1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அப்புறம் என்ன பாயசம் தான் !

Discussion in 'Stories in Regional Languages' started by ksuji, Sep 14, 2018.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கிருஷ்ணதேவராயர் ஒருநாள் தெனாலிராமனைக் கூப்பிட்டு அனுப்பினார்.

    “ ராமா, உன்னிடம் ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கிறேன் . இது மிகவும் முக்கியமான வேலை மட்டுமல்ல, மிகவும் அவசரமான வேலையும் ஆகும் . நீ ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொள்; நாளை மதியத்திற்குள் எனக்கு இந்த வேலையை முடித்துத் தரவேண்டும் . முடிந்தால் இன்றே இந்த வேலையை முடித்து விடு , உன்னுடைய சாமர்த்தியம் “என்றார்.

    “இது ஒரு பெரிய விஷயமே இல்லை மகாராஜா. நான் வெகு எளிதாக முடித்து விடுவேன் “,என்றான் தெனாலிராமன்.

    அரசரும் தெனாலிராமன் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

    பிறகு அவருடைய குதிரை வீரர்கள் தெனாலிராமனை ஒரு கோச்சு வண்டியில் வைத்து பக்கத்து நாட்டு சிற்றரசனிடம் கொண்டு போய் விட்டனர்.

    அதன்பிறகு தெனாலிராமன் அந்த சிற்றரசனிடம் அந்தரங்கமாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

    அது முடிந்ததும் மீண்டும் கோச்சு வண்டியில் ஏறி நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டான்.

    -----------------------------------------------------

    பிறகு கிருஷ்ண தேவராயரைப் பார்ப்பதற்காக அரசவைக்குப் போனான். அரசவையில் எல்லோரும் கூடி இருந்தனர் . தெனாலிராமனைக் கண்டதும் ராயர் அவனைத் தனியாக ஒரு புறம் அழைத்துச் சென்று ,”என்ன ஆயிற்று?”,என்று கேட்டார்.

    தெனாலிராமன் அவரிடம் , நடந்தவற்றை விளக்கமாக ஆனால் மிகவும் மெல்லிய குரலில் கச்சிதமாக கூறினான் .

    அதன் பிறகு ராயர் ,”அப்புறம் என்ன ?” என்றார் .

    உடனே தெனாலிராமன் , “அப்புறம் என்ன பாயசம்தான் ,”என்று சற்று உரத்த குரலில் சந்தோஷமாக் கூறி புன்னகைத்தான்.

    உடனே இருவரும் சிரித்து மகிழ்ந்தனர் .
    ஒரு முக்கியமானவேலை முடிந்தது: சுபம் , மங்களம் .
    ராயர் மனதில் சந்தோஷம் , ஆனந்தம்.
    அரசர் தனது கழுத்தில் இருந்த முத்துமாலையை எடுத்துத் தெனாலிராமனுக்குஅணிவித்தார்.

    ----------------------------------------------------

    மறுநாள் கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு வந்தார் . அங்கு மந்திரி பிரதானிகள் இருந்த இடத்தைத் தாண்டி பொதுமக்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருந்தது. சில பேர் தலையில்ஒரு கலயத்தைச்சுமந்துவந்திருந்தார்கள்.

    அரசர் அவர்களை அருகில் அழைத்தார் .

    “ அது என்ன எல்லோரும் ஒவ்வொரு பாத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?” என்று கேட்டார் .எல்லோரும் ஒரே குரலில் ,” பாயசம் கொண்டு வந்திருக்கிறோம் அரசே! “,என்றார்கள்.

    அவர்களைப் பார்த்து “ எனக்கு ஒன்றும் புரியவில்லை .எதற்காக இத்தனை பாயசம் கொண்டு வந்து இருக்கிறீர்கள் ?”என்று அரசர் கேட்டார்.

    “உங்களுக்குப்பாயசம்ரொம்பப்பிடிக்கும் என்று எங்களுக்குத்தெரிஞ்சு போச்சு. நேற்று ,தெனாலிராமன் “அப்புறம் என்ன பாயசந்தான்”,என்று கூறியதும் உங்கள் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் எடுத்து ராமனுக்கு அணிவித்தீர்கள் அதனால் தான் உங்களுக்கு பாயசம் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிட்டு நாங்களும் கொண்டு வந்திருக்கிறோம்”, என்றார்கள். ( எல்லோருடைய மனதிலும் முத்துமாலை வட்டமடித்தது.)


    ----------------------------------------------------------
     
    kaniths and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:muthumalai arumai.
    We have another in which the act of tenali causes pain to greedy priests when they had previously treated to golden mango by the king. That is very hilarious and insightful.
    THANKS AND REGARDS.
    Apologise for Reply In english as Tamil in android phone is an ordeal .
     
  3. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you very much for your response.
    With Regards.
     

Share This Page