1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 2

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Jan 25, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai friends,
    This is noorul. இதுவரை இல்லாத உணர்விது storyin matroeru writter. hope you guys will like it :) .here is the 2nd update.


    இதுவரை இல்லாத உணர்விது - 2


    பத்து மணிக்குத்தான் H.R வருவார்கள் என்பதால் மாணவர்கள் தங்களுக்குள் பேசி கலகலத்துக் கொண்டிருந்தனர்.

    கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்த மதுரவாணி மறுக்கையில் பேனாவை வைத்து உருட்டிக்கொண்டிருந்தாள்.

    " மதுரா " என்ற அழைப்பில் நிமிர்ந்தவள்,

    " என்ன ரேகா " என்றாள்.

    " என்னோட பென்னை காணோம் . நீ தான் எப்போதும் ரெண்டு பேனா வைத்து இருப்பாயே எனக்கு ஒரு பேனாவைக் கொடு " என்று ஒரு பேனாவை வாங்கிக் கொண்டு சென்றாள்.

    ரேகாவின் அழைப்பில் மதுரவாணியை கவனித்துக் கொண்டிருந்தவரது புருவத்தில் முடிச்சுக்கள் விழுந்தன.

    அமைதியாக அமர்ந்திருந்த மதுரவாணி , " வாணி " என்ற அழைப்பில் நிமிர்ந்தாள்.

    சாதாரணமாக நிமிர்ந்தவள் தன் எதிரே நின்றவரை ஒரு நொடி உற்று நோக்கியவளுக்கு அப்பொழுதுதான் ஒன்று தெளிவாக உரைத்தது . தன் தாயையும் சொந்தக்காரர்களையும் தவிர்த்து வேறு யாரும் தன்னை "வாணி" என்று அழைப்பதில்லை என்று . கல்லூரியில் எப்பொழுதுமே அவள் " மதுரா " தான்.

    எதிரே நிற்பவரை பார்க்க எங்கோ பார்த்த நியாபகம் பனி மூட்டம் போல் இருந்தது.

    குழம்பி போய் எழுந்து நின்ற மதுராவை பார்த்தவர்

    " நீங்க மதுரவாணிதானே " என்று சந்தேகத்தோடு வினவினார்.

    " ஆமா " என்று தலையசைத்தாள் இன்னும் குழப்பத்தில் இருந்து முழுதும் விடுபடாமல்.

    இந்த பதிலை கேட்டதும் எதிரே நின்றவரது முகம் தாமரையாய் மலர்ந்தது.

    " ஏய் என்னை இன்னும் உனக்கு அடையாளம் தெரியலையா ? " என்று உரிமையோடு வினவிய குரல் எதிரே நிற்பவரை யார் என்று அடையாளம் காட்டியது.

    புன்னகையால் முகமும் கண்களும் மலர " நிம்மி " என்று கைப்பற்றி கொள்ள எத்தனிக்க ,

    " குட் மார்னிங்க் க்ளாஸ் , ப்ளிஸ் டேக் யுவர் சிட்ஸ் " என்று H.R உள்ளே நுழைந்தார்.

    செல்ல மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் நிம்மி என்று அழைக்கப்படும் நிமிஷா.

    மாணவர்கள் H.R க்ளாஸை கவனமாக கவனிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் நாம் நிமிஷாவை பற்றிய சிறிய அறிமுகத்தை பார்த்து விட்டு வருவோம் .

    நிமிஷா BBM மாணவி . தந்தை மகேந்திரன் பிஸினஸ்மேன் . தாய் கண்மணி ஒரு அன்பான அன்னை . நிமிஷா இவர்களின் செல்ல மகள் . நாகா£க மங்கை . தோள்ப்பட்டை வரை வெட்டப்பட்ட மூடி . அதை இறுக கட்டி போனிடெயில் போட்டு இருந்தாள் . வெண்மையான தேகம் . சாந்தமான முகம் , அதற்கு நேர்மாறாக குறும்புத்தனம் கொண்ட குணம். துரு துரு என்று ஒரிடத்தில் நில்லாமல் மான் போல் துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருக்கும் கால்கள் . மொத்ததில் ஐந்திரை அடி உயரத்தில் இருக்கும் ஐஸ்க்ரிம் சிற்பம் நிமிஷா.

    HR கூறியதை கவனித்தார்களோ இல்லையோ இருவரும் புன்னகை மலர ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    க்ளாஸ் முடிந்ததும் ஒருவரை நோக்கி மற்றொருவர் விரைந்தனர்.

    " நிம்மி எப்படிடா இருக்க ? " என்று நா தழுத்ழுக்க வினவினாள் மதுரா.

    மதுராவின் கைகளைப் பற்றிக் கொண்டவள்,

    " நான் நல்லா இருக்கேண்டா. நீ எப்படி இருக்கே ? ஆண்டி எப்படி இருக்காங்க ? இப்போ எங்கே தங்கி இருக்கே ? " என்று கேள்வி கணைகளை தொடுத்தாள்.

    புன்னகை மலர , " நான் நல்லா இருக்கேன்டா . நான் இப்போ ஹாஸ்டலில் தங்கி இருக்கேன் . நீ இப்போ என்ன படிக்கிறே ? " என்றவள் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் தோழியை கஷ்டப்படுத்த மனமின்றி அவள் கேட்ட கேள்விகளில் ஒன்றிக்கு பதில் அளிக்காமல் விட்டாள்.
    அவள் மறைத்த விஷயம் நிமிஷாவிற்கு தெரியவரும் போது அவள் எடுக்க போகும் முடிவு தன் வாழ்வின் தடத்தை மாற்றும் என்று அவள் கற்பனையில் கூட நினைத்து இருக்க மாட்டாள் .

    " நான் BBM படிக்குறேன் டா. நீ ? "

    " நான் B.Sc Computer Science டா " என்று ஊற்சாகமாக பேசிக் கொண்டனர்.

    அன்று மாலை நிமிஷா தன் ஸ்கூட்டியில் சென்ற பின் தன் ஹாஸ்டலை நோக்கி நடந்தாள் மதுரா.

    தன் அறைக்கு சென்றவள் உடை கூட மாற்ற மனமின்றி கட்டிலில் விழுந்தாள்.

    நிமிஷாவின் சந்திப்பு பழைய நியாபகங்களை தட்டி எழுப்பியது . ஒரு பெருமூச்சோடு அதனுள் மூழ்கி போனாள் . அவளை தொடர்ந்து நாமும் அவள் நினைவுகளோடு பயணிபோம் .

    சூரியன் இயற்கையின் அழகை மேலும் மெருகேற்றிக் கொண்டு தன் கூட்டிற்கு சென்று கொண்டிருந்தான் . வானம் தங்க தகடாய் ஜொலித்தது . பறவைகள் கானம் இசைத்துக் கொண்டு தங்கள் மாளிகைக்கு திரும்பி கொண்டிருந்தன .

    நானும் ஒன்றும் சளைத்தவள் இல்லை என்று சலசலத்துக் கொண்டிருந்தது நீரோடை . இயற்கை அழகு செழித்து வழிந்த சுந்தரபாண்டியபுர ஆத்தங்கரையில் அமர்த்து இரண்டு நாட்களுக்கு முன்பு பொரித்திருந்த குருவி குஞ்சுகளையும் அதன் பெற்றோர் அதற்கு உணவு வழங்குவதையும் பார்த்து ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ராஜேஸ்வரி.

    " ராஜி என்னடி பண்ணுறே ? " என்று முதுகில் ஒன்று வைத்தாள் கற்பகம்.

    " அக்கா குருவி அழகா இருக்கில்ல " என்று மழலையாய் முகம் மலர்ந்தாள் ராஜேஸ்வரி.

    " நீ இப்படியே மெய் மறந்து பொழுது சாயிறது கூட தெரியாம ரசிச்சுக் கிட்டு இரு . அங்கே உன்னை காணோம்னு உங்க பாட்டி தேடுறாங்க "

    " அச்சச்சோ சரிக்கா நான் கிளம்புறேன் " என்று ஓட எத்தனித்தவளிடம் ,

    " ஏய் ஏய் தண்ணி குடத்தை தூக்கிகிட்டு போ " என்று குரல் கொடுத்தாள் கற்பகம்.

    திரும்ப ஓடி வந்து குடத்தை எடுத்துக் கொண்டு " நன்றிக்கா " என்று நவிழ்ந்து விட்டு தன் வீடு நோக்கி விரைந்தாள்.

    " என்ன புள்ளையோ இன்னும் சின்ன குழந்தையாட்டம் விளையாட்டு தனமா இருக்கு . இது எல்லாம் எப்படி போய் இன்னோரு வீட்டில வாழ போகுதோ . மாமியார்காரி அவலாட்டம் மென்னுபுடுவா . அந்த கடவுள் தான் இதுக்கு துணை நிற்கணும் " என்று வேண்டிக் கொண்டாள் கற்பகம்.

    தன் தாவணியை இழுத்து சொருகிக் கொண்டு பூப்போட்ட பாவாடையை தடுக்கி விடாது லேசாக தூக்கி பிடித்து கால் கொலுசு சலசலக்க தன் வீட்டை நோக்கி விரைந்தாள்.

    நடந்துக் கொண்டிருந்தவளின் காதுகளின் குயிலின் இன்னிசை விழுந்தது . அதனை ரசித்தவள் எந்த புறம் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிய சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
    பாதையில் இருந்து கவனம் சிதறியதால் வழியில் கிடந்த கல்லை தெரியாமல் மிதித்தாள் . சலவை கல் வழுக்கியதால் விழுந்து விடாமல் இருக்க கால்களை நன்றாக ஊன்றினாள் . ஆனால் கவனக்குறைவாக தழைய தழைய கட்டியிருந்த பாவாடையில் கால் பதிக்க அது அவளை நிலை தடுமாற செய்தது .

    குடத்துடன் சரிய போனவளை ஒரு வலிய கரம் தாங்கி பிடிதது.
    (" நம் தன நம் தன நம் தன நம் தன " கோரஸ் பாடிட்டு பின்னாடி வெள்ளை உடை தேவதைகள் வருவாங்க ன் னு நானும் எதிர்பார்த்தேன். அவங்க வராத காரணத்தால் எல்லோரும் அவங்க அவங்களுக்கு பிடிச்ச பழைய பாட்டையோ இல்லை புதிய பாட்டையோ கற்பனை பண்ணிக்கோங்க. )

    தடுமாற்றத்தால் ஏற்பட்ட படபடப்பும் , தன்னை ஒரு ஆண்மகன் தாங்கி பிடித்து நிறுத்தியதால் வந்த வெட்கமும் ஒரு சேர தாக்க எதிரே நின்றவனது முகத்தை கூட பார்க்காமல் ஓட துவங்கினாள் .

    அவள் ஓடுவதை கண்டவன்,

    " உங்க ஊருல நன்றியெல்லாம் சொல்ல மாட்டிங்களோ ? " என்று கத்தினான் . (உக்கும் இங்க முகத்தையே பார்க்க காணாம். இதுல நன்றி வேற சொல்லலையாம்) .

    அவன் கத்தவும் அவள் நடை இன்னும் விரைவு படுத்தப் பட்டது.

    " பாத்து பாத்து மீண்டும் விழுந்த என்னால தாங்கி பிடிக்க வர முடியாது " என்று அவன் குரல் அவளை துரத்தியது . (அடடா என்ன இப்படி சொல்லிடே . நான் வெள்ளை உடை தேவதைகளை இந்த தடவை வர சொல்லாம்னு பார்த்தேன் . ஸாரி எஞ்சல்ஸ் உங்களுக்கு இப்போ வேலை இல்லையாம் ) .

    தன் வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தாள் ராஜி .

    அவளுக்காகவே வாசலில் காத்திருந்தாள் பொன்னாத்தா.

    " எங்க புள்ள போன ? " என்று வினவியவர் குரலில் கண்டிப்பு இருந்தது.

    " தண்ணி எடுக்க ஆத்தங்கரைக்கு தான் போனேன் பாட்டி. சொல்லிட்டு தானே போனேன் " என்று தலை நிமிராமல் பதிலளித்தாள்.

    " வயசானவங்களுக்கு அதெல்லாம் நியாபகமா இருக்கும். சரி தண்ணி எடுத்துட்டு வரவா இம்புட்டு நாழி ? " என்று வினவியதும்,

    கண்களை விரித்து தான் பார்த்த குருவிகளை பற்றி கூற துவங்கினாள்.

    " அந்த குருவிகள் எல்லாம் அழகா இருந்துச்சு பாட்டி " என்று கூறியவளை ஆசையோடு நோக்கியவர் அதனை குரலில் காட்டவில்லை.

    " என்ன புள்ளம்மா நீ . இன்னும் பூனைய பார்த்தேன் , குருவிய பார்த்தேன்னு பராக்கு பார்த்துட்டு நின்னுகிட்டு . பொட்ட புள்ள வெளில போன சுருக்குன்னு போயிட்டு சுருக்குன்னு வரணும்னு தெரிய வேண்டாமா ? " என்று காட்டாமாக வினவவும்.
    " மன்னிச்சுகோங்க பாட்டி " என்று தலைகுனிந்தாள்.

    " உலகத்தை புரிஞ்சு நடந்துக்கனும் புள்ள . ஒரு பயலும் உன்னை பத்தி குறை சொல்லாதது போல நடந்துக்கனும் . கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இந்த கிழவி எப்படி புள்ளைய வளர்த்திருக்கு பாரு . தன் வயித்து புள்ளையா இருந்த இப்படி வளத்திருப்பாளான்னு எந்த பயலும் நாக்கு மேல பல்லை போட்டு பேச கூடாது . இந்த கிழவிக்காகவாவது நீ இதை பண்ணணும் புள்ள . புரிஞ்சதா ? "

    " புரிஞ்சது பாட்டி. நான் இனி கவனமா நடந்துக்கிறேன் " என்று குடத்தை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

    பாயில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அன்று மாலை சந்தித்தவனது குரல் ஒலித்தது.

    " சே ராஜி ஒரு நன்றி கூட சொல்லாம இப்படியா ஓடி வர்றது " என்று தன்னை தானே நொந்துக் கொண்டாள் .

    " இருந்தாலும் அந்த ஆளுக்கு ரொம்பத்தான் தைரியம் . முதல பார்க்குற பொண்ணுக்கிட்ட எப்படி பேசுறாரு . இனிமே அவரை பார்த்த ஒதுங்கி போயிடனும் " என்று எண்ணிணாள் . ( எப்படிமா பேசினாரு ? நீ ஒரு நன்றி கூட சொல்லல . அதை கேட்டது ஒரு தப்பா ?? )

    " அவுக முகத்தையே பார்க்கல இதுல திரும்பி பார்க்கமாட்டாளாம் " என்று தன்னையே திட்டிக் கொண்டாள் . ( அப்பப்போ உனக்கும் மூளை வேலை செய்யுது ராஜி ) .

    கதவு தட்டப்படும் ஒலி கேட்டு மூடி இருந்த கண்களை திறந்தாள் மதுரா .

    எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தால் எதிர் அறை தோழி சுதா நின்றிருந்தாள்.

    " என்ன படுத்துடியா ? சீக்கிரம் வா சாப்பிடலாம் " என்று அழைத்துக் கொண்டு சென்றாள்.

    சுதாவின் குறுக்கீட்டால் மதுராவின் எண்ண ஓட்டங்கள் தற்காலிகமாக தடை பட்டது.

    சுதாவின் வற்புருத்தலால் கொஞ்சம் கொறித்தவள் சாப்பிட்டேன் என்று பேர் செய்து கொண்டு தன் அறைக்கு எழுந்து சென்றாள்.

    அறைக்கு சென்ற மதுரா மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.

    தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு இயந்திரத்தன்மையோடு அனைதையும் செய்து முடித்தாள்.

    இரவு உணவுக்கு பின் படுக்கையில் விழுந்தவள் தன் எண்ண அலைகளுக்குள் மீண்டும் புகுந்தாள்.

    --உணர்வுகள் விளையாடும்....​
     
    2 people like this.
    Loading...

  2. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Story romba nalla narrate panreenga. Both are doing a very good job. Waiting eagerly for the coming episodes..........
     
    1 person likes this.
  3. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks alot Priyapradeep :)
     
    1 person likes this.
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Nice Noorul, who is rajeswari nimisha's mom or mathura's mom?
     
    1 person likes this.
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    appo madhura va pathutu irundhdhu nimmi dhana!!!!!!!!!!
    who s raji?????
     
    1 person likes this.
  6. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...

    raji kum madhu kum enna relation
    madhura va patha thu hero nu nenachen....
     
    1 person likes this.
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    going on interesting.
     
    1 person likes this.
  8. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai ramyasuresh

    rajeswari yaarunnu seekiram solla try pananroem but mudiyumaannu thaan therilai ;-)
     
  9. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai suganyarangasam

    nimmiyae thaan ma.
    raji yaarunnu seekiramae therinthu vidumma ;-)
     
  10. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hai JananiSubbu

    rajikkum mathukkum relation irukka illaiya enbathu seekiramae therinthu vidum ;-)
    avvalavu seekiram hero vanthuduvaara :bonk avarukku innum evvalavu bittu poeda vaendi irukku so porumai porumai :thumbsup:hide:
     

Share This Page