1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அலைமகள் துதி

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 28, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கமலமென்னும் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே!
    விமலமாகிய தூய்மையே உருவாகக் கொண்டவளே!
    அமலனாம் குணம் கடந்த பதியை அடைந்தவளே!
    சகல உயிர்கட்கும் அன்னை எனத் திகழ்பவளே!

    அளவிலாது உன்னருளை அனைவர்க்கும் தருபவளே!
    முடிவிலாத செல்வங்கள் அனைத்தும் கொண்டவளே!
    விதியிலாத மாந்தரும் உன்னைத் துதித்து விடின்
    இடையறாது அவர்க்கும் உன் அருளைப் பொழிபவளே!

    பாற்கடலில் அமுதம் கடைந்த போது உதித்தவளே!
    பாரெல்லாம் துதிப்பவனுக்கணியும் சேர்த்தவளே!
    வாரிதியும் உன் கொடுக்கும் தன்மை முன் குறைவுபடும்
    வெண்வாரணமும் வாகனமாய் தன் பெருமை கூட்டி விடும்.

    சாரணர் போல் மானிடரும், தேவர்கள் எல்லோரும்,
    காரணமாய் உன் அருளை வேண்டியே பணிகின்றோம்!
    பூரணமாய் என்றும் எப்பொழுதும் திகழ்பவளே!
    பாரணை செய்கின்றோம்! உடன் எமக்கு அருளிடுவாய்!

    குறிப்பு:
    1 . வெண்வாரணம் - வெள்ளை யானை. 2 . வாரிதி - கடல் 3 . பாரணை - துதி
    -ஸ்ரீ
     
    Loading...

  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மதிப்பிற்குரிய rgs,
    புத்தாண்டில்.....,
    அனைத்து செல்வங்களையும்
    அள்ளி அளிக்கும்
    அலை மகள் துதியை படிப்பது மகிழ்ச்சியையும் , மனதிற்கு புது தெம்பையும் தந்தது.....
    பகிர்ந்தமைக்கு நன்றி......!
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much for your appreciative feedback Bhargavi. -rgs
     

Share This Page