1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அலைமகள் நாயகனே

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jun 24, 2014.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கலைமகள் கைப்பொருளே பாடல் மெட்டு.
    -----------------------------------------

    அலைமகள் நாயகனே இங்கு
    அருள் தரும் கார்முகிலே
    நிலையில்லா வாழ்வினிலே என்றும்
    நின்னடி தான் புகலே
    அலைமகள் நாயகனே இங்கு
    அருள் தரும் கார்முகிலே

    வேறார் எமை காக்க? இந்த
    வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
    வேறார் எமை காக்க? இந்த
    வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
    பாரா முகம் ஏனோ ?
    பாரா முகம் ஏனோ ? உந்தன்
    வாசலிலே நான் யாசித்தேன்
    நிலையில்லா வாழ்வினிலே என்றும்
    நின்னடி தான் புகலே
    அலைமகள் நாயகனே இங்கு
    அருள் தரும் கார்முகிலே

    நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
    விட்டுவோர் தேவனை நானறியேன்
    நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
    விட்டுவோர் தேவனை நானறியேன்
    எத்தனை துன்பங்கள் வந்திடினும்
    எத்தனை துன்பங்கள் வந்திடினும்- என்றும்
    உன்பெயர் ஒன்றையே நானறிவேன்

    அலைமகள் நாயகனே இங்கு
    அருள் தரும் கார்முகிலே
    நிலையில்லா வாழ்வினிலே என்றும்
    நின்னடி தான் புகலே
    அலைமகள் நாயகனே இங்கு
    அருள் தரும் கார்முகிலே - Venkatesh
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல முயற்சி!


    என்ன பழைய பாடல்களுக்கு எல்லாம் புத்துயிர் கொடுத்தே விடுவது என்று கிளம்பிவிட்டீர்கள்?
     
    1 person likes this.
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நன்றி தேவப்ரியா. பழைய காலத்து haunting melodies என்னை மறக்க விடுவதில்லை.- வெங்கடேஷ்
     

Share This Page