1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

அந்த காலத்திலுமா?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 26, 2019.

 1. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  4,498
  Likes Received:
  9,029
  Trophy Points:
  408
  Gender:
  Female
  அந்த காலத்திலுமா?

  உண்மைக் கதைகள் என்ற வரிசையில் ஒரு கதை .

  மதிவாணன் ஒரு புத்தி சாலி." ஒரு பேனா முனை கிடைத்தால் போதும். அதைக் கொண்டே பெரிய பணக்காரன் ஆகிவிடுவேன் என்றான்.இதைக் கேட்ட
  அரசன் " நான் ஒரு வேலை� தருகிறேன். அதைக் கொண்டு நீ எப்படி பணக்காரன் ஆகிறாய் என்று பார்க்கலாம்.ராணுவத்தில் உள்ள யானைகள் ,குதிரைகள், ஆடு மாடுகள் எல்லாம் எவ்வளவு கழிவு( சாணம் ) போடுகின்றன என கணக்கு எடுத்து சொல்ல வேண்டும்"என்றான்.
  அரசு வேலை யில் இருப்பதற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
  அந்த பத்திரத்தைக் காட்டியே வட்டிக்குப் பணம் வாங்கி
  பெரிய வீட்டில் குடி பெயர்ந்து தனக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களை வாங்கினான்,கொஞ்சம் மதிப்பு உயர்ந்ததும் சில ஆட்களை வேலைக்கு� அமர்த்தி, 'சம்பளம் கிடையாது. ஆனால் நல்ல பரிசில்கள் கிடைக்கும் என்ற நிபந்தனையில் வேலைக்கு அமர் த்தினான்.
  வாடகைக் குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு ராணுவ
  முகாமுக்குச் சென்று� கால் நடைகளின் லத்தி, சாணம் முதலிவற்றைத்� தனித் தனியாக நிறுத்து எழுதிக் கொண்டான்.பிறகு தீனி வாங்கும் அதிகாரிகளை வரவழைத்து "இவ்வளவு தீனி சாப்பிடும்� மிருகம் இவ்வளவு கழிவுதான் வெளிப்படுத்தும் என்ற கணக்கு உள்ளது.தீனிக் கணக்கு மிக அதிகமாக உள்ளது.ஒரு நாளைக்கு அரசாங்கத்துக்கு� இவ்வளவு நஷ்டம் என்றால் ஆண்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் " என்று அரசரிடம் சொல்லப் போகிறேன் என்றான்.
  உடனே அதிகாரிகள் பொய்க் கணக்கு எழுதியதை ஒத்துக் கொண்டனர்.ஒவ்வொருவரும் தனித்தனியாக மதிவாணனை சந்தித்து கையூட்டு வழங்கியதன் பேரில் அவர்களிடம் சில பத்திரங்களில் கையெழுத்தும் வாங்கிகொண்டு, பணமும் பெற்றுக் கொண்டு சிலரை சிக்க வைத்தும் விட்டான்.

  மதிவாணன்� மதியை மெச்சிய அரசர் " அரண்மனை வாயிலில் கட்டியுள்ள மணியை காலம் தவறாமல் அடித்து visitors diary யில்� குறிக்கச் சொன்னார்.இதில் எப்படி சம்பாதிக்க முடியும் என்பது அரசனின் கருத்து.
  ஒருநாள் முத் து வியாபாரி அரசனைச்� சந்திக்க வந்தபோது'இப்போதுதான் ஒரு இரத்தின வியாபாரி அரசியிடம் ரத்தினங்களை விற்றுச் சென்றார், ஆகவே நீங்கள் சற்றுக் கூடுதலான நேரம் செலவழித்தால் தான் பலன் கிட்டும்".குறிப்பை உணர்ந்த வியாபாரி சில முத்துக்களை மதி வா ணனுக்கு அளிக்கவும்,இதே பழக்கம் நீடித்துத் தன மனைவிக்கு விலை� உயர்ந்த நகைகளைப் பரிசளித்தான்.அரசியே� பொறாமை கொள்ளும் அளவுக்கு நகைகள்.
  " இரண்டு முறை நீ வெற்றி அடைந்து விட்டாய்.மூன்றாம் முறையும் வென்றால் உனக்கு உ யர்ந்த பதவி தருகிறேன்" என்றான் அரசன்.
  " எனது ஆட்சிக்கு உட்பட்ட நகரங்களிலும் , கிராமங்களிலும் எ த்தனை பேர் வாழ்கிறார் கள் ?விலங்குகள், தாவரங்கள் ,மனிதர்களுள் பலன் தருபவை, தராதவை எனப் பிரித்து ஒரு survey எடுக்கச் சொன்னார்.
  மதிவாணனும் கணக்கு எடுத்தான்,.ஜனங்களை சந்தித்து " இன்னும் சில தினங்களில் யுத்தம் வர இருக்கிறது.நிறைய படை பலம் சேர்த்து எதிரிகளைத் திகைக்க வைக்க நினைக்கிறார் அரசர்.இது பரம ரஹசியம்" என்று ஒவ்வொரு வரிடமும் கூறினான். ஜனங்கள் பயந்து போய் ,முழுமையாகக் கணக்குக் காட்டாமல் குறைத்துக் காட்டினால் இவ்வளவு பணம் தருவதாக ஒத்துக் கொண்டனர்.தன கணவனை நோஞ்சான் என்றும்,மகனை ஒரே பிள்ளை என்றும் சொல்லி தங்கள் நாட்டுப் பற்றை க் காட்டிக் கொண்டனர்.அரசிடம் உண்மையான அன்பு உள்ளவர் எவ்வளவு பேர்,சுயநலம் மிக்கவர் எவ்வளவு� பேர் என்ற� புள்ளி விவரமும் அரசரிடம் சமர்ப்பிக்கப் பட்டது.
  மாட்டுக் கழிவு, மணி அடித்தல் ,புள்ளி விவரம் சேகரித்தல் என்ற உப்புப் பெறாத சாதாரண விஷயங்களைக் கூட பொக்கிஷமாக மாற்றும் மதிவாணனை மந்திரியாக நியமித்தார் அரசர்.

  இது தான் கதை.நாம் என்னவோ சுதந்திரம் பெற்ற பிறகுதான் corruption ,Scam முதலியன அதிக அளவில் வந்து விட்டதாக நினைக்கிறோம்.இந்தியாவில் பரம்பரையாக லஞ்சம் வாங்கினார்கள் என்று சொன்னால் கோபம் வருகிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்குத் தலை வணங்கும் சோழர் காலக் கதை இது.இப்போது புரிகிறதா,தற்போது அரசு பதவியில் உயர் மட்ட அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும் ,மற்றும் பலரும் மதிவாணனின் நேரடி வாரிசுகள் என்று?

  பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்க யாருக்கு மனசு வரும்?இடுகாட்டு ஊழல்,கால் நடை ஊழல்,ராணுவ ஊழல்,wrong documentation ,misappropriation என்ற பல லஞ்ச லாவண்யங்களுக்கு வித்திட்டவர்களும் இந்திய மன்னர்கள் தானோ என்ற ஐயம் எழாமல் இல்லை.
  Human mind is/was the same always

  jayasala42
   
  momofson, Cheeniya and rgsrinivasan like this.
  Loading...

Share This Page