1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுதான் இந்தியாவில் வாழும் இந்திய மனைவி!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Dec 14, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    [JUSTIFY]
    பொதுவாக ஆண் வேலை, பெண் வேலை என்று வகைப் படுத்துவது இந்திய நாகரிகம்! வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வது பெண்களின் கடமை. வெளி வேலைகள் செய்வது ஆண்களின் கடமை. இந்தக் காலத்தில், வெளி வேலைக்குப் பெண்கள் சென்றாலும்கூட, வீட்டு வேலைகள் அனைத்தும் அவர்கள் தலையில்தான், பல இல்லங்களில். நல்ல வேளையாகப் பணிப்பெண்கள் உதவிக்குக் கிடைப்பதால், பெண்மணிகள் பிழைக்கின்றார்!

    ஓய்வு பெற்ற கணவர்கள் பாடு இன்னும் கொண்டாட்டமே! காலையில் பேப்பரில் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்தால், மற்ற வேலைகள் தன்னால் நடக்கும் - அன்பு மனைவியால். கையில் காபி கிடைக்கும், டிபன் தயார் ஆகும்.... இன்ன பிற! மாதம் இருமுறை வங்கிக்கும், ஒரு முறை பால் கார்டு வாங்கவும், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தவும் சென்றால் போதுமே. மற்ற நாட்கள் FREE!!

    என்னைப் பற்றியே சொல்கிறேனே... இரு வாரங்களுக்கு முன் வலது கையில் அடி! எலும்பு முறிவு இல்லை எனினும் வேறு சில கோளாறுகள்! ஆறு வாரங்களில் பழைய நிலை திரும்பும் என்று மருத்துவர் கூற்று! பழக்கமே இல்லாத இடது கையால் எல்லா வேலைகளும் நடக்கின்றன. கணினியின் 'எலி'யைப் பிடிப்பதும் இடதுகையே! எப்படியோ, எல்லா வேலைகளும் நடக்கின்றன slow motion இல்...

    செல்லப் பெயர்கள் இடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது என் செல்லப் பெயர்: 'ஸொன்டி ஸ்லோச்சனா'!

    குறிப்பு: 'ஸொன்டி' என்பது இடது கையால் வேலை செய்பவர்களைக் குறிக்கும்.

    :hiya[/JUSTIFY]
     
    Loading...

  2. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sunitha! :cheers
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    My prayers and wishes for your speedy recovery.A very nice humorous blog friend
     

Share This Page