1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 11

Discussion in 'Stories in Regional Languages' started by Saagini, Feb 6, 2012.

  1. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 11

    வேகமாக தன் அறைக்கு வந்தவள் தன் பதட்டத்தை தணித்துக் கொள்ள நீண்ட பெருமூச்சுக்களை விட்டாள் .

    " ஹாப்பாடா தப்பித்து விட்டோம் " என்று எண்ணியவளை பற்றி திருப்பினான் சந்தோஷ் .

    முழுதாய் இரண்டு பெருமூச்சுக்களை விட்டிருக்கமாட்டாள் அதற்குள் பயத்தில் மீண்டும் அவள் இதயம் தாறுமாறாய் துடிக்க தொடங்கியது .

    அவளை பார்த்து முறைத்தவன் , " என்ன ஆச்சு உனக்கு ? ஏன் இப்படி பண்ணுறே ? நான் என்ன பேயா, பிசாசா இல்ல பூதமா இப்படி அரண்டு போக ?" என்று அவளிடம் வினவினான் .

    ' என்ன ' என்று மருண்டு விழித்தவளை பார்த்து அவனுக்கு கோபம் கூடியது .

    " ம் சொல்லு " என்று உறுமினான் . (நீ சும்மா சும்மா இப்படி உறுமிக்கிட்டே இருந்தா அவ பயப்படாம வேற என்ன செய்வா ?? )

    அவள் எங்கிருந்து சொல்லுவாள் . பாவம் பயத்தில் மேல் அன்னமும் கீழ் அன்னமும் பசை போட்டதை போல் அல்லவா ஒட்டிக் கொண்டது .

    அவளிடம் இருந்து பதில் வராது போக அவனே தொடர்ந்தான் .

    " சாப்பிட கூட்டிட்டு போன இப்படி ஓடி வர !! அங்க இருங்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க ?? வா வந்து சாப்பிடு "

    " இல்ல வேண்டாம் " என்று தலையசைத்தாள் .

    " நீ என்ன சின்ன குழந்தையா ??? சாப்பிடுறதுக்கு இப்படி அடம் பண்ணுறே . வா வா... " என்றவன் பேச்சு அவளின் வேகமான தலையசைப்பில் நின்றது.

    " என் பேச்சுக்கு அவ்ளோதான் மரியாதை இல்ல . சரி போ " என்றவன் வேகமாக வெளியேறினான் .


    ' அவன் அவளை கையைப் பிடித்து அழைத்துச் சென்றதையும் , அவள் தன் அறைக்கு சென்றது அவளை தொடர்ந்து சந்தோஷ¤ம் விரைந்தது ' என அனைத்தையும் வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நேகா .

    சந்தோஷ் அந்த அறையை விட்டு சென்றதும் மழை பெய்து ஒய்ந்ததை போல் உணர்ந்தாள் மதுரா .

    " இனி என்ன செய்வது ?? " என்று யோசித்துக் கொண்டே பெட்டில் அமர்ந்தாள் .

    " பேசாம போய் சாப்பிடுவோமா " என்று நினைத்தவள்,


    " ம்ஹ¤ம் " என்று வேகமாக தலையசைத்தாள் .


    " தேடி போய் அந்த ஜொள்ளுக்கிட்ட என்னால மாட்ட முடியாதுப்பா " என்றவள் அந்த அறையை சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்டாள் .



    நிச்சயத்திற்கு வந்த பரிசு பொருட்கள் அனைத்தும் அவள் அறையில் அவள் பொறுப்பில் இருந்ததன .



    சுற்றி வந்த பார்வை கடிகாரத்தில் வந்து நின்றது . மணி பத்தை கடந்துக் கொண்டிருந்தது . விருந்துக்கு வந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக கிளம்பி செல்ல தொடங்கினர் .



    தன் உடைகளை எடுத்து வைக்க துவங்கினாள் . நாளை இங்கிருந்து கிளம்ப போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வருத்ததை அளித்தது .



    " ஏய் இப்போ எதுக்கு நீ வருத்த படுறே ?? விருந்துக்கு வந்தா கிளம்பித்தானே ஆகணும் " என்று தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டவள்,



    பரிசுப் பொருட்களை கவனமாக வேறு இடத்தில் வைப்பதை பற்றியும் , நாளை தான் இங்கிருந்து கிளம்புவது பற்றியும் கூறிவிட வேண்டும் என்று எண்ணியவள் " யாரிடம் கூறலாம் ? " என்று யோசித்துவிட்டு ' நிமிஷா ' வை முடிவு செய்தாள் .



    " அவள் அறை எதுன்னு சுத்திக் காட்டும் போது கவனிக்க மறந்துட்டேனே" என்று தன்னை தானே நொந்துக் கொண்டவள் ராஜத்தின் முன் வந்து நின்றாள் . (இந்த அறிவு மொதல்லையே இருந்திருக்கணும் வாணி )



    " நிமிஷாவோட ரூம்.... " என்று பாதி வாக்கியத்தை மென்று முழுங்கினாள் . (இதுக்குத்தான் சந்தோஷ் கூப்பிடும் போதே போய் சாப்பிடனும்கிறது . இப்படி பாதி வாக்கியத்தை மென்னு முழுங்கிட்டு இருக்க வேண்டாமில்ல )



    " படிக்கு எதுத்தாப்புல இருக்குற ரெண்டு ரூமுல இடது பக்கம் உள்ளது. போம்மா " என்றார் கனிவுடன்.



    நன்றியோடு புன்னகைத்து விட்டு படியில் ஏறும் போது யாரிடம் மாட்டிக் கொள்ள கூடாது என்று பயந்தாளோ அவனிடம் மாட்டிக் கொண்டாள்.



    படிகளில் ஏற எத்தனித்தவளின் முன் கையில் பூவோடு வந்து நின்று புன்னகைத்தான் முகிலன் . (மனசுல பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பா முகிலன் உனக்கு ?? )



    வேறு வழியின்றி அதை வாங்கியவள் விடுவிடு என படிகளில் ஏறினாள் . கையில் இருந்த பூவை தூக்கி எறிந்து விடலாம் என்று நினைத்தவள் அதன் அழகில் மயங்கி வேறு வழியின்றி அதை கையிலேயே வைத்துக் கொண்டாள் .



    மாடியை அடைந்தவள் தன் எதிரே இருந்த இரண்டு அறைகளில் எது நிமிஷா அறையென குழம்பிப் போனாள் . எதிரே பார்த்துட்டு இருக்கும் போது உள்ள இடது புறமா இல்ல திரும்பி நிற்கும் போது உள்ள இடது புறமா என்று குழம்பி போனவள் ஒரு வழியாக தனக்கு இடது புறம் உள்ள அறை கதவை தட்டினாள் .



    " யெஸ் " என்று சந்தோஷ் குரல் ஒலிக்கவும் ,



    கண்கள் விரிய அவளுடைய ஹார்ட் பீட் எகிறியது . உடனே மற்றொரு அறைக் கதவை தட்டிக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் .



    உள்ளே நிமிஷா கையில் செல்போனுடன் கற்பனையில் மிதந்துக் கொண்டிருந்தாள் .



    "ஹாலோ மேடம் இங்க நான் ஒருத்தி வந்திருக்கேன் " என்று மதுரா கூறியதும் தான் நிமிஷா சுய உணர்விற்கு வந்தாள் .



    அசடு வழிய சிரித்தவள் " ஒன்றும் இல்லைப்பா , அது வந்து... " என்று துவங்கவும் ,



    " எதுவும் வர வேண்டாம் . உன் பெர்ஸ்னல் உங்கிட்டேயே இருக்கட்டும் " என்று புன்னகைத்தவளை பார்த்து பதிலுக்கு புன்னகைத்த நிமிஷா அவள் கையில் இருந்ததை பார்த்து ,



    " ஹேய் என்னப்பா அது கையில ?? "



    " பூ. இதை என்ன பண்ண ?? "



    " வச்சுக்கோ "



    " இதை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண ?? " ( ம் பேசாம பொக்கே ஷாப் அரம்பிச்சுடு மதுரா )



    " எதுக்காக இதை எடுத்தியோ அதுக்காக இதை வச்சுக்கோ " ( அடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு நிம்மி )



    " நான் எங்க எடுத்தேன் ?? அந்த ஜொள்ளு பார்ட்டில கொடுத்துச்சு... " என்று மனதில் நினைத்ததை தன்னை அறியாமல் சொல்லி நாக்கை கடித்தாள் .



    " யாரு சந்தோஷ் அண்ணா ப்ரெண்ட் முகிலை சொல்லுறியா ? "



    " ம் "



    " என்ன ரொம்ப ஜொள்ளு விட்டாரா ? "



    " ம்.. சரியான டார்சர்மா . எங்க போனாலும் பின்னாடியே வந்துட்டு.. கோவம் கோவமா வருது "



    " சந்தோஷ் அண்ணாக்கிட்ட சொன்னியா ? "



    " எங்கே ? சாப்பிட வரலைன்னு சந்தோஷ் சார் கோவிச்சுக்கிட்டு போயிடாரு "



    " கோவிச்சுக்கிட்டா ? ஏன் ?? "



    "அம்மா சந்தோஷ் சார்க்கிட்ட சாப்பிட அழைச்சுட்டு போக சொன்னாங்க . அங்கே சாப்பிடுற இடத்துல முகில் நிக்கிறத பார்த்துட்டு பயந்து ஓடி வந்துட்டேன். அவர் சாப்பிட கூப்பிட்டு போகலைனு கோபம் . நான் என்னப்பா பண்ணட்டும் " என்று கூறியவள் முகத்தை பார்க்கும் போது பாவமாய் இருந்தது .



    நிமிஷா பேசுவதற்கு முன் அவளே தொடர்ந்தாள் ,



    " சரி விடு. நான் இப்போ இருக்குற ரூம்ல தான் எல்லா கிப்டையும் வச்சுருக்கேன் . அதை எங்கயாச்சும் பத்திரமா வைக்கணுமே , இங்க கொண்டு வந்து வச்சிடவா ?? " என்று நிமிஷாவின் முகத்தைப் பார்த்தாள்.



    " அது அங்கயே இருக்கட்டும்டா . பத்திரமா தானே இருக்கு . நாளைக்கு பிரிச்சுக்கலாம் "



    " இல்லைப்பா நாளைக்கு காலைல நான் கிளம்பிடுவேன் . அதான் கேட்கிறேன் " என்ற மதுராவின் வாக்கியத்தில் புருவம் நெளிய நிமிர்ந்தாள் நிமிஷா .







    " என்னது நாளைக்கு கிளம்புறியா ?? "



    " ஆமாம்பா ஹாஸ்டல்ல ரெண்டு நாள் தான் லீவ் வாங்கிட்டு வந்தேன் . கரெக்டா போய்டணும் . நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு " என்றாள்.



    " ஒரு பத்து நிமிடம் நீ இங்கேயே இரு . நான் இதோ வந்து விடுகிறேன் " என்று அங்கிருந்து வெளியேறினாள் .



    நிமிஷா சென்ற ஐந்தாம் நிமிடம் ,



    " நிம்மி நீ கேட்டதாலே உடனே C.D போட்டு எடுத்துட்டு வந்தேன் " என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் சந்தோஷ் .



    அந்த அறையில் மதுராவை பார்த்ததும் அவன் பேச்சு தடை பட்டது . அவனைக் கண்டதும் வேகமாக தன் கண்களை துடத்துக் கொண்டவள் தன் கையில் இருந்த ஆல்பத்தை மறைக்க முயன்றாள் .



    அதனை கண்டு கொண்டவன் அவள் அருகே வந்து தன் கையில் இருந்த C.Dஐ மேஜை மேல் வைத்து விட்டு அவள் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கினான் .



    அதில் அவர்கள் அனைவரும் சிறுவயதில் ராஜேஸ்வரியுடன் இணைந்திருந்தனர் . அதனை கண்டவன் " ராஜி ஆன்டி " என்று புன்னகைத்தான் .



    அவளின் கண்ணீரின் காரணம் அறிந்தவன் ,



    " நீ ஆன்டிய ரொம்ப மிஸ் பண்ணறே இல்லை " என்றான் .



    ' ம் ' என்று தலையசைக்கும் போது கண்ணீர் விழிகளை மறைத்தது . அருகே இருந்த தம்ளரில் தண்ணீர் நிரப்பி ,



    " இந்தா குடி " என்று நீட்டினான் .



    ' வேண்டாம் ' என மறுக்க போனவள் தன் தொண்டை அடைத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து வாங்கி பருகினாள் .



    " இந்த போட்டோவை எனக்கு கொடுக்க முடியுமா ? " என்றாள் கெஞ்சலாக .



    " இது என்னோடது இல்லை நிம்மியோடது அவ கிட்டே தான் கேட்கணும்" என்று அவன் கூறியதும் அவள் முகம் சூம்பிவிட்டது .



    அதனை காண பொறுக்காதவன் , " ஆனா இதே போல் இன்னோர் காப்பி வேணா என்னால எடுத்து கொடுக்க முடியும் " என்று அவன் கூறிய மறு நொடி அவள் முகம் மீண்டும் ஒளி பெற்றது .



    " ரொம்ப தாங்க்ஸ் " என்றாள் புன்னகையோடு .



    " இதுக்கு இவ்வளவு சந்தோசமா ஏன் உங்கிட்டே ஆன்டி போட்டொ இல்லையா ? "



    " ம்ஹ¤ம் " என்று அவள் தலையசைத்ததும் ,



    " என்னது நிஜமா இல்லையா ? "







    " இல்லை அம்மா போட்டோ எதுவுமே கிடையாது.அப்பவுடைய ஒரே ஒரு போட்டா மட்டும் தான் இருக்கு " என்றாள் வருத்ததோடு .



    " ஓ , எங்கிட்ட உங்க அப்பா அம்மா நீ இருக்கது போல நிறைய போட்டோஸ் இருக்கு பார்க்குறியா ? " என்று அவன் கேட்டதும் அவள் முகம் சந்தோஷத்தில் ஜொலித்ததை விவரிக்க மொழிகள் உண்டா ?



    " நிஜமாவா ? "



    " ஆமா. போட்டோஸ் அரிச்சிடும் என்று பயத்துல அம்மா எல்லாவற்றையும் எங்கிட்ட கொடுத்து ஸ்கேன் பண்ணி வச்சுக்க சொல்லிட்டாங்க . இப்போ எல்லாம் என் pc-ல இருக்கு. பார்க்கறியா ? "

    என்று அவன் வினவியதும் தயக்கத்துடன் கடிகாரத்தை பார்த்தாள்.



    மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. அவள் எண்ணப் போக்கை உணர்ந்தவன் ,



    " பரவாயில்லை. நாளைக்கு காலைல பார்த்துக் கொள்ளலாம் " என்றான்.



    " இல்ல நாளைக்கு காலைல நான் கிளம்பிடுவேன் . so இப்பவே வரட்டுமா ? " என்றாள் தயக்கத்துடன் .



    " என்னது காலைல கிளம்புறியா ?? " என்றான் யோசனையோடு .



    " ம் " என்று தலையசைத்தாள்.



    அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைப்பதை விரும்பாதவன் என்பதால் எதுவும் பேசாமல் அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றான் . தயங்கி தயங்கி அவள் வாசலில் நிற்கவும் ,



    " வா உள்ளே வா " என்று உள்ளே அழைத்து கம்ப்யூட்டர் சேரைக் காட்டி அவளை உட்காரும்படி சைகை செய்தான் .



    மதுரா இதுவரை எந்த ஆடவனிடமும் பேசி பழகியது கிடையாது . அவளுடைய பயந்த சுபாவத்தை புரிந்துக் கொண்டு கல்லூரி தோழர்கள் அவளிடம் வம்பு செய்ததும் கிடையாது . அவள் வகுப்பறையை விட்டு அனாவசியமாக வெளியே செல்ல மாட்டாள் என்பதால் மற்றவர்களுடன் அவள் பழகவோ , இல்லை அவளிடம் வம்பு செய்யவோ மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .



    அதனாலேயே முகிலின் நடவடிக்கை அவளுக்குள் பீதியை கிளப்பியது . அதே சமயம் அந்த சுபாவம் அவளை சந்தோஷிடம் சகஜமாக பழக விடாமல் செய்தது .



    இப்படிபட்டவளை தனியாக ஒரு அடவனுடன் அவன் அறைக்கு இரவு பதினொர் மணிக்கு செல்ல சொன்னால் தயங்க தானே செய்வாள் ??



    --உணர்வுகள் விளையாடும்....​
    - நூருல் & நிலா.
     
    4 people like this.
    Loading...

  2. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ithoe pottu vittaen adutha update. padithuvittu eppadi irukkunu sollunga ;) meendum nalai santhikkalaam. comments-ku seekiramae reply seithudaraen ma. sorry for delay.
     
  3. veenashankar15

    veenashankar15 Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Noorul, I read all the updates together very nice update.. the flow is good and it is moving fast (same as ur other stories) Santhosh-in kobam niyamanathutham.. Madhu ippadi payanthal eppadi intha ulagathil irrupathu..Noorul than kappathanaum
     
  4. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi....
    en madhura hostel pora...anga vacate pannitu ivanga kooda iru matala...
    santhosh ku madura mela oru soft corner!!!!
    very nice update..
     
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma....
    madhu va ini hostel la stay panna nimmi veetla viduvangla????????
    neha vera enna seyvalonu bayama irukku...
    santhosh madhu kitta kova padama en sapda mattengranu kettu , mukil ah left and right vangeerklam.....
    madhu is so sweet and sensitive.....
     
  6. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Very nice update and thank you. Kadhai superah poguthu. santhoshkku kandavudan kadhal varama oru soft corner irukku. Neha enna problem pannuvannu theriylaye. Nimisha veetla eppadi Madhura thirumba poratha accept pannipanga...........

    wating eagerly for the next update.
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    story is going on very nicely. superab today.
     
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Sweetsagi,

    Nadhi kku enna achchu....... update podala....... apparam unga kadhai viruviruppa pogudhu..... santhosh love ah solla late pannuvaan pola irukke...neha kutti galatta pannuvaannu thonradhu..... idhula madhu vera hostel kku poraen ra...... avala poga vidaama stop panniduvaangalaa...illa pirivula love ah unara vekka poreengalaa.........waiting for next one!!!!!!!!

    Vasupradha.S
     
  9. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks veenashankar15
    // (same as ur other stories) // have you read my other stories?????

    madhuvai kapatra thaan santhose irukanae ;-)
     
  10. Saagini

    Saagini Silver IL'ite

    Messages:
    1,148
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks JananiSubbu
    mathura hostel porala illaiyaannu seekiram sollidaroem ;-)
     

Share This Page