம்.. எப்பவும் போல சுப்பரா எழுதி இருக்கேன் "
    என்றவள் அன்னையோடு தன் நாட்களை சந்தோசமாக செலவிட்டாள் . அவை தான் தன் அன்னையோடு தான் செலவிடும் கடைசி நாட்கள் என்று அவள் அறிய வாய்ப்பில்லையே .

    மீண்டும் அவள் விடுதிக்கு செல்லும் நாள் நெருங்கியது . மீண்டும் ஒரு பிரிவை தாங்க இயலாத ராஜேஸ்வரி மீலா துயில் கொண்டார் . தனக்கு ஒரே உறவான தன் அன்னையின் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் துவண்டு போனாள் மதுரா .



    அந்த துயரிலும் ஆறுதலாக,

    " இனி தன் அன்னை எக்காரணம் கொண்டும் வருத்தப்படவோ , கஷ்டப்படவோ தேவையில்லை " என்று மனதை தேற்றி கொண்டாள் .

    அவளுக்கு நினைவு தெரிந்து அவள் அன்னை சிரித்து அவள் பார்த்ததே கிடையாது . ஒரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டவள் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை செய்ய துவங்கினாள் . தன் தாயின் இறுதி காரியங்களை முடித்தவள் ரேகாவின் உதவியோடும் அவள் தந்தையின் உதவியோடும் ரேகாவின் வீட்டருகே இருந்த கவர்மெண்ட் ஹாஸ்டலின் சேர்ந்தாள் . தனக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை விற்று விட்டு தன் படித்துக் கொண்டிருந்த சென்னை கல்லூரியில் வந்து படிக்க தொடங்கினாள் .

    உதவுகிறேன் என்று கூறிய ரேகாவின் உதவியை மறுத்து விட்டு அவள் வீட்டில் சும்மா கிடந்த கார்செட்டை கிளீன் செய்து அந்த தெருவில் இருந்த குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்தாள் . அதன் மூலம் வந்த வருமானமும் அவள் தாய் அவளுக்காக விட்டு சென்ற கொஞ்ச பணமும் அவளுடைய செலவுகளை ஈடு செய்தது .


    தன் அன்னை இல்லாத வாழ்வு கொடுமையாக இருந்தாலும் அதனை சகித்துக் கொண்டு வாழ பழகி விட்டாள் .

    இன்று நிமிஷாவுடன் ஆன சந்திப்பு அவளிடம் ராஜேஸ்வரியின் தாக்கத்தை அதிகப்படுதியது .

    தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைக்க வழியின்றி இரவு முழுவதையுமே கழித்தாள் .

    தூக்கமின்றியும் , கண்ணீர் விட்டதாலும் சிவந்து வீங்கிய கண்களை குளிர்ந்த நீர் விட்டு மாற்றி கல்லூரிக்கு செல்ல அயத்தமானாள் .

    அவள் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்ததும் முதல் ஆளாய் அவள் முன் தோன்றினாள் ரேகா .



    " ஏய் மதுரா , உனக்கு என்ன ஆச்சு . ஏன் நேத்திக்கு டியூசன் எடுக்க வரல " என்று கேட்டுக் கொண்டு அவளை நெருங்கியவள் அவள் முகம் பார்த்து பேச்சை நிறுத்தினாள் .

    " ஹேய் என்னாச்சுப்பா அழுதியா ? " என்று கனிவாக அவள் வினவியதும் துக்கம் தொண்டையை அடைத்ததும் மதுராவிற்கு .

    " அம்மா நியாபகம் வந்திடுச்சா ? " என்ற அவள் கேள்விக்கு ’ஆம்’ என்று தலையசைத்தவள் நிமிஷாவை கண்டதையும் அவள் நட்பை பற்றியும் கூறினாள் .

    " எந்த காரணத்தை கொண்டும் அவகிட்ட அம்மாவை பற்றி சொல்லிடாதடா " என்று வேண்டுகோள் வைத்தாள்.

    " சொல்ல மாட்டேன்டா கவலைபடாதே " என்றவள் ஆறுதலாக அவள் தோள் பற்றி அழைத்து சென்றாள்.

    --உணர்வுகள் விளையாடும்....​
    - நூருல் & நிலா

     
    3 people like this.
    Loading...

  2. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    very sad madhu voda amma vum eranthutanga...
    nimisha kooda ini touch irukuma...avanga veetuku povala???
    eager for next update...
     
    2 people like this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma....great update...
    rajeswari um madhu vum sothu vendamnu kuduthadhu super...
    raji um irandhutadhu romba kastama irundhudhu....
    madhura yaroda help um edhirparkama avale thevaiyanadha pathukradhu ellame great...
    en mahendran family ah contact pannama vittutanga???
    ini nimisha moolama madhu inga irukradhu mahendran family ku theriyum.....
    hero va vara sollunga ma.....
     
    2 people like this.
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    wow !! very touching. super today.
     
    1 person likes this.
  5. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai JananiSubbu
    thanks for the comment ma :)
     
    1 person likes this.
  6. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi suganyarangasam
    hero ithoe vanthu kondae irukkiraar ;-)
    thanks for d comment ma :)
     
    1 person likes this.
  7. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi Padhmu
    thanks ma :)
     
    1 person likes this.

Share This Page