1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகான முதுமை!

Discussion in 'Varalotti Rengasamy's Short & Serial Stories' started by rajiram, Oct 12, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [​IMG]

    இயற்கை அன்னையின் மாட்சி இங்கே
    இயல்பாகத் தோன்றி மயக்கும் காட்சி!

    துளிர் விட்டு, வளர்ந்து, கீழே விழுந்து
    உயிர் துறக்கும் முன், எத்தனை அழகு!

    இலையுதிர் கால அழகினை, இயற்கை
    அலைபோலப் பரப்பி உள்ளது இங்கே!

    அமெரிக்காவின் சில பகுதிகள், இந்த
    அமைதியான அழகைக் காட்டிவிடும்!

    சில மரங்கள் தகதகக்கும் தங்கமாகவே;
    சில மரங்கள் அதிசயமாகச் சிவப்பிலே!

    சில மரங்கள் பரிமளிக்கும் ஆரஞ்சிலே;
    சில மரங்கள் மயக்கிடும் ஊதாவிலே!

    சில மரங்கள் இரட்டை நிறங்களிலே;
    சில மரங்கள் வண்ணக் கலவையிலே!

    கொடிகளும், செடிகளும் வண்ணமயம்;
    நொடிகளில் மனதை மயக்கும் மாயம்!

    குன்றுகளும், மலைகளும் பல வண்ணம்;
    என்றும் நினைவிலே நிற்கும் வண்ணம்!

    இலைகளே! தரையிறங்கி மடியும் முன்,
    இத்தனை அழகினை எதற்காகப் பெற்றீர்?

    முதுமையில் அடிவைக்கும் மனிதருக்கு,
    புதுமையாய்ப் பாடம் சொல்லத்தானோ?

    வண்ண மயமாக மகிழ்விப்பது போலவே,
    எண்ணணும் முதியோரும், என்பதாலோ?

    இயற்கை அன்னையின் குறிப்பு அறிந்து,
    இயல்பை நாம் உயர்ந்திடச் செய்வோம்!

    உலகை விட்டுச் செல்லும் முன்னே, மன
    அழகை அதிகரிக்க முயன்று உய்வோம்!

    :thumbsup
     
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகிய வர்ணனை ராஜி!!!
     
  3. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Dear mam,

    Hats off to you for such beautiful and marvelous verses!!
    Regards,
    Saras
     
  4. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Trees dedicate their lives to all other living being ... and even when the leaves are leaving their branch, they make sure world enjoys that part too.... beautiful narration RR... :)

    ilt
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear friends, for your feed back
    and encouraging comments. :cheers
     
  6. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    True colour of human will always reflect in their behaviour. A colourful and meaningful
    poem RR. Hats off
     

Share This Page