1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 12

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 9, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 12


    " வா " என்ற சந்தோஷின் அழைபிற்கு தயங்கி தயங்கி உள்ளே சென்றாள் . ' வா ' என்று புன்னகையோடு ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி தலையசைத்து அழைத்து கம்யூட்டர் அருகில் இருந்த சேரினை காட்டி உட்காரும்படி சைகை செய்தான்.

    மெதுவாக நடந்து சென்று அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள். அவளுடைய இருபுறமும் தன் கைகளை ஊன்றியவன் கம்யூட்டரில் போட்டோவை தேட தொடங்கினான்.

    அவனின் இந்த செயல் அவளுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது . ' இங்கு வந்தது தப்போ ' என்று நெளிய தொடங்கினாள் .

    ஆனால் அவள் எண்ணங்கள் சுவிட்ச் போட்டது போல் சட்டென்று நின்றது . திரையில் தோன்றிய பிம்பங்களை பார்த்தவள் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது .

    " அப்பா அம்மா " என்று திரையை தொட்டு பார்த்தாள் .

    ஏதோ அவர்களே தன் முன் தோன்றி தொடுவதை போல பரவசப்பட்டாள் . சிறு குழந்தை போன்ற அவளுடைய செய்கையை பார்த்து புன்னகைத்தவன் மோடோவை இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான்.



    சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் அவள் இப்போதைக்கு படத்தை மாற்ற மாட்டாள் என்று தோன்ற அவனே அடுத்த படத்திற்கு மாற்றினான்.

    திடீரென்று படம் மாறவும் ஒரு கணம் மிரண்டவள் பின் சுதாரித்து கொண்டு சுய உணர்வு பெற்று கண்ணீரை துடைத்துக் கொண்டு அருகில் இருந்தவனை பார்த்து நன்றியோடு புன்னகைத்தாள்.

    தன் தாய் தந்தை இணைந்திருந்த நான்கு ஐந்து போட்டோவை பார்த்தவள்,

    " அம்மா சிரிக்கும் போது அழகா இருகங்க இல்ல ? " என்றாள்.

    " ஆமா நீதான் நேராவே பார்த்து இருப்பேல்ல "

    " ம்ஹ¤ம் " என்று தலையசைத்தவள்,

    " இல்ல நான் பார்த்ததே இல்லை . எனக்கு நினைவு தெரிஞ்சு அம்மா சிரிச்சாதே இல்லை . இப்போத்தான் அவங்க அப்பாக் கூட இருக்குற போட்டோலத் தான் சிரிச்சு பார்க்குறேன் . அப்பா அவங்களை அந்த அளவுக்கு பாதிச்சு இருக்கங்க " என்றாள் நெகிழ்ச்சியாக.

    அவளுடைய பேச்சில் இடைபுகாமல் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் .

    அனைத்து போட்டோக்களையும் மூன்று முறை பார்த்து முடித்தவள் முழு திருப்தி அடையாதவளாய் இருக்கையை விட்டு எழுந்தாள் .

    " போட்டோக்களை தனக்கும் ஒரு காப்பி போட்டு வாங்களாமா " என்று தோன்றிய எண்ணத்தை ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக தயக்கத்துடனே எழுந்து சென்றாள் .

    அறை வாசல் அருகே சென்றதும் ,

    " வாணி " என்று அழைத்தான் .

    ' என்னவென்று ' திரும்பி பார்த்தவளிடம்,

    " இனிமே எங்கிட்ட ப்ரெண்டா பழகலாம் தானே . எந்த பயமும் இல்லையே ? " என்றான் புன்னகையோடு .

    அவன் மேல் நல்ல எண்ணம் தோன்ற புன்னகைத்து ' இல்லை ' என்று தலையசைத்தாள் .

    " அப்போ பிரெண்ட்ஸ் " என்று கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்தான்.

    " ம் " என்று புன்னகையோடு தலையசைத்து விட்டு கீழே சென்றாள் .



    அவள் கீழே இறங்கி வருவதை கண்ட மஹேந்திரன் ,

    " வாணி இங்கே வாம்மா " என்றார் கம்பிரம் சற்றும் குறையாமல் . எதுவும் பேசாமல் மெதுவாக கீழே இறங்கி வந்தவள் அமைதியாய் அவர் முன்னே நின்றாள் .

    தன் தாய் தந்தையரின் புகைபடங்களை பார்த்ததாலோ அல்லது சந்தோஷிடம் பேசியாதாலோ தோன்றிய மகிழ்ச்சியின் காரணமாக முகத்தில் புன்னகை தவழ நின்றாள் .

    " நாளைக்கு நீ கிளம்புறதா நிமிஷா சொன்னாள் . அப்படியா ? " என்றார் குரலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் . உழைப்பின் பயனால் தோன்றிய பக்குவமா இது ?

    ' அதுக்குள்ளே சொல்லிட்டாளா ' என்று நினைத்தவள் , மஹேந்திரனின் அருகில் நின்ற நிமிஷாவை நோக்கி விட்டு ' ம் ' என்று தலையசத்தாள் . சம்பந்தமே இல்லாமல் மனதில் பயம் தோன்றியது . ( அதான என்னடா நீ இன்னும் பயப்படலையேன்னு நினைச்சோம் . கரெக்டா பயம் வந்திருச்சே )

    " நீ எங்கேயும் போக வேண்டாம் . ராஜியும் , நீயும் எப்போதும் எங்க வீட்டு பொண்ணுதான் . இத்தனை நாள் நீங்க எங்க இருக்கீங்க , எப்படி இருக்கீங்கன்னு தெரியததால நீ தனியா கஷ்டப்பட்டே . இனி அதற்கு அவசியமில்லை . உனக்குன்னு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கும்போது நீ ஹாஸ்டல்ல தங்க வேண்டிய அவசியம் இல்லை . நாளைக்கு காலைல போய் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துறலாம் . என்ன ? " என்று வினவியவருக்கு தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது .

    எங்கிருந்து மறுத்து பேசுவாள் . அவளுடைய விருப்பத்தை கேட்டிருந்தாள் தன் எண்ணத்தை கூறி இருப்பாள் . ஆனால் அவர் கட்டளை அல்லவா இட்டார் . விருப்பம் கேட்டாள் மறுத்து விடுவாள் என்று அறிந்து தான் கட்டளை இட்டாரோ என்னவோ .

    அடுத்த நாள் காலையில் தன் ஜாக்கிங்கை முடித்து விட்டு திரும்பி வந்த சந்தோஷ் எப்போழுதும் போல் தன் தங்கையிடம் வம்பு செய்ய துவங்கினான் .

    சோபாவில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டே பேப்பரில் படம் பார்த்துக் கொண்டிருந்த நிமிஷாவின் தலைமுடியை கலைத்துவிட்டு கொண்டே அருகில் அமர்ந்தான் . (பேப்பர்ல படம் பார்த்தியா ? அப்போ உனக்கு படிக்க தெரியாதா நிம்மி ?? )

    " டேய் போடா தடிமாடு " என்று தன் அருகே அமர்ந்தவனை பிடித்து தள்ளி விட்டாள் ( டேய்யா ?? நல்ல மரியாதை நிம்மி )

    " யாரு நானா தடிமாடு ? exercise செஞ்சு உடம்பை சும்மா கின்னுன்னு வச்சிருக்கேனாக்கும் " என்று டீ-சர்ட் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் .

    " ஆமா நீ தான் மெச்சிக்கனும் . நீ என்ன சொன்னாலும் நீ தடிமாடுதான் " என்றாள் வீம்பாக .

    " ஆமாமா நான் தடிமாடுதான் . உன்ன மாதிரி ஓமக்குச்சி பக்கத்துல நின்னா தடிமாடா தான் தெரிவேன் . பலமா ஒரு காத்து அடிச்சா நீ நின்ற இடமே தெரியாது . இதுல நீ எல்லாம் பேசறே எல்லாம் என் நேரம் தான் ஓமக்குச்சி "

    " அப்படி சொல்லாதே "என்றாள் கோவத்தில் முகம் கோவை பழமாய் சிவக்க .

    " அப்படி தன் சொல்லுவேன் ஓமக்குச்சி ஓமக்குச்சி ஓமக்குச்சி "என்றவன் அவள் தலையில் தட்டினான் .

    " அம்மா இங்கே பாருங்கம்மா அண்ணாவை சும்மா சும்மா வம்பு பண்ணறாங்க " என்று கத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் .

    " ஆரம்பிசுடீங்களா உங்க வேலையை போதும் இதோட நிறுத்திக்கோங்க . உங்க அப்பா வேற வெளியே போய் இருக்காரு . அப்பறம் உங்க சண்டையை என்னால் நிறுத்த முடியாது " என்றார் கண்மணி .

    " அப்பா எங்கேம்மா ? " என்ற கேள்விக்கு நிமிஷா முந்தி கொண்டு பதில் கூறினாள் . (முந்திரிக் கொட்டை நிமிஷா நீ . அவன் உங்கிட்டையா கேட்டான் ?? )

    " அப்பா வாணியை அழைச்சிட்டு ஹாஸ்டல் போய் இருக்காங்க " என்றாள்.

    " ஓ உன் பிரண்ட் கிளம்பியாச்சு ? "

    " ம் " என்று தலையசைத்தவள் அடுத்த வரி கூறும் முன் தன் தாயிடம் திரும்பினான் .

    " சீக்கிரம் டிபன் எடுத்து வையுங்கம்மா ஆபீஸ் கிளம்பனும் " என்றவன் விடுவிடுவென மாடி படிகலில் ஏறி சென்று விட்டான் .

    ' இவ்வளவு நேரம் நல்லா தானே பேசினான் இப்போ என்ன வந்தது ' என் இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

    தன் அறைக்கு சென்றவனுக்கு அநியாயத்திற்கு கோபம் வந்தது .

    " கிளம்பும் போது சொல்லனும்னு கூட தோணலை " என்று கறுவியவன் தன் மேஜை மேலிருந்த C.Dஐ வெறித்து விட்டு குளியலறைக்குள் புகுந்தான் .

    நிமிஷாவின் அடுத்த வாக்கியத்தை கேட்டிருந்தால் இந்த கோபம் எல்லாம் அர்த்தமற்றதாய் போயிருக்குமே .

    காலையில் ஆபிஸ்க்கு வந்தது முதலே நேரம் நத்தையை போல ஊர்ந்து கொண்டிருந்தது . காலையில் தோன்றிய கோபம் இன்னும் குறைந்த பாடில்லை .

    ' எப்படி சொல்லாம போகலாம் , எப்படி சொல்லாம போகலாம் ' என்ற வாக்கியத்தை நறநறத்துக் கொண்டே வேலையில் மனம் ஈடுபடாமல் அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான் .



    நல்ல வேலை அந்த அறைக்குள் யாரும் நுழையவில்லை . தப்பி தவறி நுழைந்திருந்தால் சிங்கத்தின் தோரணையோடு இருந்தவன் குதறி எடுத்திருப்பான் .

    மனக்கொதிப்பு சற்றும் தனியாமல் மதிய உணவிற்கு வீடு நோக்கி பயணமானான் . பாவம் வீட்டில் உள்ளவர்கள் .

    போர்டிகோவில் வேகமாய் வந்து காரை நிறுத்தியவனது கண்கள் எதர்த்தமாய் மதுரா எப்போழுதும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று மீண்டது .

    அசால்டாக உச்சி கொட்டி கொண்டு திரும்பியவனது மூளை தாமதமாக வேலை செய்து தான் கண்ட காட்சியை எடுத்துரைத்தது . கண்கள் விரிய 'அப்படி இருக்குமோ ? ' என்ற சந்தேகத்தோடு சராலேன மீண்டும் திரும்பினான் .

    மரத்தடியில் அமர்ந்து எதையோ படித்து கொண்டிருந்தாள் மதுரா .

    முகத்தில் புன்னகை மின்ன அவளை நோக்கி சென்றான் . அதுவரை இருந்த கோபம் இந்த தடம் தெரியாமல் ஓடி மறைந்தது . நல்ல வேளை அவன் குடும்பத்தார் தப்பித்து கொண்டனர் .



    புல் தரையில் அமர்ந்து தன் எதிரே நின்றவனை அண்ணார்ந்து பார்த்தாள் . அவனை கண்டதும் படபடப்பு தோன்ற எழ போனவளின் அருகே அவனும் அமர்ந்துக் கொண்டான் .


    --உணர்வுகள் விளையாடும்....​
    :thumbsup

    - நூருல் & நிலா.
     
    4 people like this.
    Loading...

  2. veenashankar15

    veenashankar15 Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Nice Update Noorul and Nila, Santhosh innuma unakku puriyalai? Madhura medhuva ippathan friend-a accpet panniyurka..
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    santhosh madhu ketkamaye avaluku photos oru album pottu kuduppana???
    rendu perum friends aaitanga...
    nimmi um santhosh um fight panradhu super...
    santhosh ku madhu sollama poitanu kovama ???? illa madhu hostel ku poitanu kovama ?????
    madhu veetla irukradha patha udane kovam parandhu ponadhum super...
     
  4. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...
    hero ku light ah love start ayita mari iruka pa...super than ini...
    anna thangachi sandai romba alaga irunthuchu..:):)
    madhu vanthuta hero poi utkandhu enna pesa poraru...
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நூருல் & நிலா,

    கதை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க......
    சந்தோஷ் இன்னுமா உனக்கு புரியல அவள நீ லவ் பண்ணற டா.......
    வாணி நீ ஒரு நாள் கூட பயப்படாம இருக்க மாட்டியா?........
     
  6. soudha

    soudha Junior IL'ite

    Messages:
    41
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    nice update, thanks
     
  7. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    i liked this episode very much. Lively LOVE.
     
  8. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
  9. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    hi Sweetsaghi,

    My Wishes to nadhi for Happy Married Life!!!!!!!
    Ada indha santhosh eppadaan thaan madhura va love pandradha realise pannuvaan...seekaram yosi ., unakku kovam vara kaaranam sollama ponadhu mattum daana, illa unna avoid pannitta nu, possessiveness ah....Waiting for next post ...Story is fast moving and super...

    Vasupradha.S
     

Share This Page