1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"ஆய கலைகள் அறுபத்துநான்கு"

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, May 19, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடு. அறுபத்துநாலுகலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தருகின்றேன். இதை internet ல் பார்த்தேன். உங்களுடன் பகிர விரும்பினேன்.

    அறுபத்து நாலு கலைகளாவன:

    1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிகிதம்);
    3. கணிதம்;
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாத்திரம்);
    8. கணியம் (சோதிட சாத்திரம்);
    9. அறநூல் (தரும சாத்திரம்);
    10. ஓகநூல் (யோக சாத்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
    14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு;
    18. அணிநூல் (அலங்காரம்);
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
    20. நாடகம்;
    21. நடம்;
    22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
    23. யாழ் (வீணை);
    24. குழல்;
    25. மதங்கம் (மிருதங்கம்);
    26. தாளம்;
    27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
    30. யானையேற்றம் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்ல யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
    39. காமநூல் (மதன சாத்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம்);
    42. இதளியம் (ரசவாதம்);
    43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
    44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
    45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
    47. கலுழம் (காருடம்);
    48. இழப்பறிகை (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
    51. வான்செலவு (ஆகாய கமனம்);
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
    54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
    56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
    57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
    59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
    63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
    64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

    64 கலைகளிலும் தேறாவிட்டாலும், பெயரையாவது தெரிந்து கொள்வோம்.
     
    Loading...

  2. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    very nice keep it up
    regards
    jai
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi jai,

    thank you dear.
     
  4. kutekrish

    kutekrish Senior IL'ite

    Messages:
    65
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Dear maa,

    I read all. hahahha ( I am able to read Tamil) hihihii
     

Share This Page