1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகும் திறமையும்.................

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jun 17, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அவன் சதானந்தன், இங்கு ஆபீஸ் இல் எல்லோருக்கும் 'சதா' . அவன் பெங்களூரில் ஒரு பெரிய சாப்ட்வேர் அலுவலகத்தில் வேலை செய்கிறான் . தமிழ் நாட்டில் தென்பகுதி இல் இருந்து இங்கு வந்து வேலைக்கு சேர்ந்தவன். வந்த புதிதில் பெங்களூர் பெண்களை கண்டு மிரண்டு போய்விட்டான். ஆனாலும் ட்ரைனிங் பிரியட் முடிவதற்குள் தன்னை சுதாதரித்துக்கொண்டு விட்டவன். அப்போதே முடிவெடுத்தான், இனி யாராவது தெற்கிலிருந்து வந்தால் அவர்களுக்கு, அவர்களின் பயம் போக கொஞ்சம் உதவி, இங்கு வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று.

    போகப்போக இது எல்லோருக்கும் தெரிய வரவே, புதிய ஆட்களை இவனிடம் அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது. இவனும் அவர்கள் எந்த பிரிவில் வேலை செய்தாலும் கூப்பிட்டு வைத்து பேசி, அவர்களுக்கு தேவையானதை செய்வது வழக்கமாய் போனது. அப்படி ஒருநாள் வந்தவள் தான் வசுந்தரா. பார்க்க அப்படி ஒன்றும் அழகில்லை என்றாலும் திருத்தமான முகம் அவளுடையது.

    அவளுடன் வந்த batch இல் 10 பெண்களும் 12 பசங்களும் இருந்தார்கள். அதில் ஒருத்தி ரொம்பவும் morden ஆக இருந்தாள் ; எல்லோரிடமும் ரொம்பவும் சகஜமாய் பேசி பழகினாள். பசங்க அவளுடன் - ராதிகா - அது தான் அவள் பேர், பேச போட்டி போடுக்கொண்டிருந்தர்கள். மொத்தத்தில் நல்ல கல கலப்பான செட் ஆக இருந்தது. இந்தப்பெண் கொஞ்சம் அமைதியாக இருந்தாள், எனவே சதா பாவம், புதிய இடம் புதிய ஆட்கள் என்று இப்படி இருக்கா, மேலும் அந்த பெண் 'ராதி' ரொம்ப அழகு எனவே இவளுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை என்றும் நினைத்தான்.

    இவன் அக்கா எப்பவும் சொல்வா " don't be judgemental " அதை மறந்து அப்படி நினைத்தான், அது எவ்வளவு பெரிய தவறு என்று 2 நாளில் புரிந்தது அவனுக்கு. அவ்வளவு சூட்டிகையாக இருந்தாள் அவள். எந்த வேலையையும் எளிதில் புரிந்து கொண்டு கச்சிதமாக செய்தால். இவனுக்குள் தான் அவளைப்பற்றி கணித்தது தவறோ என்று தோன்றியது..............என்றாலும் அதை ஒப்புக்கொள்ள மனம் மறுத்தது.............அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது.

    மீண்டும் அக்காவின் குரல் உள்ளே எதிரொலித்தது. அவனுக்கு எல்லாமே அக்கா தான், ரொம்பவும் bold ஆக தன் கருத்துகளை சொல்வாள். எந்த கேள்விக்கும் பதில் இருக்கும் அவளிடம். தனக்கு ஒன்று பிறருக்கு ஒன்று என்று எப்பவும் நினைக்க மாட்டாள். அவள் குரலில் இப்ப அவனுக்கு கேட்டது, "புத்திசாலியான பெண்களைக்
    கண்டால் ஆண்களுக்கு பிடிக்காது...அது எப்படி டா............" என்பது தான்.

    அவளுடைய அடுத்த வரிகளை பிறகு யோசிக்கலாம் என்று நினைத்து அந்த நினைவுகளை புறம் தள்ளினான் சதா. அந்த லஞ்ச் நேரத்தில் எல்லோரும் ராதியை சுற்றி நின்றுகொண்டு கல கலப்பாக ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தர்கள், வசு தனியாய் கம்ப்யூட்டர் இல் ஏதோ செய்து கொண்டிருந்தாள். எல்லோரும் அங்கிருக்கவே இவன், இந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்தான்.

    "என்ன வசு சாப்பாடு ஆச்சா? " என்றான்.

    திடீரென்று வந்த பேச்சுக்குரலால் செய்த வேலை தடைபடவே அவள் நிமிர்ந்து பார்த்தாள். இவனைக்கண்டதும் உடனே எழுந்து " சார், ...என்ன கேடீங்க"? என்றாள்.

    இவனும் "பதட்டம் வேண்டாம் உட்காருங்கள், சாப்பாடு ஆச்சா என்று கேட்டேன், மேலும் இங்கு இந்த சார் எல்லாம் வேண்டாம் பேர் சொல்லித்தான் கூப்பிடணும் என்று வந்த அன்றே சொன்னே!" என்றான் சிரித்துக்கொண்டே.

    தொடரும்..................
     
    Caide likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " அது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு சர்........சாரி, இனி பழகிக் கொள்கிறேன் " என்றாள்.

    " இன்னும் நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லலை" என்றான்.

    " ஒ அதுவா, இன்று நான் விரதம் மதியம் எதுவும் சாப்பிடமாட்டேன்...அது தான் இங்கு இருக்கேன்" என்றாள்.

    " அப்படியா? எனக்கு வேறு மாதிரி பட்டது அது தான் கேட்டேன் " என்றான்.

    " என்ன மாதிரி" என்றாள் அவள்.

    "இல்ல அந்த பெண் ராதிகா எல்லோருடனும் கலந்து பேசுவது உங்களுக்கு பொறாமையாக இருப்பதால் நீங்கள் தனியாக இருக்கீங்களோ என்று நினைத்தேன்" என்று சொல்லிவிட்டான்.

    " அவங்களிடம் எல்லோரும் பேசினால் என்ன , அவங்க எல்லோரிடமும் பேசினால் என்ன சர், எதுக்கு எனக்கு ஏன் பொறாமை? .............நான் இங்கு வேலை பார்க்க வந்திருக்கிறேன், நான் என் வேலையை பார்க்கறேன் அவ்வளவு தான்" என்றாளே பார்க்கணும்.

    அவளின் பதில் தன் ஈகோவை தொட்டதாய் நினைத்துவிட்டான் இவன். இவளை கண்டிப்பாக முக்குடைக்கணும் என்று நினைத்துகொண்டான்.

    " என்றாலும் சிரித்துக்கொண்டே, சரி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றான்.

    தொடரும்..................
     
    sindmani, Deepu04 and Caide like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " ஒ அதுவா............என்று தயங்கினாள்.............பிறகு சொன்னாள் ஒரு கவிதை போட்டி வருகிறது அதற்கான கவிதை எழுதுகிறேன்" ......லஞ்ச் இல் செய்யலாம் தானே சர்" என்றாள்.

    " ஒ...நீங்க கவிதை எழுதுவீங்களா?.............நான் படிப்பேன் அவ்வளவுதான், தாராளமாய் எழுதுங்கள்......ஒன்றும் பிரச்சனை இல்லை" என்றான்.

    இப்படியாக அவர்களின் பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் முன்னேறியது, இவன் எப்படிப்பட்ட வேலை கொடுத்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு செய்து முடித்தாள் அவள். அந்த பெண் இன் மேல் ஒரு நல்ல மதிப்பு வர ஆரம்பித்தது சதாவுக்கு.

    என்றாலும், அது எப்படி ஒரு பெண் தன்னைவிட அழகாய் இருக்கா, அவளுடன் எல்லோரும் பேச ஆசைப்படும்போது , அதே நேரம் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத போதும் இவளால் அதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடிகிறது? ஒரு தாழ்வு மனப்பான்மை இல்லை ரொம்பவும் சாதரணமாய் வந்து போகிறாள், இதைப்பத்தி இன்று பேசிவிடணும் இல்லாவிட்டால் தனக்கு மண்டையே வெடித்து விடும் என்று
    எண்ணிக்கொண்டான் .

    லஞ்ச் நேரத்தில் பேசும்போது கேட்டே விட்டன, " வசு நான் ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீங்களே ?"

    "என்ன இது புதிதாக சதா, கேளுங்கள் " என்றாள்

    " இல்லை, நிஜமாகவே ராதிகாவை பார்த்து உங்களுக்கு பொறாமையாக இல்லையா, நான் பெண்ணாக இருந்திருந்தால் எனக்கு ரொம்ப பொறாமையாக இருந்து இருக்கும் " என்றான் .

    அவனை கூர்மையாக பார்த்தாள், " முதலில் அழகு என்பதற்கு ஒரு அளவே இல்லை என்பது தான் நிஜம் சதா, தாமரையும் அழகுதான் கருங்குவளையும் அழகுதான், பச்சைக்கிளியும் அழகுதான் பருந்தும் அழகுதான், அழகு என்பது பார்க்கும் பார்வை இல் இருக்கே ஒழிய மற்றவர்களிடம் இல்லை. ஒருவருக்கு அழகாகத் தெரிவது மற்றவருக்கு சாதரணமாக தெரியலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வோரு அழகு இருக்கு சதா, அவங்க பழகும் விதத்தில், பார்க்கும் பார்வை இல் என்று அது வேறுபடும். ராதிகாவை சுற்றி பலபேர் இருப்பது அவங்களின் புற அழகில் மயங்கி, அது ஒருநாள் அவங்களுக்கே கூட ஆபத்தாகலாம். " என்று குட்டி பிரசங்கமே செய்து விட்டாள்.

    "அப்போ நிஜமாகவே உங்களுக்கு அவள் மேல் பொறாமை இல்லையா?......அவங்க நடை உடை பாவனை ஏன் எல்லாம் மாற்றிக்கொண்டு எவ்வளவு ஆர்பாட்டமாய் இருக்காங்க ?... அப்படி நண்பர்கள் புடை சூழ இருக்கணும் என்று உங்களுக்கு ஆசை இல்லையா " என்று ஆச்சர்யமாய் கேட்டான்.

    " கண்டிப்பாக இல்லை, அவங்க அவங்களுக்கு பிடித்தது போலவும், அவங்களுக்கு சௌகர்யமாயும் இருக்கும்படி அவங்களை மாற்றிக்கொண்டார்கள். நானும் தான் புடவை லிருந்து சுடிதாருக்கு மாறிவிட்டேன். நான் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி இல் தான், இங்கு வந்ததும் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்று தெரியும் எனவே, சௌகர்யத்துக்க்காகவும் , உடையை ப்பற்றிய கவலை இல்லாமல் இருக்கவும் நான் இந்த சுடிதார்ரை தேர்ந்து எடுத்தேன். அவ்வளவு தான். இதில் ஒருவருடைய சுய விருப்பம் தான் முன் நிற்குமே அல்லாது வேறு இல்லை சதா" என்றாள்.

    தொடரும்..................
     
    sindmani, Deepu04 and Caide like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " அடுத்தது அவங்க நண்பர்களால் சுழப்பட்டிருக்காங்க என்று சொன்னிங்களே அதை நான் ஆட்சேபிக்கிறேன். அங்கு சூழுந்து இருப்பவர்கள் நண்பர்கள் அல்ல . அது உங்களுக்கே தெரியும்" என்று சிரித்தாள்.

    மேலும் தொடர்ந்தாள் " அவர்களில் யாரையாவது ஒருவனை அவள் தேர்ந்து எடுக்கும் வரை அந்த கூட்டம் தொடரும்....பிறகு மறைந்து விடும்" என்றாள்.

    என்ன ஆச்சர்யம், நிஜமாகவே அவள் ஷ்யாமிடம் நெருங்கிப்பழக ஆரம்பித்ததும் அந்த கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும், அவள் என்னவோ இயல்பாகத்தான் எல்லோரிடமும் பேசி வந்தாள். ரொம்பவும் ஓபன் மைன்டெட் பெண் அவள். எல்லோரும் ஷ்யாம் ரொம்ப லக்கி , இது போல அழகும் அறிவும் ஒருங்கே அமைந்துள்ள பெண் அமைவது ரொம்ப கஷ்டம் என்றல்லாம் சொன்னார்கள். ஷ்யாமிடமே, அவளின் அளவுகளை வர்ணித்து, இப்படி ஒரு பெண் அமையணும் என்றால் உனக்கு எங்கேயோ மச்சம்டா என்று கூட சொன்னார்கள். அதைக்கேட்டு ஷ்யாம் குதுகலித்தான்.

    அதைக்கேட்ட வசுவுக்குத்தான் காது கூசியது. முகம் சுளித்தாள் .ஆனால் ராதிகா வின் காதுகளில் இந்த பேச்சு விழுந்த பொது ரொம்பவும் சாதரணமாய் எடுத்த்துக் கொண்டாள் . இந்த ஒரு சந்தர்ப்பத்துக்க்காகவே காத்திருந்தது போல சதா வசுவிடம் சென்று, " பார்த்தாயா ஷ்யாமை எவ்வளவு சந்தோஷப்படுகிறான்" என்றான்.

    அவள் உடனே" இந்த சந்தோஷம் தற்காலிகமானது , காதலியை புகழ்ந்தால் அல்லது உனக்கு மட்டும் எப்படி டா?...எங்களுக்கு கிடைக்காதது உனக்கு மட்டும் எப்படிடா ? ...என்று கேட்பதில் பெருமை கொண்டு விடுவார்கள் ஆண்கள் .அதில் கர்வம் கூட கொள்வார்கள்................................ஆனால், அதே, கல்யாணம் ஆனதும் தன் பெண்டாட்டியை பற்றி சொன்னால் சும்மா இருப்பாரா இதே ஷ்யாம் " என்று கேட்டாள்.

    "யாருக்கும் தன் மனைவியை பற்றி அடுத்தவர் பேசும்போது கோபம் வரத்தானே செய்யும்?" என்று சொல்லும்போதே மறித்து இல்லை என்று தலயை ஆட்டினாள் வசு. .......... "நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலையே " என்றான் சதா.

    தொடரும்..................
     
    sindmani and Caide like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " ஒரு திருத்தம் சதா, மனைவி யை பற்றி மற்றவர் பேசும்போது என்று சொன்னிர்கள் இல்லையா? அதில் ஒரு சின்ன திருத்தம்..............மனைவி இன் அழகைப்பற்றி என்று ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்ளுங்கள்"............
    என்றாள்.

    " அதாவது ஒருவருடைய அழகைபற்றி பேசினால் தான்பிடிக்காது ஆனால் அவருடைய திறமையைப்பற்றி பேசினால் பாராட்டினால் பிடிக்கும்...............அப்போ அழகைவிட திறமை தான் உயர்வு இல்லையா? ஒத்துக்கறீங்களா என்றாள். " ஒரு அப்பாவிடம் மகளை பற்றியோ , ஒரு அண்ணனிடம் தங்கையை பற்றியோ , அல்லது ஒரு தம்பி இடம் அக்காவைப் பற்றியோ எப்போ தைரியமாய் பேசலாம், ..........அவர்களின் திறமைகளை பற்றி பேசும்போது தானே? அழகைப்பற்றி அப்படி பேச முடியுமா சதா?......................அல்லது பாராட்டத்தான் முடியுமா?....................சொல்லுங்கள். , எனவே கொஞ்ச காலமே இருக்கும் புற அழகுக்கு மதிப்பளிப்பதை விடுத்து அக அழகையும் திறமைகளையும் வளர்க்கணும் என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள் என்னை ".........................என்றாள்.
    அவள் சொன்னாள் ரகசியமாக " இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள், இந்த அழகு என்றாவது ஒருநாள் திறமை முன் மண்டி இடும் " என்று ...அப்படி சொன்னவளின் கண்களில் கர்வம் துளி கூட இல்லை.

    நான் அவள் பேச்சின் மலைப்பில் இருந்து மீளவே சில நிமிடங்கள் ஆனது அவனுக்கு. . எவ்வளவு சின்னப்பெண் என்னமாய் சிந்திக்கிறாள் என்று நினைத்தான். அவள் சொன்ன அந்த நாளும் வரத்தான் செய்தது.

    தொடரும்................................................

    ஒரு மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ நாங்கள் அனைவரும் சேர்ந்து லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருந்தார்கள். எப்பவும் pizza burger என்பதற்கு பதில் இந்த முறை ஆளுக்கு ஒரு டிஷ் செய்து கொண்டு வரலாம் என்று பெண்கள் முடிவெடுத்து இருந்தார்கள்.

    எல்லோரும் ஆளுக்கு ஒன்று கொண்டு வந்திருந்தனர். ராதி மட்டும் எதுவும் கொண்டுவரலை. அவள் ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து விட்டிருந்தாள். கேட்டதற்கு அவள் சமையல் அறைப்பக்கமே போனது இல்லையாம். இபோதும், கூட இருக்கும் பெண்கள் தான் சமைப்பர்களாம், இவளுடைய சமைக்கும் முறை வரும்போது, இவள் எல்லோருக்கம் சேர்த்து ஹோட்டல் இல் ஆர்டர் செய்து விடுவாளாம்.............சொல்லிக்கொண்டிருந்தாள்.

    ஒருத்தி கேட்டாள், "இப்போ ஓகே ராதி, கல்யாணத்துக்கு பிறகு? " என்று.

    எல்லோரும் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று ஆவலுடன் பார்த்திருந்தனர். அவள் சொன்னாள் " சமைக்கவா கல்யாணம் செய்து கொள்கிறோம்.............அதுக்கு வேற வேலை இல்ல இருக்கு" என்று கண்ணடித்தாள். அவ்வளவு தான் மொத்த கூடமும் கைதட்டி ஆர்ப்பரித்தது. அப்போதும் வசு எப்பவும் போல புன்னகையுடனே அமர்ந்து இருந்தாள்.

    தொடரும்..................
     
    sindmani, Deepu04 and Caide like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எல்லோருக்கும் அவள் சமைத்து கொண்டுவந்திருந்த 'கூடாஞ் சோறு " மிகவும் பிடித்து விட்டிருந்தது. பொது வான சமையலிலிருந்து சற்று விலகி இருந்த அதன் சுவை எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. அதற்காக எல்லோரும் அவளை ரொம்ப பாராட்டினார்கள். "இருக்கும் இடமே தெரியலை, வேலையும் சூப்பராக செய்கிறாய், கைமணமும் நல்லா இருக்கு.........பேஷ் பேஷ்." ..என்றார்கள்.

    அவளுக்கு ரொம்ப வெட்கமாய் போய்விட்டது, சிரித்தவாறே தலைகுனிந்து பாராட்டுகளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் எதேர்ச்சையாக சதா நிமிர்ந்து பார்க்கும்போது, ராதி இன் கண்களில் பொறாமை ஒளிர்ந்தது, அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இந்த பெண்களை புரிந்து கொள்ளவே முடியலையே என்று நினைத்தான். வசு அவன் மதிப்பில் இன்னும் உயர்ந்தாள்.

    அன்று காலை வரும்போதே வசு ரொம்ப சந்தோஷமாய் வந்தாள், கைகளில் ஒரு கடிதம் இருந்தது. நேரே என் மேசைக்கு வந்து சதா இதோ பாருங்கள் , உங்களிடம் தான் முதலில் காட்டுகிறேன் என்றாள். பார்த்தல் அவள் எழுதி இருந்த கவிதைக்கு 50,000 ருபாய் பரிசு என்று போட்டிருந்தது. சதாவுக்கு நிஜமாகவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. மனமார வாழ்த்தினான்.

    எழுந்து சென்று கைகளை தட்டி எல்லோரையும் கூப்பிட்டான் ... இவள் வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல், இன்று ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லப்போகிறேன், நம் வேலையைப்பற்றியது இல்லை, ஆனால் சந்தோஷ சமாசாரம் என்றான். கூடம் மொத்தமும் இவனை பார்த்தது, " நம் வசு விற்கு , அவளுடைய கவிதைக்காக 50000 ருபாய் பரிசு கொடுத்திருக்கிறார்கள்" என்று சொன்னது தான் தாமதம், எல்லோரும் " வாவ்! சூப்பர்! என்ற ஆளுக்கு ஆள் கூச்சல் போட்டார்கள்............கை தட்டினார்கள்,உடனே treat கேட்டார்கள் " .... மேலும் இவளுக்கு அருகில் வந்து கை கொடுத்தார்கள்.

    இவளுக்கு கிடைக்கும் இந்த பாராட்டுகளை ராதியால் சகிக்க முடியவில்லை என்று அவளைப்பர்த்ததுமே சதாவுக்கு தெரிந்து விட்டது. ஒப்புக்கு வந்து கை குலுக்கி விட்டு சென்றாள். உடனே ஷ்யாம்மிடம் போய் ஏதோ பேசினாள். அவனும் சந்தோஷமாய் தலை ஆட்டினான்.

    இந்த பாராட்டுகள் எல்லாம் ஓய்ந்து, எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க உட்காரும் முன், ஷ்யாம்
    எல்லோரையும் கூப்பிட்டான் . " friends , நானும் ராதி யும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம், வரும் 20ம் தேதி நிச்சயதார்த்தம், எல்லோரும் வந்து விடுங்கள் " என்றான். அவ்வளவுதான், மீண்டும் ஒரே சந்தோஷ கூச்சல் .... அப்புறம் யாரும் வேலையே செய்யலை...ஒரே பேச்சு தான்.


    தொடரும்..................
     
    sindmani and Caide like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எல்லோரும் போல வாசுவும் ராதியை வாழ்த்திவிட்டு வந்தாள். இவளில் எந்த மட்ட்ரமும் இல்லை ஆனால் ராதி ஏதோ தான் சாதித்து விட்டது போலவும், இவளின் சந்தோஷத்தை தன்னுடையதால் அடக்கி விட்டது போலவும் இருந்தாள். சதாவின் கூரிய கண்களுக்கு இதுவும் தப்பவில்லை.

    அடுத்த நாள் 'எத்தனிக் டே' எனவே பெண்கள் அனைவரும் புடவை என்றும் ஆண்கள் எல்லோரும் வேட்டி சட்டை என்றும் முடிவெடுத்தார்கள். பெண்கள் எல்லோரும் அழகு பதுமைகளாய் வந்தார்கள். ஆனால் ராதிக்குத்தான் புடவை இடுப்பில் நிற்கவே இல்லை, வசுவும் மற்றும் ஒரு பெண்ணும் எவ்வளவோ பின்களை போட்டு விட்டார்கள் என்றாலும், 2 மணி நேரம் கூட அவளால் தாக்கு பிடிக்க முடியலை, போய் சுடிதார் மாற்றிக்கொண்டு வந்து விட்டாள்.

    அப்போவே ஒரு பெண் சொன்னாள், "ராதி, புடவை கட்டி பழகிடு இல்லாவிட்டால் நிச்சயம் மற்றும் கல்யாணத்தன்று கஷ்டப்படுவாய்" என்று. எனவே, நிச்சயதார்தத்துக்கு இவளுக்கு 'காக்ரா சோளி' யும், அவனுக்கு
    'வெஸ்டோ இந்தியன்' நும் வாங்கி விட்டனர். ''வெஸ்டோ இந்தியன்' என்றால், கிழே formal pant ம், மேலே நிறைய வேலைப்பாடுகள் நிறைந்ததும், முன்பக்கம் முழுவதும் திறப்பும் உள்ள, அலங்கார பட்டன்கள் வைத்த ஒரு முழுக்கை வைத்த குர்த்தா டைப்' உடை. கல்யாணத்துக்குள் புடவையை பழகிக்கலாம் என்று ஐடியா அவளுக்கு.

    ஒருவழியாக நிச்சயமும் அடுத்த 10 - 15 நாட்களில் கல்யாணமும் நடந்தது. அவர்களும் ஹனி மூன் என்று போய் வந்தர்கள் . கிட்ட தட்ட 25 நாட்களுக்கு பிறகு இருவரும் ஆபீஸ் வந்தார்கள். இவர்கள் இல்லாத ஆபீஸ் பாலைவனமாய் இருந்தது சிலருக்கு. இவர்கள் வந்ததும் மீண்டும் களை கட்ட ஆரம்பித்தது அரட்டை. லேசாக புரிப்பக இருந்தாள் ராதி, அது அவளுக்கு மேலும் அழகூட்டியது.

    அவளைப்பார்த்ததும் முதலில் வந்த ஷ்யாமிடம் எப்போதும் போல ஒருவன், " பரவாஇல்லை ஷாம், உன் கை பட்டதுமே துலங்கராளே, கொஞ்சம் வெய்ட் கூட போட்டு சூப்பராய் இருக்காடா" ......கொடுத்து வெச்சவன் த மச்சான் நீ" என்று பெருமுச்சு விட்டான். இதைக்கேட்ட ஷாமின் முகம் உடனே கறுத்துப்போனது. இது அறியாத ராதி அருகில் வந்தாள், அவளிடமும் அவன், " என்ன ராதி வெயிட் போட்டு சூப்பெராக , 'தள தளன்னு' ஆய்ட்ட, ஆளே மாறிட்ட" என்றான்.

    அவள் " எஸ் , Buddy , கல்யாணம் விருந்து என்று ஏகமாய் சாப்பிட்டுக்கொண்டே இருந்துவிட்டேன், நோ ஜிம்..அது தான்............" என்று சகஜமாய் சொல்லிக்கொண்டே சென்று விட்டாள். இது கேட்ட ஷாமுக்கு மேலும் முகம்
    சிறுத்துப் போனது. அவன் கூப்பிட்ட ராதி கூட அவனுக்கு பிடிக்கலை. ஆனால் இதை எல்லாம் வசுவும் சதாவும் கவனித்தார்கள்.

    உணவு இடைவேளை இன் போது "என்ன ராதி, எப்படி இருக்கு தனிக்குடித்தனம்?" யார் சமைத்தார்கள் ஷ்யாமா என்று எல்லோரும் கேலி பேசினார்கள்.

    தொடரும்..................
     
    Deepu04 and Caide like this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அவளும் சிரித்துக்கொண்டே, "சமையலுக்கு ஆள் போட்டுவிட்டோம் பா" என்றாள். ஹனிமுனுக்கு போய் வந்த இடம் பற்றி எல்லாம் கேட்டார்கள் இவளும் பதில் சொன்னாள், ஷ்யாம் எதிலும் அவ்வளவாக பட்டுக்காமல் இருந்தான். எல்லோரும் சோர்வு என்று நினைத்து அதற்கும் அவனை கிண்டல் செய்தார்கள். " ராதி அவனை தூங்க விடும்மா" என்று கத்தினார்கள்.

    இப்படியாக ஒரு வாரம் பத்து நாள் போச்சு. இந்த ஒரு வாரத்திலேயே, அவர்கள் இருவரும் தனியாக சாப்பிட வந்தார்கள், தனியாக கிளம்பிப் போனார்கள் ..ஏதோ பிரச்சனை என்று மட்டும் மற்றவர்களுக்கு புரிந்தது. ஆனால் துணிந்து கேட்க பயந்தனர். ஒரே வாரத்தில் பிரச்சனையா , அப்படி உருகி உருகி காதலித்தார்களே என்று தோன்றியது.

    அன்று ராதி முகம் மிகவும் வாட்டமாக இருந்ததால் பொறுக்க முடியாமல் வசுவே அவளிடம் சென்று என்ன விஷயம் என்று கேட்டாள். அவள், ஷ்யாம் தங்கள் இருவரும் வேறு ஆபீஸ் போகவேண்டும் என்று முடிவு எடுத்திருப்பதை சொன்னாள். " ஐயோ !.........எதுக்கு அப்படி? " என்று இவள் கேட்டதுக்கு, அவள் தட்டு தடுமாறி" இங்கு இருப்பவர்கள் என்னை பேர் சொல்லி கூப்பிடுவது, மற்றும் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவது எதுவும்
    ஷ்யாமுக்கு பிடிக்கலை . முன்பு நான் இப்படி இருந்த போது தானே காதலித்தான் , இப்போ மட்டும் ஏன் இப்படி என்று எனக்கு புரியலை என்று சொல்லி அழுதுவிட்டாள்.

    ஆனால் இவளுக்கு புரிந்தது, அதை அவளுக்கு புரியும்படி விளக்கினாள். " இதோ பாருங்கள் ராதி, அது ஆண்கள் சுபாவம். நான் சொல்வதை தப்பாக நினைக்காமல் கேளுங்கள். நீங்கள் முதலில் இருந்தே உங்களை சுற்றி ஒரு எல்லைக்கோடு போட்டுக்கொண்டிருக்க வேண்டும் . நீங்கள் broad minded ஆக இருக்கலாம் , ஆனால் உங்களை சுற்றயுள்ளவர்களும் அப்படித்தான் என்று எப்படி எண்ணினீர்கள் ? அப்படி இல்லாமலும் இருக்கலாம் அல்லவா? , மேலும் ஒரு காதலியைப்பற்றி பேசினால் ஒரு ஆணால் தாங்கிக்க முடியும் , பெருமைப்படவும் முடியும் அதுவும் ஓரளவுக்குத்தான்...ஆனால் மனைவி இன் அழகைப்பற்றி மற்றவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது ராதி. அது தான் உங்கள் விஷயத்தில் நடந்திருக்கு. அது தான் ஷ்யாம் இன் மன வருத்தத்துக்கும் வேறு ஆபீஸ் மாறும் எண்ணத்துக்கும் காரணம் . வேறு ஆபீஸ் மாறினால் என்ன , நீங்கள் உங்கள் அடிப்படை குணத்தை மாதிக்காத வரையில் இது தொடருமே "..............................என்றாள் வருத்தத்துடன்.

    தொடரும்..................
     
    sindmani, Deepu04 and Caide like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆச்சர்யமாய் அவளை நிமிர்ந்து பார்த்த ராதி, எப்படி இவளால் இவ்வளவு நுணுக்கமாய் யோசிக்க முடிகிறது என்று நினைத்தாள் . " அதுக்கு இப்போ என்ன செய்வது?.என்னால் இந்த ஆபீஸ் ஐ விட்டுப் போவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ....மேலும் அப்படி போய்விட்டால் அது எனக்கு ஒரு தோல்வி போல எண்ணுகிறேன் , ஆனால் அதே நேரம், என் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி வேண்டினால் நான் இதை செய்து தான் ஆகணும் .....இப்போ என்ன செய்வது? " என்றாள்.

    அவளை வெகு ஆதுரத்துடன் பார்த்தாள் வசு. " ரொம்ப சிம்பிள், அந்த பசங்க பேசும்போது கண்ணைப் பார்த்து ஒரு கல்யாணம் ஆன பெண்ணிடம் பேசுகிறீர்கள் என்கிற நினைவு இருக்கட்டும்" என்று சொல்லிவிடு". எதுவுமே நீங்கள் கொடுக்கும் இடம் தான், ஷ்யாம் மிடமும் மனம் திறந்து பேசுங்கள் , இது நாம் நண்பர்கள் என்கிற advantage எடுத்துக்கறாங்க , இனி அப்படி நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள் " என்றாள்.

    அதே போல அவங்களை தூர நிறுத்தி வையுங்க ..ப்ரோப்ளேம் solved " என்றாள். இந்த வார்த்தைகளை கேட்ட ராதிக்கு ரொம்ப சந்தோஷம் உண்டாயிற்று. இந்த பெண்ணைப் பார்த்து பொறாமைப் பட்டோமே எவ்வளவு நல்லவள், எத்தனை அழகாய் சிந்திக்கிறாள் என்று நினைத்து அவளைக் கட்டிக்கொண்டாள் . " தேங்க்ஸ் டி என்றாள் "...என்ன 'டி' யா என்று வசு கேட்டதற்கு," இனி நீ தான் என் best friend , இத்தனை நாள் உன்னை புரிந்து கொள்ளாமல் பொறாமைப் பட்டேனே " என்று சொல்லி, முகம் அலம்பி, ப்ரெஷ் ஆக அவளுடன் கைகோர்த்துக்கொண்டு வெளியே வந்தாள். இப்படி சந்தோஷமாய் கை கோர்த்துக்கொண்டு வந்தவர்களை
    ஆபீஸே வியப்பாய், கேள்விக்குறியாய் பார்த்தது. சதாவுக்கு கொஞ்சம் புரிந்தாற்போல இருந்தது.

    அந்த நிலைமை இல் அவர்கள் அனைவரின் மேனேஜர் வந்தார் அவர் பின்னே ஷ்யாம். இவர்கள் இருவருக்கும் அடாடா...இவன் அதற்குள் மேனஜரிடம் சொல்லிவிட்டனா ..என்று குழம்பினார்கள்.

    Your attention please ! என்று சொல்லிவிட்டு ராதியை பார்த்து, இனி உங்கள் இருவருக்கும் இந்த ஆபீஸ் இல் இடம் இல்லை......... கல்யாணம் , என்று நிறைய லீவு எடுத்தும் ஹனிமுனுக்கு நிறைய நாள் ஒதுக்க முடியலை என்கிற வருத்தம் உங்களுக்கு இருப்பதை அறிந்தே இந்த ஏற்பாடு............என்று நிறுத்தினார்..............என் இந்த முடிவில் ஷ்யம்க்கும் உடன்பாடுதான்..........."போச்சுடா" என்று நினைத்தாள் ராதி....................எனவே நீங்கள் அடுத்த மாதம் முதல் ..............நம்முடைய அமெரிக்க அலுவலகத்தில் வேலை செய்யப்போகிறீர்கள் " என்றார். அவ்வளவு தான் எல்லோரும் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்துவிட்டு பிறகு ஒரே நேரத்தில் கைகளை தட்டினார்கள். அந்த சப்தத்தில் அந்த கட்டிடமே அதிர்ந்தது. ராதி முதலில் வசுவைத்தான் கட்டிக்கொண்டாள். பிறகு தான் மானேஜருக்கு நன்றி சொன்னாள். கண்களால் காதல் கணவனிடம் பேசினாள். அப்புறமென்ன, எல்லோரும் அவர்களுக்கு ரொம்ப லக் என்று பேசினார்கள்.

    இவள் ஏதோ சொல்லித்தான் ராதி தெளிவானாள் என்பதில் சதாவுக்கு சந்தேகமே இல்லை. ஆனால் என்னவென்று அறிந்து கொள்ள ஆர்வமானான். அந்த அழகு எப்படி இந்த திறமை இடம் மண்டி இட்டது என்று தெரிந்து கொள்ள காத்திருந்தான். மேலும், தானும் அப்படி அவளிடம் மண்டி இட்டு, will you marry me ? என்று கேட்க தகுந்த நேரத்தை பார்த்தும் காத்திருக்கத் தொடங்கினான்.

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    sindmani, Deepu04, Caide and 5 others like this.
  10. srikumarsavi

    srikumarsavi New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ரொம்ப நல்ல கதை.
     

Share This Page