1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என&a

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Jul 28, 2011.

  1. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?

    அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா?

    நான் உல்லாச விடுமுறைப் பயணம் ஒன்றை முடித்து கொண்டு ஊர் வந்து சேர்ந்து சில நாட்கள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.

    அச்சச்சோ! என்ன ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேன், வேற தப்பா நினைக்காதீங்க. :mrgreen:). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சில வருஷத்து முன்னாடி தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு மறுபடியும் இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.

    தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். அப்பாடி! முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொல்லி என் வயற்றில் பால் வார்த்தாள். அப்பாடா! கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.

    ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? :confused2: எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தெரியலியே! நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? :spin இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.

    மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் எல்லாமே கரெக்டா தாங்க செஞ்சேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு எரியற பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை - பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.

    மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் இங்கு என் தொப்பி தூக்கி :hatsoff மனப்பூர்வமாய் வணங்குகிறேன்.
     
    8 people like this.
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&#298

    That was hilarious Meena. Thanks for sharing. -rgs
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&#298

    மீனா ஆடாமலே கலக்கிட்டீங்க போங்க. ஆடி மாசமும் அதுவுமா
    ஆடி மட்டும் இருந்தீங்க கலங்கி இருப்போம் போல இருக்கு. :)

    நல்ல வேலை பிரெண்டுட்ட அதிர்ச்சியோட காரனத்த
    சொல்லல (ஆடத் தான் கூப்டாங்கன்னு நெனச்சத)
    அவங்க ஆடிப் போயிருப்பாங்க... :)

    காமடி கலந்து மேடை ஏறி வரும் ஸ்டேஜ் பியர்
    பற்றி ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... :thumbsup

    பரதக் கலையைப் பற்றி ஒரு படம் எடுக்கலாம்ன்னு
    இருக்கேன் - கொஞ்சம் டேட்ஸ் பாத்து சொல்லுங்களேன் ப்ளீஸ்.... :rotfl
     
    4 people like this.
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    Glad you enjoyed it rgs. Thanks a ton!
     
  5. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    உங்க ரசிப்பை ரொம்ப ரசனையோடு எழுதியிருக்கீங்க நட்புடன். நானும் ரசிச்சு படிச்சேன். :)
     
    1 person likes this.
  6. lathaviswa

    lathaviswa IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,002
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    உங்க மேடை அனுபவம் என்னை கதி கலக்குது.
    இதுல இவள்ளவு விஷயம் இருக்கா!நான் கூட இது சுலப வேலைன்னு நீனைத்தேன்.
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    ARPUDHAM MEENA........ I can imagine how uncomfortable it would be .... Summa irukkuradha vida kadinam veru edhuvum illa... adhuvum medaila summa irukkuradhu... ooooh...

    Thanks for sharing... :)

    ilt
     
  8. vinoran

    vinoran Bronze IL'ite

    Messages:
    110
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&#298

    நல்ல சிம்புலான நகைச்சுவை நான் ரசித்து சிரிச்சேன் ஆனா ஒண்ணு புரியலே அது வந்து:

    "அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன்.எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள்கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டுபடிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா?":bonk:bonk
     
  9. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    நான் கூட உங்களை மாதிரி நினைச்சிருந்தேன் லதா. ஆனா செய்து பார்த்தப்புறம் தான் தெரியறது மேடை ஏறி perform பண்ணுவது எவ்வளவு கடினம்னு. உங்க வருகைக்கு நன்றி லதா.
     
  10. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் எ&

    சரியா சொன்னீங்க ILT. மேடை ஏறி சொதப்பி பார்த்தா தான் அதோட கஷ்டம் நமக்கு புரியறது. I don't think I will take performers in the show business for granted anymore. There is no better teacher than reality, I guess. :)
     

Share This Page