1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அனலி மறைப்பு (சூரிய கிரகணம் ) !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 21, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வட அமெரிக்காவில் இன்று (21/08/2017) சில இடங்களில் முழு சூரிய கிரஹணமும் ,
    பல இடங்களில் பகுதி சூரிய கிரஹணமும் நிகழவிருக்கின்றதையொட்டி இப்பதிவு.

    கதிரவன் ஒருபுறமும் பூமகள் மறுபுறமும்,
    இதிலங்கு நடுவினிலே நிலவது நின்றிடவும்,
    பரிதியின் ஒளிவெள்ளம் பூமிக் கருகிருக்கும்,
    இரவொளி பாய்ச்சுகின்ற நிலவினில் பாய்ந்திடவும்,
    ஞாயிற்றின் ஒளியேற்ற நிலவின் நிழலுருவம்,
    ஆயிற்று இரவென்று அனைத்துயிர் மயங்கும்படி,
    புவியில் சிலவிடத்தில் இருளினைத் தோற்றுவிக்கும் !
    இரவியும் சிலநிமிடம் வானில் மறைந்துபடும் !
    விண்ணில் நிகழுமிந்தக் காட்சிப்பிழை அதுவே
    கண்ணில் தெரிகின்ற சூரிய கிரகணமென்பார் !
    சந்திரன் பூமிக்கோள் நெருங்கி நிற்பதனால்,
    தந்திறன் ஏதுமற்றும் பன்மடங்குப் பெரிதான
    ஆதவன் முழுவுருவை மறைப்பது போலிருக்கும்
    ஆதலால் தோன்றிடுமே முழுமை இரவிமறைப்பே !
    முழுவதும் மறைப்பதுடன் பகுதி மறைப்புமுண்டு
    அழகிய மோதிரம்போல் வடிவமும் கொள்வதுண்டு !
    கைவளை போன்றதொரு கிரகணமும் இருப்பதுண்டு !
    அவற்றுடன் கலப்புயென்ற வகையிலும் மறைவதுண்டு !
    கிரகண நேரத்திலே வெளிவிடும் கதிரதனால்
    சிரமமும் ஆபத்தும் கண்பார்வைக் குண்டாகும் !
    இதனை மனதிருத்தே நமது முன்னவர்கள்
    ஆதவனையன்று நோக்க வேண்டாம் என்றார் !
    அறிவியல் துணையாலே ஆயத்தம் செய்திட்டால்
    சிறிதோர் பயமுமின்றி கிரகணத்தை நோக்கிடலாம் !
    ஆண்டுக்கிரு முறையோ ஐந்து முறைவரையோ
    தோன்றுவதே இந்த சூரிய கிரகணமுமே !
    ஆகாய வீதியிலே பற்பல அதிசயத்தில்
    ஆகயிதுவுமொன்று நன்றாய் உணர்ந்து இரசிப்போமே !
    இலைமறை காயாக அனைத்தையும் வைத்ததனால்,
    தலைமுறை பற்பலவும் அறிவினை இழந்ததுவே !
    பாம்பொன்று விழுங்கியது பரிதியை என்றுரைப்பர் !
    நம்பிடும் மக்களுமே பயத்துடன் பரிதவிப்பர் !
    அறிவியல் காரணங்கள் ஆயிரம் இருக்குதிங்கே !
    அறிந்திடும் ஆர்வமுடன் ஆய்ந்திடில் புரிந்திடுமே !

    Regards,

    Pavithra
     
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice one Pavithra

    நிலவு மகள் சில மணித்துளிகள்
    செயர்க்கையான இரவை உருவாக்கி
    ஒரு நிமிடமேனும்
    இருவேறு கண்டங்களில்
    நேரவித்தியாசம் இருப்பினும்
    இருளெனும் மாயையில் நாம்
    ஒரே நேரத்தில் இருந்திடுவோம்...
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நல்ல பார்வை லக்ஷ்மி !

    Thank you !
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அனைத்தும் அதன் அதன் இடத்திலே
    ஆனாலும் கண்ணுக்கு தெரியவில்லை
    இது இறைவனின் லீலை அன்றோ
    சுழலும் பூமி ஒளி வட்டத்தை விட்டு விலகி நின்று
    கண்ணாமூச்சி காட்டும் விந்தையம்மா இது

    @பவித்ரா கிரகணத்துக்கும் ஒரு கவிதை .ஒரு நிகழ்வு கண் முன்னே நின்றது
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆண்டவனின் விளையாட்டு அனைவரையும் மாயையில் ஆழ்த்தி விட்டானே
     
    PavithraS likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா ! இயற்கையின் கண்ணாமூச்சி தானிது !

    நன்றி பெரியம்மா !
     

Share This Page